எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

ஞாயிறு, 29 மார்ச், 2026

வாழைக்காய் கூட்டி அவிச்சுக் குழம்பு

வாழைக்காய் கூட்டி அவிச்சுக் குழம்பு


தேவையானவை:- வாழைக்காய் – 1, சின்ன வெங்காயம் – 8, வெள்ளைப்பூண்டு – 4, தக்காளி – 1, நல்லெண்ணெய் – 1 டேபிள் ஸ்பூன், சீரகம் – கால் டீஸ்பூன், வெந்தயம் – கால் டீஸ்பூன், பெருங்காயம் – சிறு துண்டு, கருவேப்பிலை – 2 இணுக்கு, புளி – 1 நெல்லிக்காய் அளவு, சாம்பார் பொடி – 2 டேபிள் ஸ்பூன். மஞ்சள் பொடி – 1 சிட்டிகை. உப்பு – 1 டீஸ்பூன்.

 

செய்முறை:- வாழைக்காயைத் தோலுரித்து வட்ட வட்டமாக நறுக்கித் தண்ணீரில் போடவும். வெங்காயம் வெள்ளைப்பூண்டைத் தோலுரித்து குறுக்குவாட்டில் வெட்டவும். தக்காளியைக் கழுவி வெட்டி வைக்கவும்.

 

ஒரு கடாயில் உப்புப் புளியை 4 கப் தண்ணீரில் கரைத்து ஊற்றவும். அதில் மஞ்சள் பொடி, சாம்பார் பொடி, கருவேப்பிலை, பெருங்காயம், சீரகம், வெந்தயம், பூண்டு வெங்காயம், தக்காளி, வாழைக்காயைப் போட்டு ஒரு கரண்டியால் நன்கு கலக்கிவிட்டு அடுப்பில் ஏற்றவும். கொதி வந்ததும் சிம்மில் 10 நிமிடம் வைத்து மூடிபோட்டு வேகவைத்து இறக்கவும். தாளிக்க வேண்டாம்.

வியாழன், 26 மார்ச், 2026

கத்திரி வத்தல் மாவற்றல் அவரை வற்றல் மொச்சைக் குழம்பு

கத்திரி வத்தல் மாவற்றல் அவரை வற்றல் மொச்சைக் குழம்பு


தேவையானவை:- மொச்சை - 1 கப், மாங்காய் வற்றல் - 10, கத்திரி வத்தல் - 8, அவரை வத்தல் - 8, சின்ன வெங்காயம் - 10, பூண்டு - 2, தக்காளி - 1, மிளகாய்ப்பொடி - 2 டீஸ்பூன், மல்லிப்பொடி - 1 டேபிள்ஸ்பூன், மஞ்சள்பொடி - 1 சிட்டிகை. , புளி - 1 நெல்லிக்காய் அளவு, உப்பு - 1 1/2 டீஸ்பூன், எண்ணெய் - 2 டீஸ்பூன், கடுகு - 1 டீஸ்பூன், சீரகம் - 1 டீஸ்பூன், கருவேப்பிலை - 1 இணுக்கு.

 

செய்முறை:- மொச்சையை வறுத்துப் பிரஷர் குக்கரில் 4 விசில் வரும்வரை வேகவிடவும். மாவற்றல்.,கத்திரி வற்றல், அவரை வற்றல்,  தக்காளி., வெங்காயத்தை சின்ன தட்டில் குக்கரில் வைத்து வேகவிடவும். ஆவி வெளியேறியதும் இரண்டையும் நன்றாக கலந்து மிளகாய் பொடி., மல்லி பொடி., மஞ்சள் பொடி போடவும். புளியை 2 கப் தண்ணீரில் கரைத்து உப்புடன் குழம்பில் சேர்க்கவும். கொதிவந்தபின் சிம்மிம் 5 நிமிடம் வைத்து., எண்ணையில் கடுகு., ஜீரகம் தாளித்து கொட்டவும். பூண்டு தட்டிப் போட்டு இறக்கவும். இதை சாதம் அல்லது ஊத்தப்பம் அல்லது இட்லியுடன் பரிமாறவும்.

திங்கள், 23 மார்ச், 2026

சேனைக்கிழங்கு தேங்காய்க் குழம்பு

சேனைக்கிழங்கு தேங்காய்க் குழம்பு


தேவையானவை:- சேனைக்கிழங்கு – கால் கிலோசின்ன வெங்காயம் – 8, வரமிளகாய் - 5வரமல்லி – 2 டீஸ்பூன்சீரகம்மிளகு – தலா ஒரு டீஸ்பூன்தேங்காய்த் துருவல் – அரை மூடிதேங்காய் எண்ணெய் – 3 டீஸ்பூன்உப்பு - டீஸ்பூன்கடுகுவெந்தயம் – தலா அரை டீஸ்பூன்கருவேப்பிலை – 1 இணுக்கு.

 

செய்முறை:- சேனைக்கிழங்கைத் தோல் சீவிக் கால் இஞ்ச் அளவு சதுரத் துண்டுகளாக வெட்டவும்ஒரு டீஸ்பூன் எண்ணெயில் வதக்கி வேக விடவும்முக்கால் பதம் வெந்ததும் நீரை வடித்து வைக்கவும்ஒரு டீஸ்பூன் எண்ணெயில் வரமிளகாய்வரமல்லிமிளகுசீரகம்தேங்காயை வதக்கி அரைத்து சின்ன வெங்காயத்துடன் சேனைக்கிழங்கில் போட்டு அரை கப் நீரூற்றி வேக விடவும்வெந்ததும் உப்பு சேர்த்து எண்ணெயில் கடுகுவெந்தயம்கருவேப்பிலை தாளித்துக் கொட்டவும்

வெள்ளி, 20 மார்ச், 2026

புடலங்காய் பொரிச்ச குழம்பு

புடலங்காய் பொரிச்ச குழம்பு


தேவையானவை:- புடலங்காய் -1, பாசிப்பருப்பு – ஒரு கைப்பிடிசின்ன வெங்காயம் – 5, சீரகம் – அரை டீஸ்பூன்பச்சை மிளகாய் – 1, உப்பு – அரை டீஸ்பூன்தேங்காய்த் துருவல் – 2 டேபிள்தேங்காய் எண்ணெய் – ஒரு டீஸ்பூன்கடுகு – அரை டீஸ்பூன்கருவேப்பிலை – ஒரு இணுக்கு.

 

 

செய்முறை:- புடலங்காயை விதை நீக்கிக் கட்டம் கட்டமாக வெட்டவும்சின்னவெங்காயத்தையும் சிறிதாக வெட்டவும்ப்ரஷர் பானில் ஒரு கைப்பிடி பாசிப்பருப்புப் போட்டு அரை கப் தண்ணீர் ஊற்றவும்அதன் மேல் பொடியாக அரிந்த வெங்காயம் , புடலங்காய் போட்டு ஒரு விசில் வைத்து இறக்கவும். அரை டீஸ்பூன் தேங்காய் எண்ணெயில் பச்சை மிளகாய்சீரகம், தேங்காய்த் துருவலை வதக்கி அரைத்து உப்போடு சேர்த்துப் புடலங்காயில் கொட்டி ஒரு கொதி வேகவிடவும். அரை டீஸ்பூன் எண்ணெயில் கடுகு, கருவேப்பிலை தாளித்து உபயோகிக்கவும்.

செவ்வாய், 17 மார்ச், 2026

தட்டைப்பயிறு மாவற்றல் குழம்பு

தட்டைப்பயிறு மாவற்றல் குழம்பு


தேவையானவை:- தட்டைப்பயறு ( காராமணி ) - 1 கப், மாங்காய் வற்றல் - 10, சின்ன வெங்காயம் - 10, பூண்டு - 2, தக்காளி - 1, மிளகாய்ப்பொடி - 2 டீஸ்பூன், மல்லிப்பொடி - 1 டேபிள்ஸ்பூன், மஞ்சள்பொடி - 1 சிட்டிகை, புளி - 1 நெல்லிக்காய் அளவு, உப்பு - 1 1/2 டீஸ்பூன், எண்ணெய் - 2 டீஸ்பூன், கடுகு - 1 டீஸ்பூன், சீரகம் - 1 டீஸ்பூன், கருவேப்பிலை - 1 இணுக்கு.

 

செய்முறை:- தட்டைப்பயறை வறுத்துப் பிரஷர் குக்கரில் 4 விசில் வரும்வரை வேகவிடவும். மாவற்றல்., தக்காளி., வெங்காயத்தைச் சின்ன தட்டில் குக்கரில் வைத்து வேகவிடவும். ஆவி வெளியேறியதும் இரண்டையும் நன்றாக கலந்து மிளகாய்ப் பொடி., மல்லிப் பொடி., மஞ்சள் பொடி போடவும். புளியை 2 கப் தண்ணீரில் கரைத்து உப்புடன் குழம்பில் சேர்க்கவும். கொதிவந்தபின் சிம்மில் 5 நிமிடம் வைத்து., எண்ணையில் கடுகு., ஜீரகம் தாளித்து கொட்டவும். பூண்டு தட்டிப் போட்டு இறக்கவும்.

சனி, 14 மார்ச், 2026

மிளகுக் குழம்பு

மிளகுக் குழம்பு


தேவையானவை:- மிளகு – அரை டேபிள் ஸ்பூன், சீரகம் – 1 டீஸ்பூன், பச்சரிசி – கால் டேபிள் ஸ்பூன், பொட்டுக்கடலை – கால் டேபிள் ஸ்பூன், சின்னவெங்காயம் – 15. உரித்துப் பொடியாக அரியவும். பூண்டு – 10 இதழ் உரித்துப் பொடியாக அரியவும். தக்காளி – 1 பொடியாக அரியவும். புளி – நெல்லிக்காய் அளவு, உப்பு – 1 டீஸ்பூன், எண்ணெய் – 1 டேபிள் ஸ்பூன், கடுகு – அரை டீஸ்பூன்.

 

செய்முறை:- மிளகு சீரகம், பொட்டுக்கடலை பச்சரிசியைத் தனித்தனியாக கடாயில் போட்டு வெதுப்பிக் கொள்ளவும். இதை மிக்ஸியில்  நன்கு பவுடராகப் பொடித்து வைக்கவும். உப்புப் புளியை 3 கப் தண்ணீரில் கரைத்து இந்தப் பொடியைப் போட்டு வைக்கவும். பானில் எண்ணெயைக் காயவைத்து கடுகு போட்டு வெடித்ததும் வெங்காயம் பூண்டு தக்காளியை சிறுதீயில் மென்மையாகும் வரை வதக்கவும். அதில் உப்புப்புளியில் கரைத்த மிளகு விழுதைக் கொட்டி எண்ணெய் பிரியும்வரை வேக வைத்து இறக்கவும்.

புதன், 11 மார்ச், 2026

பூசணிக்காய் மோர்க்குழம்பு

பூசணிக்காய் மோர்க்குழம்பு


தேவையானவை:- பூசணிக்காய் – 1தயிர் – அரை லிட்டர் பாலை உறைய வைக்கவும். , தேங்காய் – பாதி துருவவும்பச்சைமிளகாய் – 4சீரகம் – அரை டீஸ்பூன்துவரம்பருப்பு, கடலைப்பருப்பு, பச்சரிசி – தலா 1 டீஸ்பூன் ஊறவைக்கவும்மஞ்சள் தூள் – 1 சிட்டிகைஉப்பு – 1 டீஸ்பூன்தாளிக்க: தேங்காய் எண்ணெய் – 2 டீஸ்பூன்கடுகு – அரை டீஸ்பூன்வெந்தயம் – அரை டீஸ்பூன்கருவேப்பிலை – 1 இணுக்கு.

 

செய்முறை:- பூசணிக்காயைத் தோல்சீவி ஒரு இஞ்ச் சதுரத்தில் நீளமாக நறுக்கி ஒரு டீஸ்பூன் தேங்காய் எண்ணெயில் வதக்கி மஞ்சள் பொடி போட்டு அரை கப் நீரூற்றி வேகவிடவும். தயிரைக் கடைந்து வைக்கவும். ஊறவைத்த கடலைப்பருப்பு, துவரம் பருப்பு பச்சரிசியைப் பச்சைமிளகாய், சீரகம், தேங்காய்த் துருவலோடு சேர்த்து விழுதாக அரைத்து வெந்த பூசணிக்காயில் ஊற்றவும். லேசாக மேலே நுரைத்து வரும்போது உப்பு சேர்த்துக் கடைந்த தயிரை ஊற்றவும். தேங்காய் எண்ணெயில் கடுகு வெந்தயம் கருவேப்பிலை தாளித்து உபயோகிக்கவும்.

ஞாயிறு, 8 மார்ச், 2026

கருவேப்பிலைக் குழம்பு

கருவேப்பிலைக் குழம்பு


தேவையானவை:- இளம் கருவேப்பிலை - 1 கிண்ணம், சின்ன வெங்காயம் - 10, வெள்ளைப்பூண்டு - 10, தக்காளி - 1, புளி - 1 எலுமிச்சை அளவு, உப்பு - 1 டீஸ்பூன், மிளகாய்த்தூள் - 1 டீஸ்பூன், மல்லித்தூள் - 1 டீஸ்பூன், மஞ்சள் தூள் - 1 சிட்டிகை, சோம்பு - 1/2 டீஸ்பூன், ஜீரகம் - 1/4 டீஸ்பூன், மிளகு - 5, எண்ணெய் - 1 டேபிள்ஸ்பூன், கடுகு - 1 டீஸ்பூன், உளுந்து - 1 டீஸ்பூன், பெருங்காயம் - 1 துண்டு.

