எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

செவ்வாய், 22 ஜனவரி, 2013

MUTTON BONE THANNIK KUZHAMBU . மட்டன் எலும்பு தண்ணிக் குழம்பு.

MUTTON BONE THANNIK KUZHAMBU:-

NEEDED:-
MUTTON BONE - 250 GRMS.
SMALL ONION - 10 NOS
GARCIL - 10 NOS
TOMATO - 1 NO
TURMERIC POWDER - 1 PINCH
SALT - 1 TSP
OIL - 1 TSP
BAY LEAF - 1 INCH PIECE
CINNAMON - 1 INCH PIECE
CLOVE - 2 NOS
SOMPH - 1/2 TSP

TO GRIND:-
RED CHILLIES - 8 NOS
DHANIA - 1 TBLSPN
SOMPH - 1 TSP
JEERA - 1/2 TSP
PEPPER - 1/2 TSP
SMALL ONION - 2 NOS
GARLIC - 1 POD

METHOD:-
WASH AND PRESSURE COOK THE MUTTON BONES FOR 5 WHISTLES. FRY ALL THE INGREDIENTS EXCEPT ONION AND GARLIC. GRIND WELL.
HEAT OIL IN A PAN ADD BAY LEAF, CINNAMON, COLVE, SOMPH. ADD THE SMALL ONION, GARLIC &  CHOPPED TOMATO. ADD THE GROUND MASALA, TURMERIC POWDER AND SALT. SAUTE FOR 2 MINUTES THEN ADD THE COOKED MUTTON BONES. ADD ENOUGH WATER AND AGAIN PRESSURE COOK FOR 3 WHISTLES. SERVE HOT WITH PLAIN RICE AND APPALAMS.

மட்டன் எலும்பு தண்ணிக் குழம்பு:-

தேவையானவை:-
மட்டன் - 250 கிராம்
சின்ன வெங்காயம் - 10
வெள்ளைப் பூண்டு - 10
தக்காளி - 1
எண்ணெய் - 1 டீஸ்பூன்
பிரிஞ்சி இலை - 1 இஞ்ச் துண்டு
பட்டை - 1 இஞ்ச் துண்டு
கிராம்பு - 2
சோம்பு - 1/2 டீஸ்பூன்

அரைக்க :-
வரமிளகாய் - 8
தனியா - 1 டேபிள் ஸ்பூன்
சோம்பு - 1 டீஸ்பூன்
சீரகம் - 1/2 டீஸ்பூன்
மிளகு - 1/2 டீஸ்பூன்
சின்ன வெங்காயம் - 2
பூண்டு - 1

செய்முறை:-
மட்டன் எலும்புகளைக் கழுவி பிரஷர் குக்கரில் 5 விசில் வரும்வரை வேக விடவும். சின்ன வெங்காயம், பூண்டு தவிர மற்ற பொருட்களை எண்ணெயில் வறுத்து வெங்காயம் பூண்டைச் சேர்த்து அரைக்கவும்.
ஒரு பானில் எண்ணெயைக் காயவைத்து பிரிஞ்சி இலை, பட்டை, கிராம்பு, சோம்பு போடவும். சின்ன வெங்காயம், பூண்டு, பொடியாக அரிந்த தக்காளி போட்டு வதக்கி அதில் அரைத்த மசாலா, மஞ்சள் பொடி, உப்பு சேர்க்கவும். இரண்டு நிமிடம் வதக்கியபின் அதில் வேக வைத்த எலும்பைச் சேர்த்து தேவையான தண்ணீர் ஊற்றி திரும்பவும் பிரஷர் குக்கரில் 3 விசில் வரும்வரை வேகவைத்து சூடாக சாதம் அப்பளத்தோடு பரிமாறவும்.

MIXED PASTA. மிக்ஸ்ட் பாஸ்தா:-

MIXED PASTA:-

NEEDED:-
MIXED PASTA ( SPRING,SPIRAL,BOW) - 1 CUP
MIXED VEGETABLES (CARROT,BEANS,CAULIFLOWER,PEAS) CHOPPED - 2 TBLSPN
BIG ONION CHOPPED -  2 TBLSPN
MAGGI HOT & SWEET TOMATO RED CHILLI SAUCE - 2 TSP
SOYA SAUCE - 1 TSP
GREEN CHILLI SAUCE - 1 TSP.
VINEGAR - 1/2 TSP ( OPTIONAL)
AJINOMOTTO - 1 PINCH OR
SALT - 1/2 TSP
SUGAR - 1/4 TSP
WHITE PEPPER POWDER - 1/2 TSP
BUTTER/CHEESE/OLIVE OIL - 2 TSP

METHOD:-
COOK THE PASTAS IN ENOUGH WATER TILL IT BECOMES TENDER. DRAIN THE WATER AND KEEP ASIDE. HEAT BUTTER/CHEESE/OLIVE OIL IN A PAN ADD CHOPPED ONION. SAUTE WELL. ADD MIXED VEGETABLES, SUGAR & SALT. SAUTE FOR A MINUTE  THEN ADD MAGGI HOT & SWEET TOMATO CHILLI SAUCE, SOYA SAUCE, GREEN CHILLI SAUCE, VINEGAR, WHITE PEPPER POWDER & AJINOMOTTO. SAUTE FOR A MINUTE IN HIGH FLAME THEN ADD THE COOKED PASTAS. STIRR WELL. REMOVE FROM FIRE AND SERVE HOT WITH DESIRED SAUCES.

மிக்ஸட் பாஸ்தா:-

தேவையானவை:-
மிக்ஸ்ட் பாஸ்தா ( ஸ்பிரிங்க்,ஸ்பைரல், போவ்) - 1 கப்
காய்கறிக் கலவை ( காரட், பீன்ஸ்,காலிஃப்ளவர்,பட்டாணி ) பொடியாக அரிந்தது - 2 டேபிள் ஸ்பூன்
பெரிய வெங்காயம் பொடியாக அரிந்தது - 2 டேபிள் ஸ்பூன்
மாகி ஹாட் & ஸ்வீட் டொமாட்டோ சில்லி சாஸ் - 2 டீஸ்பூன்
சோயா சாஸ் - 1 டீஸ்பூன்
க்ரீன் சில்லி சாஸ் - 1 டீஸ்பூன்
வினிகர் - 1/2 டீஸ்பூன் ( விரும்பினால்)
அஜினோமோட்டோ - 1 சிட்டிகை அல்லது
உப்பு - 1/2 டீஸ்பூன்
சீனி - 1/4 டீஸ்பூன்
வெள்ளை மிளகுப் பொடி - 1/2 டீஸ்பூன்
வெண்ணெய்/சீஸ்/ஆலிவ் ஆயில் - 2 டீஸ்பூன்

செய்முறை:-
பாஸ்தாக்களை தேவையான தண்ணீரில் நன்கு மென்மையாக வேகவைத்து வடிகட்டி வைக்கவும். ஒரு பானில் வெண்ணெய்/சீஸ்/ஆலிவ் ஆயில் போட்டு அதில் வெங்காயம் போட்டு நன்கு வதக்கவும். அதில் காய்கறிக்கலவை, உப்பு, சீனி போட்டு  ஒரு நிமிடம் வதக்கவும். அதில் மாகி ஹாட் & ஸ்வீட் டொமாட்டோ சில்லி சாஸ், சோயா சாஸ், க்ரீன் சில்லி சாஸ், வினிகர், வெள்ளை மிளகுப் பொடி, அஜினோமோட்டோ அல்லது உப்பு போட்டு ஒரு நிமிடம் உச்சபட்ச தீயில் வதக்கவும். அதில் வேகவைத்த பாஸ்தாக்களைப் போட்டுக் கிளறவும். தீயிலிருந்து இறக்கி விருப்பமான சாஸ்களோடு பரிமாறவும்.

CHOLE PURI சோளே பூரி

CHOLE PURI:-

FOR PURI:-

NEEDED:-
ATTA - 1 CUP
MAIDA - 1 CUP
SOOJI - 1 CUP
SALT - 1/2 TSP
OIL FOR FRYING.

METHOD:-
ADD ALL THE INGREDIENTS EXCEPT OIL. POUR ENOUGH WATER AND KNEAD WELL. KEEP COVERED FOR 10 MINUTES. MAKE EQUAL SIZE BALLS , ROLL THEM AND FRY THEM IN HOT OIL.

FOR CHOLE:-

NEEDED:-
CHANNA/RAW GREEN CHANNA- IS CALLED CHOLE) - 1 CUP
BIG ONION PASTE - 1 TBLSPN
GINGER GARLIC PASTE - 2 TSP
TOMATO PASTE/PUREE - 1 TBLSPN
ANAR DHANA ( POMEGRANATE SEEDS) - 1 TSP POWDERED.
TIL - 1 TSP POWDERED. ( OPTIONAL)
RED CHILLI POWDER - 1 TSP
CORIANDER POWDER - 1 TSP
TURMERIC POWDER - 1 PINCH
GARAM MASALA - 1/2 TSP
OIL - 2 TSP
JEERA - 1 TSP
SALT - 1/2 TSP
SUGAR - 1/4 TSP.

METHOD:-
SOAK CHANNA FOR 12 HOURS. PRESSURE COOK FOR 5 WHISTLES. HEAT OIL IN A PAN. ADD JEERA. ADD ONION PASTE AND SAUTE TILL IT BECOMES BROWN. ADD GINGER GARLIC PASTE & SAUTE  TILL OIL SEPERATES. ADD ANAR DHANA,TILL, SALT,SUGAR, RED CHILLI POWDER, CORIANDER POWDER, TURMERIC,GARAM MASALA, ADD TOMATO PASTE AND SAUTE FOR 2 MINUTES. ADD THE CHOLE OR COOKED CHANNA. ADD ENOUGH WATER. COOK TILL DONE AND SERVE HOT WITH PURI. ADD SOME CHOPPED CORRIANDER AND ONION FOR ADDITIONAL TASTE.

சோளே பூரி:-

பூரி செய்ய:-

தேவையானவை:-
ஆட்டா - 1 கப்
மைதா - 1 கப்
ரவா - 1 கப்
உப்பு - 1/2 டீஸ்பூன்
எண்ணெய் - பொறிக்கத் தேவையான அளவு.

செய்முறை:-
எண்ணெயைத் தவிர எல்லாவற்றையும் ஒன்றாக ஒரு சில்வர் பேசினில் போட்டு தேவையான தண்ணீர் ஊற்றி நன்கு பிசையவும். ஒரு ஈரத்துணியைப் போட்டு 10 நிமிடங்கள் ஊற விடவும். சம அளவு உருண்டைகள் செய்து பெரிய சைஸ் சப்பாத்திகளாகத் திரட்டி எண்ணெயில் பொரித்தெடுக்கவும்.

சோளே செய்ய:-

தேவையானவை:-
கொண்டைக்கடலை கறுப்பு/வெள்ளை/பச்சை - பச்சையாக இருந்தால் அதன் பெயர் சோளே. - 1 கப்
பெரியவெங்காய பேஸ்ட் - 1 டேபிள்ஸ்பூன்
இஞ்சிபூண்டு மசாலா - 2 டீஸ்பூன்
தக்காளி பேஸ்ட் - 1 டேபிள் ஸ்பூன்
அனார் தானா ( மாதுளைவிதைப் பொடி ) - 1 டீஸ்பூன்
எள்பொடித்தது - 1 டீஸ்பூன்
வரமிளகாய்ப் பொடி - 1 டீஸ்பூன்
கொத்துமல்லிப் பொடி - 1 டீஸ்பூன்
மஞ்சள் பொடி - 1 சிட்டிகை
கரம் மசாலா - 1/2 டீஸ்பூன்
எண்ணெய் - 2 டீஸ்பூன்
சீரகம் - 1 டீஸ்பூன்
உப்பு - 1/2 டீஸ்பூன்
சீனி - 1/4 டீஸ்பூன்

செய்முறை:-
கொண்டைக்கடலையை பன்னிரெண்டு மணி நேரம் ஊறவைக்கவும். பிரஷர் குக்கரில் 5 விசில் வரும் வரை வேக விடவும். ஒரு பானில் எண்ணெயைக் காயவைத்து சீரகத்தைப் போடவும். அதில் வெங்காயப் பேஸ்டைப் போட்டு சிவக்கும் வரை வதக்கவும். அதில் இஞ்சி பூண்டு பேஸ்டைப் போட்டு எண்ணெய் பிரியும்வரை வதக்கி அனார் தானா, எள், உப்பு, சீனி, மிளகாய்த்தூள், மல்லித்தூள், மஞ்சள் தூள், கரம் மசாலா, தக்காளி பேஸ்ட் போட்டு இரண்டு நிமிடம் வதக்கி வேகவைத்த சன்னா அல்லது பச்சை சோளேயைப் போட்டு தேவையான தண்ணீர் ஊற்றி வேகவிடவும். சூடாக பூரியுடன் பரிமாறவும். பொடியாக அரிந்த கொத்துமல்லி, வெங்காயம் தூவி பரிமாறவும்.

CURRY LEAVES, CORIANDER, MINT STEMS SOUP . கருவேப்பிலை, கொத்துமல்லி, புதினா காம்புகள் சூப்.



CURRY LEAVES, CORIANDER, MINT STEMS SOUP:-

NEEDED:-
CURRY LEAVES, CORRIANDER AND MINT STEMS ( TENDER)  – 1 HANDFUL
BOILED THUVAR DHAL – 1 TBLSPN
BIG ONION – 1 CUT INTO THIN STRANDS
TOMATO – 1 CHOPPED FINELY
GREEN CHILLIE – 1 SLIT OPEN
TURMERIC – 1 PINCH
SALT – 1 TSP
WATER 3 CUPS

TO FRY:-
BAY LEAF – 1 INCH PIECE
CINNAMON – 1 INCH PIECE
KALPASIPPOO – 1 INCH
SOMPH – ¼ TSP
JEERA – ½ TSP
PEPPER – ½ TSP
GHEE OR OIL – 1 TSP

METHOD:-
WASH AND COLLECT THE STEMS AND TIE THEM WITH A THREAD. MASH THE THUVAR DHAL IN  3 CUPS OF WATER.

