எனது பத்தொன்பது நூல்கள்

எனது பத்தொன்பது நூல்கள்
எனது பத்தொன்பது நூல்கள்

செவ்வாய், 28 செப்டம்பர், 2010

MASAAL VADAI.. மசால் வடை.

MASAAL VADAI :-
NEEDED:-
CHANNA DHAL - 1 CUP
ONION CHOPPED - 1 NO
RED CHILLI - 1 NO
GREEN CHILLI - 1 NO.
SOMPH - 1 TSP
JEERA - 1/2 TSP
COCONUT - 2 INCH SQUARE. ( MAKE INTO SMALL PIECES)
CURRY LEAVES. - 4 ARKS
SALT - 1/2 TSP.
OIL FOR FRYING - 200 GMS.

METHOD :-
WASH AND SOAK CHANNA DHAL FOR 2 HOURS. DRAIN THE WATER . IN A MIXIE PUT GREEN CHILLI., RED CHILLI., SOMPH., JEERA., COCONUT., CURRY LEAVES., SALT., RUN FOR ONE MINUTE. THEN ADD DHAL AND AGAIN RUN IT FOR ONE MINUTE. TAKE IT AND MIX IT WITH ONION. MIZ WELL AND DIVIDIE THE DOUGH INTO 12 EQUAL PARTS . MAKE A BALL EACH AND FLATTEN THEM WITH HAND . DEEP FRY IN OIL IN A MEDIUM FIRE. SERVE IT WITH MIXED RICES .,SAMBAR SATHAM OR CURD RICE., OR AS A EVE SNACK..WITH CHUTNEYS OR SAUCES.

மசால் வடை :-
தேவையானவை :-
கடலைப் பருப்பு - 1 உழக்கு
பெரிய வெங்காயம் - 1 பொடியாக அரிந்தது.
வரமிளகாய் - 1
பச்சை மிளகாய் - 1
சோம்பு - 1 டீஸ்பூன்
ஜீரகம் - 1/2 டீஸ்பூன்
தேங்காய் - 2 இன்ச் சதுரம்
கருவேப்பிலை - 4 ஆர்க்
உப்பு - 1/2 டீஸ்பூன்
எண்ணெய் பொறிக்க - 200 கிராம்.

செய்முறை :-
கடலைப் பருப்பைக் கழுவி 2 மணி நேரம் ஊறவைக்கவும். தண்ணீரை வடித்து வைக்கவும். மிக்ஸியில் வரமிளகாய்., பச்சை மிளகாய்., சோம்பு., சீரகம்., உப்பு., தேங்காய் ., கருவேப்பிலை போட்டு ஒரு நிமிஷம் அரைக்கவும். பின் பருப்பைப் போட்டு அரைக்கவும். இந்த விழுதுடன் வெங்காயத்தைப் போட்டுப் பிசையவும். 12 சம உருண்டைகளாக செய்து உருட்டி தட்டையாக்கி எண்ணெயில் பொறித்தெடுக்கவும். இதை கலவை சாதங்கள்., சாம்பார் சாதம்., தயிர் சாதம்., அல்லது மாலை சிற்றுண்டியாக சட்னிகளுடனோ., சாஸுடனோ சாப்பிடலாம்..

திங்கள், 27 செப்டம்பர், 2010

LEMON RICE.. எலுமிச்சை சாதம்

LEMON RICE :-
COOKED RICE - 2 CUPS.
LEMON JUICE - 1 TBLSPN.
TURMERIC POWDER - 1 PINCH.
MUSTARD - 1 TSP
URAD DHAL - 1 TSP
CHANNA DHAL - 1 TSP
RED CHILLIES - 2 HALVED.
GREEN CHILIES - 2 HALVED
CURRY LEAVES - 1 ARK
SALT - 3/4 TSP
OIL - 3 TSP
FRIED GROUNDNUT AND CASHEWS - 1 TBLSPN OPTIONAL.

METHOD:-
HEAT OIL IN A PAN ADD MUSTARD. WHENIT SPLUTTERS ADD URAD DHAL. WHEN IT BECOMES BROWN ADD CHANNA DHAL. THEN ADD RED CHILLIES .,GREEN CHILLY., CURRY LEAVES . THEN ADD TURMERIC POWDER AND SALT . ALONG WITH LEMON JUICE. SWICH OFF THE GAS.. ADD RICE IN IT STIRR WELL. IF DESIRES ADD FRIED GROUND NUT AND CASHEWS. ITS BEST WITH PAPPAD AND THEENGAYTH THUVAIYAL OR ANY KARAP PORIYAL.

எலுமிச்சை சாதம்:-
தேவையானவை :-
சாதம் - 2 கப்
எலுமிச்சைச் சாறு - 1 டேபிள்ஸ்பூன்
மஞ்சள் தூள் - 1 சிட்டிகை
கடுகு - 1 டீஸ்பூன்
உளுந்து - 1 டீஸ்பூன்
கடலைப்பருப்பு - 1 டீஸ்பூன்
வரமிளகாய் - 2 ரெண்டாகக்கிள்ளியது
பச்சை மிளகாய் - 1 ரெண்டாகக் கிள்ளியது.
கருவேப்பிலை - 1 இணுக்கு
உப்பு - 3/4 டீஸ்பூன்
எண்ணெய் - 3 டீஸ்பூன்
வறுத்த வேர்க்கடலை ., முந்திரி - 1 டேபிள்ஸ்பூன் விரும்பினால்.

செய்முறை :-
பானில் எண்ணெயைக் காயவைத்து கடுகு போடவும். வெடித்தவுடன் உளுந்துபோடவும். சிவந்தவுடன் கடலைப் பருப்பு., ரெண்டாகக் கிள்ளிய வரமிளகாய்., பச்சை மிளகாய் ., கருவேப்பிலை., உப்பு., மஞ்சள் பொடி போடவும். எலுமிச்சை சாறை ஊற்றி அடுப்பை அணைக்கவும். சாதத்தை கொட்டி நன்கு கிளறவும்.. விரும்பினால் வறுத்த வேர்க்கடலை ., முந்திரி சேர்க்கவும். அப்பளம்., தேங்காய்த்துவையல் அல்லது காரப் பொரியலுடன் பரிமாறவும்.

சனி, 25 செப்டம்பர், 2010

BEANS PORIYAL. பீன்ஸ் பொரியல்..

BEANS PORIYAL :-
NEEDED :-
BEANS - 250 GMS
MUSTARD - 1 TSP
URAD DHAL - 1 TSP
RED CHILLI - 1 HALVED
CURRY LEAVES - 1 ARK
SALT 1/2 TSP
OIL - 1 TSP
CRATED COCONUT OR PARABOILED DHAL - 1 TBLSPN OPTIONAL.

METHOD:-
WASH AND CUT BEANS IN TO TINY RINDS.
HEAT OIL IN A PAN ADD MUSTARD . WHEN IT SPLUTTERS ADD URAD DHAL . WHEN URAD DHAL BECOMES BROWN ADD CHILLI ., CURRY LEAVES AND BEANS.
SAUTE WELL ADD SALT AND COVER IT . COOK FOR 5 MIN IN SIM AND ADD CRATED COCONUT OR PARABOILED DHAL. SERVE IT WITH SAMBAR RICE OR VATHAK KUZAMBU RICE AS A SIDE DISH. OR U CAN HAVE IT PLAIN .

பீன்ஸ்பொரியல் :-
தேவையானவை :-
பீன்ஸ் - 250 கிராம்
கடுகு - 1 டீஸ்பூன்
உளுந்து - 1 டீஸ்பூன்
வரமிளகாய் - 1 ரெண்டாகக் கிள்ளியது.
கருவேப்பிலை - 1 இணுக்கு
உப்பு - 1/2 டீஸ்பூன்
எண்ணெய் - 1 டீஸ்பூன்
துருவிய தேங்காய் அல்லது பதமாய் வேகவைத்த பருப்பு - 1 டேபிள்ஸ்பூன் விரும்பினால்.

செய்முறை :-
பீன்ஸை கழுவி சின்ன வளையங்களாக நறுக்கவும்.
பானில் எண்ணெயைக் காய வைத்து கடுகு போட்டு வெடித்ததும்., உளுந்து போட்டு சிவந்ததும் ., ரெண்டாகக் கிள்ளிய வரமிளகாய்., கருவேப்பிலை., பீன்ஸை சேர்க்கவும். நன்கு வதக்கி உப்பு சேர்த்து மூடி போட்டு மெல்லிய தீயில் 5 நிமிடம் வேகவைத்து தேங்காய்த்துருவல்., அல்லது வேகவைத்த பருப்பு சேர்க்கவும். இறக்கி சாம்பார் சாதம் அல்லது வத்தக் குழம்பு சாதத்துடன் பரிமாறவும். அல்லது ப்ளெயின் பொரியலாகவும் சாப்பிடலாம்..

வெள்ளி, 24 செப்டம்பர், 2010

VEG ,.THUUL BAJJI.. வெஜிடபிள் தூள் பஜ்ஜி..

THUUL BAJJI..:-
NEEDED :-
GRAM FLOUR (BASEN ) - 100 GMS.
MAIDA - 20 GMS.
CORN FLOUR - 20 GMS.
RED CHILLI POWDER - 1/2 TSP
ASAFOETIDA POWDER - 1 PINCH.
RED FOOD COLOUR - 1 PINCH
SALT - 1/2 TSP
OIL FOR FRYING..( 150 GMS)
ASSORTED VEGETABLES - 1 CUP ( CUT INTO THIN STICKS)
(HERE WE USE .. POTATO., PLANTAIN AND AUBERGINE)
IF DESIRES ADD LADIES FINGER ., CARROT AND BEANS..

METHOD :-
ADD GRAM FLOUR, MAIDA., CORN FLOUR ., CHILLI PWDR., ASAFORTIDA., SALT., RED FOOD COLOUR . AND .. ADD THE VEGETABLES IN IT .. STIRR WELL.. NO NEED TO ADD WATER.. THE WATER IN THE VEG IS ENOUGH.
HEAT OIL IN A PAN ..DROP A HANDFUL OF DOUGH BY SPREADING IT IN OIL .. FRY WELL TILL CRISPY .. AND SERVE IT WITH SAUCES OR COCONUT CHUTNEY.

THIS IS SERVED AS A PREVIOUS DAY EVENING TIFFIN IN THE WEDDING CEREMONY OF CHETTINADU..

தூள் பஜ்ஜி:-
தேவையானவை :-
கடலை மாவு - 100 கிராம்.
மைதா - 20 கிராம்
சோளமாவு - 20 கிராம்
மிளகாய்த்தூள் - 1/2 டீஸ்பூன்
பெருங்காயத்தூள் - 1 சிட்டிகை
ரெட் ஃபுட் கலர் - 1 சிட்டிகை.
உப்பு - 1/2 டீஸ்பூன்
எண்ணெய் - பொரிக்க..
கலவைக் காய்கள் - 1 கப் (மெல்லிய குச்சிகள்)
( கத்திரி., வாழை., உருளை இங்கு உபயோகித்து இருக்கோம்)
விரும்பினால்.. வெண்டை., காரட் ., பீன்ஸ் சேர்க்கலாம்..

செய்முறை :-
கடலை மாவு., மைதா., சோள மாவு ., உப்பு ., பெருங்காயப் பொடி., மிளகாய்த்தூள்., ரெட் ஃபுட் கலர்., கலவைக் காய்கள் அனைத்தும் சேர்த்து நன்கு பிசையவும்.. தண்ணீர் விட வேண்டாம்.. காய்களில் உள்ள தண்ணீர்ச் சத்தே போதும்.
பானில் எண்ணெயைக் காயவைத்து ஒரு கை நிறைய மாவை எடுத்து உதிர்த்தது போல் தூவிவிடவும்.. நன்கு மொறு மொறுப்பாக வெந்ததும் எடுத்து சாஸ்கள் அல்லது தேங்காய்ச் சட்னியுடன் பரிமாறவும்..

இது செட்டிநாட்டுத் திருமணங்களில் இடைவேளைப் பலகாரமாக இடம் பெறும்.

புதன், 22 செப்டம்பர், 2010

SPROUTED GREEN GRAM DOSA.. முளைவிட்ட பச்சைப் (பாசிப்) பயறு தோசை..


SPROUTED GREEN GRAM DOSA..:-
NEEDED;-
GREEN GRAM - 200 GMS.
BIG ONION - 1 CHOPPED
BEETROOT - 1/8 PIECE..
GREEN CHILLI - 1 NO.
GARLIC - 3 PODS.
GINGER - 1 INCH PIECE
RED CHILLI POWDER - 1/4 TSP
CRATED COCONUT - 1 TBLSPN
CORRIANDER LEAVES - 1 TSP CHOPPED.
JEERA - 1 TSP .
SALT - 1 TSP
OIL - 20 GMS.
METHOD :-
WASH AND SOAK GREEN GRAM PREVIOUS DAY ITSELF AND AFTER 4 HOURS DRAIN THE WATER AND MAKE A BUNDLE WITH MUSLIN CLOTH OR COTTON CLOTH AND HANG IT OVERNIGHT OR KEEP IT IN A TIFFIN BOX OR CASSAROLE TIGHTLY COVERED .THE NEXT DAY MORNING IT SPROUTS .
TAKE THE SPROUTED GRAM ., CHILLI., GINGER., GARLIC., JEERA., BEETROOT., ONION., COCONUT ., SALT ., RED CHILLI POWDER ., CORRIANDER LEAVES IN A MIXER JAR AND GRIND COARSLY.
HEAT THE DOSA PAN . , AND SPREAD IT AS THIN DOSAS. POUR 1/2 TSP OIL AROUND IT.AND COOK WELL.. IT WILL TAKE TIME (5 MIN FOR A DOSA) . SO KEEP IT IN SIM AND COOK WELL .TURN THE OTHER SIDE ALSO . OTHERWISE CANT ABLE TO EAT .
SERVE HOT WITH SUNDAIKKAY THUVAIYAL OR KATHAMBA CHUTNEY.
பச்சைப் (பாசிப்) பயறு தோசை:-
தேவையானவை :-
பச்சைப் (பாசிப்) பயறு - 200 கிராம்.
பெரிய வெங்காயம் - 1 பொடியாக அரிந்தது.
பீட்ரூட் - 1 /8 துண்டு.
பச்சை மிளகாய் - 1
பூண்டு - 3 பல்
இஞ்சி - 1 இன்ச் துண்டு
மிளகாய்த்தூள் - 1/4 டீஸ்பூன்
துருவிய தேங்காய் - 1 டேபிள் ஸ்பூன்
கொத்துமல்லி இலை - 1 டீஸ்பூன்
ஜீரகம் - 1 டீஸ்பூன்
உப்பு - 1 டீஸ்பூன்
எண்ணெய் - 20 கிராம்.
செய்முறை :-
பாசிப்பயறை முதல்நாள் பகலில் கழுவி ஊறவைக்கவும். 4 மணி நேரம்கழித்து தண்ணீரை வடித்து மஸ்லின் துணி அல்லது காட்டன் துணியில் இறுக்க மூட்டையாகக் கட்டி தொங்கவிடவும் இரவு முழுவதும்..அல்லது ஒரு டிஃபன் பாக்ஸில் அல்லது காஸரோலில் போட்டு டைட்டாக மூடி வைக்கவும். மறுநாள் காலை முளை விட்டு இருக்கும்..
இந்த முளைவிட்ட பயறு., பச்சை மிளகாய்., இஞ்சி., பூண்டு., மிளகாய்ப் பொடி., உப்பு., ஜீரகம்., தேங்காய்த்துருவல்., பீட்ரூட்., கொத்துமல்லித்தழை., வெங்காயம் எல்லாம் போட்டு கரகரப்பாக அரைக்கவும் .
தோசைக்கல்லைக் காயவைத்து மெல்லிய தோசைகளாகத் தடவி எண்ணெய் ஊற்றி திருப்பிப் போட்டு நிதானமான தீயில் நன்கு வேகவைத்து எடுக்கவும். நன்கு வேகாவிட்டால் சாப்பிட முடியாது.. சூடான தோசையை சுண்டைக்காய்த் துவையல் அல்லது கதம்பச் சட்னியோடு பரிமாறவும்.

திங்கள், 20 செப்டம்பர், 2010

CAPSICUM ( GREEN PEPPER ) PACHADI .. குடைமிளகாய் பச்சடி..

