தேவையானவை:- நண்டு - 2 ஜோடி, பெரிய வெங்காயம் - 1, தக்காளி - 1, வரமிளகாய் - 8, தேங்காய் - கால் மூடி, சோம்பு - ஒரு டீஸ்பூன், சீரகம் - அரை டீஸ்பூன், மிளகு - அரை டீஸ்பூன், பூண்டு - 2 பல், சின்ன வெங்காயம் - 2, உப்பு - 2 டீஸ்பூன். எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன், உளுந்து, சோம்பு - தலா அரை டீஸ்பூன்.
செய்முறை:- நண்டை சுத்தம் செய்து நன்கு கழுவி வைக்கவும். ( ரொம்ப நேரம் வைக்கக் கூடாது ) சுத்தம் செய்து உடனே சமைக்க வேண்டும். பெரிய வெங்காயம் தக்காளியைப் பொடியாக நறுக்கவும். தேங்காய், வரமிளகாய், சோம்பு, சீரகம் மிளகு, சின்ன வெங்காயம், பூண்டை மைய அரைக்கவும். எண்ணெயைக் காயவைத்து உளுந்து சோம்பு தாளித்து வெங்காயம் தக்காளியை வதக்கவும். இரண்டும் வதங்கியதும் நண்டைப் போட்டுத் திறக்கி அரைத்த மசாலாவைப் போட்டு நன்கு கிளறவும். இரண்டு கப் தண்ணீர் ஊற்றி மூடி போட்டு வேக விடவும். கொதி வந்ததும் ஐந்து நிமிட கழித்து உப்பு சேர்த்துக் கொதிக்க விட்டு இறக்கவும்.
மிகவும் எளிமையான செய்முறையாக இருக்கிறது சகோ.
பதிலளிநீக்குநன்றி சகோ
பதிலளிநீக்குவலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும் !
பதிலளிநீக்குஎன்றும் நம்முள் வலிமை பெருகட்டும் !!