எனது பத்தொன்பது நூல்கள்

எனது பத்தொன்பது நூல்கள்
எனது பத்தொன்பது நூல்கள்

செவ்வாய், 27 மே, 2014

BEETROOT SOUP, பீட்ரூட் சூப், குங்குமம் தோழியில்.

BEETROOT SOUP:-
NEEDED:-
BEETROOT - 1 NO ( APP 200 GM) PEELED, WASHED & DICED.
BIG ONION - 1 NO. FINELY CHOPPED.
BIG TOMATO - 1 NO CHOPPED
BOILED THUVAR DHAL - 1 TBLSPN
OIL - 2 TSP ( OR GHEE OR DALDA)
ORID DHAL - 1 TSP
JEERA - 1/2 TSP
FENNEL - 1/2 TSP
PEPPERCORNS - 10 NOS
GREEN CHILLY - 1 SLIT OPEN
KALPASIPPOO - 1 INCH
BAY LEAF - 1 INCH
CINNAMON - 1/2 INCH PIECE
CARDAMOM - 1 NO
CURRY LEAVES - 1 ARK.
SALT - 1 TSP
FOR ADDITIONAL TASTE - 1 TSP MILK AND SOUP POWDER 1/2 TSP.

METHOD :-
HEAT OIL IN A PRESSURE PAN ADD ORID DHAL. WHEN IT BECOMES BROWN ADD JEERA, FENNEL, PEPPERCORN, CINNAMON. CARDAMOM, BAY LEAF, KALPASIPPOO. THEN ADD CURRY LEAVES AND GREEN CHILLY. SAUTE FOR A MINUTE ADD ONION, TOMATO AND BEETROOTS. THEN ADD SALT AND SMASHED THUVAR DHAL ALONG WITH 3 CUPS OF WATER. PRESSURE COOK FOR ONE WHISTLE. REMOVE FROM FIRE ADD MILK AND SOUP POWDER.SERVE HOT WITH SOUPSTICKS.

பீட்ரூட் சூப்:-
தேவையானவை.:-
பீட்ரூட் - 1 தோலுரித்து கழுவி துண்டுகளாக்கவும்.
பெரிய வெங்காயம் - 1 குச்சியாக நறுக்கவும்.
தக்காளி - 1 பொடியாக நறுக்கவும்.
வேகவைத்த துவரம்பருப்பு - 1 டேபிள்ஸ்பூன்
எண்ணெய் - 2 டீஸ்பூன் ( நெய் அல்லது டால்டா)
உளுந்து - 1 டீஸ்பூன்
ஜீரகம் - 1/2 டீஸ்பூன்
சோம்பு - 1/2 டீஸ்பூன்
மிளகு - 10
கல்பாசிப்பூ - 1 இன்ச்
பட்டை - 1/2 இன்ச்
இலை - 1 இன்ச்
ஏலக்காய் - 1
பச்சைமிளகாய் - 1 இரண்டாக வகிரவும்.
கருவேப்பிலை - 1 இணுக்கு
உப்பு - 1 டீஸ்பூன்
மேலும் சுவைகூட்ட - 1 டீஸ்பூன் பால்+ சூப் பவுடர் 1/2 டீஸ்பூன்

செய்முறை :-
ஒரு ப்ரஷர் பானில் எண்ணெயை சூடாக்கி உளுந்து போடவும். சிவந்ததும் ஜீரகம், சோம்பு, மிளகு, பட்டை, கல்பாசிப்பூ, ஏலக்காய், இலை போடவும். பின் கருவேப்பிலை, பச்சைமிளகாய் போட்டு வெங்காயம், தக்காளி, பீட்ரூட் போட்டு வதக்கவும். உப்பும் மசித்த துவரம்பருப்பும் சேர்த்து 3 கப் தண்ணீர் ஊற்றவும். மூடி வெயிட் போட்டு ஒரு விசில் வைத்து அடுப்பை அணைக்கவும். ஆறியதும் திறந்து பாலும் சூப் பவுடரும் சேர்த்து சூப் ஸ்டிக்குகளுடன் பரிமாறவும். சாதத்திலும் ஊற்றி சாப்பிடலாம். குழந்தைகள், பெரியவர்கள், உடல்நலமற்றவர்களுக்கு நல்லது.

குறிப்பு :- கல்பாக்கத்தில் இருக்கும் என் தோழி சுதா பீட்ரூட்டை எந்த ஃபார்மில் செய்து கொடுத்தாலும் சாப்பிடுவேன் என்று சொல்வாள். இதுவும் காரட்டும் ரத்தத்திற்கு நல்லது.

திங்கள், 19 மே, 2014

AUBERGINE - POTATO AVIAL கத்திரிக்காய் உருளைக்கிழங்கு அவியல், குங்குமம் தோழியில்.

AUBERGINE - POTATO AVIAL..:-
NEEDED :-
POTATO LARGE - 1 NO
BRINJAL./ ( EGG PLANT ..)/( AUBERGINE) - 3 NOS.
BIG ONION - 1 NO
TOMATO - 1 NO
CURRY LEAVES - 1 ARK

TO GRIND :-
GREEN CHILLIES - 4 NOS
CRATED COCONUT - 1 CUP
FRIED CHANNA DHAL - 1 TBLSPN.
SOMPH - 1 TSP
JEERA - /2 TSP
PEPPERCORNS - 5 NOS.
SMALL ONION - 2 NOS
GARLIC - 2 PODS

SALT - 1 TSP
OIL - 3 TSP FOR FRYING.

METHOD:-
GRIND ALL THE INGREDIENTS. WASH PEEL AND DICE ONION., TOMATO., AUBERGINE AND POTATO. HEAT OIL IN A PAN . FRY ALL THE VEGETABLES AND CURRY LEAVES. SAUTE WELL ADD THE GROUND MASLA AND SAUTE FOR 1 MINUTE . ADD SALT AND 4 CUPS OF WATER. BRING TO BOIL AND SIMMER FOR 10 MINUTES . COOK TILL VEGETABLES ARE TENDER AND SERVE HOT WITH IDDLIES OR DOSAS..

ITS A CHETTINADU SPECIAL AND SERVED IT WITH MORNING TIFFINS.

கத்திரிக்காய் உருளைக்கிழங்கு அவியல்:-
தேவையானவை:-
பெரிய உருளைக்கிழங்கு - 1
கத்திரிக்காய் - 3
பெரிய வெங்காயம் - 1
தக்காளி - 1
கருவேப்பிலை - 1 இணுக்கு

அரைக்க:-
பச்சை மிளகாய் - 4
தேங்காய் துருவியது - 1 கப்
பொட்டுக்கடலை - 1 டேபிள்ஸ்பூன்
சோம்பு - 1 டீஸ்பூன்
சீரகம் - 1/2 டீஸ்பூன்
மிளகு - 5
சின்ன வெங்காயம் - 2
பூண்டு - 2 பல்

உப்பு - 1 டீஸ்பூன்
எண்ணெய் - 3 டீஸ்பூன்.

செய்முறை:-
அரைக்கக் கொடுத்துள்ளவைகளை நன்கு மைய அரைக்கவும். காய்கறிகளைத் தோல் சீவி சதுரங்களாக நறுக்கவும். பானில் எண்ணெயைக் காயவைத்து வெங்காயம்., தக்காளி., உருளை., கத்திரியை வதக்கவும் . கருவேப்பி்லை சேர்க்கவும். அரைத்த கலவையை ஊற்றி 1 நிமிடம் வதக்கவும். உப்பு சேர்க்கவும். 4 கப் தண்ணீர் ஊற்றி கொதித்தவுடன் 10 நிமிடம் சிம்மில் வைக்கவும். காய்கள் மென்மையாகும் வரை வேகவைத்து சூடாக இட்லியுடன்., தோசையுடன் பரிமாறவும்..

இது செட்டிநாட்டில் காலைப் பலகாரத்துக்கு தொட்டுக்கொள்ள செய்யப்படும் குருமா வகையைப் போன்றது.

திங்கள், 12 மே, 2014

AUBERGINE KOSAMALLI. கத்திரிக்காய் கோஸ்மல்லி , குங்குமம் தோழியில்.

AUBERGINE KOSAMALLI. கத்திரிக்காய் கோஸ்மல்லி

NEEDED:-
AUBERGINE - 250 GMS
POTATO - 1 NO BOILED ( OPTIONAL)
BIG ONION - 1 N0. CHOPPED
TOMATO - 1 NO. CHOPPED
GREEN CHILLIES - 6 NOS. SLIT OPEN
CURRY LEAVES - 1 ARK
TAMARIND - 1/2 LEMON SIZE
SALT - 1 TSP OIL - 3 TSP
MUSTARD - 1 TSP
ORID DHAL - 1 TSP
ASAFOETIDA POWDER - 1 PINCH

METHOD:-

WASH AND CUT AUBERGINES.PRESSURE COOK WITH ENOUGH WATER. AFTER COOLING REMOVE SKIN AND SMASH IT. SMASH THE POTATO TOO.SOAK TAMARIND IN 3 CUPS OF WATER AND SQUEEZE THE PULP OUT IT. HEAT OIL IN A PAN ADD MUSTARD. WHEN IT SPLUTTERS ADD ORID DHAL. WHEN IT BECOMES BROWN ADD ASAFOETIDA POWDER. THEN ADD GREEN CHILLIES, ONION, TOMATO AND SAUTE WELL. POUR THE TAMARIND WATER WITH SALT. ADD THE SMASHED AUBERGINE AND POTATO. BRING TO BOIL AND SIMMER FOR 5 MINUTES SERVE HOT WITH IDDLIES AND DOSAS AND THALICHA IDYAPPAMS.

 NOTE:- BIG AUBERGINES CAN BE BARBACUED AND USED INSTEAD OF PRESSURE COOKING.

கத்திரிக்காய் கோஸ்மல்லி:-

தேவையானவை:-
கத்திரிக்காய் - 250 கி
உருளைக்கிழங்கு - 1 வேகவைத்தது ( விரும்பினால்)
பெரிய வெங்காயம் - 1 பொடியாக அரியவும்
தக்காளி - 1 பொடியாக அரியவும்.
பச்சை மிளகாய் - 6 இரண்டாக வகிரவும்.
கருவேப்பிலை - 1 இணுக்கு
புளி - 1/2 எலுமிச்சை அளவு
உப்பு - 1 டீஸ்பூன்
எண்ணெய் - 3 டீஸ்பூன்
கடுகு - 1 டீஸ்பூன்
உளுந்து - 1 டீஸ்பூன்
பெருங்காயம் - 1 சிட்டிகை

செய்முறை:-
கத்திரிக்காய்களைக் கழுவி நான்காக நறுக்கவும். பிரஷர் குக்கரில் போதுமான தண்ணீர் சேர்த்து வேகவிடவும். அடுப்பிலிருந்து இறக்கி ஆறியதும் தோலுரித்து மசிக்கவும். உருளைக்கிழங்கையும் மசிக்கவும். புளியை 3 கப் தண்ணீரில் ஊறவைத்து சாறு எடுக்கவும். ஒரு கடாயில் எண்ணெயை சூடுபடுத்தி கடுகைப் போடவும். கடுகு வெடித்ததும் உளுந்தைப் போட்டு சிவந்ததும் பெருங்காயப் பொடியைப் போடவும். பின் பச்சை மிளகாய், பெரியவெங்காயம், தக்காளி போட்டு நன்கு வதக்கவும். அதில் புளித்தண்ணீரை உப்புடன் சேர்க்கவும். மசித்த கத்திரிக்காயையும், உருளையையும் சேர்த்துக் கொதிக்க விடவும். 5 நிமிடம் சிம்மில் வைத்து அடுப்பிலிருந்து இறக்கி சூடாக இட்லி, தோசை, தாளிச்ச இடியாப்பத்துடன் பரிமாறவும்.

 குறிப்பு:- பிரஷர் குக்கரில் வேகவைப்பதற்குப் பதிலாக பெரிய கத்திரிக்காய்களை முழுதாக சுட்டும் பயன்படுத்தலாம்.

திங்கள், 5 மே, 2014

BEANS ILANKUZHAMBU. பீன்ஸ் இளங்குழம்பு. குங்குமம் தோழியில்.

BEANS ILANKUZHAMBU:-

NEEDED:-
BEANS - 200 GMS
BIG ONION - 1 NO.
TOMATO - 1 NO
GREEN CHILLY - 1 NO.
BOILED THUVAR DHAL - 1 CUP
TAMARIND - 1 AMLA SIZE BALL
SALT - 1 TSP
RED CHILLI POWDER - 2 TSP
CORIANDER POWDER - 2 TSP
TURMERIC POWDER - 1 PINCH
OIL - 1 TSP
MUSTARD - 1 TSP
JEERA - 1/2 TSP
ASAFOETIDA  POWDER - 1 PINCH
RED CHILLIES - 2 NOS HALVED.
CURRY LEAVES - 2 ARK
CORIANDER LEAVES - 1 BUNCH


METHOD:-
REMOVE THE NERVE AND CUT THE BEANS INTO  2 INCH PIECES.  PEEL AND CUT THE ONION ,& TOMATO INTO THIN SLICES. SOAK TAMARIND IN 3 CUPS OF WATER WITH SALT. SQUEEZE THE PULP & ADD THE TURMERIC POWDER, RED CHILLI POWDER & CORIANDER POWDER.

.PRESSURE COOK THE THUVAR DHAL , BEANS,ONION, TOMATO , GREEN CHILLY WITH A PINCH OF ASAFOETIDA AND TURMERIC POWDER. AFTER ONE WHISTLE REMOVE THE COOKER FROM FIRE. AFTER COOLING OPEN THE LID AND ADD THE TAMARIND PULP. COOK FOR 7 MINUTES.ADD WASHED AND CHOPPED CORIANDER LEAVES.

HEAT OIL IN A  IRON LADLE. ADD MUSTARD, JEERA, ASAFOETIDA POWDER, RED CHILLIES AND CURRY LEAVES. TOSS THAT IN THE BOILING SAMBAR. SERVE HOT WITH IDDLIES OR PLAIN RICE WITH PERPPER PAPPADS.

பீன்ஸ் இளங்குழம்பு
பீன்ஸ் இளங்குழம்பு :-
தேவையானவை.:-
பீன்ஸ் - 200 கி
பெரிய வெங்காயம் - 1
தக்காளி - 1
பச்சை மிளகாய் - 2
வேகவைத்த துவரம் பருப்பு
புளி - 1 நெல்லிக்காய் அளவு
உப்பு - 1 டீஸ்பூன்
சிவப்பு மிளகாய்த்தூள் - 2 டீஸ்பூன்
மல்லித்தூள் - 2 டீஸ்பூன்
மஞ்சள் தூள் - 1 சிட்டிகை
எண்ணெய் - 1 டீஸ்பூன்
கடுகு - 1 டீஸ்பூன்
ஜீரகம் - 1/2 டீஸ்பூன்
பெருங்காயப் பொடி - 1 சிட்டிகை
வரமிளகாய் - 2 . இரண்டாகக் கிள்ளவும்.
கருவேப்பிலை - 1 இணுக்கு.
கொத்துமல்லி - 1/2 கட்டு.


செய்முறை:-
பீன்ஸ் நரம்பை எடுத்து 2 இஞ்ச் துண்டுகளாக வெட்டவும். பெரிய  வெங்காயத்தைத்  தோலுரித்து நீளமாக நறுக்கவும். தக்காளியைத் துண்டுகளாக்கவும். புளியை 3 கப் தண்ணீரில் உப்புடன் ஊறப்போட்டுப் பிழிந்து சாறு எடுக்கவும். அதில் மஞ்சள் பொடி, மல்லிப்பொடி, மிளகாய்ப் பொடியைப் போடவும்.

ப்ரஷர் பானில் வேகவைத்த பருப்பு,, பீன்ஸ்,  வெங்காயம், தக்காளி , கீறிய பச்சை மிளகாய் போட்டு ஒரு சிட்டிகை பெருங்காயம், மஞ்சள் பொடி போட்டு வேகவிடவும். ஒரு விசில் சத்தம் வந்ததும் இறக்கி ஆறியதும் திறந்து புளிக்கரைசலை ஊற்றவும். 7 நிமிடங்கள் கொதித்து வாசனை வந்ததும்  அடுப்பை அணைக்கவும். ஆய்ந்து கழுவிப் பொடியாக நறுக்கிய கொத்துமல்லியைச் சேர்க்கவும்.

ஒரு இரும்புக் கரண்டியில் ஒரு ஸ்பூன் எண்ணெயைக் காயவைக்கவும். அதில் கடுகு போட்டு வெடித்ததும் சீரகம், பெருங்காயப் பொடி, வரமிளகாய், கருவேப்பிலை தாளித்து சாம்பாரில்  கொட்டி சூடாக இட்லியுடனோ , சாதம் மிளகு பப்படத்துடனோ பரிமாறவும்.

VENGKAYAK KOSE. வெங்காயக் கோஸ். குங்குமம் தோழியில்.

VENKAYAK KOSE..:-
NEEDED:-
BIG ONION - 2 NOS
TOMATO - 1 NO
SMALL POTATO - 1 NO

FOR GRINDING :-
RED CHILLIES - 6 NOS.
CRATED COCONUT - 1 CUP
SOMPH - 1 TSP
JEERA - 1 TSP
PEPPER - 5 NOS.
FRIED GRAM - 1 TBLSPN
GARLIC - 2 PODS
SMALL ONION - 2 NOS.

OIL - 1/2 TBLSPN.
MUSTARD - 1 TSP
URAD DHAL - 1 TSP
CLOVE - 1 NO
CURRY LEAVES - 1 ARK
SALT - 1 TSP.

METHOD :-

WASH AND PEEL AND CUT ONION ., TOMATO AND POTATO INTO THIN STICKS..
GRIND ALL THE INGREDIENTS.

HEAT OIL IN A KADAI ADD MUSTARD WHEN IT SPLUTTERS ADD URAD DHAL. WHEN IT BECOMES BROWN ADD CLOVE AND CURRY LEAVES..

ADD ONIONS., TOMATO., AND POTATO AND SAUTE WELL.
ADD THE MASALA AND STIRR WELL..

WHEN OIL SEPARATES AT THE SIDE ADD 3 TUMBLERS OF WATER AND SALT.
BRING TO BOIL AND COOK FOR 7 MIN .

REMOVE FROM FIRE SERVE OT WITH IDDLIES OR DOSAS.
ITS A CHETTINADU SPL SIDE DISH FOR TIFFINS.

வெங்காயக் கோஸ்:-

தேவையானவை :-
பெரிய வெங்காயம் - 2
தக்காளி - 1
சிறிய உருளைக்கிழங்கு - 1

அரைக்க:-
வரமிளகாய் - 6.
துருவிய தேங்காய் - 1 கப்
சோம்பு - 1 டீஸ்பூன்
சீரகம் - 1 டீஸ்பூன்
மிளகு - 5
பொட்டுக்கடலை - 1 டேபிள்ஸ்பூன்
பூண்டு - 2 பல்
சின்ன வெங்காயம் - 2

எண்ணெய் - 1/2 டேபிள்ஸ்பூன்
கடுகு - 1 டீஸ்பூன்
உளுந்து - 1 டீஸ்பூன்
கிராம்பு - 2
கருவேப்பிலை - 1 இணுக்கு
உப்பு - 1 டீஸ்பூன்

செய்முறை :-
பெரிய வெங்காயம் ., தக்காளி., உருளை மூன்றையும் தோல் சீவி குச்சி குச்சியாக நறுக்கவும்.

அரைக்கக் கொடுத்துள்ளவற்றை அரைக்கவும்.

கடாயில் எண்ணெயைக் காய வைத்து கடுகு போட்டு வெடித்ததும்., உளுந்து போட்டு சிவந்ததும் கிராம்பு போட்டு கருவேப்பிலை போடவும்.
வெங்காயம் ., தக்காளி., உருளை போட்டு நன்கு வதக்கவும்.
அரைத்த மசாலாவை சேர்த்து நன்கு வதக்கவும்.

பக்கங்களில் எண்ணெய் பிரிந்து வரும்போது 3 டம்ளர் தண்ணீர் சேர்க்கவும்.
7 முதல் 10 நிமிடங்கள் வரை கொதிக்கவிட்டு வேகவிடவும்.

சூடாக இட்லி தோசையுடன் பரிமாறவும்.

இது செட்டிநாட்டின் ஸ்பெஷல்.இட்லி தோசை போன்ற
பலகாரங்களுக்குத் தொட்டுக் கொள்வது..

VENGKAAYAM THAKKALITH THIRAKKAL. வெங்காயம் தக்காளித் திறக்கல். குங்குமம் தோழியில்.

VENGKAAYAM THAKKALITH THIRAKKAL..:-
NEEDED :-
BIG ONION - 2 NOS (FINELY CHOPPED.)
TOMATOES - 4 NOS ( FINELY CHOPPED)
RED CHILLI POWDER - 2 TSP.
SALT - 1 TSP.
OIL - 1 TBL SPN
MUSTARD - 1 TSP
URAD DHAL - TSP.
CURRY LEAVES - 1 ARK.

METHOD :-
HEAT OIL IN A PAN . ADD MUSTARD WHEN IT SPLUTTERS ADD URAD DHAL.
WHEN IT BROWNS ADD ONION ., TOMATO.., AND CURRY LEAVES...
SAUTE WELL.
ADD RED CHILLI POWDER AND SALT .
SAUTE WELL AND ADD ONE CUP WATER .
BRING TO BOIL THEN SIMMER FOR 10 MIN.
REMOVE FROM FIRE AND SERVE HOT WITH VELLAIP PANIYAARAM., CHAPATHI ., IDDLIE OR DOSAI. OR UPMAS..

வெங்காயம் தக்காளித் திறக்கல்:-
தேவையானவை :-
பெரிய வெங்காயம் - 2 (பொடியாக நறுக்கியது).
தக்காளி - 4 (பொடியாக நறுக்கியது).
மிளகாய்ப் பொடி - 2 டீஸ்பூன்
உப்பு - 1 டீஸ்பூன்
எண்ணெய் - 1 டேபிள்ஸ்பூன்.
கடுகு - 1 டீஸ்பூன்
உளுந்து - 1 டீஸ்பூன்
கறிவேப்பிலை - 1 இணுக்கு .

செய்முறை :-
பானில் எண்ணெயைக் காய வைத்து கடுகு போடவும்.
கடுகு வெடித்ததும் உளுந்து போடவும்.
உளுந்து சிவந்ததும் பெரிய வெங்காயம்., தக்காளி., கறிவேப்பிலை போட்டு நன்கு வதக்கவும்.
உப்பு., மிளகாய்ப் பொடி போட்டு வதக்கி ஒரு கப் தண்ணீர் ஊற்றி கொதிக்க விடவும். 10 நிமிடம் சிம்மில் வைத்து அடுப்பை அணைக்கவும். சுட சுட வெள்ளைப் பணியாரம்., சப்பாத்தி., இட்லி ., தோசை அல்லது உப்புமாவுடன் பரிமாறவும்.

PORICHUK KOTTI THEENGKAYTH THUVAIYAL. பொரிச்சுக் கொட்டித் தேங்காய்த் துவையல். குங்குமம் தோழியில்.

COCONUT THUVAIYAL :-
NEEDED :-
CRATED COCONUT - 1 CUP
GREEN CHILLIES - 3 NOS.(HALVED)
BIG ONION CHOPPED - 1
MUSTARD - 1 TSP
URAD DAL - 1 TSP
ASAFOETIDA - 1/8 INCH PIECE.
TARMARIND - 1 INCH SIZE
SALT - 1/2 TSP
CURRY LEAVES - I ARK
OIL - 2 TSP.

PREPARATION :-
HEAT OIL IN A KADAI ADD MUSTARD.,URAD DAL .,ASAFOETIDA.
WHEN MUSTARD SPLUTTERS AND URAD DAL BECOMES BROWN ADD HALVED GREEN CHILLIES ., CHOPPED ONION..N CURRY LEAVES.
SAUTE FOR 2 MIN ADD SALT N TARMARIND.
THEN ADD CRAPED COCONUT AND TURN OFF THE STOVE .
AFTER COOL GRIND IT AND HAVE IT WITH KUZIPPANIYAARAMS OR WITH IDDLIES OR DOSAIS.

பொரிச்சுக் கொட்டித் தேங்காய்த்துவையல்.
தேவையானவை :-
தேங்காய் துருவியது - 1 கப்
பச்சை மிளகாய் - 3 ( வகிர்ந்தது)
பெரிய வெங்காயம் பொடியாக அரிந்தது - 1
கடுகு - 1 டீஸ்பூன்
உளுந்து - 1 டீஸ்பூன்
பெருங்காயம் - 1/8 இஞ்ச் துண்டு
புளி - 1 இஞ்ச் துண்டு
உப்பு - 1/2 டீஸ்பூன்
கருவேப்பிலை - 1 ஆர்க்
எண்ணெய் - 2 டீஸ்பூன்.

செய்முறை:-
கடாயில் எண்ணெயை சூடாக்கி கடுகு போடவும்.
அது வெடித்தவுடன்உளுந்து பெருங்காயம் போடவும். பெருங்காயம் பொறிந்து உளுந்து சிவந்தவுடன் பச்சைமிளகாய்., வெங்காயம் ., கருவேப்பிலை சேர்க்கவும்.
2 நிமிடம் வதக்கி உப்பு புளி சேர்க்கவும்.
தேங்காயை சேர்த்து அடுப்பை அணைக்கவும்.
ஆறிய பின் மிக்ஸியில் அரைத்து சூடான குழிப்பணியாரங்கள் அல்லது இட்லி அல்லது தோசையுடன் பரிமாறவும்.

DONGER CHUTNEY. டாங்கர் சட்னி. குங்குமம் தோழியில்

DONGER CHUTNEY:-

NEEDED :-
SMALL ONION - 200 GMS
GARLIC - 50 GMS
TOMATO - 1 NO ( OPTIONAL)
RED CHILLIES - 8 NOS ( MAKE INTO TITBITS)
TAMARIND - 1 AMLA SIZE BALL
SALT - 1 TSP
JAGGERY - 1 TSP.
MUSTARD - 1 TSP
ORID DHAL - 1 TSP
OIL - 1 TBLSPN
METHOD :-
HEAT OIL IN A PAN ADD MUSTARD., WHEN IT SPLUTTERS ADD ORID DHAL. WHEN IT BECOMES BROWN ADD RED CHILLIES . THEN ADD PEELED CHOPPED ONION., GARLIC AND TOMATO . SAUTE WELL. SOAK TAMARIND IN HALF CUP WATER AND TAKE THE PULP . POUR THE PULP WITH SALT IN THE PAN. BRING TO BOIL . COOK IN SIM FOR 5 MIN ADD JAGGERY.. COOK TILL OIL SEPERATES . SERVE HOT WITH IDDLIES OR DOSAS.
ITS  CHETTINAD SPECIAL CHUTNEY AND SERVED IN NIGHT DINNERS.
டாங்கர் சட்னி:-
தேவையானவை:-
சின்ன வெங்காயம் - 200 கிராம்
வெள்ளைப்பூண்டு - 50 கிராம்
தக்காளி - 1 ( விரும்பினால்)
வரமிளகாய் - 8 (துண்டுகளாக்கியது)
புளி - 1 நெல்லி அளவு
உப்பு - 1 டீ்ஸ்பூன்
தூள் வெல்லம் - 1 டீஸ்பூன்
கடுகு - 1 டீஸ்பூன்
உளுந்து - 1 டீஸ்பூன்
எண்ணெய் - 1 டேபிள்ஸ்பூன்.
தக்காளி - 1 ( விரும்பினால்)
புளி - 1 எலுமிச்சை அளவு
உப்பு - 1 டீஸ்பூன்.
செய்முறை :-
பானில் எண்ணெய் ஊற்றி கடுகு போடவும். வெடித்தவுடன் உளுந்து போட்டு சிவந்தவுடன் வரமிளகாய் போடவும். பின்பு தோலுரித்து பொடியாக அரிந்த சின்ன வெங்காயம்., வெள்ளைப் பூண்டு ., தக்காளி போட்டு வதக்கவும். நன்கு வதங்கியதும் புளியை அரை டம்ளர் தண்ணீரில் ஊறவைத்து சாறெடுத்து உப்புடன் சேர்த்து ஊற்றவும். கொதிவந்ததும் அடக்கி வைத்து 5 நிமிடம் கழித்து வெல்லம் சேர்க்கவும். பக்கங்களில் எண்ணெய் பிரியும் வரை அடுப்பில் வைக்கவும். சூடாக இட்லி தோசையுடன் பரிமாறவும்.
இது செட்டிநாடு ஸ்பெஷல். திருமணட்துக்கு முந்தைய நாள் இரவு அல்லது திருமணத்தன்று பெண் அழைப்பில் இட்லியுடன் இதை பரிமாறுவார்கள்.

KATHAMBACH CHUTNEY. கதம்பச் சட்னி. குங்குமம் தோழியில்.

KATHAMBACH CHUTNEY:-

NEEDED:-
GRATED COCONUT - 4 TBLSPN
RED CHILLIES - 2 NOS
GREEN CHILLIES - 3 NOS
BIG ONION- 1 NO. CHOPPED
GARLIC - 2 POD
GINGER - 1/4 INCH PIECE
TOMATO - 1 NO
CURRY LEAVES - 4 ARK
CORRIANDER LEAVES - ONE HANDFUL
MINT LEAVES - ONEHANDFUL
TAMARIND - 1 POD
SALT - 1/2 TSP
OIL - 3 TSP
MUSTARD - 1 TSP
ORID DHAL - 1 TSP
CHANNA DHAL - 1 TSP
ASAFOETIDA - 1/8 INCH PIECE
FENUGREEK- 1/4 TSP


METHOD:-
HEAT OIL IN A PAN. ADD MUSTARD., WHEN IT SPLUTTERS ADD ORID DHAL., CHANNA DHAL., FENUGREEK., ASAFOETIDA. WHEN THE DHALS BECOMES BROWN ADD RED CHILLIES, HALVED GREEN CHILLIES., ONION., SAUTE WELL. ADD TOMATO ., GINGER., GARLIC., CURRY LEAVES., MINT LEAVES., CORRIANDER LEAVES., THEN SALT AND TAMARIND WITH GRATED COCONUT. SAUTE FOR A WHILE . REMOVE FROM HEAT . KEEP ASIDE FOR COOL. AFTER COOLING GRIND IT WELL. ADD WATER FOR THE NEEDED CONSISTENCY. SERVE IT WITH IDDLIES., DOSAS ., MASALACHEEYAM., VELLAIP PANIYAARAM., VADAI., OR WITH RICE AND GHEE., AND WITH CURD RICE AS THEENGKAAY SAMBANTHI.

NOTE:- THIS IS CHETTINAD BASED RECIPE.

