எனது பதிநான்கு நூல்கள்

எனது பதிநான்கு நூல்கள்
எனது பதிநான்கு நூல்கள்

வெள்ளி, 24 செப்டம்பர், 2010

VEG ,.THUUL BAJJI.. வெஜிடபிள் தூள் பஜ்ஜி..

THUUL BAJJI..:-
NEEDED :-
GRAM FLOUR (BASEN ) - 100 GMS.
MAIDA - 20 GMS.
CORN FLOUR - 20 GMS.
RED CHILLI POWDER - 1/2 TSP
ASAFOETIDA POWDER - 1 PINCH.
RED FOOD COLOUR - 1 PINCH
SALT - 1/2 TSP
OIL FOR FRYING..( 150 GMS)
ASSORTED VEGETABLES - 1 CUP ( CUT INTO THIN STICKS)
(HERE WE USE .. POTATO., PLANTAIN AND AUBERGINE)
IF DESIRES ADD LADIES FINGER ., CARROT AND BEANS..

METHOD :-
ADD GRAM FLOUR, MAIDA., CORN FLOUR ., CHILLI PWDR., ASAFORTIDA., SALT., RED FOOD COLOUR . AND .. ADD THE VEGETABLES IN IT .. STIRR WELL.. NO NEED TO ADD WATER.. THE WATER IN THE VEG IS ENOUGH.
HEAT OIL IN A PAN ..DROP A HANDFUL OF DOUGH BY SPREADING IT IN OIL .. FRY WELL TILL CRISPY .. AND SERVE IT WITH SAUCES OR COCONUT CHUTNEY.

THIS IS SERVED AS A PREVIOUS DAY EVENING TIFFIN IN THE WEDDING CEREMONY OF CHETTINADU..

தூள் பஜ்ஜி:-
தேவையானவை :-
கடலை மாவு - 100 கிராம்.
மைதா - 20 கிராம்
சோளமாவு - 20 கிராம்
மிளகாய்த்தூள் - 1/2 டீஸ்பூன்
பெருங்காயத்தூள் - 1 சிட்டிகை
ரெட் ஃபுட் கலர் - 1 சிட்டிகை.
உப்பு - 1/2 டீஸ்பூன்
எண்ணெய் - பொரிக்க..
கலவைக் காய்கள் - 1 கப் (மெல்லிய குச்சிகள்)
( கத்திரி., வாழை., உருளை இங்கு உபயோகித்து இருக்கோம்)
விரும்பினால்.. வெண்டை., காரட் ., பீன்ஸ் சேர்க்கலாம்..

செய்முறை :-
கடலை மாவு., மைதா., சோள மாவு ., உப்பு ., பெருங்காயப் பொடி., மிளகாய்த்தூள்., ரெட் ஃபுட் கலர்., கலவைக் காய்கள் அனைத்தும் சேர்த்து நன்கு பிசையவும்.. தண்ணீர் விட வேண்டாம்.. காய்களில் உள்ள தண்ணீர்ச் சத்தே போதும்.
பானில் எண்ணெயைக் காயவைத்து ஒரு கை நிறைய மாவை எடுத்து உதிர்த்தது போல் தூவிவிடவும்.. நன்கு மொறு மொறுப்பாக வெந்ததும் எடுத்து சாஸ்கள் அல்லது தேங்காய்ச் சட்னியுடன் பரிமாறவும்..

இது செட்டிநாட்டுத் திருமணங்களில் இடைவேளைப் பலகாரமாக இடம் பெறும்.

3 கருத்துகள்:

Related Posts Plugin for WordPress, Blogger...