இலை அடை
தேவையானவை :- இட்லி அரிசி - 2 ஆழாக்கு, துருவிய தேங்காய் - 1 கப், தூள் வெல்லம் - 1/2 கப், உப்பு - 1 சிட்டிகை, வாழை இலை – 2
செய்முறை :- அரிசியை நன்கு கழுவி 2 மணி நேரம் ஊறவைக்கவும்.
நன்கு மசிய அரைக்கவும். உப்பு சேர்க்கவும். ஒரு காட்டன் துணியில் மாவைக் கொட்டிவைத்தால் அதிகப்படியான தண்ணீரை உறிஞ்சி விடும். தேங்காயையும் வெல்லத்தையும் கலக்கவும். இலையை சம துண்டுகளாக வெட்டவும். இலையில் மாவை மெல்லிய தகடாக தட்டவும். அதில் தேங்காய் வெல்லக் கலவையை பரப்பவும். ரெண்டாக மடித்து ஒட்டவும். ஆவியில் 15 நிமிடங்கள் வேகவைக்கவும். வாழை இலைகளை எடுத்துவிட்டுப் பரிமாறவும். ப்ளைன் இலை அடைக்கு வெறும் தேங்காய் மட்டும் தூவி செய்யவும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக