எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

ஞாயிறு, 5 ஜூலை, 2026

சைவ மீன் குழம்பு


சைவ மீன் குழம்பு

தேவையானவை :-  கடலை மாவு - அரை கப்,  வாழைக்காய் -1,  எண்ணெய் – 20 மிலி,  பெரிய தக்காளி - 1, சின்ன வெங்காயம் - 15, வெள்ளைப்பூண்டு - 10, இளம் கருவேப்பிலை கொத்துமல்லி - சிறிது.  புளி - நெல்லிக்காய் அளவுஉப்பு - 1 டீஸ்பூன்மிளகாய்ப்பொடி - 1 டீஸ்பூன்மல்லிப்பொடி - 1 டீஸ்பூன்மஞ்சள் பொடி - கால் டீஸ்பூன்தாளிக்க :- எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்கடுகுஉளுந்து,வெந்தயம்தலா அரை டீஸ்பூன்பெருங்காயம் - சிறு துண்டுகருவேப்பிலை - 1 இணுக்குஅரைக்க :- வரமிளகாய் - 4, சோம்பு - அரை டீஸ்பூன்சீரகம்,  மிளகு - கால் டீஸ்பூன்உப்பு - கால் டீஸ்பூன்தேங்காய் - கால் மூடி , சின்ன வெங்காயம் - 2, பூண்டு - 1 பல்.


செய்முறை :- வாழைக்காயின் தோல்பகுதியைக் குச்சிகுச்சியாக நீளமாகச் சீவவும். கடலை மாவில் கால் டீஸ்பூன் உப்பு,  மிளகாய்ப்பொடி சேர்த்துத் தோசை மாவுப் பக்குவத்தில் கரைக்கவும். தோசைக்கல்லில் கடலைமாவைத் தோசையாக ஊற்றி நடுவில் இரண்டு வாழைக்காய்க் குச்சிகளை இரண்டு இஞ்ச் இடைவெளியில் போட்டு மூன்றாகவோ நான்காகவோ மடித்து மடித்து எடுக்கவும். அதை மீன் சைஸில் துண்டுகளாக வெட்டி எண்ணெயில் பொரித்து வைக்கவும். சின்ன வெங்காயம், வெள்ளைப் பூண்டு, தக்காளியைச் சுத்தம் செய்து துண்டாக நறுக்கி வைக்கவும். புளியை இரண்டு கப் தண்ணீரில் ஊறவைத்துக் கரைத்து உப்பு, மஞ்சள் தூள் , மிளகாய்த்தூள், மல்லித்தூள் போட்டு வைக்கவும். வாணலியில் எண்ணெயைக் காயவைத்துக் கடுகு, உளுந்து வெந்தயம் தாளித்து சின்ன வெங்காயம் வெள்ளைப்பூண்டு, தக்காளி , கருவேப்பிலை போட்டு வதக்கவும். இதில் கரைத்துவைத்த புளித்தண்ணீரை ஊற்றவும். இரண்டு கொதி வந்ததும் அரைக்கக் கொடுத்துள்ளவற்றை அரைத்து அரை டம்ளர் தண்ணீர் சேர்த்து கொதிக்கும் குழம்பில் ஊற்றவும். நன்கு கொதிவரத் துவங்கியதும் வெட்டி வறுத்து வைத்த மீன் துண்டுகளைக் குழம்பில் சேர்க்கவும். ரொம்பவும் கிளறாமல் குழம்பை இறக்கிப் பரிமாறவும்.

வியாழன், 2 ஜூலை, 2026

டாங்கர் சட்னி

டாங்கர் சட்னி


தேவையானவை :- சின்ன வெங்காயம் – 20, வெள்ளைப் பூண்டு – 15, வரமிளகாய் – 6, புளி – ஒரு நெல்லிக்காய் அளவுஉப்பு – அரை டீஸ்பூன்மிளகாய்த் தூள் – கால் டீஸ்பூன்வெல்லம்/சர்க்கரை – கால் டீஸ்பூன்எண்ணெய் – 1 டேபிள் ஸ்பூன்கடுகு – அரை டீஸ்பூன்உளுந்து – அரை டீஸ்பூன்.

