சாக்லேட் கேசரி
தேவையானவை :- வெள்ளை ரவை - 1 ட்ரிங்கிங் சாக்லேட் – 2 டேபிள் ஸ்பூன், மில்க் மெய்ட் அரை கப், ஜீனி - கால் கப், நெய் - 1/2 கப், சாக்லேட் எஸன்ஸ் – சிலதுளிகள், முந்திரிப் பருப்பு – 10, அக்ரூட் – 4.
செய்முறை:- ஒரு பானில் நெய்யை ஊற்றிச் சூடாக்கி பொடித்த அக்ரூட்டையும் முந்திரிப் பருப்பையும் பொன்னிறமாக வறுக்கவும். அதில் ரவையை போட்டு வெதுப்பி இரண்டு கப் கொதி நீர் ஊற்றி சமைக்கவும். ரவை வெந்தவுடன் மில்க்மெய்டையும் ஜீனியையும் சேர்த்துக் கரைந்தவுடன் அதில் ட்ரிங்கிங் சாக்லேட்டைத் தூவிக் கிளறி இறக்கிப் பொடித்த ஏலக்காய், முந்திரி அக்ரூட்டை வைத்து அலங்கரித்துக் குளிரவைத்துப் பரிமாறவும்.


கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக