எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

திங்கள், 31 மார்ச், 2025

பரங்கிக்காய் பாயாசம்

பரங்கிக்காய் பாயாசம்



தேவையானவை :- நன்கு கனிந்து சிவந்த பரங்கிக்காய் – 1 துண்டு, பால் – 4 கப், சர்க்கரை – முக்கால் கப், முந்திரி கிஸ்மிஸ் – தலா 10, ஏலப்பொடி – 1 சிட்டிகை, நெய் – 1 டேபிள் ஸ்பூன்.

செய்முறை:- முந்திரி கிஸ்மிஸை நெய்யில் வறுக்கவும். அதே நெய்யில் பரங்கிக்காயைத் துருவிப் போட்டு வறுக்கவும். ஒரு கப் பால் ஊற்றிக் குக்கரில் வேகவைத்து நன்கு மசிக்கவும். மிச்சப் பாலையும் சர்க்கரையையும் சேர்த்துக் கொதிக்க விடவும். இதில் ஏலப்பொடி தூவி முந்திரி கிஸ்மிஸை சேர்க்கவும். 

சனி, 29 மார்ச், 2025

இன்ஸ்டண்ட் பாயாசம்

இன்ஸ்டண்ட் பாயாசம்



தேவையானவை:- பாசுமதி அரிசி சாதம் அல்லது பச்சரிசி சாதம் = ஒரு கைப்பிடி, மில்க் மெய்ட் – அரை டின், பால் ஒரு கப், ஏலப்பொடி – 1 சிட்டிகை. குச்சியாக அரிந்த பாதாம் பிஸ்தா முந்திரி – ஒரு டேபிள் ஸ்பூன்.

செய்முறை;- சாதத்தை மிக்ஸியில் பால் விட்டு அரைத்து வழிக்கவும். அதை லேசாக சூடுபடுத்தி மில்க் மெயிடைச் சேர்க்கவும். திக்னெஸ் அதிகமாக இருந்தால் இன்னும் சிறிது பால் சேர்க்கவும். ஏலப்பொடி முந்திரி பாதாம் பிஸ்தாவைக் கலந்து சூடாகவோ குளிரவைத்தோ பரிமாறவும்.

திங்கள், 24 மார்ச், 2025

கேழ்வரகுப் பாயாசம்

கேழ்வரகுப் பாயாசம்


தேவையானவை :- கேழ்வரகு – அரை கப், பால் – ரெண்டு கப், சர்க்கரை – கால் கப், நெய் – ரெண்டு டீஸ்பூன், ஏலப்பொடி – 1 சிட்டிகை, முந்திரி கிஸ்மிஸ் – தலா 6.

செய்முறை:- கேழ்வரகைக் களைந்து காயவைத்து மிக்ஸியில் பொடித்துச் சலிக்கவும். இந்த மாவில் ஒரு கப் தண்ணீர் ஊற்றி கட்டியில்லாமல் கரைத்துக் குக்கரில் ஒரு விசில் வைக்கவும். இறக்கி அதில் பாலைச் சேர்த்துக் கரைத்து நன்கு கொதிக்க விடவும். கொதித்துக் கண்ணாடிபோல் ஒட்டாமல் இருக்கும்போது சர்க்கரை சேர்க்கவும். நெய்யில் முந்திரி கிஸ்மிஸைப் பொடித்துப் போட்டு ஏலப்பொடி தூவி இறக்கவும்.

 

சனி, 22 மார்ச், 2025

மிக்ஸட் தால் பாயாசம்

மிக்ஸட் தால் பாயாசம்


தேவையானவை :-  பாசிப்பருப்பு  – ஒரு கைப்பிடி, கடலைப் பருப்பு – ஒரு கைப்பிடி, பச்சரிசி – ஒரு கைப்பிடி, மூன்றையும் வெறும் வாணலியில் வாசம் வரும்வரை வறுத்துக் கொரகொரப்பாகப் பொடிக்கவும். வெல்லம் – 2 அச்சு, நெய்- 2 டீஸ்பூன், தேங்காய் –  கால் கப் ,கொரகொரப்பாக அரைக்கவும், முந்திரி கிஸ்மிஸ் – தலா 10, ஏலக்காய் – 2  பொடிக்கவும்.

செய்முறை :- பச்சரிசி, பாசிப்பருப்பு, கடலைப்பருப்பு மாவை எடுத்து அளந்து 6 பங்கு தண்ணீர் சேர்த்துக் கரைத்துக் கொதிக்க விடவும் . வெந்ததும் வெல்லத்தைப் பொடித்துப் போட்டு வெந்நீரில் கரைத்து வடிகட்டிச் சேர்க்கவும். வெல்லமும் சேர்ந்து கொதித்ததும் அரைத்த தேங்காய் போட்டுக் கொதிக்க விடாமல் இறக்கவும். இதில் நெய்யில் வறுத்த முந்திரி கிஸ்மிஸ் போட்டு ஏலப்பொடி சேர்த்து இறக்கவும்

வியாழன், 20 மார்ச், 2025

நுங்குப் பாயாசம்

நுங்குப் பாயாசம்


தேவையானவை :- இளநுங்கு – 5, பால் – அரை லிட்டர், சர்க்கரை – ஒரு டேபிள் ஸ்பூன். அரிசி மாவு – 1 டீஸ்பூன், ஏலப்பொடி – 1 சிட்டிகை.

செய்முறை:- பாலைக்காய்ச்சி அதில் சிறிது எடுத்து அரிசி மாவு சேர்த்துக் கரைத்துத் திரும்பப் பாலில் ஊற்றிக் கொதிக்க விடவும். இரண்டு நிமிடங்களுக்குப் பிறகு அதில் சர்க்கரையைச் சேர்த்துக் கரைந்ததும் இறக்கி வைத்து ஆறவிடவும். நன்கு ஆறியதும் ஏலப்பொடி போடவும். இளநுங்கை நீருடன் கையால் மசித்தோ அல்லது மிக்ஸியில் விப்பர் செய்தோ பாலுடன் நன்கு கலக்கி உபயோகப்படுத்தவும்.

 

Related Posts Plugin for WordPress, Blogger...