 

செய்முறை :- சின்ன வெங்காயம் வெள்ளைப்பூண்டைத் தோலுரித்து நைசாக வட்டமாக அரியவும்வரமிளகாயை விதையில்லாமல் சின்னதாக ஒடித்துக் கொள்ளவும்ஒரு பானில் எண்ணெயைக் காயவைத்து கடுகு போட்டு வெடித்ததும் உளுந்து போட்டு சிவந்ததும் வரமிளகாயைப் போடவும்லேசாக சிவந்து வாசம் வந்ததும் சின்ன வெங்காயம்வெள்ளைப்பூண்டைப் போட்டு நன்கு வதக்கவும்உப்பு புளியை அரை கப் தண்ணீரில் கெட்டியாகக் கரைத்து ஊற்றவும்மிளகாய்ப் பொடியையும் போட்டு நன்கு கொதித்துச் சுண்டி எண்ணெய் பிரியும் போது வெல்லமோ சர்க்கரையோ போட்டு இறக்கவும். 

திங்கள், 29 ஜூன், 2026

இங்கிலீஷ் காய்கறிப் பிரட்டல்

இங்கிலீஷ் காய்கறிப் பிரட்டல்


தேவையானவை:- காரட் - 2பீன்ஸ் - 15உருளைக்கிழங்கு - 2,  (காலிஃப்ளவர் - 6 துண்டு) , (பட்டாணி - 1/2 கப்) , (பனீர்., பேபிகார்ன்., பட்டர் பீன்ஸ்., குடைமிளகாய்., சோயா( மீல்மேக்கர்) விரும்பினால்) , பெரிய வெங்காயம் - 1தக்காளி - 1வெள்ளைப் பூண்டு - 4 பல்உப்பு - 1/2 டீஸ்பூன். அரைக்க:-வரமிளகாய் - 4சோம்பு - 1 டீஸ்பூன்சீரகம் - 1/2 டீஸ்பூன்தேங்காய் - 2இஞ்ச் துண்டுபொட்டுக்கடலை - 1 டீஸ்பூன்சின்ன வெங்காயம் - 2பூண்டு - 1 பல். தாளிக்க:- உளுந்து - 1/ டீஸ்பூன்சோம்பு - 1/4 டீஸ்பூன்கல்பாசிப்பூ - 1 இன்ச் துண்டுபட்டை - 1 இன்ச் துண்டுகருவேப்பிலை - 1 இணுக்கு. , எண்ணெய் - 1 டேபிள்ஸ்பூன்

செய்முறை:- காய்கறிகளைக் கழுவி தோல் சீவி சதுரங்களாக வெட்டி அரை வேக்காடாய் வேகவைத்துக் கொள்ளவும். வெங்காயம்., தக்காளி பூண்டை உரித்து நறுக்கிக் கொள்ளவும். மசாலாவை அரைத்துக் கொள்ளவும். பானில் எண்ணெயைக் காயவைத்து உளுந்து., சோம்பு., பட்டை., கல்பாசிப்பூ தாளிக்கவும். வெங்காயம்., தக்காளி., பூண்டு போட்டு வதக்கவும். மசாலாவைப் போட்டுப் பக்கங்களில் எண்ணெய் பிரியும்வரை வதக்கவும். உப்பு போடவும். வெந்த காய்களைப் போட்டு மசாலா சேரும்வரை கலக்கவும். 10 நிமிடங்கள் சிம்மில் வேகவைத்து இறக்கவும். சாம்பார் சாதம்., தயிர் சாதம்., சப்பாத்தி., புல்காவுடன் பரிமாறவும்.

