கல்கண்டு வடை
தேவையானவை:- உளுந்து - 1 கப், கல்கண்டு (பொடித்தது) அல்லது ஜீனி - 1 கப், உப்பு - 1 சிட்டிகை, எண்ணெய் - பொறிக்க.
செய்முறை:- உளுந்தை நன்கு கழுவி 2 மணி நேரம் ஊற வைக்கவும். கிரைண்டரில் தண்ணீரை வடித்துவிட்டு நன்கு ஆட்டவும். பாதி ஆட்டியபின் கல்கண்டு அல்லது ஜீனி சேர்க்கவும். நன்கு மைய மாவானபின் எடுத்து வடைகளாகத் தட்டி எண்ணெயில் பொறிக்கவும். இது செட்டிநாட்டின் ஸ்பெஷல் இனிப்பு.தீபாவளி., பிள்ளையார் நோன்பு சமயங்களில் செய்து பரிமாறுவார்கள்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக