எனது பத்தொன்பது நூல்கள்

எனது பத்தொன்பது நூல்கள்
எனது பத்தொன்பது நூல்கள்

ஞாயிறு, 24 ஜனவரி, 2021

வெண்டைக்காய் சூப்

வெண்டைக்காய் சூப்:-


தேவையானவை:-
வெண்டைக்காய் முற்றியது  - 10 
வேகவைத்த துவரம்பருப்பு - 1 டேபிள் ஸ்பூன்
பெரிய வெங்காயம் - 1 நீளமாக நறுக்கவும்
தக்காளி - 1 துண்டுகளாக்கவும்.
பச்சை மிளகாய் - 1 இரண்டாக வகிரவும்.
மஞ்சள் தூள் - 1 சிட்டிகை
எண்ணெய் /நெய் - 2 டீஸ்பூன்
உளுந்து - 1/2 டீஸ்பூன்
சோம்பு - 1/3 டீஸ்பூன்
சீரகம் - 1/2 டீஸ்பூன்
மிளகு - 1 டீஸ்பூன்
பட்டை - 1 இன்ச்
இலை - இன்ச்
கல்பாசிப்பூ - 1 இன்ச்
ஏலக்காய் - 1
கருவேப்பிலை - 1 இணுக்கு.
கொத்துமல்லி தழை - 1 டீஸ்பூன்.
உப்பு - 1 டீஸ்பூன்
பால் - 1 டேபிள் ஸ்பூன்.

செய்முறை:-

வெண்டைக்காய்களை  இரண்டு இன்ச் துண்டுகளாக வெட்டவும். ஒரு பானில் எண்ணெய்/ நெய் ஊற்றி உளுந்து, சோம்பு, சீரகம்., மிளகு, கல்பாசிப்பூ., பட்டை., இலை., ஏலக்காய் போட்டு தாளிக்கவும். அதில் வெங்காயம், தக்காளி., கருவேப்பிலை., பச்சை மிளகாய், வெண்டைக்காய் போட்டு நன்கு வதக்கவும். துவரம்பருப்பை நன்கு மசித்து 3 கப் தண்ணீர் ஊற்றி உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து பானில் ஊற்றவும். கொதி வந்ததும் சிம்மில் மூடி போட்டு 7 நிமிடம் வேக விடவும். பால் ஊற்றி கொத்துமல்லித்தழை சேர்த்து வறுத்த அரிசி வத்தல்களுடன் பரிமாறவும்.

  

வியாழன், 21 ஜனவரி, 2021

ஃப்ரூட் சாட்

ஃப்ரூட் சாட் :- 


தேவையானவை:- வாழைப்பழம் – 1,  பப்பாளி – 1துண்டு, தர்ப்பூசணி – 1 துண்டு, மஞ்சள் கிர்ணி – 1துண்டு. சாட் மசாலா.

செய்முறை:- பழங்களைத் தோல் சீவிக் கழுவிப் பெரிய சதுரத் துண்டுகளாக்கவும். இதை சர்விங் கப்பில் போட்டு சாட் மசாலா தூவி ஸ்டிக் குத்திக் கொடுக்கவும்.
  

செவ்வாய், 12 ஜனவரி, 2021

மசாலா பொரி

மசாலா பொரி :-


தேவையானவை :- பொரி - 1கப், காரட் துருவியது - 1 டேபிள் ஸ்பூன் , பெரிய வெங்காயம் பொடியாக அரிந்தது - அரை டேபிள் ஸ்பூன், சாட் மசாலா - 1 சிட்டிகை, கொத்துமல்லித்தழை - சிறிது.

செய்முறை:- அனைத்தையும் ஒரு பவுலில் போட்டு நன்கு கலந்து கொடுக்கவும். பொரியில் உப்பு இருப்பதால் உப்பு போட வேண்டாம். 
  

திங்கள், 11 ஜனவரி, 2021

பீட்ரூட் கட்லெட்

பீட்ரூட் கட்லெட்


தேவையானவை:- பீட்ரூட் - 1, ப்ரெட் - 2 ஸ்லைஸ், அவித்த உருளைக்கிழங்கு - 1 சின்னம், பெரிய வெங்காயம் - 1 சின்னம், மிளகாய்த்தூள் - கால் டீஸ்பூன், சோம்புத்தூள் - ஒரு சிட்டிகை, கரம் மசாலா - 1 சிட்டிகை, வெண்ணெய் - 2 டீஸ்பூன், பச்சைமிளகாய் -1, முந்திரி 10, நெய் + எண்ணெய் - 50 கிராம்.

செய்முறை:- பீட்ரூட்டைத் துருவவும்.பச்சைமிளகாய்,  பெரிய வெங்காயத்தைப் பொடியாக அரியவும். ஒரு பவுலில் ஓரங்கள் நீக்கிய ப்ரெட், அவித்த உருளைக்கிழங்கு, துருவிய பீட்ரூட், வெங்காயம், பச்சைமிளகாய், உப்பு, மிளகாய், சோம்புத்தூள் போட்டு வெண்ணெயைக் கலந்து நன்கு பிசையவும். இதய வடிவில் தட்டி முந்திரியைப் பதித்து தட்டையான பேனில் மூன்று நான்காகப் போட்டு இருபுறமும் நன்கு வேகவைத்து மயோனிஸோடு பரிமாறவும். 

  

ஞாயிறு, 10 ஜனவரி, 2021

மினி ஊத்தப்பம்

மினி ஊத்தப்பம்


தேவையானவை:- இட்லி அரிசி - 1 கப், பச்சரிசி - அரை கப், உளுந்து - 1/3 கப், வெந்தயம் - சிறிது, உப்பு - 1/2 டீஸ்பூன், நல்லெண்ணெய் - 50 மிலி. 

செய்முறை:- இட்லி அரிசி பச்சரிசியைக் களைந்து ஊறவைக்கவும். உளுந்தையும் வெந்தயத்தையும் களைந்து ஊறவைக்கவும். இரண்டு மணி நேரம் இரண்டும் ஊறியபின்பு நன்கு நைஸாக ஆட்டி உப்பு சேர்த்துக் கரைத்து எட்டு மணி நேரம் புளிக்க விடவும். தோசைக்கல்லில் எண்ணெய் தடவி குழிக்கரண்டியால் ஒரு கரண்டி மாவை எடுத்து ஊற்றி லேசாகத் தடவி ( அமுக்கித் தடவக் கூடாது, அப்படியே ஊற்றி வைத்தாலும் சரிதான் ) சுற்றிலும் எண்ணெய் விட்டு மூடி போட்டு வேகவிட்டு மறுபுறம் திருப்பி எண்ணெய் ஊற்றி வெந்ததும் எடுக்கவும். சாம்பார் சட்னியுடன் பரிமாறவும். 
  

வெள்ளி, 8 ஜனவரி, 2021

மிளகாய்/குடைமிளகாய் பஜ்ஜி

மிளகாய்/குடைமிளகாய் பஜ்ஜி :- தேவையானவை:- பஜ்ஜி மிளகாய் - 8, குடைமிளகாய்- 1. கடலை மாவு -  1 கப், அரிசிமாவு - 2 டீஸ்பூன், மிளகாய் சோம்புத்தூள் - கால் டீஸ்பூன், பெருங்காயப் பொடி - 1 சிட்டிகை, உப்பு - கால் டீஸ்பூன், எண்ணெய் - பொரிக்கத் தேவையான அளவு. 

செய்முறை:- பஜ்ஜி மிளகாயை இரண்டாகக் கீறி உப்புத் தண்ணீரில் போட்டு வைக்கவும். குடை மிளகாயை விதையில்லாமல் வட்ட வட்டமாக -  ரிங்க்ஸ்போல வளையமாக - வெட்டி வைக்கவும். கடலை மாவில் அரிசி, மிளகாய் சோம்புப் பொடி, உப்பு, பெருங்காயப் பொடி போட்டு நன்கு கலந்து கால் கப் நீரூற்றிக் கெட்டியாக கரைக்கவும். எண்ணெயைக் காயவைத்து மிளகாய்களை மாவில் தோய்த்துப் பொரித்தெடுக்கவும். பஜ்ஜி மிளகாயின் உள்ளே சீஸ் பனீர், ஓமம் போன்றவை வைத்து ஸ்டஃப் செய்தும் பொரிக்கலாம். இதற்கு இஞ்சிச் சட்னி பொருத்தமாக இருக்கும். 

  
Related Posts Plugin for WordPress, Blogger...