வெள்ளி, 26 ஜூன், 2026

வாழைப்பூக் கோளா

வாழைப்பூக் கோளா


தேவையானவை:- வாழைப்பூ - ½,  ஊறவைத்த துவரம் பருப்பு - 1 கப்,  பெரிய வெங்காயம் - 1,  சிவப்பு மிளகாய் - 5,  சோம்பு - 1 டீஸ்பூன்,  சீரகம் - 1/2 டீஸ்பூன்,  மிளகு - 5,  தேங்காய் - 2 இன்ச் துண்டு,  எண்ணெய் - 75 மிலி,  கடுகு - 1 டீஸ்பூன்,  உளுந்து - 1 டீஸ்பூன்,  கருவேப்பிலை - 1 இணுக்கு,  உப்பு - 1 டீஸ்பூன்.

செய்முறை:- வாழைப்பூக்களை நரம்பு எடுத்து சுத்தம் செய்யவும். மிளகாய்., சோம்பு., சீரகம்., மிளகு., உப்பு., தேங்காய் சேர்த்து அரைக்கவும். பருப்பை தனியாகக் கொரகொரப்பாக அரைக்கவும். வாழைப்பூக்களையும் தனியாக அரைக்கவும். பானில் எண்ணெயைக் காய வைத்துக் கடுகு போட்டு வெடித்ததும் உளுந்து போட்டுச் சிவந்ததும் வெங்காயம் கருவேப்பிலை போடவும். அரைத்த மசாலாவைச் சேர்த்து நன்கு வதக்கவும். 3 நிமிடத்துக்குப் பிறகு அரைத்த பூவைப் போடவும். பின் பருப்பைச் சேர்த்து நன்கு கிளறவும். சிம்மில் வைத்து அடிக்கடி கிளறவும் . இல்லாவிட்டால் அடிப் பிடிக்கும். 10 லிருந்து 15 நிமிடங்கள் வரை கிளறி உதிரியாக வெந்ததும் இறக்கி சாம்பார் சாதம் அல்லது தயிர் சாதத்துடன் பரிமாறவும். இதன் துவர்ப்புச் சுவை ரத்தத்தை சுத்திகரிக்கும்.

செவ்வாய், 23 ஜூன், 2026

கத்திரிக்காய் கோஸமல்லி

கத்திரிக்காய் கோஸமல்லி


தேவையானவை:- கத்திரிக்காய் - 250 கி,  உருளைக்கிழங்கு - 1 வேகவைத்தது ( விரும்பினால்) ,  பெரிய வெங்காயம் - 1 பொடியாக அரியவும்,  தக்காளி - 1 பொடியாக அரியவும் ,  பச்சை மிளகாய் - 6 இரண்டாக வகிரவும்,  கருவேப்பிலை - 1 இணுக்கு,  புளி - 1/2 எலுமிச்சை அளவு,  உப்பு - 1 டீஸ்பூன்,  எண்ணெய் - 3 டீஸ்பூன்,  கடுகு - 1 டீஸ்பூன்,  உளுந்து - 1 டீஸ்பூன்,  பெருங்காயம் - 1 சிட்டிகை

செய்முறை:- கத்திரிக்காய்களைக் கழுவி நான்காக நறுக்கவும். பிரஷர் குக்கரில் போதுமான தண்ணீர் சேர்த்து வேகவிடவும். அடுப்பிலிருந்து இறக்கி ஆறியதும் தோலுரித்து மசிக்கவும். உருளைக்கிழங்கையும் மசிக்கவும். புளியை 3 கப் தண்ணீரில் ஊறவைத்துச் சாறு எடுக்கவும். ஒரு கடாயில் எண்ணெயை சூடுபடுத்திக் கடுகைப் போடவும். கடுகு வெடித்ததும் உளுந்தைப் போட்டுச் சிவந்ததும் பெருங்காயப் பொடியைப் போடவும். பின் பச்சை மிளகாய், பெரியவெங்காயம், தக்காளி போட்டு நன்கு வதக்கவும். அதில் புளித்தண்ணீரை உப்புடன் சேர்க்கவும். மசித்த கத்திரிக்காயையும், உருளையையும் சேர்த்துக் கொதிக்க விடவும். 5 நிமிடம் சிம்மில் வைத்து அடுப்பிலிருந்து இறக்கி சூடாக இட்லி, தோசை, தாளிச்ச இடியாப்பத்துடன் பரிமாறவும்.

