எனது பத்தொன்பது நூல்கள்

எனது பத்தொன்பது நூல்கள்
எனது பத்தொன்பது நூல்கள்

வெள்ளி, 30 மார்ச், 2012

PLANTAIN PODIMAS. வாழைக்காய் பொடிமாஸ்

PLANTAIN PODIMAS:-
NEEDED:-
PLANTAIN - 1 NO ( PEEL AND DICED)
BIG ONION - 1 NO. PEELED & CHOPPED
GREEN CHILLIES - 1 OR 2 HALVED
GINGER - 1 INCH PIECE CHOPPED
CURRY LEAVES -  ARK
GRATED COCONUT - 1 TBLSPN (OPTIONAL)
SALT - 1 TSP
OIL - 2 TSP
MUSTARD -  TSP
ORID DHAL -  TSP

METHOD:-
BOIL 3 CUPS OF WATER IN A PAN. ADD  PLANTAIN AND COOK FOR THREE MINUTES. ADD SALT. REMOVE FROM FIRE AND DRAIN. HEAT OIL IN A PAN ADD MUSTARD. WHEN IT SPLUTTERS ADD ORID DHAL.  WHEN IT BECOMES BROWN ADD GREEN CHILLIES, ONION, CURRY LEAVES, THEN ADD PLANTAIN . STIRR  WELL AND COOK FOR 2 MINUTES. ADD GRATED COCONUT. REMOVE FROM FIRE AND SERVE HOT WITH SAMBAR RICE OR VATHAKKUZAMBU RICE.

 வாழைக்காய் பொடிமாஸ்:-
தேவையானவை:-
வாழைக்காய் - 1 ( தோலுரித்து சதுரத்துண்டுகளாக்கவும்)
பெரிய வெங்காயம் -  1 தோலுரித்து பொடியாக அரியவும்.
பச்சை மிளகாய் - 1 அல்லது 2 இரண்டாக நறுக்கவும்.
இஞ்சி -  இன்ச் துண்டு பொடியாக நறுக்கவும்
கருவேப்பிலை -  இணுக்கு
துருவிய தேங்காய் - 1 டேபிள் ஸ்பூன் ( விரும்பினால்)
உப்பு - 1 டீஸ்பூன்
எண்ணெய் - 2 டீஸ்பூன்
கடுகு - 1 டீஸ்பூன்
உளுந்து  - 1 டீஸ்பூன்

செய்முறை:-
ஒரு பானில் 3 கப் தண்ணீர் ஊற்றி கொதிக்க வைத்து வாழைக்காயைச் சேர்க்கவும். 3 நிமிடம் வெந்ததும் உப்பு போட்டு தண்ணீரை வடிகட்டி வைக்கவும். ஒரு பானில் எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும் கடுகு போட்டு வெடித்ததும் உளுந்து போட்டு சிவந்ததும் வெங்காயம், பச்சை மிளகாய், கருவேப்பிலை,வதக்கி வாழைக்காயைச் சேர்க்கவும். 2 நிமிடம் நன்கு கிளறி துருவிய தேங்காயைச் சேர்க்கவும். அடுப்பிலிருந்து இறக்கி சூடாக சாம்பார் சாதம், வத்தக்குழம்பு சாதத்துடன் பரிமாறவும். 


செவ்வாய், 27 மார்ச், 2012

MASALA OATS. மசாலா ஓட்ஸ்.


MASALA OATS.:-
NEEDED :-
MASALA OATS - 1 PACKET
BUTTER/OLIVE OIL - 1 NO.TBLSPN
BIG ONION - 1 NO. CHOPPED
CARROT - 1 NO. CHOPPED
GREEN PEAS - HANDFUL
WATER - 2 CUPS.

METHOD :-
BOIL 2 CUPS OF WATER IN A PAN. ADD OLIVE OIL OR BUTTER. THEN ADD BIG INION , CARROT AND PEAS. THEN ADD MASALA OATS. STIRR WELL. COOK FOR 3 MINUTES. WHEN IT BECOMES THICK AND LOOKS GLASSY REMOVE FROM FIRE AND HAVE IT.

மசாலா ஓட்ஸ்:-
மசாலா ஓட்ஸ் - 1 பாக்கெட்
வெண்ணெய்/ஆலிவ் ஆயில் - 1 டேபிள்ஸ்பூன்
பெரிய வெங்காயம் - 1 பொடியாக நறுக்கவும்
காரட் - 1 பொடியாக நறுக்கவும்.
பட்டாணி - ஒரு கைப்பிடி
தண்ணீர் - 2 கப்.

செய்முறை:-
ஒரு பானில் இரண்டு கப் தண்ணீர் ஊற்றி கொதிக்க விடவும். அதில் வெண்ணெய் அல்லது ஆலிவ் ஆயில் சேர்க்கவும். அதில் காரட், வெங்காயம் பட்டாணி சேர்த்து பின் மசாலா ஓட்ஸை சேர்க்கவும். நன்கு கிளறவும். 3 நிமிடம் வெந்தபின் கெட்டியாக மினுமினுப்பாக இருக்கும்போது இறக்கி பரிமாறவும்.

வியாழன், 8 மார்ச், 2012

TOMATO RICE.(1) . தக்காளி சாதம் (1)


TOMATO RICE:-
NEEDED:-
COOKED RICE - 2 CUPS.
TOMATO LARGE - 5 NOS
BIG ONION - 2 NOS
GREEN CHILLIES - 2 NOS
RED CHILLIES - 2 NOS
RED CHILLY POWDER - 1/2 TSP
DHANIYA POWDER - TSP
TURMERIC POWDER - 1 PINCH
OIL - 1 TBLSPN
MUSTARD - 1 TSP
ORID DHAL - 2 TSP
CHANNA DHAL - 2 TSP
ASAFOETIDA - 1/10 INCH PIECE
CURRY LEAVES - 1 ARK.
SALT - 1 TSP

METHOD :-
PEEL ,WASH AND CHOP THE ONIONS. WASH AND CHOP THE TOMATOS. HEAT OIL IN A PAN ADD MUSTARD , WHEN IT SPLUTTERS ADD ORID DHAL, CHANNA DHAL , ASAFOETIDA, THEN ADD SLIT OPENED GREEN CHILLIES , HALVED RED CHILLIES & CURRY LEAVES. THEN ADD CHOPPED ONION AND TOMATO AND SAUTE WELL . ADD RED CHILLI POWDER, DHANIYA POWDER, TURMERIC POWDER AND SALT. STIRR WELL AND COOK FOR 5 MINUTES. WHEN THE OIL SEPERATES AT THE SIDES REMOVE FROM FIRE AND LET IT COOL. ADD THE COOKED RICE AND MIX WELL WITH A LADDLE. SERVE IT WITH PAPADS OR POTATO FRY OR CHIPS.


தக்காளி சாதம்:-
தேவையானவை:-
சாதம் - 2 கப்
தக்காளி பெரிது - 5
பெரிய வெங்காயம் - 2
பச்சை மிளகாய் - 2
வரமிளகாய் - 2
மிளகாய்ப் பொடி - 1/2 டீஸ்பூன்
மல்லிப் பொடி - 1 டீஸ்பூன்
மஞ்சள் பொடி - 1 சிட்டிகை
எண்ணெய் - டேபிள் ஸ்பூன்
கடுகு - 1 டீஸ்பூன்
உளுந்து - 2 டீஸ்பூன்
கடலைப் பருப்பு - 2 டீஸ்பூன்
பெருங்காயம் - 1/10 இன்ச்துண்டு
கருவேப்பிலை - 1 இணுக்கு.
உப்பு - 1 டீஸ்பூன்

செய்முறை:-
பெரிய வெங்காயத்தைத் தோலுரித்து கழுவி பொடியாக நறுக்கவும். தக்காளிகளை நன்கு கழுவி பொடியாக நறுக்கவும். பானில் எண்ணெயைக் காயவைத்து கடுகு போட்டு வெடித்ததும் உளுந்து போட்டு சிவந்ததும் கடலைப் பருப்பு, பெருங்காயம், கருவேப்பிலை போடவும். பின் பச்சை மிளகாய், வரமிளகாயைக் கிள்ளிப் போடவும். அதில் வெங்காயம், தக்காளியைப் போட்டு நன்கு வதக்கவும். அதில் மிளகாய்ப் பொடி, மல்லிப் பொடி, மஞ்சள் பொடி, உப்பு சேர்த்து நன்கு வதக்கவும். சுற்றிலும் எண்ணெய் பிரிந்து வருகையில் இறக்கி ஆற விடவும். சாதத்தைப் போட்டுக் கரண்டியால் நன்கு கிளறி அப்பளம், உருளைக்கிழங்கு பொரியல் அல்லது சிப்ஸுடன் பரிமாறவும்.

செவ்வாய், 6 மார்ச், 2012

PLAIN DOSA. சாதா தோசை.PLAINDOSAI:-
NEEDED :-
IDDLIE RICE - 2 CUPS
RAW RICE - 2 CUPS
URAD DAL - 1 CUP
FENUGREEK - 1 TSP
SALT - 2 TSP..
OIL - 50 ML

PREPARATION :-
WASH N SOAK RICES ., URAD DAL N FENUGREEK. AFTER 2 HOURS GRIND WELL AND ADD SALT AMD MIX WELL KEEP ASIDE FOR FERMENTATION.. ( 8 HOURS)
RUB THE DOSA NON STICK PAN WITH OILED CLOTH AND SPREAD THE BATTER ..
POUR ONE TEASPOON OIL AROUND THE DOSA AND MAKE THIN SHEETS OF DOSA .. IT WILL BE COOKED A LIGHT BROWN IN COLOUR AND CALLED PLAINDOSAI..
HAVE IT WITH PACHADI N MALLI THEENGKAY THUVAIYAL..

சாதா தோசை :-
தேவையானவை :-
இட்லி அரிசி
(வெள்ளைக் கார் (அ) ஐ. ஆர் 20 ) - 2 கப்
பச்சரிசி - 2 கப்
வெள்ளை உளுந்து - 1 கப்
வெந்தயம் - 1 டீஸ்பூன்.
உப்பு - 2 டீஸ்பூன்
எண்ணெய் - 50 மிலி

செய்முறை :-
அரிசிகள், உளுந்து வெந்தயம் நான்கும் ஒன்றாகப் போட்டு 4, 5 முறை நன்கு கழுவி ஊறவைக்கவும். கிரைண்டரில் போட்டு நன்கு மாவாக அரைத்து உப்பு சேர்த்து கரைக்கவும். 8 மணி நேரம் புளிக்கவிடவும். தோசைக்கல்லில் எண்ணெய் துணியால் தடவி மெல்லிய தோசைகளாக சுடவும். சுற்றிலும் எண்ணெய் விட்டு மூடி போட்டு பொன்னிறமாக வேக விடவும். இத்துடன் பச்சடியும்., கொத்துமல்லி தேங்காய்த் துவையலும் நன்றாக இருக்கும் .

TOMATO RASAM. தக்காளி ரசம்.


TOMATO RASAM..:-
NEEDED :-
TOMATO - 2 NOS
BOILED THUVAR DHAL - 1TBLSPN.
TAMARIND - 1 AMLA SIZE BALL
SALT - 2 TSP
GARLIC - 4 PODS
TURMERIC - 1 TSP
JEERA PEPPER POWDER - 2 TSP
DHANIA POWDER - 1 TSP
OIL - 2 TSP
MUSTARD - 1 TSP
URAD DHAL - 1 TSP
JEERA - 1 TSP
FENUGREEK 1/4 TSP
RED CHILLIES - 2 NOS
CURRY LEAVES - 1 ARK
ASAFOETIDA - 1 / 8 INCH PIECE
CORRIANDER LEAVES - 1 TSP CHOPPED.

METHOD:-
POUR HOT WATER AND IMMERSE THE TOMATOS AND KEEP ASIDE.. AFTER 10 MINUTES PEEL AND SMASH THEM . TAKE TAMARIND PULP IN 3 CUPS OF WATER ADD THUVAR DHAL ., TOMATOE PUREE . ADD SALT., TURMERIC., CRUSHED GARLIC., DHANIA POWDER., JEERA PEPPER POWDER.

HEAT OIL IN A PAN ADD MUSTARD. WHEN IT SPLUTTERS ADD URAD DHAL., JEERA., ASAFOETIDA., FENUGREEK AND CURRY LEAVES. HALVE THE RED CHILLIES AND ADD IT. ADD CURRY LEAVES AND POUR THE TAMARIND PULP IN IT.. BRING TO BOILING POINT AND REMOVE FROM FIRE SPRAY CORRIANDER LEAVES AND SERVE HOT WITH PAPPADS AND URULAI MASALA.

YOU CAN HAVE IT AS SOUP TOO.


தக்காளி ரசம்.:_
தேவையானாவை:-
பெரிய தக்காளி - 2
வெந்த துவரம்பருப்பு - 1 டேபிள் ஸ்பூன்
புளி - 1 நெல்லி அளவு
உப்பு - 2 டீஸ்பூன்
வரமிளகாய் - 2
பூண்டு - 4 பல்
மஞ்சள் பொடி - 1 டீஸ்பூன்
மிளகு ஜீரகப் பொடி - 2 டீஸ்பூன்
தனியாத்தூள் - 1 டீஸ்பூன்
எண்ணெய் - 1 டீஸ்பூன்
கடுகு - 1 டீஸ்பூன்
உளுந்து - 1 டீஸ்பூன்
ஜீரகம் - 1 டீஸ்பூன்
வெந்தயம் - 1/4 டீஸ்பூன்
கருவேப்பிலை- 1 இணுக்கு
பெருங்காயம் - 1 /8 இன்ச் துண்டு
கொத்துமல்லித்தழை - 1 டீஸ்பூன் நறுக்கியது

செய்முறை :-
வெந்நீர் ஊற்றி தக்காளியை பத்து நிமிடம் வைக்கவும் பின் தோலுரித்து மசிக்கவும். புளியை 3 டம்ளர் தண்ணீரில் ஊறவைத்து சாறு எடுக்கவும் . இதில் வெந்த துவரம் பருப்பு., தக்காளி., நசுக்கிய பூண்டு., மஞ்சள் பொடி., உப்பு., தனியா தூள்., மிளகு ஜீரகப் பொடி., சேர்க்கவும். பானில் எண்ணெயைக் காயவைத்து கடுகு போட்டு வெடித்ததும் உளுந்து போட்டு சிவந்ததும்., ஜீரகம்., வெந்தயம் பெருங்காயம் போட்டு., ரெண்டாகக் கிள்ளிய வரமிளகாய்., கருவேப்பிலை போடவும். இதில் புளிக்கரைசலை ஊற்றி நு்ரைத்துக் கொதிவரும் நிலையில் எடுத்து கொத்துமல்லி தூவி சாதம் ., அப்பளம்., உருளை வறுவலுடன் பரிமாறவும்..

அப்படியே சூப் போலவும் குடிக்கலாம்.

Related Posts Plugin for WordPress, Blogger...