கதம்பச் சட்னி:-
தேவையானவை:-
துருவிய தேங்காய் - 4 டேபிள்ஸ்பூன்
வரமி்ளகாய் - 2
பச்சைமிளகாய் - 3
பெரிய வெங்காயம் - 1 நறுக்கியது.
தக்காளி - 1
இஞ்சி - 1/4 இஞ்ச் துண்டு
பூண்டு - 2 பல்
கருவேப்பிலை - 4 இணுக்கு்
கொத்துமல்லி - ஒரு கைப்பிடி
புதினா - ஒரு கைப்பிடி
புளி - 1 சுளை
உப்பு - 1/2 டீஸ்பூன்
எண்ணெய் - 3 டீஸ்பூன்
கடுகு - 1 டீஸ்பூன்
உளுந்து - 1 டீஸ்பூன்
கடலைப்பருப்பு - 1 டீஸ்பூன்
பெருங்காயம் - 1/8 இஞ்ச் துண்டு
வெந்தயம் - 1/4 டீஸ்பூன்.

செய்முறை:-
பானில் எண்ணெய் ஊற்றி கடுகு போடவும். வெடித்தவுடன் உளுந்து., கடலைப்பருப்பு போடவும் . இவை சிவந்தவுடன் பெருங்காயம்., வெந்தயம்., வரமிளகாய்., கீறிய பச்சைமிளகாய் ., வெங்காயம் போட்டு வதக்கவும். பின் தக்காளி., இஞ்சி., பூண்டு., கருவேப்பிலை., கொத்துமல்லி., புதினா., உப்பு., புளி., தேங்காய் போட்டு இரண்டு தரம் கிளறி இறக்கவும். ஆறவைத்து அரைத்துத் தேவையான தண்ணீர் சேர்க்கவும். இட்லி., தோசை., மசாலச்சீயம்., வெள்ளைப்பணியாரம்., வடையுடன் பரிமாறவும். அல்லது சாதம் நெய்போட்டு சட்னி போட்டு சாப்பிடலாம். தயிர் சாதத்துக்கும் தொட்டுக் கொள்ள ஏற்றது.

டிஸ்கி :- இது செட்டிநாட்டு வைபவங்களில் கட்டாயம் இடம்பெறும்.

MASALAI CHEEYAM. மசாலைச் சீயம். குங்குமம் தோழியில்.

MASALAI CHEEYAM :-

NEEDED:-
RAW RICE - 1 CUP
WHITE ORID DHAL - 1 CUP
SALT - 1 TSP
OIL - FOR FRYING.
GRATED COCONUT - 1 CUP
SMALL ONION -20 PEEP AND CHOP.
MUSTARD - 1 TSP
CURRY LEAVES - 1 ARK
GREEN CHILLIES - 2 NOS. CHOPPED FINELY.

METHOD :-
WASH AND SOAK THE RICE AND ORID DHAL FOR 2 HOURS. ADD SALT AND GROUND WELL.

HEAT 4 TSP OIL IN A PAN . ADD MUSTARD. WHEN IT SPLUTTERS ADD GREEN CHILLIES, CURRY LEAVES, ONION. SAUTE FOR 2 MINUTES. ADD GRATED COCONUT AND SAUTE FOR ANOTHER 2 MINUTES.

ADD THIS TO THE THICK DOUGH AND BLEND WELL. HEAT OIL IN A PAN . MAKE LEMON SIZE BALLS FROM THE DOUGH AND FRY THEM IN OIL TILL GOLDEN YELLOW. SERVE HOT WITH KATHAMBA CHUTNEY. 

மசாலைச் சீயம்.

தேவையானவை:-
பச்சரிசி -  1 ஆழாக்கு
வெள்ளை உளுந்தம்பருப்பு - 1 ஆழாக்கு
உப்பு - 1 டீஸ்பூன்
எண்ணெய் பொறிக்கத் தேவையான அளவு.
தேங்காய்  -  1 மூடி துருவியது .
சின்ன வெங்காயம் - 20 தோலுரித்துப் பொடியாக நறுக்கவும்.
கடுகு - 1 டீஸ்பூன்
கருவேப்பிலை - 1 கொத்து
பச்சைமிளகாய் - 2 பொடியாக நறுக்கவும்.

செய்முறை:-
பச்சரிசி, உளுந்தை நன்கு கழுவி 2 மணி நேரம் ஊறவைக்கவும். உப்பு சேர்த்து வெண்ணெய் போல அரைக்கவும்.

ஒரு பானில் 4 ஸ்பூன் எண்ணெய் ஊற்றி கடுகு தாளித்து பச்சைமிளகாய், கருவேப்பிலை, வெங்காயத்தைப் போட்டுப் பொன்னிறமாக வதக்கவும். துருவிய தேங்காயைச் சேர்த்து நன்கு வதக்கி மாவில் போட்டு நன்கு பிசைந்து சின்னச் சின்ன உருண்டைகளாக உருட்டி எண்ணெயைக் காயவைத்துப் பொரித்தெடுக்கவும்.

மசாலைச் சீயத்தைக் கதம்பச் சட்னியுடன் பரிமாறவும். 

MARAKKARIKKAAY DOSAI. மரக்கறிக்காய் தோசை -- குங்குமம் தோழியில்.

MARAKKARIKKAAY DOSAI :-

NEEDED:-
RAW RICE - 1/4 CUP
BOILED RICE - 1/4 CUP
ORID DHAL - 1/4 CUP
MOONG DHAL - 14 CUP
THOOR DHAL - 1/2 CUP
CHANNA DHAL - 1/2 CUP
RED CHILLIES - 4 NOS
SOMPH - 1 TSP
JEERA - 1/4 TSP
PEPPER - 1/4 TSP
SALT - 1 TSP
TURMERIC POWDER - 1 PINCH
SMALL ONION - 1 CUP CHOPPED FINELY
OIL - FOR FRYING.

METHOD:-
WASH AND SOAK THE RICE AND PULSES  SEPERATELY. GROUND COARSLY THE RICE AND DHALS WITH RED CHILLIES, SOMPH, JEERA, PEPPER, SALT. ADD TURMERIC POWDER. FRY CHOPPED SMALL ONION IN LITTLE OIL.ADD IT TO THE BATTER. MIX WELL AND PREPARE SMALL OOTHAPPAM SIZE DOSAS. HEAT OIL IN A SEPERATE PAN AND THEN FRY THEM & SERVE HOT WITH MILAGAI CHUTNEY.

