எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

வெள்ளி, 8 ஜனவரி, 2021

மிளகாய்/குடைமிளகாய் பஜ்ஜி

மிளகாய்/குடைமிளகாய் பஜ்ஜி :- 



தேவையானவை:- பஜ்ஜி மிளகாய் - 8, குடைமிளகாய்- 1. கடலை மாவு -  1 கப், அரிசிமாவு - 2 டீஸ்பூன், மிளகாய் சோம்புத்தூள் - கால் டீஸ்பூன், பெருங்காயப் பொடி - 1 சிட்டிகை, உப்பு - கால் டீஸ்பூன், எண்ணெய் - பொரிக்கத் தேவையான அளவு. 

செய்முறை:- பஜ்ஜி மிளகாயை இரண்டாகக் கீறி உப்புத் தண்ணீரில் போட்டு வைக்கவும். குடை மிளகாயை விதையில்லாமல் வட்ட வட்டமாக -  ரிங்க்ஸ்போல வளையமாக - வெட்டி வைக்கவும். கடலை மாவில் அரிசி, மிளகாய் சோம்புப் பொடி, உப்பு, பெருங்காயப் பொடி போட்டு நன்கு கலந்து கால் கப் நீரூற்றிக் கெட்டியாக கரைக்கவும். எண்ணெயைக் காயவைத்து மிளகாய்களை மாவில் தோய்த்துப் பொரித்தெடுக்கவும். பஜ்ஜி மிளகாயின் உள்ளே சீஸ் பனீர், ஓமம் போன்றவை வைத்து ஸ்டஃப் செய்தும் பொரிக்கலாம். இதற்கு இஞ்சிச் சட்னி பொருத்தமாக இருக்கும். 

  

1 கருத்து:

  1. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும் !
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும் !!

    பதிலளிநீக்கு

Related Posts Plugin for WordPress, Blogger...