எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

வெள்ளி, 29 மே, 2026

பால் பணியாரம்

பால் பணியாரம்


தேவையானவை :- பச்சரிசி  -  1 ஆழாக்குவெள்ளை உளுந்தம் பருப்பு - 1 ஆழாக்கு., உப்பு - 1 டீஸ்பூன்எண்ணெய் -  பொறிக்கத் தேவையான அளவு., காய்ச்சிய பால் - 1 லிட்டர்ஜீனி - 1/2 கப்ஏலப்பொடி - 1 சிட்டிகை.

செய்முறை:-பச்சரிசி உளுந்தம்பருப்பைக் கழுவி 2 மணி நேரம் ஊறவைத்து உப்பு சேர்த்து வெண்ணெய் போல அரைக்கவும். ஒரு துணியில் துளை செய்து மாவை அதில் நிரப்பி துளித்துளியாய்க் காய்ந்த எண்ணெயில் விட்டுப் பொரித்தெடுக்கவும்.பாலைக் காய்ச்சி சீனி சேர்த்து ஏலப் பொடி போடவும். அதில் பொரித்த பணியாரங்களைப் போட்டு ஊறவைத்துப் பரிமாறவும். 

செவ்வாய், 26 மே, 2026

வெள்ளைப் பணியாரம்

வெள்ளைப் பணியாரம்


தேவையான பொருட்கள்:- பணியாரப் பச்சை ( பச்சரிசி ) - 2 ஆழாக்கு தலை தட்டிவெள்ளை உளுந்து - அரிசியின் மேல் கோபுரமாக ( தோராயமாக 1/4 ஆழாக்கு), உப்பு - 1 டீஸ்பூன்எண்ணெய் - பொறிக்க..

செய்முறை:- அரிசி்யையும் உளுந்தையும் சேர்த்துக் கழுவி 2 மணி நேரம் ஊறவைக்கவும்நன்கு மையாக அரைத்து உப்பு சேர்த்து நன்கு கலக்கவும்எண்ணெயைக் கடாயில் காயவைத்து மாவை ஒவ்வொரு கரண்டியாக ஊற்றி மேலெழும்பியதும் திருப்பி விட்டு சூடாக எடுக்கவும். .அரை தேக்கரண்டி சீனியும் பாலும் விட்டு மாவை நன்கு அடித்து ஊற்றினால் பணியாரம் மென்மையாக வரும்.

வியாழன், 21 மே, 2026

கந்தரப்பம்

கந்தரப்பம்


தேவையானவை:- பச்சரிசி - 2 கப், புழுங்கல் அரிசி - 1/4 கப், உளுந்து - 1/4 கப், கடலைப்பருப்பு - 1/8 கப், வெந்தயம் - 1 டீஸ்பூன், வெல்லம் - 2 கப், தேங்காய் துருவியது - 1 கப், ஏலக்காய் - 4 . , எண்ணெய் - பொரிக்க தேவையான அளவு.

செய்முறை:- பச்சரிசி.,புழுங்கல் அரிசி., உளுந்தம்பருப்பு., கடலைப்பருப்பு., வெந்தயம் எல்லாவற்றையும் கழுவி 2 மணிநேரம் நன்றாக ஊறவைக்கவும். நைசாக அரைத்து அதில் வெல்லம்., தேங்காய்துருவல்., ஏலக்காய் சேர்த்து இன்னும் 5 நிமிடம் அரைக்கவும். எண்ணெயைக் காயவைத்து ஒரு கரண்டி மாவை எடுத்து ஊற்றவும். அப்பம் உப்பி மேலே வரும்போது திருப்பி விட்டு வேகவைத்து எடுக்கவும். சூடாக பரிமாறவும்.

செவ்வாய், 19 மே, 2026

குறுவை அரிசிப் பாயாசம்

குறுவை அரிசிப் பாயாசம்


தேவையானவை:-  குறுவை அரிசி - அரை ஆழாக்குபால் - 1 லிட்டர்ஜீனி - 1/2 ஆழாக்குஏலக்காய் – 2, முந்திரி  - 10, கிஸ்மிஸ் – 10, நெய் - 2 டீஸ்பூன்

செய்முறை:குறுவை அரிசியை மிக்ஸியில் ஒன்றிரண்டாகப் பொடித்துக்  குக்கரில் அரை லிட்டர் பாலில் வேகவிடவும்வெந்ததும் இறக்கி மிச்ச பாலையும் சேர்த்து ஜீனி கரையும் வரை காய்ச்சி நெய்யில் முந்திரி கிஸ்மிஸ் பொறித்துப் போட்டு ஏலத்தைப் பொடி செய்து போட்டுப் பரிமாறவும்.

சனி, 16 மே, 2026

கல்கண்டு வடை

கல்கண்டு வடை


தேவையானவை:- உளுந்து - 1 கப்,  கல்கண்டு (பொடித்தது) அல்லது ஜீனி - 1 கப்,  உப்பு - 1 சிட்டிகை,  எண்ணெய் - பொறிக்க.

