எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

செவ்வாய், 18 ஏப்ரல், 2023

சீரகக் கொழுக்கட்டை

சீரகக் கொழுக்கட்டை


தேவையானவை:- பச்சரிசி/சாப்பாட்டு அரிசி – 1 கப், சீரகம்- 1 டீஸ்பூன், உப்பு – அரை டீஸ்பூன்.

செய்முறை:- பச்சரியை அல்லது சாப்பாட்டு அரிசியை ஊறவைத்து உலர்த்தி அரைத்துப் பொடியாக்கிச் சலித்து வைக்கவும். இதில் ஒரு டீஸ்பூன் சீரகத்தைக் கசக்கிச் சேர்த்து உப்புப் போட்டு சிறிது வெந்நீர் தெளித்துப் பிசையவும். சீடைக்காய்கள் போல உருட்டியும், பட்டன்கள் போலத் தட்டியும் வைத்துக் கொள்ளவும். ஒரு பெரிய பாத்திரத்தில் நாலு கப் நீரைக் கொதிக்க வைக்கவும். அது கொதிக்கும்போது இந்தக் கொழுக்கட்டைகளைச் சிறிது சிறிதாகத் தூவி வரவும். கரண்டி போட்டுக் கிண்டக் கூடாது. எல்லாக் கொழுக்கட்டைகளையும் போட்டு அவை வெந்து மேலெழும்பியதும் அவற்றை அந்த நீரோடு சேர்த்தும் சாப்பிடலாம். அல்லது வடிகட்டியும் சாப்பிடலாம். 


டைபாய்டு, மஞ்சள் காமாலை போன்றவற்றின் போது சாப்பிட ஏற்றது. 

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Related Posts Plugin for WordPress, Blogger...