எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

வெள்ளி, 27 நவம்பர், 2020

பலகாய் மண்டி.

பலகாய் மண்டி.


தேவையானவை:- நாட்டுக் காய்கள் - முருங்கைக்காய் - 1, கத்திரிக்காய் - 2, வாழைக்காய் - பாதி, ( பலா விதை இருந்தால் வேகவைத்து இரண்டாக நறுக்கி சேர்க்கலாம் ), உருளைக்கிழங்கு - சின்னம் ஒன்று, (மாவத்தல் - 8 , அவரைவத்தல் - 6, தட்டைப்பயிறு - அரை கப்  இது மூன்றையும் வேகவைத்து வைக்கவும்.) பச்சைமிளகாய் - 8, சின்ன வெங்காயம் - 10, வெள்ளைப்பூண்டு - 10, அரிசி களைந்த திக் தண்ணீர் - 2 கப், உப்பு - அரை டீஸ்பூன், புளி - 4 சுளை, எண்ணெய்- 1 டேபிள் ஸ்பூன், கடுகு - அரை டீஸ்பூன், உளுந்து - அரை டீஸ்பூன், பெருங்காயம் - 1 துண்டு, கருவேப்பிலை - 1 இணுக்கு. 

செய்முறை:- அரிசி மண்டியில் உப்புப் புளியை ஊறவைக்கவும். காய்கறிகளை இரண்டு இஞ்ச் துண்டுகளாக வெட்டவும். வெங்காயம் பூண்டை உரித்து இரண்டாக நறுக்கவும். பச்சைமிளகாயையும் ஒரு இஞ்ச் துண்டாக நறுக்கவும். எண்ணெயைக் காயவைத்துக் கடுகு, உளுந்து, பெருங்காயம் தாளித்து கருவேப்பிலை பச்சைமிளகாயைச் சேர்க்கவும். லேசாக வதங்கியதும் வெங்காயம் பூண்டு, காய்களைச் சேர்த்து இன்னும் சில நிமிடம் வதக்கவும்.இதில் உப்புப் புளியை மண்டியோடு கரைத்து ஊற்றவும். கொதி வந்ததும் மூடி போட்டுப் பத்து நிமிடம் நன்கு வேக வைக்கவும். கடைசியாக வேகவைத்த மாவத்தல் கத்திரிவத்தல், தட்டைப்பயறு போட்டு இன்னும் சில நிமிடம் வேகவைத்து இறக்கவும் . இன்னும் மண்டி திக்காக வேண்டுமென்றால் பச்சரிசி அரை டீஸ்பூன், கால் டீஸ்பூன் வெந்தயம், சிறு துண்டு பெருங்காயத்தை வறுத்துப் பொடித்துப் போடவும். இதுதயிர்சாதத்துடன் சாப்பிட சுவையாக இருக்கும். இட்லி தோசையுடனும் சாப்பிடலாம். 
  

திங்கள், 23 நவம்பர், 2020

மசால் வடை / ஆமை வடை.

மசால் வடை / ஆமை வடை. 


தேவையானவை:- கடலைப்பருப்பு - 1 கப், பச்சைமிளகாய் - 2, வரமிளகாய் - 2, இஞ்சி - ஒரு இஞ்ச் துண்டு, பெரிய வெங்காயம் - 1, கருவேப்பிலை - 1 இணுக்கு, சோம்பு - 1 டீஸ்பூன், உப்பு - அரை டீஸ்பூன், எண்ணெய் - பொரிக்கத் தேவையான அளவு. 





செய்முறை:- கடலைப்பருப்பை ஒருமணி நேரம் தண்ணீரில் ஊறவைக்கவும். நீரை வடித்து பச்சைமிளகாய் , வரமிளகாய், சோம்பு, இஞ்சி உப்புடன் அரைத்தெடுக்கவும். வெங்காயம் கருவேப்பிலையைப் பொடியாக அரிந்து போட்டு நன்கு பிசைந்து வடைகளாகத் தட்டி எண்ணெயில் பொரித்தெடுக்கவும். இது மாலையில் காஃபி டீயோடு சாப்பிட சுவையாக இருக்கும். 

 
  

வியாழன், 19 நவம்பர், 2020

பருப்புச் சட்னி ( பருப்பரைச்சுக் கொதிக்க வைத்தல் )

பருப்புச் சட்னி ( பருப்பரைச்சுக் கொதிக்க வைத்தல் ) 



தேவையானவை:- துவரம்பருப்பு - 1 டேபிள் ஸ்பூன், வரமிளகாய் - 3 ( சோம்பு, சீரகம் விரும்பினால் சிறிது ) பெரிய வெங்காயம் - 1, தக்காளி - 1, புளி 1 சுளை, உப்பு - அரை டீஸ்பூன் தாளிக்க :- எண்ணெய் - 2 டீஸ்பூன் கடுகு, உளுந்து - தலா அரை டீஸ்பூன். 