 

செய்முறை:- கருவேப்பிலையைக் கழுவி அதோடு சோம்பு, சீரகம், மிளகு, மல்லிப் பொடி, மிளகாய்ப்பொடி, மஞ்சள் பொடி, உப்பு, புளி போட்டு நன்கு மைய அரைக்கவும். சின்ன வெங்காயம், பூண்டு, தக்காளியைத் தோலுரித்துப் பொடியாக நறுக்கவும். பானில் எண்ணெயைக் காயவைத்துக் கடுகு போட்டு வெடித்ததும் உளுந்து போட்டு சிவந்ததும் பெருங்காயம் போட்டு பின் வெங்காயம், பூண்டு, தக்காளியைப் போடவும். நன்கு வதங்கியதும் அரைத்த கலவையை ஊற்றித் தேவையான தண்ணீர் சேர்த்துக் கொதிக்க விடவும். சிம்மில் வைத்து மூடி போட்டு 20 நிமிடம் வைத்து எண்ணெய் பிரிந்ததும் இறக்கவும். சூடாக சாதம் அல்லது இட்லியுடன் பரிமாறவும்.

வியாழன், 5 மார்ச், 2026

25 வகை குழம்புகள் குமுதம் சிநேகிதியில்

 25 வகைக் குழம்புகளின் முன்னுரை:-


தமிழர் உணவில் அரிசிச் சோறும் குழம்பும் இன்றியமையாதன. பருப்புப் போட்டு வைக்கும் சாம்பார் ஒருவித ருசி என்றால் புளிக் குழம்புகளும் அரைத்துவிட்ட குழம்புகளும் இன்னொரு வித ருசி. வெளிநாட்டினர் விதம் விதமான சாஸ்களைக் கொண்டும் சீனர்கள் சோயா சாஸ் சில்லி சாஸ் கொண்டும் உணவு தயாரிப்பார்கள். நாம் புளி தேங்காய்பொடிகள் கொண்டு செய்யும் இவ்வகைக் குழம்புகள்


 சாதம்உப்புமாஇட்லிகிச்சடிதோசைஊத்தப்பம்பணியாரம்பொங்கல் ஆகியவற்றுடன் சாப்பிட சுவையாக இருக்கும். புளி இரும்புச் சத்து கொடுக்கும். பெருங்காயம் சீரகம் பூண்டு போன்றவை ஜீரணத்தைத் தூண்டும். எனவே இவ்வகைக் குழம்புகள் தயாரித்து வழங்கிக் குடும்பத்தினரின் பாராட்டுக்களைப் பெறுங்கள்.

அன்புடன்
தேனம்மைலெ
க்ஷ்மணன்.

திங்கள், 2 மார்ச், 2026

பின்னி (உளுந்தமாவுக் கேசரி)

பின்னி (உளுந்தமாவுக் கேசரி)



தேவையானவை:- வெள்ளை உருண்டை உளுந்து - 2 கப், வெள்ளை ரவை - கால் கப், கோதுமை மாவு - 2 டேபிள் ஸ்பூன், மாவா ( இனிப்பில்லாத கோவா ) - ஒன்றரை கப், நெய் - ஒன்றரைகப், பால் - அரை கப், சீனி - 2 கப் , ,ஊறவைத்துத் தோலுரித்து குச்சியாகப் பொடித்த பாதாம் - கால் கப். சூர்யகாந்தி விதைகள் - 2 டேபிள் ஸ்பூன். உடைத்த பிஸ்தா - 1 டீஸ்பூன். ஏலப் பொடி - அரை டீஸ்பூன்.

செய்முறை :-வெள்ளை உருண்டை உளுந்தைக் கழுவி 2 மணி நேரம் ஊறவைக்கவும். சிறிது சிறிதாக அரை கப் பால் சேர்த்து நைஸாக அரைக்கவும். ஒரு பானில் பாதி நெய்யைக் காயவைத்து ரவையையும் அதன் பின் கோதுமை மாவையும் போட்டு பொன்னிறமாக ஆகும்வரை நிதானமான தீயில் வறுக்கவும். இதில் மாவாவைப் போட்டு லேசாகச் சிவந்து வரும்வரை கிளறவும். இதில் அரைத்த உளுந்து விழுதையும் போட்டுக் கிளறவும். நிதானமான தீயில் 30 நிமிடம் கிளறியதும் மாவு உருண்டு வரும்போது மிச்ச நெய்யைச் சேர்க்கவும். தொடர்ந்து கிளற மாவு பொன்னிறமாக உதிர்ந்து நன்கு வாசனை வரத் தொடங்கும். அதில் ஏலப்பொடியையும் சீனியையும் சேர்த்துக் கிளறவும். குச்சியாக நறுக்கிய பாதாமையும் மேலே சூரிய காந்தி விதைகளையும் பொடித்த பிஸ்தாவும் தூவி பரிமாறவும்.

Related Posts Plugin for WordPress, Blogger...