மரக்கறிக்காய் தோசை :-

தேவையானவை :-

பச்சரிசி - 1/4 கப்
புழுங்கரிசி - 1/4 கப்
உளுந்து - 1/4 கப்
பாசிப்பருப்பு - 1/4 கப்
துவரம்பருப்பு - 1/2 கப்
கடலைப்பருப்பு - 1/2 கப்
சம்பா மிளகாய் - 4
சோம்பு - 1 டீஸ்பூன்
சீரகம் - 1/4 டீஸ்பூன்
மிளகு - 1/4 டீஸ்பூன்
உப்பு - 1 டீஸ்பூன்.
மஞ்சள் பொடி - 1 சிட்டிகை
சின்னவெங்காயம் - 1 கப் பொடியாக அரிந்தது.
எண்ணெய் - பொரிக்கத்தேவையான அளவு.
செய்முறை:-
அரிசி வகைகளையும் பருப்பு வகைகளையும் தனித்தனியாக ஊறவைக்கவும். மிளகாய் சோம்பு சீரகம் மிளகைப் பொடித்து ஊறவைத்தவைகளைச் சேர்த்து உப்புப் போட்டுக் கரகரப்பாக அரைக்கவும். மஞ்சள் பொடியைச் சேர்க்கவும். சின்ன வெங்காயத்தை சிறிது எண்ணெயில் வதக்கி மாவில் சேர்த்து குட்டி குட்டி ஊத்தப்பங்களாக ஊற்றவும். ஒரு பானில் எண்ணெயைக் காயவைத்து மரக்கறிக்காய் தோசைகளைப் பொறித்தெடுத்துப் பரிமாறவும்.

VELLAIP PANIYAARAM. வெள்ளைப் பணியாரம். குங்குமம் தோழியில்


VELLAIP PANIYAARAM.:-
NEEDED :-
RAW RICE - 2 CUPS (HEEPED)
URAD DHAL - AT THE TOP OF RICE AND TO FUL FILL THE 2 CUPS ( APPROXIMATELY 1/4 CUP)..
SALT - 1 TSP.
OIL - TO FRY .

METHOD :-
MIX RICE AND DHAL WASH AND SOAK FOR 2 HOURS.
GRIND WELL AS A SMOOTH BATTER ADD SALT AND BLEND WELL.
HEAT OIL IN A KADAI .
POUR A LADDLE OF BATTER IN OIL AND WHEN IT BLOW UP TRUN THE OTHER SIDE AND TAKE OUT OF OIL .
SERVE HOT WITH MILAKAAYTH THUVAIYAL OR KATHAMBA CHUTNEY.. OR VENKAAYAM THAKKAALI KETTI CHUTNEY .

OPTIONAL :- WE CAN ADD HALF TSP SUGAR AND MILK TO THE BATTER TO GET SMOOTH PANIYAARAMS..
P. N. :- IF THE PANIYAARAM COMES TOO FLAT ADD SOME IDDLIE MAVU OR DOSAI MAVU. AND IF THE PANIYAARAM COMES TOO MUCH BULGES AT THE CENTRE ADD IDIYAAPPA MAAVU OR RICE FLOUR.

THIS IS CHETTINAD SPECIAL.. AND WE SERVE IT IN EACH N EVERY FUNCTIONS N FESTIVALS..

வெள்ளைப் பணியாரம்..:-
தேவையான பொருட்கள்.. :-
பணியாரப் பச்சை ( பச்சரிசி ) - 2 ஆழாக்கு தலை தட்டி.
வெள்ளை உளுந்து - அரிசியின் மேல் கோபுரமாக ( தோராயமாக 1/4 ஆழாக்கு)
உப்பு - 1 டீஸ்பூன்
எண்ணெய் - பொறிக்க..

செய்முறை:-
அரிசி்யையும் உளுந்தையும் சேர்த்துக் கழுவி 2 மணி நேரம் ஊறவைக்கவும்.
நன்கு மையாக அரைத்து உப்பு சேர்த்து நன்கு கலக்கவும்.
எண்ணெயைக் கடாயில் காயவைத்து மாவை ஒவ்வொரு கரண்டியாக ஊற்றி மேலெழும்பியதும் திருப்பி விட்டு சூடாக எடுத்து மிளகாய்த்துவையல்., (அ) கதம்பச் சட்னி., (அ) வெங்காயம் தக்காளி கெட்டிச் சட்னியுடன் பரிமாறவும்..

விருப்பம்:- அரை தேக்கரண்டி சீனியும் பாலும் விட்டு நன்கு மாவை அடித்து ஊற்றினால் பணியாரம் மென்மையாக வரும் .

பி. கு. :- பணியாரம் ரொம்ப தட்டையாக வந்தால் இட்லி அல்லது தோசை மாவை சிறிது சேர்த்துக் கொள்ளவும். நடுவில் ரொம்ப உப்பலாக., கனமாக வந்தால் இடியாப்ப மாவு அல்லது அரிசி மாவை சேர்க்கவும்.

இது செட்டிநாட்டின் ஸ்பெஷல் பலகாரம்.. ஒவ்வொரு பண்டிகை தினத்தன்றும்., திருமணங்களிலும் இது இடம் பெறும்.

சனி, 3 மே, 2014

பாற்சோறு. PARCHORU.குங்குமம் தோழியில்

பாற்சோறு. PARCHORU.

PARCHORU:-
NEEDED:-
RAW RICE - 1 CUP
JAGGERY + KARUPPATTI - 2 CUP
COCONUT 1/2 - CUT INTO THIN STICKS
WATER - 4 CUPS
GHEE - 1 TBL SPN

METHOD :-
RINSE THE RICE.  ADD POWDERED JAGGERY AND KARUPPATTI IN 4 CUPS OF WARM WATER. MIX WELL TILL THE JAGGERY AND KARUPPATTI DISSOLVES.  FILTER IT. POUR THIS IN A THICK BOTTOMED PAN. BRING TO BOIL. THEN ADD THE RINSED RICE.STIRR WELL AND COOK TILL DONE. ADD THE COCONUT CHIPS AND GHEE. STIRR WELL AND REMOVE FROM FIRE. SERVE HOT OR COLD.