செய்முறை:- பருப்பை அரைமணிநேரம் ஊறவைத்து வரமிளகாய், சோம்பு சீரகத்துடன் மைய அரைக்கவும். பெரியவெங்காயம் தக்காளியைப் பொடியாக அரியவும். எண்ணெயைக் காயவைத்துக் கடுகு உளுந்து தாளித்து சிவந்ததும் வெங்காயம் தக்காளியை வதக்கி ஒரு கப் தண்ணீரில் உப்புப் புளியைக் கரைத்து ஊற்றவும். இதிலேயே அரைத்த விழுதையும் சேர்த்து இன்னும் அரை கப் நீரூற்றிக் கொதித்து வெந்ததும் இறக்கவும். இது இட்லிதோசைக்குத் தொட்டுக்கொள்ள ஏற்றது. குருணை அல்லது கேப்பைக் களி செய்தால் இதோடு மாவத்தலையும் ஊறவைத்துச் சேர்த்து வேகவைத்துப் பருப்பரைத்துக் கொதிக்க வைப்போம். 
  

புதன், 18 நவம்பர், 2020

தர்ப்பூசணி தேன் சாறு.

தர்ப்பூசணி தேன் சாறு. 



தேவையானவை:- தர்ப்பூசணி - 1 கீற்று, எலுமிச்சைச் சாறு - சில துளிகள், தூள் சர்க்கரை - 1 டீஸ்பூன், தேன் - 1 டீஸ்பூன்.

செய்முறை:- அனைத்தையும் மிக்ஸியில் போட்டு நன்கு அடித்து உயர கண்ணாடிக் கோப்பைகளில் ஊற்றி அருந்தவும். 

  

செவ்வாய், 17 நவம்பர், 2020

பாகற்காய் பிட்ளை

பாகற்காய் பிட்ளை


தேவையானவை:- பாகற்காய் - 200 கி. துவரம்பருப்பு - 1 டேபிள் ஸ்பூன், தட்டைப்பயிறு - 1 டேபிள் ஸ்பூன், தேங்காய் - 1 சில்லு, வரமிளகாய் - 5, உளுந்தம்பருப்பு - ஒரு டீஸ்பூன், கடலைப்பருப்பு - 1 டீஸ்பூன், வரமல்லி - 2 டீஸ்பூன், சீரகம் - அரை டீஸ்பூன், மிளகு - 10. சின்ன வெங்காயம் - 8 தக்காளி - 1, புளி - 1 நெல்லி அளவு, உப்பு - அரை டீஸ்பூன், எண்ணெய் - 2 டீஸ்பூன், கடுகு உளுந்து , சீரகம் - தலா அரை டீஸ்பூன், பெருங்காயத்தூள் - 1 சிட்டிகை, மஞ்சள்தூள் - 1 சிட்டிகை, கருவேப்பிலை - 1 இணுக்கு. 

செய்முறை:- ஒரு டீஸ்பூன் எண்ணெயில் ஸ்லைசாக நறுக்கிய பாகற்காயை வதக்கி சிறிது நீரூற்றி வேகவைத்து இறக்கவும். குக்கரில் துவரம்பருப்பையும் தட்டைப்பயிறையும் தனித்தனியாகக் கிண்ணங்களில் போட்டு நன்கு வேகவைத்து இறக்கவும்.வரமிளகாய், உளுந்தம்பருப்பு, கடலைப்பருப்பு, மல்லி, சீரகம், மிளகு ஆகியவற்றை எண்ணெய் விடாமல் வறுத்துத் தேங்காயோடு அரைத்து வைக்கவும். உப்புப் புளியை ஒரு கப் தண்ணீரில் ஊறப்போட்டுச் சாறெடுக்கவும். இதை பாகற்காயோடு போட்டு சுத்தம் செய்த வெங்காயம் தக்காளியோடு வேகப்போடவும். மஞ்சள்தூள் சேர்க்கவும். இதில் வறுத்துப் பொடித்த சாம்பார் பொடியைப் போட்டு நன்கு கொதிக்க விட்டுத் தட்டைப்பயிறும் வெந்த துவரம்பருப்பையும் சேர்த்து இறக்கவும். எண்ணெயில் கடுகு, உளுந்து சீரகம் பெருங்காயத்தூள், கருவேப்பிலை தாளித்து கொட்டி உபயோகிக்கவும். 

  

திங்கள், 16 நவம்பர், 2020

மேத்தி தேப்லா.

மேத்தி தேப்லா. 


