எனது பத்தொன்பது நூல்கள்

எனது பத்தொன்பது நூல்கள்
எனது பத்தொன்பது நூல்கள்

செவ்வாய், 28 ஜூன், 2011

CORRIANDER COCONUT THUVAIYAL. கொத்துமல்லி தேங்காய்த்துவையல்.

CORRIANDER COCONUT CHUTNEY:-

NEEDED:-

CORRIANDER - 1 BUNCH WASHED AND CLEANED.

GREEN CHILLIES - 4 NOS.

GRATED COCONUT - 1 CUP

TAMARIND - 2 PODS.

SMALL ONION - 4 NOS.

SALT - 1/4 TSP

ASAFOETIDA - 1 PINCH.


METHOD :-

WASH AND CHOP ONION AND CORRIANDER. MIX ALL INGREDIENTS TOGETHER AND GRIND COARSLY. SERVE IT WITH IDDLIES., DOSAS ., CHAPPATHIS AND WITH CURD RICE TOO. THE CORRIANDER HAS RICH IRON CONTEND.


கொத்துமல்லி தேங்காய்த்துவையல்:-

தேவையானவை:-

கொத்துமல்லி - 1 கட்டு கழுவி சுத்தம் செய்யவும்.

பச்சை மிளகாய் - 4

துருவிய தேங்காய்- 1 கப்

புளி - 2 சுளை

சின்ன வெங்காயம் - 4

உப்பு - 1/4 டீஸ்பூன்

பெருங்காயம் - 1 சிட்டிகை.


செய்முறை:-

சின்ன வெங்காயத்தை உரித்து ., கொத்துமல்லியையும் நன்கு கழுவி நறுக்கவும். இதுடன் எல்லா சாமான்களையும் போட்டு மிக்ஸியில் கொரகொரப்பாக அரைக்கவும். சூடான இட்லி., தோசை., சப்பாத்தி அல்லது தயிர் சாதத்தோடு பரிமாறவும். நல்ல இரும்புச்சத்துள்ள ஹெல்த்தி துவையல் இது.

திங்கள், 20 ஜூன், 2011

TAMARIND RICE. புளிசாதம்.

TAMARIND RICE:-

PULIKKAAYCHAL - 1 CUP (60TH RECEIPE - IN 11.2010)

COOKED RICE - 2 CUPS

TIL OIL - 1 TABLESPN

MUSTARD - 1 TSP

FRIED GROUNDNUT - 1 HANDFUL.(DE SKINED)

CURRY LEAVES - 1 ARK

TURMERIC POWDER - 1 PINCH

FOR POWDER:-

FENUGREEK - 1/4 TSP

ASAFOETIDA - 1/4 INCH

PEPPER CORN - 10 NOS.( FRY THE 3 IN A DRY PAN AND POWDER THEM. )


METHOD:-

PLACE THE HOT RICE IN A LARGE BOWL. ADD TURMERIC POWDER., CURRY LEAVES., AND TIL OIL. ADD THE SEASONED MUSTARD AND GROUNDNUT. ADD THE POWDERED MASALAS WITH PULIKKAAYCHAL. STIRR WELL AND SERVE IT WITH PAPADS AND COCONUT THUVAIYAL.


புளிசாதம்:-

புளிக்காய்ச்சல் - 1 கப்( 60 வது ரெசிபி -- 11.2010)

சாதம் - 2 கப்

நல்லெண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்

கடுகு - 1 டீஸ்பூன்

வறுத்த வேர்க்கடலை - 1 கைப்பிடி ( தோல் எடுத்தது)

கருவேப்பிலை - 1 இணுக்கு

மஞ்சள் பொடி - 1 சிட்டிகை

பொடிக்க:-

வெந்தயம் - 1/4 டீஸ்பூன்

பெருங்காயம் - 1/4 இன்ச்

மிளகு - 10 மூன்றையும் வெறும் வாணலியில் வறுத்து பொடி செய்யவும்.


செய்முறை:-

சூடான சாதத்தை ஒரு பெரிய சில்வர் பேசினில் போடவும். அதில் மஞ்சள் பொடி., கருவேப்பிலை., நல்லெண்ணெய் ஊற்றவும். கடுகை தாளித்து சேர்க்கவும். வேர்க்கடலையை சேர்க்கவும். பொடித்த பொடிகளையும்., புளிக்காய்ச்சலையும் சேர்த்து நன்கு கிளறி சூடாக அப்பளம்., தேங்காய்த்துவையலோடு பரிமாறவும்.

வெள்ளி, 17 ஜூன், 2011

MUTTON LIVER SOUP. மட்டன் ஈரல் சூப்.

MUTTON LIVER SOUP:-

NEEDED :-

LIVER AND FAT - 150 GRAMS.

TURMERIC POWDER - 1 PINCH

SALT - 1/2 TSP

TENDER CURRY LEAVES - 2 ARKS

TO GRIND:-

SMALL ONION - 10 NOS.

JEERA - 1 TSP

POPPY SEEDS - 1TSP


METHOD :-

WASH AND PLACE THE LIVER AND FAT IN A PRESSURE PAN. ADD TURMERIC POWDER . GROUND ALL THE INGREDIENTS AND ADD THIS TO THE LIVER IN PAN . POUR 3 CUPS OF WATER. COOK FOR A WHISTLE OFF THE GAS . OPEN THE LID ADD SALT AND CURRY LEAVES HEAT FOR ONE MINUTE AND SERVE HOT . ITS GOOD FOR LIVER.


மட்டன் ஈரல் சூப் :-

தேவையானவை:-

மட்டன் ஈரல் + கொழுப்பு - 150 கிராம்

மஞ்சள் பொடி - 1 சிட்டிகை

உப்பு - 1/2 டீஸ்பூன்

கொழுந்து கருவேப்பிலை - 2 இணுக்கு

அரைக்க :-

சின்ன வெங்காயம் - 10

ஜீரகம் - 1 டீஸ்பூன்

கசகசா - 1 டீஸ்பூன்


செய்முறை:-

மட்டன் ஈரல்., கொழுப்பை ப்ரஷர் பானில் கழுவி வைக்கவும். அதில் மஞ்சள் பொடி போடவும். மசாலாவை அரைத்து சேர்க்கவும். 3 கப் நீர் ஊற்றவும். ஒரு விசில் வைத்து இறக்கவும். திறந்து உப்பு சேர்த்து., கருவேப்பிலை சேர்த்து ஒரு நிமிடம் கொதிக்க வைக்கவும். இறக்கி சூடாகப் பரிமாறவும்.

ஞாயிறு, 12 ஜூன், 2011

ROTI WITH FIELD BEANS MASALA. ரோட்டி+ மொச்சை மசாலா.

ROTI:-
NEEDED:-

ATTA - 1 CUP

WATER - NEEDED


METHOD:-

POUR NEEDED AMOUNT OF WATER IN ATTA AND MAKE A SOFT DOUGH. KEEP COVERED WITH WET CLOTH FOR ONE HOUR AND ROLL THEM IN SQUARES AND COOK THEM IN A TAWA WITHOUT OIL.


ரோட்டி:-

தேவையானவை:-

ஆட்டா ( கோதுமை மாவு ) - 1 கப்

தண்ணீர் - தேவையான அளவு


செய்முறை :-

ஆட்டாவில் தேவையான தண்ணீர் ஊற்றி நன்கு மென்மையாகும் வரை பிசைந்து ஈரத்துணி போட்டு மூடி ஒருமணி நேரம் வைக்கவும். சதுர ரொட்டிகளாகத் திரட்டி எண்ணெய் இல்லாமல் தவாவில் சுட்டு எடுக்கவும்.


FIELD BEANS MASALA:-

NEEDED:-

FIELD BEANS - 1/2 CUPS (SOAKED FOR 12 HOURS AND COOKED)

ONION - 1 CHOPPED.

TOMATO - 1 CHOPPED

GINGER GARLIC PASTE - 2 TSP

CHILLI POWDER - 1 TSP

CORRIANDER POWDER - 1 TSP

SOMPH POWDER - 1/2 TSP

TURMERIC POWDER - 1/4 TSP

SALT - 1/2 TSP

OIL - 2 TSP

CLOVE -1 NO

CINNAMON - 1 INCH PIECE

CARDAMOM - 1 NO

BAY LEAVES - 1 SMALL PIECE.


METHOD:-

HEAT OIL IN A TAWA ADD CLOVE., CINNAMON., CARDAMOM., BAYLEAVES AND ADD CHOPPED ONIONS. SAUTE FOR 2 MINUTES THEN ADD GINGERGARLIC PASTE. SAUTE TILL OIL SEPERAATES AT THE END AND ADD TOMATOES., CHILLIPWDR., CORRIANDER PWDR., TURMERIC POWDER., SOMPH PWDR AND SALT. ADD THE COOKED FIELD BEANS STIRR WELL AND COOK FOR 10 MINUTES IN A SLOW FIRE. SERVE HOT WITH ROTIS. ITS GOOD AT THE TIME OF TRAVELS.


மொச்சை மசாலா:-

தேவையானவை:-

மொச்சை - 1 கப் (12 மணி நேரம் ஊறவைத்து வேகவைத்தது.)

பெரிய வெங்காயம் - 1 பொடியாக நறுக்கவும்

தக்காளி - 1 பொடியாக நறுக்கவும்.

இஞ்சி பூண்டு பேஸ்ட் - 2 டீஸ்பூன்

மிளகாய்ப் பொடி - 1 டீஸ்பூன்

மல்லிப்பொடி _ 1 டீஸ்பூன்

சோம்புப்பொடி - 1 /2 டீஸ்பூன்

மஞ்சள் பொடி - 1/4 டீஸ்பூன்

உப்பு - 1/2 டீஸ்பூன்

எண்ணெய் - 2 டீஸ்பூன்

கிராம்பு - 1

பட்டை - 1 இன்ச் துண்டு

ஏலக்காய் - 1

இலை - 1 இஞ்ச் துண்டு


செய்முறை:-

பானில் எண்ணெயைக் காயவைத்து கிராம்பு., பட்டை., ஏலக்காய்., இலை போட்டு வெங்காயம் போட்டு வதக்கவும். 2 நிமிடத்துக்குப்பின் இஞ்சிபூண்டு பேஸ்ட் போடவும். பின் தக்காளி., மிளகாய்ப் பொடி., மல்லிப்பொடி., சோம்புப் பொடி., மஞ்சள் பொடி., உப்பு போட்டு வேகவைத்த மொச்சையை சேர்க்கவும். 10 நிமிடம் சிம்மில் வைத்து நன்கு கிளறி வேகவைத்தபின் ரோட்டிகளுடன் சூடாக பரிமாறவும். இது லஞ்ச் பாக்ஸ் மற்றும் பயணத்துக்கு ஏற்ற உணவு.

Related Posts Plugin for WordPress, Blogger...