செய்முறை:- உளுந்தை நன்கு கழுவி 2 மணி நேரம் ஊற வைக்கவும். கிரைண்டரில் தண்ணீரை வடித்துவிட்டு நன்கு ஆட்டவும். பாதி ஆட்டியபின் கல்கண்டு அல்லது ஜீனி சேர்க்கவும். நன்கு மைய மாவானபின் எடுத்து வடைகளாகத் தட்டி எண்ணெயில் பொறிக்கவும். இது செட்டிநாட்டின் ஸ்பெஷல் இனிப்பு.தீபாவளி., பிள்ளையார் நோன்பு சமயங்களில் செய்து பரிமாறுவார்கள்.

வியாழன், 14 மே, 2026

முறுக்கு வடை

முறுக்கு வடை


தேவையானவை :- பச்சரிசி - 4 கப், வெள்ளை உளுந்தம்பருப்பு - 1 1/2 கப், உப்பு - 1 2 டீஸ்பூன், , எண்ணெய் - பொறிக்கத் தேவையான அளவு, வெண்ணெய் – சிறிதளவு.

செய்முறை:- பச்சரிசியைக் கழுவி ஊற வைக்கவும். நீரை வடித்து ஒரு துணியில் உலரப் போடவும். பச்சரிசியை சிறிது ஈரத்தோடு பொடிக்கவும். வெள்ளை உளுந்தம்பருப்பை சிவப்பாக வெதுப்பிப் பொடிக்கவும்.  இரண்டையும் சலிக்கவும். இரண்டையும் சேர்த்து வெண்ணெயும் உப்பும் சேர்த்துத் தேவையான தண்ணீர் சேர்த்துப் பிசையவும். மாவு மென்மையாக இருக்க வேண்டும். ஒரு கை

திங்கள், 11 மே, 2026

இனிப்புக் கவுனியரிசி

இனிப்புக் கவுனியரிசி


தேவையானவை:- கவுனரிசி - 1 ஆழாக்கு, சீனி - 1/2 ஆழாக்கு, துருவிய தேங்காய் - 1/ 2 கப், நெய் - 1 டேபிள் ஸ்பூன், ஏலக்காய் - 2 (பொடித்தது)

செய்முறை:- கவுனரிசியைச் சுத்தம் செய்து கழுவி 3 டம்ளர் தண்ணீர் ஊற்றி ஊறவைக்கவும். சாதம் வைப்பதுபோல பிரஷர் குக்கரின் வேகவைக்கவும். வெளியில் எடுத்து நன்கு மசித்துச் சீனி., துருவிய தேங்காய்., நெய்., ஏலக்காய் பொடி சேர்த்து நன்கு கலக்கவும். காலைப் பலகாரத்துடன் இனிப்பாக பரிமாறவும்.

வெள்ளி, 8 மே, 2026

20 வகை செட்டிநாட்டு உணவுகள்

நாவில் நாட்டியமாடும் செட்டிநாட்டு உணவுகள்


செட்டி நாட்டு உணவின் சிறப்புகள்



இங்கிருக்கும் வீடுகளைப் போல செட்டிநாட்டு உணவுகளும் கட்டுக்கோப்பானவை. உடலுக்கு ஒரு தீங்கும் செய்யாதவை. மசாலா எண்ணெய் போன்றவற்றை அளவாகப் பயன்படுத்தியும் செய்யலாம். முன் காலத்தில் அம்மி ஆட்டுக்கல்லில் அரைத்து மஞ்சட்டியில் சமைப்பதால் மிக ருசியாக இருக்கும். இங்கே இன்றும் திருமணப் பலகாரங்கள்எடைவேளைப் பலகாரங்கள் என்பவை பிரசித்தம். தீபாவளிபிள்ளையார் நோன்புதிருமணம்விளையாட்டுப் பொட்டி வேவுசூப்புடிகார்த்திகைப் புதுமைதிருவாதிரைப் புதுமை போன்றவற்றில் இவ்வுணவு வகைகளைச் செய்து பரிமாறுவார்கள். செட்டிநாட்டார் உணவை செய்வதில் மட்டுமல்ல விருந்தினரை உபசரித்து மகிழ்வதிலும் பெருவிருப்பம் கொண்டவர்கள்.

தேனம்மைலெக்ஷ்மணன்.



1.இனிப்புக் கவுனியரிசி
2.முறுக்கு வடை
3.மனகோலம்
4.சீப்புச் சீடை
5.கந்தரப்பம்
6.வெள்ளைப் பணியாரம்
7.பால் பணியாரம்
8.மசாலச் சீயம்
9.கருப்பட்டிப் பணியாரம்
10.கும்மாயம்
11.மட்டன் உப்புக்கறி
12.சிக்கன் செட்டிநாடு
13.கேக் முட்டைக் குழம்பு
14.நண்டுக் குழம்பு
15.ராட்டு மசாலை
16.கைமா பொடிமாஸ்
17.வெங்காயக் கோஸ்
18.கத்திரிக்காய் கோஸமல்லி
19.வாழைப்பூக் கோளா
20.இங்கிலீஷ் காய்கறிப் பிரட்டல்
21.வரமிளகாய்த் துவையல்
22.டாங்கர் சட்னி
23.கல்கண்டு வடை
24.குறுவை அரிசிப் பாயாசம்
25.சைவ மீன் குழம்பு

செவ்வாய், 5 மே, 2026

கருணைக்கிழங்குக் குழம்பு

கருணைக்கிழங்குக் குழம்பு



தேவையானவை:- கருணைக்கிழங்கு - 250 கிசின்ன வெங்காயம் - 10வெள்ளைப் பூண்டு - 7தக்காளி - 1புளி - 1 எலுமிச்சை அளவுஉப்பு - 2 டீஸ்பூன்மஞ்சள்பொடி - 1 சிட்டிகைமிளகாய்ப்பொடி - 2 டீஸ்பூன்மல்லிப்பொடி - 4 டீஸ்பூன்கருவேப்பிலை - 1 இணுக்குஎண்ணெய் - 30 மிலிகடுகு - 1 டீஸ்பூன்உளுந்து - 1 டீஸ்பூன்ஜீரகம் - 1/2 டீஸ்பூன்வெந்தயம் - 1/4 டீஸ்பூன்பெருங்காயம் - 1/8 இஞ்ச் துண்டு.

 

செய்முறை:- கருணைக்கிழங்குகளை நன்கு கழுவிக் குக்கரில் வேகவைக்கவும். 10 நிமிடம் ஆறியபின் தோலுரித்துத் துண்டுகளாக நறுக்கவும். சின்ன வெங்காயம்., பூண்டைத் தோலுரித்து இரண்டாக நறுக்கவும். தக்காளியைத் துண்டுகள் செய்யவும். புளியை 3 கப் தண்ணீரில் ஊறவைத்துச் சாறு எடுத்து உப்பு சேர்க்கவும். பானில் எண்ணெயைக் காயவைத்து கடுகு போட்டு வெடித்ததும்., உளுந்து போட்டு சிவந்ததும்., சீரகம்., வெந்தயம்., பெருங்காயம்., போடவும். கருவேப்பிலை., சின்ன வெங்காயம்., பூண்டு., தக்காளி போட்டு வதக்கி கருணைக்கிழங்கை சேர்க்கவும். அதில் புளித்தண்ணீரை ஊற்றி மஞ்சள் பொடி ., மிளகாய்ப்பொடி., மல்லிப்பொடி போடவும். நன்கு கொதிக்க வைத்து பின் 10 நிமிடம் மூடிபோட்டு சிம்மில் வைத்து எண்ணெய் பிரிந்ததும் இறக்கி சூடாக சாதம் அப்பளத்தோடு பரிமாறவும்.

சனி, 2 மே, 2026

சுண்டைக்காய் புளிக்குழம்பு

சுண்டைக்காய் புளிக்குழம்பு



 

தேவையானவை :- சுண்டைக்காய் - 1 கப்சின்ன வெங்காயம் - 10

வெள்ளைப்பூண்டு - 6 பல்தக்காளி - 1புளி - 1 எலுமிச்சை அளவுஉப்பு - 2 டீஸ்பூன். , மிளகாய்ப் பொடி - 2 டீஸ்பூன்மல்லிப் பொடி - 1 டேபிள்ஸ்பூன்மஞ்சப் பொடி - 1 சிட்டிகைபெருங்காயம் - 1/8 இஞ்ச் துண்டுகருவேப்பிலை - 1 இணுக்குகடுகு - 1 டீஸ்பூன்ஜீரகம் - 1/2 டீஸ்பூன்வெந்தயம் - 1/2 டீஸ்பூன்சீனி - 1 சிட்டிகை. , எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்.

 

செய்முறை:- சுண்டைக்காய்களை இரண்டாக நறுக்கித் தண்ணீரில் போடவும். சின்ன வெங்காயம், வெள்ளைப் பூண்டைத் தோலுரித்து இரண்டாக நறுக்கவும். தக்காளியைத் துண்டுகள் செய்யவும். புளியையும்., உப்பையும் 3 கப் தண்ணீரில் ஊறப் போடவும். பானில் எண்ணெயைக் காயவைத்துக் கடுகு போட்டு வெடித்தவுடன், சீரகம்., வெந்தயம்., பெருங்காயம் போடவும். கருவேப்பிலை, வெங்காயம், பூண்டு, தக்காளி, சுண்டைக்காய்களைப் போட்டு நன்கு வதக்கவும். புளித்தண்ணீரை ஊற்றி மஞ்சள் பொடி, மிளகாய்ப்பொடி, மல்லிப் பொடி போடவும். நன்கு கொதி வந்தவுடன் சீனி சேர்த்து மூடி போட்டு 20 நிமிடம் சிம்மில் வைக்கவும். எண்ணெய் பிரிந்தவுடன் இறக்கவும்.

Related Posts Plugin for WordPress, Blogger...