எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

திங்கள், 27 ஆகஸ்ட், 2018

சிக்கன் ட்ரம்ஸ்டிக் சாப்ஸ்.

சிக்கன் ட்ரம்ஸ்டிக் சாப்ஸ்.

தேவையானவை :- சிக்கன் ட்ரம்ஸ்டிக் பீஸ் - 2, வரமிளகாய் - 10, முட்டை - 1, உப்பு - அரை டீஸ்பூன்.  எண்ணெய் - பொறிக்கத்தேவையான அளவு.

செய்முறை :- சிக்கனை கழுவி வைக்கவும். வரமிளகாயை பேஸ்ட் போல அரைக்கவும். ஒரு பாத்திரத்தில் சிக்கனைப் போட்டு மிளகாய் பேஸ்டையும் போட்டு மூழ்கும் அளவு தண்ணீர் ஊற்றி மூடி போட்டு வேக விடவும். நன்கு வெந்து மசாலா எல்லாம் சிக்கனை சாரும் வரை வேகவைத்து உப்பு சேர்த்து இன்னும் இரு நிமிடங்கள் புரட்டிவிட்டு வேகவைத்து இறக்கவும்.

ஒரு பானில் எண்ணெயைக் காயவைக்கவும். முட்டையை அடித்து வைக்கவும். வேகவைத்த சிக்கன் ட்ரம்ஸ்டிக்கை முட்டையில் நனைத்து எண்ணெயில் மிதமான தீயில் பொரித்தெடுக்கவும்.

இது சும்மா சாப்பிடவே நன்றாக இருக்கும்.

  

புதன், 22 ஆகஸ்ட், 2018

உருளை பொரியல்.

லஞ்ச் பாக்ஸுக்கு ஏற்றபடி ஐந்தே நிமிடத்தில் செய்யக்கூடிய ஈஸி உருளை பொரியல் இதோ.

தேவையானவை :-

உருளைக்கிழங்கு - 2, உப்பு - அரை டீஸ்பூன், வரமிளகாய்த்தூள் - அரை டீஸ்பூன், எண்ணெய் - 3 டீஸ்பூன், தாளிக்க - கடுகு, உளுந்து தலா அரை டீஸ்பூன், சோம்பு - கால் டீஸ்பூன்.

செய்முறை :- உருளைக்கிழங்கைத் தோல் சீவிக் கட்டம் கட்டமாக நறுக்கிக் கொள்ளவும். கடாயில் எண்ணெயைக் காயவைத்து கடுகு உளுந்து சோம்பு தாளித்து உருளையை இரு நிமிடம் வதக்கவும். இதில் உப்பும் , மிளகாய்த்தூளும் சேர்த்து வதக்கி ரோஸ்டாக எண்ணெயிலேயே நன்கு வெந்ததும் இறக்கவும். இது தயிர்சாதம் & கலவை சாதங்களுக்குத் தொட்டுக்கொள்ள ஏற்றது..
  

வெள்ளி, 10 ஆகஸ்ட், 2018

வாழைக்காய் காரப் பொரியல்.

வாழைக்காய் காரப் பொரியல் :-

தேவையானவை :- வாழைக்காய் - 1, உப்பு - அரை டீஸ்பூன், சாம்பார் பொடி - ஒன்றரை டீஸ்பூன், பூண்டு - 3 பல், கருவேப்பிலை - 1 இணுக்கு, எண்ணெய் - ஒரு டேபிள் ஸ்பூன், கடுகு உளுந்து - தலா ஒரு டீஸ்பூன், சோம்பு - கால் டீஸ்பூன். மஞ்சள்தூள் - 1 சிட்டிகை.

செய்முறை :- வாழைக்காயைத் தோல் சீவி செவ்வகத் துண்டுகளாக நறுக்கவும். அதில் உப்பு, சாம்பார் பொடி, நசுக்கிய பூண்டு, கருவேப்பிலை, மஞ்சள் தூள் போட்டு நன்கு பிசறவும். அதில் இருக்கும் நீர்ச்சத்தே போதும். இரு நிமிடங்கள் வைக்கவும்.

கடாயில் எண்ணெயைக் காயவைத்து கடுகு போட்டு வெடித்ததும் உளுந்து போட்டுச் சிவந்ததும் சோம்பு கருவேப்பிலை தாளித்து மசாலா பிரட்டிய வாழைக்காயைச் சேர்க்கவும். ஒரு நிமிடம் தீயை ஹையில் வைத்து வதக்கி அதன் பின் சிம்மில்  5 - 10 நிமிடங்கள்  வைத்து அவ்வப்போது கிளறி விட்டு இறக்கவும். சுவையான வாழைக்காய் பொரியல் தயார் . தயிர் சோற்றுடன் இது அட்டகாசமான காம்பினேஷன்.
  

செவ்வாய், 7 ஆகஸ்ட், 2018

தக்காளிப் பச்சடி.

தக்காளிப் பச்சடி. :-

தேவையானவை :-

வேகவைத்த துவரம்பருப்பு - 1 டேபிள் ஸ்பூன், தக்காளி - 4, பெரிய வெங்காயம் - 1, பச்சை மிளகாய் - 2, சாம்பார் தூள் - 1 டீஸ்பூன், மஞ்சள்தூள் - ஒரு சிட்டிகை, உப்பு - அரை டீஸ்பூன், எண்ணெய் - 2 டீஸ்பூன், கடுகு, உளுந்து - தலா அரை டீஸ்பூன், பெருங்காயத்தூள் - 1 சிட்டிகை, கருவேப்பிலை - 1 இணுக்கு.

செய்முறை :- தக்காளி வெங்காயத்தைத் துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும். பச்சை மிளகாயைக் கீறிக் கொள்ளவும். எண்ணெயைக் காயவைத்துக் கடுகு போட்டு வெடித்ததும் உளுந்து போட்டு சிவந்ததும் பெருங்காயத்தூளைப் போடவும். அதில் பச்சைமிளகாய், கருவேப்பிலை தாளித்து தக்காளி, வெங்காயத்தைப் போட்டு இரண்டு நிமிடங்கள் நன்கு வதக்கவும். அதில் உப்பு, மஞ்சள் தூள், சாம்பார்த்தூள் போட்டு வதக்கி ஒரு கப் தண்ணீர் ஊற்றி மூடி போட்டு வேகவிடவும். பாதி வெந்ததும் துவரம்பருப்பைச் சேர்த்து நன்கு கொதித்ததும் இறக்கி சாதத்தோடு பரிமாறவும்.

புதன், 1 ஆகஸ்ட், 2018

அப்பளப்பூ, கிள்ளு வற்றல், சோற்று வற்றல், மிதுக்க வற்றல்.

அப்பளப்பூ :-

தேவையானவை:- உளுந்தமாவு - 2 கப், சீரகம் - கால் டீஸ்பூன், பெருங்காயம் - 1 துண்டு, எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன், தண்ணீர் - தேவையான அளவு.

செய்முறை :- உளுந்தமாவில் சீரகத்தைத் தேய்த்துப் போடவும். பெருங்காயத்தையும் உப்பையும் நீரில் கரைத்து ஊற்றி கெட்டியாகப் பிசையவும். எண்ணெய் தடவி மடக்கி மடக்கி சப்பாத்திக் கல்லில் அடித்து நீளமான உருளைகளாக உருட்டவும். இதை மருந்து பாட்டில் மூடி அளவு  துண்டங்களாக வெட்டி வைக்கவும். ஒவ்வொன்றையும் நீள்வாக்கில் உளுந்து மாவு தூவி சப்பாத்திக் கல்லில் தேய்த்து நிழற்காய்ச்சலாக உலரவைத்து எடுத்து வைக்கவும்.
Related Posts Plugin for WordPress, Blogger...