எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

திங்கள், 29 டிசம்பர், 2014

மார்கழி நிவேதனங்கள். குமுதம் பக்தி ஸ்பெஷலில் RECIPES FOR DECEMBER

இவை டிசம்பர் 1 - 15, 2014, குமுதம் பக்தி ஸ்பெஷலில் வெளியானவை. 

திருவாதிரைக் களி:-

தேவையானவை :-
பச்சரிசி – 1 கப் கழுவி காயவைத்து ரவையாகப் பொடிக்கவும்.
பாசிப்பருப்பு – ¼ கப் சிவக்க வறுத்து ரவையாகப் பொடிக்கவும்.
கடலைப் பருப்பு - ¼ கப் சிவக்க வறுத்து ரவையாகப் பொடிக்கவும்
வெல்லம் – 200 கி
தேங்காய் – 1 மூடி துருவவும்
நெய் – 30 கி
முந்திரி – 5 இரண்டாக ஒடிக்கவும்.
கிஸ்மிஸ் – 10
உப்பு – 1 சிட்டிகை
ஏலக்காய்த் தூள் – 1 சிட்டிகை.

செய்முறை:-
3 கப் தண்ணீரைக் கொதிக்க வைத்து வெல்லத்தைத் தட்டிப் போட்டுக் கரைந்ததும் வடிகட்டி ஊற்றிக் கொதிக்க விடவும். அதில் அரிசி பருப்பு ரவைகளைத் தூவிக்கொண்டே கிளறவும். உப்பும்,10 கிராம் நெய்யும் ஊற்றவும். கட்டி படாமல் கிளறி ப்ரஷர் பானில் போட்டு ஒரு விசில் வரும்வரை வைத்து இறக்கவும். நெய்யில் முந்திரி கிஸ்மிஸ் பொரித்துப் போட்டுக் களியில் கொட்டி ஏலப்பொடி தூவி மிச்ச நெய்யையும் ஊற்றிக் கிளறி நைவேத்தியம் செய்யவும்.

2. திருவரங்கத்து நெய் அப்பம் :-

தேவையானவை :-
கோதுமை மாவு – 2 கப்
தூள் வெல்லம் – 3/4 கப்
நெய் – பொரிக்கத் தேவையான அளவு.

செவ்வாய், 23 டிசம்பர், 2014

கிருஷ்ண ஜெயந்தி, வரலெக்ஷ்மி விரதம், ஸ்பெஷல் நைவேத்தியங்கள்,KRISHNA JEYANTHI, VARALAKSHMI VIRATHAM RECIPES

ட்ரைஃப்ரூட்ஸ் பேணி, வெஜிடபிள் பேணி மூங்க்தால் கிச்சடி, பழ அப்பம். ---வரலெக்ஷ்மி விரத ஸ்பெஷல் :-

ஓட்ஸ் லட்டு, கார்ஃப்ளோர் உருண்டை, பாப்கார்ன் பர்ஃபி, கிருஷ்ணப் ப்ரஸாத்.----
கிருஷ்ண ஜெயந்தி ஸ்பெஷல். :

வரலெக்ஷ்மி விரத ஸ்பெஷல் :-

1.ட்ரைஃப்ரூட்ஸ் பேணி:-

வெறும் தேங்காய்வெல்லம் பூரணத்துக்குப் பதிலாக இப்படியும் இனிப்புக் கொழுக்கட்டை செய்யலாம்.

தேவையானவை:-
பச்சரிசி – 2 கப்

ஃபில்லிங் :-
பாதாம் -15
பிஸ்தா – 15
முந்திரி – 15
பேரீச்சை – 6
கிஸ்மிஸ் – 30
செர்ரி – 10
டூட்டி ஃப்ரூட்டி – 1 டேபிள் ஸ்பூன்
கொப்பரை – 2 டேபிள் ஸ்பூன்
தேன் – 1 டேபிள் ஸ்பூன்.

செய்முறை:-
மேல்மாவு.
பச்சரிசியை ஊறவைத்து மிக்ஸியில் அரைத்து நன்கு சலிக்கவும். ஒரு பாத்திரத்தில் 1 1/4 கப் தண்ணீரைக் கொதிக்கவைத்து அதில் இரண்டு ஸ்பூன் நல்லெண்ணெய் விட்டு  ஒரு சிட்டிகை உப்புப் போட்டு மாவைத் தூவிப் பிசையவும்.. பந்துபோல உருண்டுவந்ததும் இறக்கி ஒரு ஈரத்துணியைப் போட்டு மூடிவைக்கவும்.

ஃபில்லிங்க் செய்ய பாதாம் முந்திரியை ஊறவைத்து துண்டுகளாக நறுக்கவும். பேரீச்சை பிஸ்தாவையும் நறுக்கவும். செர்ரியை கொட்டை எடுத்து சின்னதாக நறுக்கவும். கொப்பரையை லேசாக வாசம் வரும் பக்குவம் வறுத்து டூட்டி ஃப்ரூட்டி, கிஸ்மிஸ் எல்லாவற்றையும் சேர்த்து தேன் ஊற்றிக் கலந்து பதினாறு உருண்டைகளாக உருட்டி வைக்கவும்.

புதன், 10 டிசம்பர், 2014

புதன் முதல் சனி வரை நிவேதனங்கள் WEDNESDAY, THURSDAY, FRIDAY, SATURDAY RECIPES

4. கிருஷ்ணப் ப்ரசாதம். – புதன் பெருமாள்

இது இஸ்கான் கோயிலில் கிடைக்கிறது. கிட்டத்தட்ட சுருள் பூரி டைப் இனிப்பு. ஆனால் நீள அப்பளப்பூவை மடித்து ஒன்றின் மேல் ஒன்று ஒட்டியது போலச் செய்வது.

Related Posts Plugin for WordPress, Blogger...