எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

புதன், 29 நவம்பர், 2023

மினி பஃப்ஸ்

மினி பஃப்ஸ்

 

தேவையானவை :- ஆல் பர்ப்பஸ் மாவு/மைதா – 2 கப், வேகவைத்த கொண்டைக் கடலை – கால் கப், மினி மீல்மேக்கர்/சோயா சங்க்ஸ் – கால் கப், பெரிய வெங்காயம் – 1, பச்சை மிளகாய் – 2, இஞ்சி பூண்டு பேஸ்ட் – 1 டீஸ்பூன், மிளகாய்ப் பொடி – அரை டீஸ்பூன், மல்லிப் பொடி – அரை டீஸ்பூன், கரம் மசாலா பொடி – அரை டீஸ்பூன், எண்ணெய் – 1 கப், அரிசி மாவு – 1 டேபிள் ஸ்பூன், எண்ணெய் – 2 டீஸ்பூன், தண்ணீர் – 2 டீஸ்பூன்.பேக்கிங் பவுடர் – 1 டீஸ்பூன், உப்பு – அரை டீஸ்பூன், டால்டா – 2 டீஸ்பூன்.

 

செய்முறை:-

 

மைதாவுடன் பேக்கிங் பவுடரையும் உப்பையும் சேர்த்து நன்கு கலந்து தண்ணீர் தெளித்துப் பிசைந்து கடைசியில் டால்டா சேர்த்துப் பிசைந்து எண்ணெய் தடவி நான்கு மணி நேரம் ஊறவைக்கவும். சோயா சங்க்ஸை வெந்நீரில் போட்டு அலசிப் பிழிந்து வைக்கவும். ஒரு பானில் சிறிது எண்ணெய் ஊற்றி பொடியாக அரிந்த பச்சை மிளகாய், பெரிய வெங்காயம் போட்டு வதக்கவும். அதில் இஞ்சிபூண்டு பேஸ்ட் போட்டு வதக்கி கொண்டக்கடலை சோயா சங்க்ஸ், உப்பு, மிளகாய்ப் பொடி, மல்லிப் பொடி, கரம் மசாலாப் பொடி போட்டு நன்கு வதக்கி லேசாக தண்ணீர் தெளித்து வேகவைத்து இறக்கவும். அரிசி மாவில் 2 டீஸ்பூன் எண்ணெயும் தண்ணீரும் சேர்த்துக் குழைத்து வைக்கவும். பிசைந்த மைதாவில் ஒரு பெரிய உருண்டை எடுத்து மைதா மாவில் புரட்டி நன்கு பெரிய சப்பாத்தியாக சதுர அளவில் தேய்க்கவும். அதில் அரிசி எண்ணெய் பேஸ்டைத் தடவி செவ்வகமாக மடக்கி திரும்பத் தேய்க்கவும். திரும்ப அரிசி மாவு பேஸ்டைத் தடவி செவ்வகமாக மடக்கி நீளமாகத் தேய்க்கவும். அதை இரண்டாக வெட்டி உள்ளே மசாலாவை ஸ்டஃப் செய்து ஓரங்களை ஒட்டவும். கனமான தோசைக்கல்லைக் காயவைத்து 1 டேபிள்ஸ்பூன் எண்ணெய் ஊற்றி இரண்டு பஃப்ஸ்களையும் வேகவிடவும். அப்பளம் எடுக்கும் குறடினால் எல்லாப் பக்கமும் திருப்பி வேகவைத்துப் பொன்னிறமானதும் எடுத்து தக்காளி சாஸுடன் பரிமாறவும்.

செவ்வாய், 28 நவம்பர், 2023

வெஜிடபிள் ஆம்லெட்

வெஜிடபிள் ஆம்லெட்



 

தேவையானவை :- பொட்டுக்கடலை மாவு – அரை கப், கடலை மாவு – அரை கப், மைதா – 1 டீஸ்பூன், கார்ன்ஃப்ளோர் – ஒரு டீஸ்பூன், பால் – ஒரு கப், துருவிய காய்கறிக் கலவை – ஒரு கப், ( காரட், பீன்ஸ், முட்டைக் கோஸ், நூல்கோல், பீட்ரூட்,) பச்சை மிளகாய் – 1, பெரிய வெங்காயம் – 1, கொத்துமல்லித்தழை – 1 டீஸ்பூன், வரமிளகாய்த்தூள் – கால் டீஸ்பூன், கரம் மசாலா தூள் – கால் டீஸ்பூன், இஞ்சி பூண்டு பேஸ்ட் – அரை டீஸ்பூன், மிளகு சீரகத் தூள் – அரை டீஸ்பூன், மஞ்சள் தூள் – கால் டீஸ்பூன், உப்பு – அரை டீஸ்பூன், எண்ணெய் – 20 மிலி.

 

செய்முறை:- பொட்டுக் கடலை மாவு, கடலை மாவு, மைதா, கார்ன் ஃப்ளோர், உப்பு மிளகாய்த்தூள், மஞ்சள் தூள் மிளகு சீரகத்தூள், கரம் மசாலாத்தூள், இஞ்சி பூண்டு பேஸ்ட், பொடியாகத் துருவிய காய்கறிகள், பெரிய வெங்காயம் கொத்துமல்லித்தழை போட்டு நன்கு கலக்கவும். இதில் பாலை சிறிது சிறிதாக ஊற்றி அடிக்கவும். பால் தேவைப்பட்டால் இன்னும் சிறிது சேர்த்து தோசை மாவு பதத்துக்குக் கரைத்துக் கொள்ளவும். தோசைக்கல்லில் சிறிது எண்ணெய் தடவி ஆம்லெட்டுகளாக சுட்டு திருப்பிப் போட்டு எண்ணெய் விட்டு வேகவைத்து தக்காளிச் சட்னியுடன் பரிமாறவும்.

திங்கள், 27 நவம்பர், 2023

ட்ரைஃப்ரூட்ஸ் சமோசா

ட்ரைஃப்ரூட்ஸ் சமோசா



 

தேவையானவை:- மைதா – 2 கப், குளிர்ந்த தண்ணீர் – 1 கப், உப்பு – அரை டீஸ்பூன். ஸ்டஃபிங்குக்கு:- பேரீச்சை – 8, கிஸ்மிஸ் – 20, டூட்டி ஃப்ரூட்டி – அரை கப் . பாதாம், பிஸ்தா, முந்திரி – தலா 6. எண்ணெய் – பொறிக்கத் தேவையான அளவு, கொத்துமல்லித் தழை – 1 கைப்பிடி.

 

செய்முறை :- மைதாவில் உப்பு போட்டு குளிர்ந்த தண்ணீர் ஊற்றி இறுக்கமாகப் பிசைந்து மூடி வைக்கவும். பேரீச்சையைப் பொடியாக அரியவும். முந்திரி பாதாம் பிஸ்தாவை சிறிதாக ஒடிக்கவும். இத்துடன் கிஸ்மிஸ், டூட்டி ஃப்ரூட்டி, பேரீச்சையைக் கலந்து நெல்லி அளவு உருண்டைகளாக உருட்டி வைக்கவும்.

 

மைதாவை பெரிய சப்பாத்தி போல் மெல்லிதாக செவ்வகமாக இட்டு தோசைக்கல்லில் போட்டு லேசாக வேகவைத்து எடுக்கவும். ஒரு சப்பாத்தியை மூன்றாக கட் செய்து அதில் ஒரு ஓரத்தில் ட்ரை ஃப்ரூட்ஸ் உருண்டையை அமுக்கி வைத்து முக்கோணமாக மடித்துக் கொண்டே வரவும். முடிவில் பிரிந்து கொள்ளாமலிருக்க மைதா பேஸ்ட் ( ஒரு டேபிள் ஸ்பூன் தண்ணீரில் ஒரு டேபிள் ஸ்பூன் மைதாவைக் கரைத்து வைக்கவும்.) ஒட்டி எண்ணெயில் மொறுமொறுப்பாகப் பொரித்தெடுக்கவும். பரிமாறவும்.

சனி, 25 நவம்பர், 2023

டொமாட்டோ கட்லெட்

டொமாட்டோ கட்லெட்



 

தேவையானவை :- ஆப்பிள் தக்காளி – 8, உருளை, காரட், பீன்ஸ் பட்டாணி, காலிஃப்ளவர் – சேர்த்து இரண்டு கப், பெரிய வெங்காயம் ஒன்று, இஞ்சி – அரை இன்ச், பச்சை மிளகாய் – 2, மிளகாய்த்தூள் – அரை டீஸ்பூன், கரம் மசாலாத்தூள் – கால் டீஸ்பூன், கொத்துமல்லித்தழை – ஒரு டேபிள் ஸ்பூன், துருவிய சீஸ் – 1 டீஸ்பூன், வெண்ணெய் – 1 டீஸ்பூன், வறுத்த முந்திரி – 10 நான்காக ஒடிக்கவும். மைதா – அரை கப், மிளகாய்த்தூள் + உப்பு – கால் டீஸ்பூன், எண்ணெய் பொரிக்கத்தேவையான அளவு.

 

செய்முறை:- ஆப்பிள் தக்காளியை மேல் பக்கம் மூடி போல வெட்டி உள்ளே இருக்கும் சதைப் பாகத்தைக் குடைந்து வைக்கவும். உருளை காரட் பீன்ஸ் காலிஃப்ளவரை சிறிது பெரிதாகவும், பெரியவெங்காயம் பச்சை மிளகாய் இஞ்சி, கொத்துமல்லித்தழையைச் சின்னமாகவும் நறுக்கி வைக்கவும். இரண்டு டீஸ்பூன் எண்ணெயில் வெங்காயம் பச்சைமிளகாய் இஞ்சி மற்ற காய்கறிகளை வதக்கி தக்காளியின் சதைப் பாகத்தைச் சேர்க்கவும். மிளகாய்ப் பொடி கரம்மசாலாப் பொடி உப்பு சேர்த்து நன்கு சுருள வெந்ததும் இறக்கி வெண்ணெய், துருவிய சீஸ், கொத்துமல்லித்தழை, வறுத்த முந்திரி சேர்த்து நன்கு பிசையவும்.  இந்தக் கலவையை தக்காளிக்குள் வைத்து நன்கு ஸ்டஃப் செய்து மேலே சிறிது மைதா எடுத்து பேஸ்ட் மாதிரி செய்து நறுக்கிய மூடியை வைத்து மூடவும். மிச்ச மைதாவில் உப்பு மிளகாய்த்தூள் கலந்து பஜ்ஜி மாவு போல கரைத்து தக்காளியை முழுதாக அதில் புரட்டி எண்ணெயைக் காயவைத்துப் பொரித்தெடுத்துப் பரிமாறவும்.

வெள்ளி, 24 நவம்பர், 2023

கேரட் குல்ஃபி

கேரட் குல்ஃபி



 

தேவையானவை:- கேரட் – 4 வேகவைத்துக் கூழாக்கவும். பால் – 5 கப், ஜீனி- 1 கப், பால் பவுடர் - 1/2 கப், பிஸ்தா , முந்திரி , பாதாம் – 1 கப் ( பொடியாக நறுக்கவும் ), குங்குமப்பூ – 1 சிட்டிகை, ஏலக்காய்ப் பொடி – 1 சிட்டிகை, ஆல்மோண்ட் எசன்ஸ் - 1 ஸ்பூன். குல்ஃபி மோல்ட் – 12.

 

செய்முறை:- பாலை வத்தக் காய்ச்சவும். அதில் பால்பவுடரைக் கரைத்துச் சேர்த்து ஜீனி போடவும். ஜீனி கரையும்வரை அடுப்பில் வைக்கவும். இறக்கி ஆறவிட்டு அதில் காரட் விழுதைப் போட்டு ஏலப்பொடி தூவி ஆல்மோண்ட் எசன்ஸ் விட்டு நன்கு கலக்கவும். பொடியாக நறுக்கிய பாதாம், முந்திரி, பிஸ்தாவைப் போட்டு நன்கு கலக்கிக் குல்ஃபி மோல்டுகளில் ஊற்றி மூடி ஃப்ரிஜ்ஜில் 8 மணி நேரம் உறைய விடவும். வெளியே எடுத்து குல்ஃபி மோல்டுகளின் மேல் தண்ணீர் ஊற்றினால் மூடியில் இருக்கும் குச்சியோடு குல்ஃபி ஐஸ் எளிதாக வெளியே எடுக்க முடியும். ஜில் ஜில்லென்று கொடுக்கவும்.

செவ்வாய், 21 நவம்பர், 2023

கருணைக்கிழங்கு சாசேஜ்

கருணைக்கிழங்கு சாசேஜ்



 

தேவையானவை:- வேகவைத்த கருணைக்கிழங்கு – 1, வேகவைத்த உருளைக்கிழங்கு – 1, ப்ரெட் – 2 ஸ்லைஸ், வறுத்த சோம்பு, சீரகம், மல்லி – தலா கால் டீஸ்பூன், மிளகு – கால் டீஸ்பூன், வெங்காயம் பொடியாக அரிந்தது – 1 டேபிள் ஸ்பூன், இஞ்சி பூண்டு துருவியது – அரைடீஸ்பூன் தலா. சீஸ் துருவியது – 1 டேபிள் ஸ்பூன். உப்பு – அரை டீஸ்பூன். தக்காளி சாஸ் – அரை டீஸ்பூன். எண்ணெய் – பொரிக்கத் தேவையான அளவு.

 

 

 

செய்முறை:- ஒரு டீஸ்பூன் எண்ணெயில் இஞ்சி பூண்டு, வெங்காயத்தை வதக்கி ஆறவிடவும். இதில் வேகவைத்த கருணை, உருளை, ஓரம் நீக்கிய ப்ரெட்ஸ்லைஸ் சேர்க்கவும். சோம்பு, சீரகம் மல்லி, மிளகை வறுத்துப் பொடி செய்து உப்போடு போடவும். தக்காளிசாஸ், துருவிய சீஸ் சேர்த்து சாசேஜ்களாக உருட்டவும். தட்டையான பேனில் எண்ணெய் ஊற்றிப் பிடிகருணைபோல் உருட்டி வேகவைத்துப் பொரித்தெடுக்கவும்.

திங்கள், 20 நவம்பர், 2023

ஃப்ரூட் பாப்சிக்கிள்

ஃப்ரூட் பாப்சிக்கிள்



 

தேவையானவை :- மாம்பழம் – பாதி, கிவி – 1 , செர்ரி – 6, ஆப்பிள் – பாதி, பப்பாளி – 6 துண்டு, எலுமிச்சை ஜூஸ் – ஒரு கப், தேன் – 2 டீஸ்பூன். பாப்சிக்கில் மோல்ட் இரண்டு அல்லது இரண்டு டம்ளர்கள் , நடுவில் சொருக இரண்டு ஐஸ்க்ரீம் ஸ்டிக்குகள் அல்லது ஸ்பூன்கள்.

 

செய்முறை:- எலுமிச்சை ஜூஸில் தேனைக் கலந்து வைக்கவும். பாப்சிக்கில் மோல்டில் தோல் சீவி பெரிய துண்டுகளாக நறுக்கிய கிவி, மாம்பழம் ஆப்பிள், பப்பாளி, செர்ரி இந்த வரிசையில் போட்டு எலுமிச்சை ஜூஸை ஊற்றவும். இதை ஃப்ரீஸரில் எட்டுமணி நேரம் குளிரவைக்கவும். மோல்டை பைப் தண்ணீரில் காட்டினால் ஃப்ரூட் பாப்சிக்கில் பிரிந்து வரும். வெய்யிலுக்கு இதமாக ஜில்லென்று சர்வ் செய்யவும்,

சனி, 18 நவம்பர், 2023

பீட்ரூட் பகோடா

பீட்ரூட் பகோடா



 

தேவையானவை :- பீட்ரூட்- 1, கடலை மாவு – 1 கப், அரிசி மாவு – 1 டேபிள் ஸ்பூன், சோம்பு – ¼ டீஸ்பூன், உப்பு – ¼ டீஸ்பூன், மிளகாய்த் தூள் – ¼ டீஸ்பூன், மல்லித்தழை – சிறிது, வெங்காயம் – 1, வெண்ணெய் – 1 டீஸ்பூன் எண்ணெய் – பொறிக்கத் தேவையான அளவு

 

செய்முறை:- பீட்ரூட்டைத் தோல் சீவித் துருவவும். வெங்காயத்தைப் பொடிப் பொடியாக நறுக்கவும். கடலை மாவு, அரிசி மாவு, உப்புடன் சோம்பு மிளகாய்த் தூளை நன்கு கலந்து வெண்ணெயுடன் துருவிய பீட்ரூட், வெங்காயம், கொத்துமல்லித்தழை சேர்க்கவும். லேசாக தண்ணீர் தெளித்து பிரட்டினாற்போலப் பிசைந்து எண்ணெயைக் காயவைத்து மாவை உதிர்த்து பகோடாக்களாக வேக வைக்கவும். புதினாச் சட்னியுடன் பரிமாறவும்.

வியாழன், 16 நவம்பர், 2023

சில்லி பரோட்டா

சில்லி பரோட்டா


 

தேவையானவை :- பரோட்டா - 2 சதுரமாக வெட்டவும்., வெங்காயம் - 2 நீளமாக அரியவும்., மிளகாய்ப் பொடி - 1/4 டீஸ்பூன், ரெட் ஃபுட் கலர் - 1 சிட்டிகை., உப்பு - 1/4 டீஸ்பூன்., எண்ணெய் - பொறிக்க.

 

செய்முறை :- பானில் எண்ணெயைக் காயவைத்து பரோட்டா துண்டுகளைக் கிரிஸ்பியாகப் பொறிக்கவும். எண்ணெயை வடித்து விட்டு அதே பானில் வெங்காயம்., மிளகாய் பொடி., உப்பு போட்டு அரை நிமிடம் வதக்கவும். அதில் பரோட்டா துண்டுகளை ரெட் ஃபுட் கலருடன் போட்டு நன்கு கலக்கவும். சூடாக சாஸுடன் அல்லது ப்ளையினாக மாலை டிஃபனாக கொடுக்கவும்.

செவ்வாய், 14 நவம்பர், 2023

பனானா டிலைட்

பனானா டிலைட்


 

தேவையானவை :- செவ்வாழைப்பழம் -1, ரஸ்தாளி – 1, தேன்கதலி/கற்பூரவல்லி – 1, சிறுமலைப்பழம் – 1, தேங்காய்த்துருவல் – 1 டேபிள் ஸ்பூன், தேன் – 1 டேபிள் ஸ்பூன், ஏலக்காய்த்தூள் – கால் டீஸ்பூன்.

 

செய்முறை :- செவ்வாழைப்பழம், ரஸ்தாளி, தேன்கதலி, சிறுமலைப்பழம் ஆகியவற்றின் தோலை உரித்து மெல்லிய வட்டங்களாக வெட்டிக் கொள்ளவும். ஒரு தட்டில் வாழைப்பழத் துண்டுகளைப் பரப்பி அவற்றின்மேல் தேங்காய்த் துருவலைத் தூவவும். அதன் மேல் தேனை ஊற்றி ஏலப்பொடியைத் தூவிக் கொடுக்கவும்.

திங்கள், 13 நவம்பர், 2023

கோதுமை போண்டா

கோதுமை போண்டா


 

தேவையானவை:- கோதுமை மாவு – 2 கப், உளுந்து மாவு – அரை கப், உப்பு - அரை டீஸ்பூன், துருவிய தேங்காய் -1 கப், சின்ன வெங்காயம் - 20 பொடியாக அரியவும். பச்சை மிளகாய் - 2, எண்ணெய் - பொரிக்கத் தேவையான அளவு.கடுகு, உளுந்து - தலா ஒரு டீஸ்பூன்.

 

செய்முறை:-கோதுமை மாவுடன் உளுந்து மாவைச் சேர்த்து நன்கு கலந்து உப்புப் போட்டுத் தண்ணீர் தெளித்துத் தளரப் பிசையவும். இரண்டு டீஸ்பூன் எண்ணெயில் கடுகு, உளுந்து, பொடியாக அரிந்த பச்சைமிளகாய், சின்ன வெங்காயம், தேங்காய்த்துருவலைப் போட்டு வதக்கி ஆறியதும் மாவில் கொட்டிப் பிசையவும். எண்ணையைக் காயவைத்து மாவை எலுமிச்சை அளவில் உருட்டிப் போட்டுப் பொன்னிறமாக வெந்ததும் எடுக்கவும்.

ஞாயிறு, 12 நவம்பர், 2023

களியோடக்கா

களியோடக்கா


 

தேவையானவை :-  பச்சரிசி மாவு - 1 கப், தூள் வெல்லம் - அரைகப். பச்சரிசி மாவில் வெல்லத்தைப் பாகு காய்ச்சி ஊற்றிப் பிசைந்து ஒரு நாள் முழுதும் வைக்கவும். தேங்காய்த்துருவல் -  1 டேபிள் ஸ்பூன், ஏலக்காய் - 1, எண்ணெய் - பொரித்தெடுக்க.

 

செய்முறை:- வெல்லம் பச்சரிசி போட்ட மாவில் தேங்காய்த்துருவல், ஏலப்பொடி சேர்த்து லேசாக நீர் தெளித்து நன்கு பிசைந்து கொள்ளவும். எண்ணெயைக் காயவைத்துப் பெரிய சீடைகளாக உருட்டிப் பொன்னிறமாகப் பொரித்தெடுக்கவும். இதன் பெயர்தான் இனிப்புக் களியோடக்கா.

புதன், 8 நவம்பர், 2023

சிப்பி சோஹி

சிப்பி சோஹி


 

தேவையானவை:- பச்சரிசி மாவு – 2 கப், பொட்டுக்கடலை மாவு – அரை கப், தேங்காய்ப்பால் – ஒன்றரை கப், உப்பு – அரை டீஸ்பூன், சீப்புச் சீடைக் கட்டை – 1. எண்ணெய் – பொரிக்கத் தேவையான அளவு.

 

செய்முறை:- பச்சரிசி மாவுடன் பொட்டுக்கடலை மாவைக் கலந்து வைக்கவும். தேங்காய்ப்பாலை சூடுபடுத்தி உப்பு சேர்த்து இறக்கவும் மாவில் சிறிது சிறிதாக ஊற்றிப் பிசையவும். சீப்புச்சீடைக் கட்டையில் சிப்பிகளாகத் தட்டி வைக்கவும். எண்ணையைக் காயவைத்து அதில் போடும்போது சிப்பிகளை லேசாக மடக்கிப் போடவும். நன்கு பொறுபொறுவென வெந்ததும் இறக்கவும்.

திங்கள், 6 நவம்பர், 2023

ஸ்வீட் ஃபிங்கர் சிப்ஸ்

ஸ்வீட் ஃபிங்கர் சிப்ஸ்


 

தேவையானவை:- உருளைக்கிழங்கு – 2, சீனி – கால் கப், எண்ணெய் – பொறிக்கத் தேவையான அளவு, முந்திரி, கிஸ்மிஸ் – தலா 10.

 

செய்முறை:- உருளைக்கிழங்குகளைத் தோல்சீவி காய் சீவலில் குச்சி குச்சியாகச் சீவி எண்ணெயில் போட்டு நன்கு க்ரிஸ்பியாகப் பொரித்தெடுக்கவும். முந்திரி, கிஸ்மிஸையும் இத்துடன் பொரித்துப் போடவும். சீனியில் சிறிது நீர் விட்டு முத்துப் பாகு வைக்கவும். இதில் பொரித்த உருளை முந்திரி, கிஸ்மிஸைப் போட்டு நன்கு புரட்டிக் கலக்கி விடவும். உதிர் உதிராக இனிப்பு காராசேவுபோல் இருக்கும் இது. Read more: http://www.mylivesignature.com/mls_wizard2_1.php?sid=54488-89-72B745B7DCD91A6D51CF5145CF29EE5F#ixzz0gZnBC9oU

வெள்ளி, 3 நவம்பர், 2023

எள், கடலை சிக்கி

எள், கடலை சிக்கி


 

தேவையானவை :- வேர்க்கடலை -  1 கப், வெள்ளை எள் – அரை கப், நெய் – ஒரு டேபிள் ஸ்பூன், சர்க்கரை – ஒன்றரை கப், ஏலப் பொடி – கால் டீஸ்பூன்

 

செய்முறை:- வேர்க்கடலையை ஒன்றிரண்டாக உடைத்துக் கொள்ளவும். ஒரு தட்டில் நெய்யைத் தடவி வைக்கவும். ஒரு பானில் மிச்ச நெய்யைக் காயவைத்து சர்க்கரையைப் போட்டு உருகவிடவும். லேசாக உருகி வரும்போது வேர்க்கடலை, எள்ளைப் போட்டு ஏலப் பொடியையும் போட்டு நன்கு கிளறி லேசாக இளக்கமாக இருக்கும்போதே நெய் தடவிய தட்டில் கொட்டி சப்பாத்திக் கட்டையால் சமப்படுத்தவும். முழுதாய்ப் பெரிய வட்டமாகவோ அல்லது சதுரத் துண்டுகள் போட்டுக் கொடுக்கவும்.

புதன், 1 நவம்பர், 2023

மூங்தால் சாட்

மூங்தால் சாட்


 

தேவையானவை :- முளைவிட்ட பாசிப்பயறு - 1 கப் அவித்தது, பொடியாக அரிந்த வெங்காயம் - 2 டீஸ்பூன், பொடியாக அரிந்த தக்காளி - 2 டீஸ்பூன் , கொத்துமல்லித்தழை சிறிது,  சாட் மசாலா- சிறிது அல்லது உப்பு - சிறிது.

 

செய்முறை :- அனைத்தையும் கலந்து சாப்பிடவும். தேவைப்பட்டால் மாகி ஹாட் அண்ட் ஸ்வீட் டொமாட்டோ சில்லி சாஸ், ஓமப்பொடி ஒரு கைப்பிடி, பொரி ஒரு கைப்பிடி போட்டுச் சாப்பிடவும்.

Related Posts Plugin for WordPress, Blogger...