HEAT OIL IN A PAN ADD BAY LEAF, CINNAMON, KALPASIPPOO, SOMPH, JEERA, PEPPER. ADD THE GREEN CHILLIE, TOMATO, BIG ONION AND SAUTE WELL. ADD THE STEMS AND SAUTE FOR A MINUTE. ADD SALT WITH THE DHAL WATER. COOK FOR ONE WHISTLE. FILTER THE SOUP AND SERVE HOT.


கருவேப்பிலை, கொத்துமல்லி, புதினா காம்புகள் சூப்:-

தேவையானவை.:-
கருவேப்பிலை, கொத்துமல்லி, புதினா காம்புகள் ( மென்மையானது )  - 1 கைப்பிடி
வேகவைத்த துவரம்பருப்பு - 1 டேபிள் ஸ்பூன்
பெரிய வெங்காயம் - 1 மெல்லியதாக நீளமாக நறுக்கவும்.
தக்காளி - 1 துண்டுகள் செய்யவும்.
பச்சை மிளகாய் – 1 இரண்டாக வகிரவும்.
மஞ்சள் பொடி - 1 சிட்டிகை
உப்பு - 1 டீஸ்பூன்
தண்ணீர் – 3 கப்

தாளிக்க:-
பட்டை - 1 இன்ச்
பிரிஞ்சி இலை - 1 இன்ச்
கல்பாசிப்பூ - 1 இன்ச்
சோம்பு - 1/4 டீஸ்பூன்
மிளகு - 1/2 டீஸ்பூன்
சீரகம் - 1/2 டீஸ்பூன்
நெய் அல்லது எண்ணெய் - 1 டீஸ்பூன்.

செய்முறை:-
கருவேப்பிலை, கொத்துமல்லி, புதினா காம்புகளை ஆய்ந்து ஒரு நூலில் கட்டாகக் கட்டிக் கொள்ளவும். துவரம் பருப்பை மசித்து 3 கப் தண்ணீரில் கரைக்கவும்.

பானில் எண்ணெயைக் காயவைத்து சீரகம், சோம்பு, மிளகு, கல்பாசிப்பூ, பட்டை, பிரிஞ்சி இலை, தாளித்து வெங்காயம் தக்காளி வதக்கி
அதில் காம்புகளையும் போட்டு மஞ்சள் பொடி, உப்பு போட்டு வதக்கி பருப்புத்தண்ணீர் ஊற்றி குக்கரில் ஒரு விசில் வைத்து
இறக்கவும். வடிகட்டி க்ளியர் சூப்பாக ஊற்றி சூடாக அருந்தவும்.




CORIANDER COCONUT CHUTNEY. கொத்துமல்லி தேங்காய் சட்னி:-


CORIANDER COCONUT CHUTNEY:-
NEEDED:-
CORRIANDER – 1 BUNCH
GRATED COCONUT – 1 CUP
GREEN CHILLIES – 4 NOS
SALT – ½ TSP
OIL – 1 TSP
MUSTARD – 1 TSP
ASAFOETIDA POWDER – 1 PINCH
METHOD:-
WASH AND CLEAN CORIANDER LEAVES. ADD COCONUT, GREEN CHILLIES AND SALT. GRIND WELL. HEAT OIL & ADD MUSTARD AND ASAFOETIDA POWDER.  ADD THIS TO THE CHUTNEY. STIRR WELL AND SERVE IT WITH IDDLY/DOSAS.
கொத்துமல்லி தேங்காய்ச் சட்னி:-

தேவையானவை:-
கொத்துமல்லி - 1 கட்டு
தேங்காய் - 1 கப்
பச்சை மிளகாய் - 4
உப்பு - 1/2 டீஸ்பூன்
எண்ணெய் - 1 டீஸ்பூன்
கடுகு - 1 டீஸ்பூன்
பெருங்காயம் - 1 சிட்டிகை

செய்முறை:-
கொத்துமல்லியை சுத்தம் செய்து தேங்காய், உப்பு , மிளகாயுடன் அரைக்கவும். அதில் தேவையான தண்ணீர் விட்டுக் கரைத்து எண்ணெயில்  கடுகு, பெருங்காயம் தாளித்து உபயோகப்படுத்தவும். இட்லி தோசையுடன் பரிமாறவும். 

TOMATO CHUTNEY. – 2 தக்காளிச் சட்னி – 2



TOMATO CHUTNEY:-

NEEDED:-
TOMATO – 4 NOS.
RED CHILLI POWDER – 2 TSP
SALT – ½ TSP
OIL – 2 TSP
ASAFOETIDA POWDER – 1 PINCH
MUSTARD – ½ TSP

METHOD:-
WASH, CUT AND GRIND TOMATOS. HEAT OIL IN A PAN. ADD MUSTARD. WHEN IT SPLUTTERS ADD TOMATO PASTE, REND CHILLI POWDER, SALT & ASAFOETIDA POWDER. SAUTE WELL. COOK TILL THE OIL SEPERATES AT THE SIDES OF THE VESSEL. SERVE HOT WITH IDDLY/CHAPPATHI/DOSAS.

தக்காளிச் சட்னி:-

தேவையானவை :-
தக்காளி – 4
மிளகாய்த்தூள் – 2 டீஸ்பூன்
உப்பு – ½ டீஸ்பூன்
எண்ணெய் – 2 டீஸ்பூன்
பெருங்காயப் பொடி – 1 சிட்டிகை
கடுகு – ½ டீஸ்பூன்

செய்முறை:-
தக்காளிகளைக் கழுவி துண்டுகளாக்கி மிக்ஸியில் அரைக்கவும்.  ஒரு பானில் எண்ணெயைக் காயவைத்து கடுகு போட்டு வெடித்ததும், தக்காளிக் கூழ், மிளகாய்ப் பொடி, உப்பு, பெருங்காயப் பொடி போட்டு நன்கு வதக்கவும். பக்கங்களில் எண்ணெய் பிரியும்வரை சமைத்து சூடாக இட்லி/தோசை/சப்பாத்தியுடன் பரிமாறவும்.

வெள்ளி, 11 ஜனவரி, 2013

TRICOLOUR SALAD. மூவர்ண சாலட்:-

TRICOLOUR SALAD:-

NEEDED:-
CARROT - 1 NO
CUCUMBER - 1 NO
BIG INION - 1 NO
CURD - 1 CUP
SALT - 1/4 TSP
SUGAR -1 PINCH

METHOD:-
HANG THE CURD IN A CLOTH TO DRAIN THE WATER IN IT. OPEN THE CLOTH & PLACE IT IN A BOWL . WASH PEEL AND CHOP THE CARROT, CUCUMBER AND ONION. ADD THE VEGGIES IN THE CURD. ADD SUGAR & SALT. STIRR WELL. REFRIDGERATE & SERVE.

மூவர்ண சாலட்:-

தேவையானவை:-
காரட் - 1
வெள்ளரிக்காய் - 1
பெரிய வெங்காயம் - 1
தயிர் - 1 கப்
உப்பு - 1/4 டீஸ்பூன்
சீனி - 1 சிட்டிகை

செய்முறை:-
ஒரு துணியில் தயிரைக் கட்டித் தொங்கவிடவும். அதிலிருக்கும் தண்ணீர் வடிந்ததும் ஒரு பவுலில் போடவும்.  காய்களைக் கழுவித் தோலுரித்துப் பொடியாக நறுக்கவும். காய்கள், உப்பு, சீனி சேர்த்து நன்கு கலந்து குளிரவைத்துப் பரிமாறவும்.

SMALL ONION, TOMATO KETTI CHUTNEY.சின்னவெங்காயம், தக்காளி கெட்டிச் சட்னி.

SMALL ONION, TOMATO KETTI CHUNEY:-

NEEEDED:-
SMALL ONION- 100 GM
TOMATO - 2 NOS.
RED CHILLI POWDER - 2 TSP
SALT - 1 TSP
OIL - 2 TSP ( 10 ML)
MUSTARD - 1 TSP
ORID DHAL - 1 TSP

METHOD:-
PEEL WASH AND SLICE THI ONIONS. CHOP THE TOMATOS. HEAT OIL  IN A PAN. ADD MUSTARD. WHEN IT SPLUTTERS ADD ORID DHAL. WHEN IT BECOMES BROWN ADD ONION & TOMATO. SAUTE WELL. AFTER 3 MINUTES ADD  RED CHILLI POWDER AND SALT. COOK TILL OIL SEPERATES AT THE SIDES OF THE VESSEL. SERVE HOT WITH IDDLIES/DOSAS/CHAPPATHIS/CURD RICE.

சின்ன வெங்காயம் தக்காளி கெட்டிச் சட்னி:-

தேவையானவை:-
சின்ன வெங்காயம் - 100 கி
தக்காளி - 2
சிவப்பு மிளகாய்ப் பொடி - 2 டீஸ்பூன்
உப்பு - 1 டீஸ்பூன்
எண்ணெய் - 2 டீஸ்பூன் ( 10 மிலி)
கடுகு - 1 டீஸ்பூன்
உளுந்து - 1 டீஸ்பூன்

செய்முறை:-
சின்னவெங்காயத்தைத் தோலுரித்துக் கழுவி நைஸாக நறுக்கவும். தக்காளியைக் கழுவித் துண்டுகள் செய்யவும். ஒரு பானில் எண்ணெயைக் காயவைத்துக் கடுகு போட்டு வெடித்ததும் உளுந்து போட்டு சிவந்ததும் வெங்காயம் தக்காளி போட்டு 3 நிமிடங்களுக்கு நன்கு வதக்கவும். பின் சிவப்பு மிளகாய்ப் பொடி, உப்பு போட்டுக் கிளறவும். பானின் பக்கங்களில் எண்ணெய் பிரியும்வரை வதக்கி சூடாக இட்லி/தோசை/சப்பாத்தி/தயிர்சாதத்தோடு பரிமாறவும்.

PLANTAIN KARUVATTUP PORIYAL.வாழைக்காய் கருவாட்டுப் பொரியல்

PLANTAIN KARUVATTUP PORIYAL:-

NEEDED:-
PLANTAIN - 2 NOS
SALT - 1 TSP
OIL - 100 ML
TO GRIND:-
RED CHILLIES - 10 NOS.
SOMPH- 1 TSP
JEERA - 1/2 TSP
PEPPER - 1/4 TSP
COCONUT - 2 INCH PIECE
FRIED CHANNA DHAL - 1 TSP
SMALL ONION - 2 NOS
GARLIC 0 1 POD

METHOD:-
PEEL WASH AND CUT THE PLANTAINS IN A DIAGONAL SHAPE PIECES. BOIL FOR 3 MINUTES AND STRAIN THE WATER. FRY THE PLANTAIN PIECES IN OIL . KEEP ASIDE.
GROUND THE MASALA.  ADD THE MASALA TO THE PLANTAIN PIECES AND STIRR WELL WITH SALT. HEAT THE REMAINING OIL IN A PAN ADD THE MASALA COATED PLANTAINS AND COOK WELL TILL ALL THE MASALAS ABSORBED BY THE PLANTAIN PIECES. SERVE HOT WITH CURD RICE.

வாழைக்காய் கருவாட்டுப் பொரியல்:-

தேவையானவை:-
முற்றிய நாட்டு வாழைக்காய் - 2
உப்பு - 1 டீஸ்பூன்
எண்ணெய் - 100 மிலி
அரைக்க:-
வரமிளகாய் - 10
சோம்பு - 1 டீஸ்பூன்
சீரகம் - 1/2 டீஸ்பூன்
மிளகு - 1/4 டீஸ்பூன்
தேங்காய் - 2 இன்ச் துண்டு
பொட்டுக்கடலை - 1 டீஸ்பூன்
சின்ன வெங்காயம் - 2
பூண்டு - 1 பல்

செய்முறை:-
வாழைக்காய்களைத் தோலுரித்து 6 ஆக வகிர்ந்து கிராஸ் கிராஸாக நறுக்கிக் கொள்ளவும். தண்ணீரில் 3 நிமிடம் வேகவைத்து வடிகட்டவும். எண்ணெயைக் காயவைத்துப் பொரித்து வைக்கவும்.
மசாலா சாமான்களை அரைத்து வாழைக்காயோடு உப்பையும் சேர்த்து நன்கு பிரட்டவும். மிச்ச எண்ணெயைக் காயவைத்து வாழைக்காயை போட்டு மசாலா நன்கு சாரும் வரை வேகவைத்து தயிர்சாதத்தோடு பரிமாறவும்.

செவ்வாய், 8 ஜனவரி, 2013

BEANS SAMBAR. பீன்ஸ் சாம்பார்.

BEANS SAMBAR.

NEEDED:-
BEANS - 200 GMS
SMALL ONION - 6 NOS
TOMATO - 1 NO
BOILED THUVAR DHAL - 1 CUP
TAMARIND - 1 AMLA SIZE BALL
SALT - 1 TSP
RED CHILLI POWDER - 2 TSP
CORIANDER POWDER - 2 TSP
TURMERIC POWDER - 1 PINCH
OIL - 1 TSP
MUSTARD - 1 TSP
JEERA - 1/2 TSP
ASAFOETIDA  POWDER - 1 PINCH
RED CHILLIES - 2 NOS HALVED.
CURRY LEAVES - 2 ARK


METHOD:-
REMOVE THE NERVE AND CUT THE BEANS INTO  2 INCH PIECES.  PEEL AND CUT THE ONION ,& TOMATO. SOAK TAMARIND IN 3 CUPS OF WATER WITH SALT. SQEEZE THE PULP & ADD THE TURMERIC POWDER, RED CHILLI POWDER & CORIANDER POWDER.
.PRESSURE COOK THE THUVAR DHAL , BEANS,ONION, TOMATO WITH A PINCH OF ASAFOETIDA AND TURMERIC POWDER. AFTER ONE WHISTLE REMOVE THE COOKER FROM FIRE. AFTER COOLING OPEN THE LID AND ADD THE TAMARIND PULP. COOK FOR 7 MINUTES.
HEAT OIL IN A  IRON LADLE. ADD MUSTARD, JEERA, ASAFOETIDA POWDER, RED CHILLIES AND CURRY LEAVES. TOSS THAT IN THE BOILING SAMBAR. SERVE HOT WITH IDDLIES OR PLAIN RICE WITH PERPPER PAPPADS.


பீன்ஸ் சாம்பார்:-
தேவையானவை.:-
பீன்ஸ் - 200 கி
சின்ன வெங்காயம் - 6
தக்காளி - 1
வேகவைத்த துவரம் பருப்பு
புளி - 1 நெல்லிக்காய் அளவு
உப்பு - 1 டீஸ்பூன்
சிவப்பு மிளகாய்த்தூள் - 2 டீஸ்பூன்
மல்லித்தூள் - 2 டீஸ்பூன்
மஞ்சள் தூள் - 1 சிட்டிகை
எண்ணெய் - 1 டீஸ்பூன்
கடுகு - 1 டீஸ்பூன்
ஜீரகம் - 1/2 டீஸ்பூன்
பெருங்காயப் பொடி - 1 சிட்டிகை
வரமிளகாய் - 2 . இரண்டாகக் கிள்ளவும்.
கருவேப்பிலை - 1 இணுக்கு


செய்முறை:-
பீன்ஸ் நரம்பை எடுத்து 2 இஞ்ச் துண்டுகளாக வெட்டவும். சின்ன வெங்காயத்தைத்  தோலுரித்து நறுக்கவும். தக்காளியைத் துண்டுகளாக்கவும். புளியை 3 கப் தண்ணீரில் உப்புடன் ஊறப்போட்டுப் பிழிந்து சாறு எடுக்கவும். அதில் மஞ்சள் பொடி, மல்லிப்பொடி, மிளகாய்ப் பொடியைப் போடவும்.
ப்ரஷர் பானில் வேகவைத்த பருப்பு,, பீன்ஸ், சி. வெங்காயம், தக்காளி போட்டு ஒரு சிட்டிகை பெருங்காயம், மஞ்சள் பொடி போட்டு வேகவிடவும். ஒரு விசில் சத்தம் வந்ததும் இறக்கி ஆறியதும் திறந்து புளிக்கரைசலை ஊற்றவும். 7 நிமிடங்கள் கொதித்து வாசனை வந்ததும்  அடுப்பை அணைக்கவும்.
ஒரு இரும்புக் கரண்டியில் ஒரு ஸ்பூன் எண்ணெயைக் காயவைக்கவும். அதில் கடுகு போட்டு வெடித்ததும் சீரகம், பெருங்காயப் பொடி, வரமிளகாய், கருவேப்பிலை தாளித்து சாம்பாரில்  கொட்டி சூடாக இட்லியுடனோ , சாதம் மிளகு பப்படத்துடனோ பரிமாறவும்.

வெள்ளி, 4 ஜனவரி, 2013

CHUMMA KUZAMBU. சும்மா குழம்பு:

CHUMMA KUZAMBU:-
NEEDED:-
SMALL ONION - 10 NOS
TOMATO - 1 NO
GREEN CHILLIE- 1 NO SLIT OPEN
GARLIC- 2 PODS
TAMARIND - 1 AMLA SIZE BALL
SALT - 1 TSP
RED CHILLI POWDER - 2 TSP
CORIANDER POWDER - 2 TSP
TURMERIC POWDER - 1 PINCH
OIL - 1 TSP
MUSTARD - 1 TSP
FENUGREEK - 1/2 TSP
JEERA - 1/2 TSP
ASAFOETIDA  POWDER - 1 PINCH
CURRY LEAVES - 2 ARK

METHOD:-
PEEL AND CUT THE ONION ,GARLIC & TOMATO. SOAK TAMARIND IN 3 CUPS OF WATER WITH SALT. SQEEZE THE PULP & ADD THE TURMERIC POWDER, RED CHILLI POWDER & CORIANDER POWDER.

HEAT OIL IN A PAN. ADD MUSTARD. WHEN IT SPLUTTERS ADD FENUGREEK & JEERA. THEN ADD ASAFOETIDA POWDER, CURRY LEAVES, ONION, TOMATO, GREEN CHILLIE, AND GARLIC. SAUTE FOR 2 MINUTES. ADD THE TAMARIND MIX INTO IT. BRING TO BOILING POINT. BEFORE BOILING REMOVE FROM FIRE WITH FOAMS. SERVE HOT WITH HOT IDDLIES OR PLAIN RICE. ITS A CHETTINAD SPL KUZAMBU.

சும்மா குழம்பு:-
தேவையானவை:-
சின்ன வெங்காயம் - 10
தக்காளி - 1
பச்சை மிளகாய் - 1 இரண்டாக வகிரவும்.
பூண்டு - 2 பல்
புளி - 1 நெல்லிக்காய் அளவு
உப்பு - 1 டீஸ்பூன்
சிவப்பு மிளகாய்த்தூள் - 2 டீஸ்பூன்
மல்லித்தூள் - 2 டீஸ்பூன்
மஞ்சள் தூள் - 1 சிட்டிகை
எண்ணெய் - 1 டீஸ்பூன்
கடுகு - 1 டீஸ்பூன்
வெந்தயம் - 1/2 டீஸ்பூன்
ஜீரகம் - 1/2 டீஸ்பூன்
பெருங்காயப் பொடி - 1 சிட்டிகை
கருவேப்பிலை - 1 இணுக்கு

செய்முறை:-
சின்ன வெங்காயம் வெள்ளைப் பூண்டைத் தோலுரித்து நறுக்கவும். தக்காளியைத் துண்டுகளாக்கவும். புளியை 3 கப் தண்ணீரில் உப்புடன் ஊறப்போட்டுப் பிழிந்து சாறு எடுக்கவும். அதில் மஞ்சள் பொடி, மல்லிப்பொடி, மிளகாய்ப் பொடியைப் போடவும்.

ஒரு பானில் எண்ணெயைக் காயவைத்துக் கடுகு போட்டு வெடித்தவுடன் சோம்பு, வெந்தயம் போடவும். அதில் பெருங்காயப் பொடி, கருவேப்பிலை, வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய், பூண்டு போடவும். 2 நிமிடம் வதக்கி புளிக்கரைசலை ஊற்றவும். பொங்கி நுரைத்து வரும்போது இறக்கி சூடாக இட்லி அல்லது சாதத்தோடு பரிமாறவும். இது செட்டிநாட்டு ஸ்பெஷல் குழம்பு.

வியாழன், 3 ஜனவரி, 2013

TOMATO SOUP. தக்காளி சூப்

TOMATO SOUP:-
NEEDED:-
TOMATOS - 3 NOS
BIG ONION - 1 NO

CLOVE  -1
CINNAMON - 1 INCH PIECE
KALPASIPPUU - 1 INCH PIECE
CARDAMOM - 1 NO
KNOT THEM IN A MUSLIN CLOTH

TO MAKE  WHITE SAUCE:-
BUTTER - 1 TBLSPN
MAIDA - 1 TBLSPN
MILK - 1 CUP
RECIPE:-
WASH AND CUT TOMATOS AND ONION. POUR 2 CUPS WATER AND KEEP THE MUSLIN  CLOTH. PRESSURE COOK FOR TWO WHISTLES. REMOVE THE MUSLIN CLOTH. AFTER COOLING GRIND AND STRAIN IT .
MELT BUTTER IN A FRYING PAN. ADD MAIDA STIRR FOR 2 MINUTES. POUR THE WARM MILK . STIR WELL . BRING TO BOIL AND REMOVE FROM FIRE.
HEAT THE TOMATO PUREE. IN A SERVING BOWL POUR HALF CUP PUREE AND HALF CUP WHITE SAUCE. ADD SOUR CREAM IF DESIRED OR SERVE HOT WITH CHOPSTICKS.



தக்காளி சூப்:-
தேவையானவை:-
தக்காளி - 3
பெரிய வெங்காயம் - 1

கிராம்பு - 1
பட்டை - 1 இன்ச் துண்டு
கல்பாசிப்பூ  - 1 இன்ச் துண்டு
ஏலக்காய் - 1
இவை அனைத்தையும் ஒரு மஸ்லின் துணியில் பண்டிலாகக் கட்டவும்.

வெள்ளை சாஸ் செய்ய்:-
வெண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
மைதா - 1 டேபிள் ஸ்பூன்
பால் - 1 கப்
செய்முறை:-
தக்காளி வெங்காயத்தைக் கழுவி நறுக்கவும். 2 கப் தண்ணீருடன் மஸ்லின் முடிச்சையும் போடவும். பிரஷர் குக்கரில் இரண்டு விசில் வரும்வரை வைக்கவும். ஆறியவுடன் மஸ்லின் முடிச்சை எடுத்துவிட்டு மிக்ஸியில் அரைத்து வடிகட்டவும்.
வெண்ணெயை இன்னொரு பானில் உருக்கி அதில் மைதாவைப் போட்டு இரண்டு நிமிடம் கிண்டவும். பின் பாலை ஊற்றி கொதித்ததும் இறக்கவும்.
தக்காளிச் சாறை சுடவைக்கவும். ஒரு கப்பில் அரை கப் தக்காளிச் சாறு, அரை கப் வெள்ளை சாஸ் ஊற்றவும். விருப்பமிருந்தால் க்ரீம் சேர்க்கவும். அல்லது சூடாக சாப்ஸ்டிக்குடன் பரிமாறவும்.
Related Posts Plugin for WordPress, Blogger...