சனி, 20 ஜூன், 2026

வெங்காயக் கோஸ்

வெங்காயக் கோஸ்


தேவையானவை :- பெரிய வெங்காயம் – 2, பெரிய தக்காளி – 1, உருளை – சிறியது – 1, தேங்காய் – 1 மூடிவரமிளகாய் – 10, சோம்பு – அரை டீஸ்பூன்சீரகம் – கால் டீஸ்பூன்பொட்டுக்கடலை – 1 டேபிள் ஸ்பூன்முந்திரி – 4, பட்டை – கால் இன்ச் ( விரும்பினால் ), உப்பு – அரை டீஸ்பூன்எண்ணெய் – 2 டீஸ்பூன்உளுந்து – அரை டீஸ்பூன்கிராம்பு – 1 ( விரும்பினால் ), கருவேப்பிலை – 1 இணுக்கு

 

செய்முறை:- பெரியவெங்காயத்தைத் தோலுரித்து தயிர்ப் பச்சடிக்கு நறுக்குவது போல் நீளமாக மெல்லிசாக நறுக்கவும்தக்காளியை துண்டுகள் செய்யவும்உருளையைத் தோலுரித்து வெங்காயம் போல் குச்சி குச்சியாக நறுக்கவும். வரமிளகாய்துருவிய தேங்காய்சோம்புசீரகம்பொட்டுக்கடலைமுந்திரி , உப்பு சேர்த்து சிறிது நீர் விட்டு விழுதாக அரைத்து எடுக்கவும்.  எண்ணெயைக் காயவைத்து உளுந்து கிராம்பு பட்டை போட்டுத் தாளித்து வெங்காயத்தைப் போட்டு வதக்கவும்வெங்காயம் தண்ணி தண்ணியாக வதங்கியதும் உருளைதக்காளியைப் போட்டு வதக்கவும்இரண்டு நிமிடம் கழித்துக் கருவேப்பிலை சேர்த்து அரைத்த விழுதைப் போட்டுத் திறக்கித் தேவையான தண்ணீர் ஊற்றிக் கொதிக்க விடவும்.3 கப் தண்ணீர் சேர்க்கலாம். நன்கு கொதித்து எண்ணெய் பிரிந்ததும் இறக்கவும்இட்லிக்குத் தொட்டுக்கொள்ள மிகவும் ருசியாக இருக்கும்.

புதன், 17 ஜூன், 2026

சீப்புச் சீடை

சீப்புச் சீடை


தேவையானவை:- பச்சரிசி - 4 கப், பொட்டுக்கடலை - 1 கப், தேங்காய் - 1 முழுதாக, உப்பு - 3 டீஸ்பூன், எண்ணெய் - பொறிக்க ( 350 கிராம்)

செய்முறை:- பச்சரிசியைச் சிறி்து நேரம் ஊறவைத்து வடிகட்டியில் போட்டு பின் மிக்ஸியில் மாவாக அரைத்து சலிக்கவும். வெறும் வாணலியில் போட்டு மணலைப்போல உதிரியாக வரும்வரை வறுக்கவும். பொட்டுக்கடலையையும் பொடித்துச் சலிக்கவும். தேங்காயைத் துருவி அரைத்து 2 கப் தண்ணீர் ஊற்றிப் பாலெடுத்து அடுப்பில் வைத்துக் காய்ச்சவும். சூடாகும்போது உப்பு போட்டு இறக்கவும். திரிந்தது போல் இருக்கும். இது வெதுவெதுப்பாக இருக்கும்போது அரிசி., பொட்டுக்கடலை மாவில் ஊற்றிப் பிசையவும். சீப்புச்சீடைக்கட்டையில் உருண்டையாக் உருட்டிப்போட்டு மாவைப் பேப்பரில் பிழியவும். அதை 3 இன்ச் துண்டுகளாக வெட்டி இரண்டு நுனிகளையும் விரலில் சுற்றி ஒட்டவும். எல்லா மாவையும் இதுபோல் செய்து எண்ணெயைக் காயவைத்துப் பொரிக்கவும்.

ஞாயிறு, 14 ஜூன், 2026

மனகோலம்

மனகோலம்


தேவையானவை:- பாசிப்பருப்பு மாவு - 2 கப், வெல்லம் - 2 கப், உப்பு - 1/2 டீஸ்பூன், டால்டா/எண்ணெய் - பொரிக்கத் தேவையான அளவு, தேங்காய் - 5 இன்ச் துண்டு, பொட்டுக்கடலை - 2 டேபிள் ஸ்பூன், நெய் - 2 டீஸ்பூன், சீனி பொடித்தது - 1 டேபிள் ஸ்பூன்

செய்முறை:- பாசிப்பருப்பை வெறும் வாணலியில் லேசாக  வறுத்து அரைத்துச் சலிக்கவும். உப்பும் தேவையான தண்ணீரும் சேர்த்து மாவு பிசையவும். எண்ணெய் அல்லது டால்டாவைக் காயவைத்து மனகோலக் கட்டையில் போட்டு பிழிந்து  2 இன்ச் துண்டுகளாக உதிர்த்து வைக்கவும். தேங்காயைப் பல்லுப் பல்லாக நறுக்கி நெய்யில் வதக்கவும். பொட்டுக்கடலையையும் நெய்யில் வறுத்துக் கொட்டவும். மனகோலம், தேங்காய், பொட்டுக்கடலை மூன்றையும் ஒரு சில்வர்/பித்தளை பேசினில்  போடவும். வெல்லத்தில் சிறிது நீர் சேர்த்து முற்றிய பாகு தயாரித்து இந்தக் கலவையில் ஊற்றிக் கலந்து விடவும். பொடித்த சீனியைத் தூவி ஆறியபின் பரிமாறவும்.

வியாழன், 11 ஜூன், 2026

வரமிளகாய்த் துவையல்

வரமிளகாய்த் துவையல்


தேவையானவை :- வரமிளகாய் 10. பெரிய வெங்காயம் – 1, சின்ன வெங்காயம் – 10, பூண்டு – 1 பல்தக்காளி – 2, பெருங்காயம் – 1 துண்டுஉப்பு – அரை டீஸ்பூன்புளி – 2 சுளைஎண்ணெய் – 1 டேபிள் ஸ்பூன்கடுகு – அரை டீஸ்பூன்,  உளுந்து – ஒரு டேபிள் ஸ்பூன்கருவேப்பிலை – 1 இணுக்கு.

 

செய்முறை :- பெரிய வெங்காயம் சின்னவெங்காயம்பூண்டைத் தோலுரித்து நறுக்கவும்தக்காளியைத் துண்டுகள் செய்யவும்மிக்ஸியில் வரமிளகாய்பெரிய வெங்காயம்சின்ன வெங்காயம் பூண்டு தக்காளிபெருங்காயம்உப்புபுளி சேர்த்து நீர் விடாமல் அரைக்கவும். கடாயில் எண்ணெயைக் காயவைத்துக் கடுகுஉளுந்து தாளித்து கருவேப்பிலை போட்டு மொறுமொறுப்பாக ஆகும் வரை வதக்கிக் கொட்டிக் கலந்து உபயோகிக்கவும்.
Related Posts Plugin for WordPress, Blogger...