CAPSICUM PACHADI :- 

NEEDED :- CAPSICUM - 2 ( 200 OR 250 GMS) DICED PARA BOILED THUVAR DHAL - 1 CUP BIG ONION - 1 ( DICED) TOMATO - CHOPPED. SAMBAR POWDER - 1 TSP TURMERIC POWDER - 1 PINCH TARMARIND - 1/2 AMLA SIZE SALT - 1 TSP MUSTARD - 1 TSP URAD DHAL - 1/2 TSP JEERA - 1/4 TSP ASAFOETIDA - 1/8 INCH PIECE . CURRY LEAVES - 1 ARK OIL - 2 TSP. 

 METHOD :- HEAT OIL IN A PAN ADD MUSTARD .. WHEN IT SPLUTTERS ADD URAD DHAL. WHEN IT BROWNS ADD ASAFOETIDA., JEERA AND CURRY LEAVES .. THEN ADD ONION., TOMATO AND CAPSICUM . SAUTE WELL. ADD TURMERIC POWDER AND SAMBAR POWDER . SOAK TAMARIND IN HALF TUMBLER WATER . MAKE A PULP OUT OF IT AND ADD IT IN THE KADAI WITH SALT . BRING TO BOIL ., COVER AND COOK FOR 5 MIN. ADD PARABOILED DHAL AND COOK FOR ANOTHR 3 MIN. OFF THE GAS AND SERVE IT WITH CURD RICE ., PLAIN RICE., IDDLIE OR DOSAS . ITS A SIDE DISH FOR CHAPATHIS ALSO .. 

 

குடமிளகாய்ப் பச்சடி :- 

தேவையானவை:- குடைமிளகாய் - 2 ( 200 அல்லது 250 கிராம்) சதுரமாக நறுக்கவும். பதமாக வேகவைத்த துவரம் பருப்பு - கப் பெரிய வெங்காயம் - 1 சதுரமாக நறுக்கவும். தக்காளி - 1 பொடியாக அரியவும். சாம்பார் பொடி - 1 டீஸ்பூன் மஞ்சள் தூள் - 1 சிட்டிகை புளி - 1/2 நெல்லிக்காய் அளவு . உப்பு - 1 டீஸ்பூன். கடுகு - டீஸ்பூன் உளுந்து - 1/2 டீஸ்பூன் ஜீரகம் - 1/4 டீஸ்பூன் பெருங்காயம் - 1/8 இன்ச் துண்டு கருவேப்பிலை - 1 இணுக்கு எண்ணெய் - 2 டீஸ்பூன். 

 செய்முறை :- பானில் எண்ணெயைக் காயவைத்து கடுகு போடவும். வெடித்ததும் உளுந்து போட்டு சிவந்ததும் பெருங்காயம்., ஜீரகம்., கருவேப்பிலை போடவும். வெங்காயம்., தக்காளி., குடமிளகாய் போட்டு நன்கு வதக்கவும். சாம்பார் பொடியும் மஞ்சள் பொடியும் போடவும். புளியில் அரை டம்ளர் தண்ணீர் ஊற்றிக் கரைத்து உப்புடன் பானில் ஊற்றவும். கொதிவரச் செய்து மூடிவைத்து 5 நிமிடம் வேகவிடவும். வெந்த பருப்பைச் சேர்த்து இன்னும் 3 நிமிடங்கள் கொதிக்க விட்டு இறக்கவும். இதை தயிர் சாதம்., சாதம்., இட்லி., தோசையுடன் பரிமாற ஏற்றது.. சப்பாத்திக்கும் சைட் டிஷ் ஆக தொட்டுக் கொள்ளலாம்.

சனி, 18 செப்டம்பர், 2010

VENKAYAK KOSE .. வெங்காயக் கோஸ்...


VENKAYAK KOSE..:-
NEEDED:-
BIG ONION - 2 NOS
TOMATO - 1 NO
SMALL POTATO - 1 NO

FOR GRINDING :-
RED CHILLIES - 6 NOS.
CRATED COCONUT - 1 CUP
SOMPH - 1 TSP
JEERA - 1 TSP
PEPPER - 5 NOS.
FRIED GRAM - 1 TBLSPN
GARLIC - 2 PODS
SMALL ONION - 2 NOS.

OIL - 1/2 TBLSPN.
MUSTARD - 1 TSP
URAD DHAL - 1 TSP
CLOVE - 1 NO
CURRY LEAVES - 1 ARK
SALT - 1 TSP.

METHOD :-
WASH AND PEEL AND CUT ONION ., TOMATO AND POTATO INTO THIN STICKS..
GRIND ALL THE INGREDIENTS.
HEAT OIL IN A KADAI ADD MUSTARD WHEN IT SPLUTTERS ADD URAD DHAL. WHEN IT BECOMES BROWN ADD CLOVE AND CURRY LEAVES..
ADD ONIONS., TOMATO., AND POTATO AND SAUTE WELL.
ADD THE MASALA AND STIRR WELL..
WHEN OIL SEPARATES AT THE SIDE ADD 3 TUMBLERS OF WATER AND SALT.
BRING TO BOIL AND COOK FOR 7 MIN .
REMOVE FROM FIRE SERVE OT WITH IDDLIES OR DOSAS.
ITS A CHETTINADU SPL SIDE DISH FOR TIFFINS.