தேவையானவை:- வெந்தயக் கீரை - 1 கட்டு, கோதுமை மாவு - 2 கப், ஓமம் - கால் டீஸ்பூன், மிளகாய்த்தூள் - கால் டீஸ்பூன், பெரிய வெங்காயம் பொடியாக அரிந்தது - 2 டீஸ்பூன், தயிர் - 2 டீஸ்பூன், எண்ணெய் - 2 டீஸ்பூன். எண்ணெய் - சுட தேவையான அளவு.

செய்முறை:- வெந்தயக் கீரையைப் பொடிப் பொடியாக நறுக்கி மாவில் போட்டு அனைத்துப் பொருட்களையும் போட்டு தண்ணீர் தெளித்துப் பிசையவும். நன்கு பிசைந்து பத்து நிமிடம் ஊறவைத்து கனமான சப்பாத்திகளாகத் தேய்த்துத் தோசைக்கல்லில் சுட்டு எடுக்கவும். 
 

கத்திரிக்காய்க் கூட்டு.

கத்திரிக்காய்க் கூட்டு. 


தேவையானவை :- கத்திரிக்காய் - 4 , சின்ன வெங்காயம் - 4, துவரம்பருப்பு - 1 டேபிள் ஸ்பூன், சாம்பார் பொடி - அரை டீஸ்பூன், உப்பு - கால் டீஸ்பூன், எண்ணெய் - 1 டீஸ்பூன், தாளிக்க உளுந்து, சீரகம் - தலா அரை டீஸ்பூன். கருவேப்பிலை - 1 இணுக்கு.

செய்முறை:- துவரப்பருப்பைக் குக்கரில் கால் கப் நீர் ஊற்றி முக்கால் பதம் வேகவிடவும். வெந்ததும் சதுரமாக நறுக்கிய கத்திரிக்காய், சின்ன வெங்காயம் போட்டு இன்னும் கால் கப் தண்ணீர் ஊற்றி வேக விடவும். வெந்ததும் சாம்பார் பொடி உப்பு சேர்த்துக் கொதிக்க விட்டு இறக்கவும். இதில் உளுந்து சீரகம் கருவேப்பிலையை எண்ணெயில் தாளித்துப் போட்டுக்  கலந்து உபயோகிக்கவும்.  
  

வியாழன், 12 நவம்பர், 2020

பாசிப்பயறு சாட்

பாசிப்பயறு சாட்



தேவையானவை :- பாசிப்பயறு - 1 கப் அவித்தது, பொடியாக அரிந்த வெங்காயம் - 2 டீஸ்பூன், பொடியாக அரிந்த தக்காளி - 2 டீஸ்பூன் , சாட் மசாலா- சிறிது அல்லது உப்பு - சிறிது.

செய்முறை :- அனைத்தையும் கலந்து சாப்பிடவும். தேவைப்பட்டால் மாகி ஹாட் அண்ட் ஸ்வீட் டொமாட்டோ சில்லி சாஸ், ஓமப்பொடி ஒரு கைப்பிடி, பொரி ஒரு கைப்பிடி போட்டுச் சாப்பிடவும். 
  

செவ்வாய், 10 நவம்பர், 2020

பாசிப்பயறுக் குழம்பு

பாசிப்பயறுக் குழம்பு 


தேவையானவை :- பாசிப்பயறு - அரை கப், சின்ன வெங்காயம் - 8, தக்காளி - 1, சாம்பார் பொடி - 1 டேபிள் ஸ்பூன், மஞ்சள்தூள் - 1 சிட்டிகை, உப்பு - அரை டீஸ்பூன், புளி - இரண்டு சுளை, எண்ணெய் - ஒரு டீஸ்பூன், கடுகு உளுந்து சீரகம்  - தலா அரை டீஸ்பூன், கருவேப்பிலை - 1 இணுக்கு, பெருங்காயத் தூள் - 1 சிட்டிகை. பூண்டு - ஒரு பல். 


செய்முறை:- பாசிப்பயறை வறுத்துக் குக்கரில் போட்டு அரை கப் தண்ணீர் ஊற்றி ஒரு விசில்  வேகவிடவும். வெந்த பயரில் வெங்காயம் தக்காளியை அரிந்து போட்டு உப்புப் புளியை ஒரு கப் தண்ணீரில் கரைத்து ஊற்றி மஞ்சள்தூள், சாம்பார் தூள் போடவும். ஐந்து நிமிடங்கள் நன்கு கொதித்ததும் எண்ணெயில் கடுகு உளுந்து சீரகம் கருவேப்பிலை தாளித்துப் பூண்டைத் தட்டிப்போட்டு இறக்கவும். சூடாக சாதம் இட்லி தோசையுடன் பரிமாறவும். 
  
Related Posts Plugin for WordPress, Blogger...