வெங்காயக் கோஸ்:-
தேவையானவை :-
பெரிய வெங்காயம் - 2
தக்காளி - 1
சிறிய உருளைக்கிழங்கு - 1

அரைக்க:-
வரமிளகாய் - 6.
துருவிய தேங்காய் - 1 கப்
சோம்பு - 1 டீஸ்பூன்
சீரகம் - 1 டீஸ்பூன்
மிளகு - 5
பொட்டுக்கடலை - 1 டேபிள்ஸ்பூன்
பூண்டு - 2 பல்
சின்ன வெங்காயம் - 2

எண்ணெய் - 1/2 டேபிள்ஸ்பூன்
கடுகு - 1 டீஸ்பூன்
உளுந்து - 1 டீஸ்பூன்
கிராம்பு - 2
கருவேப்பிலை - 1 இணுக்கு
உப்பு - 1 டீஸ்பூன்

செய்முறை :-
பெரிய வெங்காயம் ., தக்காளி., உருளை மூன்றையும் தோல் சீவி குச்சி குச்சியாக நறுக்கவும்.
அரைக்கக் கொடுத்துள்ளவற்றை அரைக்கவும்.
கடாயில் எண்ணெயைக் காய வைத்து கடுகு போட்டு வெடித்ததும்., உளுந்து போட்டு சிவந்ததும் கிராம்பு போட்டு கருவேப்பிலை போடவும்.
வெங்காயம் ., தக்காளி., உருளை போட்டு நன்கு வதக்கவும்.
அரைத்த மசாலாவை சேர்த்து நன்கு வதக்கவும்.
பக்கங்களில் எண்ணெய் பிரிந்து வரும்போது 3 டம்ளர் தண்ணீர் சேர்க்கவும்.
7 முதல் 10 நிமிடங்கள் வரை கொதிக்கவிட்டு வேகவிடவும்.
சூடாக இட்லி தோசையுடன் பரிமாறவும்.
இது செட்டிநாட்டின் ஸ்பெஷல்.
பலகாரத்துக்கு தொட்டுக் கொள்வது..

வியாழன், 16 செப்டம்பர், 2010

BROAD BEANS PORIYAL.. அவரைக்காய் பொரியல்..


BROAD BEANS PORIYAL..:-
NEEDED :-
BROAD BEANS - 200 GMS.
MUSTARD - 1 TSP
URAD DHAL - 1 TSP
RED CHILLI HALVED - 1
CURRY LEAVES - 1 ARK
SALT - 1/3 TSP
OIL - 2 TSP.
PARA BOILED DHAL OR CRATED COCONUT - 1 TBL SPN ( OPTIONAL.)

METHOD :-
WASH AND CHOP BROAD BEANS.
HEAT OIL IN A KADAI ADD MUSTARD.
WHEN IT SPLUTTERS ADD URAD DHAL .
WHEN IT BROWNS ADD RED CHILLI AND CURRY LEAVES.
THEN ADD BROAD BEANS .
ADD SALT N SAUTE WELL.
SPRAY SOME WATER .,COVER IT N COOK WELL FOR 5 MIN IN SIM.
IF DESIRES ADD PARABOILED DHALL OR CRATED COCONUT AND OFF THE GAS .
ITS A SIDE DISH FOR SAMBAR SATHAM AND VATHAK KUZAMBU SATHAM OR MILAKUK KUZAMBU SATHAM OR THAKKAAlIK KUZAMBU SATHAM.

அவரைக்காய் பொரியல் :-
தேவையானவை :-
அவரைக்காய் - 200 கிராம்
கடுகு - 1 டீஸ்பூன்
உளுந்து - 1 டீஸ்பூன்
ரெண்டாகக் கிள்ளிய வரமிளகாய் - 1
கருவேப்பிலை - 1 ஆர்க்
உப்பு - 1/3 டீஸ்பூன்
எண்ணெய் - 2 டீஸ்பூன்
பதமாக வேகவைக்கப் பட்ட பருப்பு அல்லது துருவிய தேங்காய் - 1 டேபிள் ஸ்பூன் (விரும்பினால்).

செய்முறை :-
அவரைக்காய்களை கழுவி பொடியாக நறுக்கவும்.
கடாயில் எண்ணெயைக் காயவைத்து கடுகு போட்டு வெடித்ததும் உளுந்து போடவும். உளுந்து சிவந்ததும் மிளகாய் ., கருவேப்பிலை சேர்க்கவும். பின் அவரைக்காய்களை சேர்த்து வதக்கி., உப்பு போட்டுத் தண்ணீர் ஊற்றவும்.
மூடி போட்டு சிம்மில் 5 நிமிடங்கள் வேக விடவும். இறக்கும் முன் விரும்பினால் பதமாக வேகவைத்த பருப்பு அல்லது துருவிய தேங்காய் போட்டு கிளறி இறக்கவும்.
இது சாம்பார் சாதம்., வத்தக் குழம்பு சாதம்., மிளகுக் குழம்பு சாதம் ., தக்காளிக் குழம்பு சாதத்துக்கு தொட்டுக்கொள்ள ஏற்ற பொரியல்.

செவ்வாய், 14 செப்டம்பர், 2010

MACRONI... மாக்ரோனி..

MACRONI:-
NEEDED :-
MACRONI - 1 CUP
BIG ONION - 1 CHOPPED
CARROT - 1 CHOPPED
OLIVE OIL - 2 TSP
SOYA SAUCE - 1 TSP
GREE CHILLI SAUCE - 1 TSP
HOT AND SWEET TOMATO CHILLI SAUCE - 1TSP
AJINO MOTO - 1 PINCH (OPTIONAL)

PREPARATION:-
BOIL 4 CUPS OF WATER IN A PAN AND COOK MACRONIS TILL TENDER.
STRAIN EXCESS WATER AND SPRAY 1 TSP OLIVE OIL.
HEAT 1 TSP OLIVE OIL IN A PAN ADD ONION AND CARROT.
ADD AJINO MOTO , SOY SAUCE ., GREEN CHILLI SAUCE AND HOT AND SWEET TOMATO CHILLI SAUCE.
ADD MACRONI AND STILL WELL.
SERVE HOT WITH OMLETTES AND LEMON RINDS.

மாக்ரோனி :-
மாக்ரோனி - 1 கப்
பெரிய வெங்காயம் - 1 (பொடியாக அரிந்தது)
காரட் - 1 (பொடியாக அரிந்தது)
ஆலிவ் ஆயில் - 2 டீஸ்பூன்
சோயா சாஸ் - 1 டீஸ்பூன்
க்ரீன் சில்லி சாஸ் - 1 டீஸ்பூன்
ஹாட் அண்ட் ஸ்வீட் டொமாடோ சில்லி சாஸ் - 1 டீஸ்பூன்
அஜினோமோட்டோ - 1 சிட்டிகை ( விரும்பினால்)

செய்முறை :-
நான்கு கப் தண்ணீரைக் கொதிக்க வைத்து மாக்ரோனி மென்மையாகும் வரை வேகவைக்கவும்.
தண்ணீரை வடிகட்டவும்.
1 டீஸ்பூன் ஆலிவ் ஆயிலை தெளிக்கவும்.
1 டீஸ்பூன் ஆலிவ் ஆயிலை சூடாக்கி., வெங்காயம் காரட்டை வதக்கவும்.
சோயா சாஸ் ., க்ரீன் சில்லி சாஸ்., ஹாட் அண்ட் ஸ்வீட் டொமாட்டோ சில்லி சாஸ் ., அஜினோமோட்டோவை சேர்க்கவும்.
மாக்ரோனியை கொட்டி நன்கு கிளறவும்.
சூடாக ஆம்லெட் ., லெமன் துண்டுகளுடன் பரிமாறவும்.

வெள்ளி, 10 செப்டம்பர், 2010

ILAI ADAI.. இலை அடை.ILAI ADAI..:-
NEEDED :-
IDDLIE RICE - 2 CUPS.
DESICATED COCONUT - 1 CUP
JAGGERY - 1/2 CUP
SALT - 1 PINCH
PLANTAIN LEAF - 2
JACK FRUIT PIECES - 1 CUP ( OPTIONAL)
METHOD:-
WASH AND SOAK RICE FOR 2 HOURS.
GRIND WELL N ADD SALT.
TO REMOVE EXCESS WATER KEEP IT IN A COTTON CLOTH.
ADD COCONUT AND JAGGERY AND MIX WELL.
CUT THE PLANTAIN LEAF INTO 8 PIECES.
SPREAD THE DOUGH IN PLANTAIN LEAVES LIKE A THIN SHEET .
SPRAY COCONUT JAGGERY MIXTURE AND FOLD IT.
IF DESIRES ADD JACK FRUIT PIECES TOO.
PASTE WELL AND STEAM IT FOR 15 MINUTES.
REMOVE THE LEAVES AND SERVE IT AS A EVENING TIFFIN.
FOR PLAIN ILAI ADAI SPRAY ONLY COCONUT.
FOR PLAIN ILAI ADAI KATHAMBA CHUTNEY IS BEST.
இலை அடை :-
தேவையானவை :-
இட்லி அரிசி - 2 ஆழாக்கு
துருவிய தேங்காய் - 1 கப்
தூள் வெல்லம் - 1/2 கப்
உப்பு - 1 சிட்டிகை
வாழை இலை - 2
பலாச்சுளைத் துண்டுகள் - 1 கப் ( விருப்பப்பட்டால்)
செய்முறை :-
அரிசியை நன்கு கழுவி 2 மணி நேரம் ஊறவைக்கவும்.
நன்கு மசிய அரைக்கவும். உப்பு சேர்க்கவும்.
ஒரு காட்டன் துணியில் மாவை கொட்டிவைத்தால் அதிகப்படியான தண்ணீரை எடுத்து விடும்.
தேங்காயையும் வெல்லத்தையும் கலக்கவும்.
இலையை சம துண்டுகளாக வெட்டவும்.
இலையில் மாவை மெல்லிய தகடாக தட்டவும்.
அதில் தேங்காய் வெல்லக் கலவையை பரப்பவும்.
விருப்பப்பட்டால் பலாச்சுளைதுண்டுகளைத் தூவவும்.
ரெண்டாக மடித்து ஒட்டவும்.
ஆவியில் 15 நிமிடங்கள் வேகவைக்கவும்.
வாழை இலைகளை எடுத்துவிட்டு மாலைச் சிற்றுண்டியாகப் பரிமாறவும்.
ப்ளைன் இலை அடைக்கு வெறும் தேங்காய் மட்டும் தூவி செய்யவும்.
இதற்குத் தொட்டுக் கொள்ள கதம்பச் சட்னி நன்றாக இருக்கும்.

புதன், 8 செப்டம்பர், 2010

KARUVEEPPILAI KOTHTHUMALLITH THUVAIYAL...... கருவேப்பிலை கொத்துமல்லித்துவையல் ...

KARIVEEPPILAI KOTHTHUMALLITH THUVAIYAL ..
NEEDED;-
CURRY LEAVES - ONE HANDFUL
CORRIANDER LEAVES - 1 BUNCH
GREEN CHILLIES - 3 NOS.
BIG ONION - 2 NOS.
MUSTARD - 1 TSP
URAD DHAL - 1 TSP
ASAFOETIDA - 1/8 INCH PIECE.
SALT - 1/2 TSP
TAMARIND - 2 FLAKES.
OIL - 2 TSP.

METHOD :-
WASH N CUT THE CURRY LEAVES N CORRIANDER LEAVES .
CUT ONION AND CHILLIES INTO PIECES.
HEAT OIL IN A PAN ., ADD MUSTARD.
WHEN IT SPLUTTERS ADD URAD DHAL.
WHEN IT BECOMES BROWN ADD ASAFOETIDA AND ADD ONION., CHILLIES.
THEN ADD SALT ., TAMARINDAND CURRY AND CORRIANDER LEAVES.
SAUTE WELL. TAKE OFF GAS.
COOL IT AND GRIND WELL.
SERVE IT WITH VADAIS., KULIP PANIYAARAMS., IDDLIES OR DOSAS..

கறிவேப்பிலை கொத்துமல்லித் துவையல் :-
தேவையான பொருட்கள் :-
கருவேப்பிலை - 1 கைப்பிடி.,
கொத்துமல்லி - 1 கட்டு
பச்சை மிளகாய் - 3
பெரிய வெங்காயம் - 2
கடுகு - 1 டீஸ்பூன்
உளுந்து - 1 டீஸ்பூன்
பெருங்காயம் - 1/8 இஞ்ச் துண்டு
உப்பு - 1/2 டீஸ்பூன்
புளி - 2 சுளை.
எண்ணெய் - 2 டீஸ்பூன்.

செய்முறை :-
கருவேப்பிலை கொத்துமல்லியை ஆய்ந்து சுத்தம் செய்யவும்.
நன்கு கழுவி தண்ணீரை வடித்து பொடியாக அரியவும்.
பெரிய வெங்காயத்தையும் ., பச்சை மிளகாயையும் துண்டுகள் செய்யவும்.
பானில் எண்ணெயைக் காயவைத்து கடுகு ., போட்டு வெடித்ததும் உளுந்து போட்டு சிவந்ததும்., பெருங்காயம் போட்டு பின் வெங்காயம்., பச்சை மிளகாய் போடவும்.
உப்பு ., புளி., கருவேப்பிலை., கொத்துமல்லி போட்டு நன்கு வதக்கவும்.
அடுப்பில் இருந்து இறக்கி ஆறவிடவும். பின் மிக்ஸியில் அரைக்கவும்.
இது வடை., குழிப்பணியாரம்., இட்லி., தோசைக்கு நன்றாக இருக்கும்.

திங்கள், 6 செப்டம்பர், 2010

VADAI ... வடை

VADAI:-
NEEDED :-
URAD DHAL - 1 CUP
GREEN CHILLY - 2
BIG ONION - 1 CHOPPED
HAND FUL OF CHOPPED CURRY N CORRINDER LEAVES
SALT - 1 TSP
OIL - FOR FRYING .

METHOD :-
WASH N SOAK URAD DHAL FOR 2 HOURS.
DRAIN THE WATER AND GRIND WELL WITH GREEN CHILLIES .
ADD SALT ., CORRIANDER ., CURRY LEAVES., ONIONS ..
MIX WELL . TAKE THE TOUGH IN HALF HAND FUL MAKE LIKE A BALL AND FLATTEN THEM AND MAKE A HOLE AT THE CENTRE ( U CAN DO IT WITH WET HANDS FOR NON STICKY ).
FRY THEM IN OIL .
U CAN GET 20 VADAS OUT OF IT .
HAVE IT WITH COCONUT CHUTNEY ., SAMBAR ., THAKKALITH THUVAIYAL., OR PUTHINA THUVAIYAL OR KARIVEEPIILAI KOTHUMALLITH THUVAIYAL.. OR SAUCE OR WITH IDDLIE PODI ..

வடை :-
தேவையான பொருட்கள் :-
வெள்ளை உளுந்து - 1 ஆழாக்கு.
பச்சை மிளகாய் - 2
பெரியவெங்காயம் பொடியாக அரிந்தது - 1
கருவேப்பிலை கொத்துமல்லி பொடியாக அரிந்தது - 1 கைப்பிடி.
உப்பு - 1 டீஸ்பூன்.
எண்ணெய் - பொரிக்க தேவையான அளவு.

செய்முறை :-
உளுந்தை நன்கு கழுவி 2 மணி நேரம் ஊறவைக்கவும்.
தண்ணீரை வடித்து பச்சை மிளகாயோடு சேர்த்து அரைக்கவும்.
உப்பு., வெங்காயம் ., கறிவேப்பிலை ., கொத்துமல்லி போட்டு பிசையவும்.
தண்ணீரைத் தொட்டு அரைக்கையளவு மாவு எடுத்து உருண்டையாக்கி., பின் தட்டையாக்கி., நடுவில் கட்டை விரலால் துளை செய்து எண்ணெயில் பொறிக்கவும்.
இந்த அளவுக்கு 20 வடை வரும்..
சுட சுட எடுத்து தேங்காய் சட்னி., சாம்பார்., தக்காளித்துவையல்., புதினாத்துவையல்., கறிவேப்பிலை கொத்துமல்லித் துவையல்., அல்லது சாஸ் அல்லது இட்லிப் பொடியுடன் பரிமாறவும்.

வெள்ளி, 3 செப்டம்பர், 2010

VENKAAYAM THAKKAALITH THIRAKKAL... வெங்காயம் தக்காளித் திறக்கல்..

VENGKAAYAM THAKKALITH THIRAKKAL..:-
NEEDED :-
BIG ONION - 2 NOS (FINELY CHOPPED.)
TOMATOES - 4 NOS ( FINELY CHOPPED)
RED CHILLI POWDER - 2 TSP.
SALT - 1 TSP.
OIL - 1 TBL SPN
MUSTARD - 1 TSP
URAD DHAL - TSP.
CURRY LEAVES - 1 ARK.

METHOD :-
HEAT OIL IN A PAN . ADD MUSTARD WHEN IT SPLUTTERS ADD URAD DHAL.
WHEN IT BROWNS ADD ONION ., TOMATO.., AND CURRY LEAVES...
SAUTE WELL.
ADD RED CHILLI POWDER AND SALT .
SAUTE WELL AND ADD ONE CUP WATER .
BRING TO BOIL THEN SIMMER FOR 10 MIN.
REMOVE FROM FIRE AND SERVE HOT WITH VELLAIP PANIYAARAM., CHAPATHI ., IDDLIE OR DOSAI. OR UPMAS..

வெங்காயம் தக்காளித் திறக்கல்:-
தேவையானவை :-
பெரிய வெங்காயம் - 2 (பொடியாக நறுக்கியது).
தக்காளி - 4 (பொடியாக நறுக்கியது).
மிளகாய்ப் பொடி - 2 டீஸ்பூன்
உப்பு - 1 டீஸ்பூன்
எண்ணெய் - 1 டேபிள்ஸ்பூன்.
கடுகு - 1 டீஸ்பூன்
உளுந்து - 1 டீஸ்பூன்
கறிவேப்பிலை - 1 இணுக்கு .

செய்முறை :-
பானில் எண்ணெயைக் காய வைத்து கடுகு போடவும்.
கடுகு வெடித்ததும் உளுந்து போடவும்.
உளுந்து சிவந்ததும் பெரிய வெங்காயம்., தக்காளி., கறிவேப்பிலை போட்டு நன்கு வதக்கவும்.
உப்பு., மிளகாய்ப் பொடி போட்டு வதக்கி ஒரு கப் தண்ணீர் ஊற்றி கொதிக்க விடவும். 10 நிமிடம் சிம்மில் வைத்து அடுப்பை அணைக்கவும். சுட சுட வெள்ளைப் பணியாரம்., சப்பாத்தி., இட்லி ., தோசை அல்லது உப்புமாவுடன் பரிமாறவும்.

வியாழன், 2 செப்டம்பர், 2010

SOOJI UPMA.. வெள்ளை ரவை உப்புமா..

SOOJI UPMA.:-
NEEDED:-
SOOJI - 250 GMS.,
BIG ONION - 1 NO .( FINELY CHOPPED.)
GREEN CHILLY - 1 NO (HALVED. )
CARROT - 1 NO (CHOPPED.)
SALT - 1 TSP
MUSTARD - 1 TSP
URAD DHAL - 1 TSP
CHANNA DHAL - 1 TSP
CURRY LEAVES - 1 ARK
OIL - 50 ML.
WATER - 500 ML
CASHEWS AND GHEE IS OPTIONAL.

METHOD:-
FRY SOOJI IN A PAN FOR SOMETIME TO A LITTLE BROWN.
HEAT OIL IN A KADAI ADD MUSTARD., URAD DHAL.
AFTER IT SPLUTTERS ADD CHANNA DHAL..
WHEN THE DHALS BECOME BROWN ADD ONION ., CHILLY., CARROT AND CURRY LEAVES.
SAUTE FOR SOMETIME ADD SALT AND WATER .
BRING TO BOIL AND ADD THE FRIED SOOJI.
STIR WELL WITHOUT ANY LUMPS .
COVER FOR 2 MIN THEN OFF GAS.
SERVE HOT WITH THAKKALITH THIRAKKAL.
FRY CASHEWS IN GHEE AND DECORATE AT THE TOP .

வெள்ளை ரவை உப்புமா.:-
தேவையானவை :-
வெள்ளை ரவை - 250 கிராம்
பெரிய வெங்காயம் - 1 பொடியாக அரிந்தது.
காரட் - 1 பொடியாக அரிந்தது.
பச்சைமிளகாய் - 1 ரெண்டாக வகிர்ந்தது.
உப்பு - 1 டீஸ்பூன்.
கடுகு - 1 டீஸ்பூன்
உளுந்து - 1 டீஸ்பூன்
கடலைப்பருப்பு - 1 டீஸ்பூன்
கறிவேப்பிலை - 1 ஆர்க்
எண்ணெய் - 50 மிலி
தண்ணீர் - 500 மிலி
முந்திரியும் நெய்யும் விருப்பப்பட்டால் சேர்க்கலாம்.

செய்முறை :-
ரவையை பொன்னிறமாக வறுக்கவும்.
கடாயில் எண்ணையை சூடாக்கி., கடுகு போட்டு வெடித்தவுடன் உளுந்தும்., கடலைப்பருப்பும் போட்டு சிவந்தவுடன்., வெங்காயம்., காரட்., பச்சைமிளகாய்., கறிவேப்பிலை தாளிக்கவும்..
சிறிது வதங்கியபின் தண்ணீரும் உப்பும் சேர்க்கவும்.
கொதிவந்தபின் ரவையை சிறிது சிறிதாக சேர்த்து கட்டிகளில்லாமல் கிளரவும்.
இரண்டு நிமிடம் மூடி வைத்து பின் அடுப்பை அணைக்கவும்.
சுட சுட தக்காளித் திறக்கலுடன் பரிமாறவும்.
நெய்யில் முந்திரியை வறுத்து மேலே அலங்கரிக்கவும்.
Related Posts Plugin for WordPress, Blogger...