பாற்சோறு.:-
*************************

தேவையானவை :-
பச்சரிசி -  1 கப்
வெல்லம்+கருப்பட்டி - 2 கப்
தேங்காய்  ஒரு மூடி - பல்லு பல்லாக நறுக்கவும்.
தண்ணீர் - 4 கப்
நெய் - 1 டேபிள்ஸ்பூன்.

செய்முறை:-
அரிசியை களைந்து வைக்கவும். வெல்லம்+ கருப்பட்டியைத் தண்ணீரில் போட்டு சூடாக்கி நன்கு கரைத்து வடிகட்டவும். திரும்ப  அதே அடிகனமான பாத்திரத்தில் வெல்லம் கருப்பட்டிப் பாகை ஊற்றி  கொதிவந்ததும் அரிசியை போடவும். கிளறிக்கொண்டே இருக்கவும். முக்கால் பதம் வெந்ததும்  தேங்காய்ப் பல்லுகளைச் சேர்க்கவும். இறுகி வெந்து ஒட்டாமல் வந்தவுடன் நெய்யைச் சேர்த்து இறக்கவும். இது 2 நாளைக்கு கெடாது. சூடாகவோ , குளிர்ச்சியாகவோ பரிமாறவும். இதை மறுநாளும் துண்டுகள் செய்து பரிமாறுவார்கள். இது குங்குமம் தோழியில் வெளியானது.

FRUIT GHEER. பழப் பாயாசம் குங்குமம் தோழியில்

FRUIT GHEER.  பழப் பாயாசம்.
FRUIT GHEER:-

NEEDED:-
FRUIT TIN – 1 NO. (OR)
DICED APPLE, PINEAPPLE, GREEN & BLACK GRAPES ( SEEDLESS),CHERRIES – MIXED 1 CUP
MILK – 1 LITRE
BADAM – 5 NOS
CASHEW – 5 NOS
CUSTARD POWDER – 1 TBLSPN
SUGAR – ½ CUP
FRUIT ESSENCE – 3 DROPS
SARAP PARUPPU – 1 TBLSPN.
GHEE – 1 TSP.
METHOD:-
SOAK BADAM AND CASHEW IN HOT WATER. PEEL BADAM AND GROUND WITH CASHEW. ADD THE FINE PASTE INTO THE BOILING MILK. COOK FOR 2 MINUTES. MIX CUSTARD WITH LITTLE WARM MILK AND POUR THIS TO THE BOILING MIXTURE. ADD SUGAR. STIRR WELL. COOK FOR ANOTHER 2 MINUTES AND REMOVE FROM FIRE.
AFTER COOLING ADD THE FRUIT ESSENCE AND MIXED FRUITS. TOSS IT WITH SARAIP PARUPPU FRIED IN GHEE. REFRIDGERATE AND SERVE AFTER 3 HOURS. 
பழப் பாயாசம்:-

தேவையானவை :-
பழ டின் – 1 ( அல்லது)
சதுரத் துண்டுகளாக்கிய ஆப்பிள், பைன் ஆப்பிள், பச்சை,கறுப்பு திராக்ஷைகள்( விதையில்லாதது), செர்ரிப் பழம் – இந்தக் கலவை 1 கப்.
பால் – 1 லிட்டர்.
பாதாம் – 5
முந்திரி – 5
கஸ்டர்ட் பவுடர் – 1 டேபிள் ஸ்பூன்
சீனி – ½ கப்
பழ எஸென்ஸ் – 3 சொட்டு
சாரைப் பருப்பு – 1 டேபிள் ஸ்பூன்.
நெய் – 1 டீஸ்பூன்.
செய்முறை:-
பாதாமையும் முந்திரியையும் வெந்நீரில் ஊறப்போடவும். பாதாமை உரித்து முந்திரியுடன் அரைத்துக் கொதிக்கும் பாலில் ஊற்றவும். இரண்டு நிமிடங்கள் கொதிக்கவிடவும். கஸ்டர்ட் பவுடரை வெதுவெதுப்பான பாலில் கரைத்துக் கொதிக்கும் பாலில் ஊற்றவும். சீனியை சேர்க்கவும். நன்கு கலக்கி இரண்டு நிமிடங்கள் கொதித்ததும் இறக்கி ஆறவிடவும்.
ஆறியதும் அதில் பழ எஸென்ஸ், மற்றும் பழக் கலவையைச் சேர்க்கவும். சாரைப்பருப்பை நெய்யில் வறுத்துத் தூவி ஃப்ரிஜ்ஜில் 3 மணி நேரம் குளிரவைத்துப் பரிமாறவும்.

KUMMAAYAM.. கும்மாயம்/ஆடிக்கூழ். -- குங்குமம் தோழியில்

KUMMAAYAM:-

NEEDED:-

KUMMAAYAM FLOUR( 1CUP RAW RICE., 1 CUP MOONG DHAL., 1 CUP ORID DHAL - FRY THEM WITHOUT OIL AND POWDER , SIFT THEM . ) FROM THIS FLOUR TAKE ONLY 1 CUP - 1 CUP..200GMS

JAGGERY ( VELLAM +PANAIVELLAM) - 1 1/2 CUP 200GMS

GHEE+ SEASOME OIL - 100+50 GMS.

WATER - 4 CUPS.


METHOD:-

HEAT 50 GMS SEASOME OIL WITH 50 GMS GHEE IN A KADAI. FRY THE FLOUR FOR A MINUTE, KEEP ASIDE. ADD JAGGERY IN 4 CUPS OF WATER AND HEAT THE PAN TILL ALL THE JAGGERY MELTS. STIR OCCASIONALLY. REMOVE FROM FIRE AND STRAIN THE JAGGERY WATER IN THE FLOUR AND MIX THEM WITHOUT FORMING LUMPS. PLACE THE PAN IN THE STOVE AND STIR WELL. COOK TILL IT IS NOT STICKS TO HAND . WHEN IT BECOMES GLASSY ADD THE REST OF THE GHEE AND SERVE HOT.ITS A SPECIAL ITEM OF CHETTINADU AND WE SERVED IT IN OUR MARRIAGES AT THE END OF THE FUNCTION.

கும்மாயம்/ஆடிக்கூழ்:-

தேவையானவை:-

கும்மாய மாவு( பச்சரிசி 1 கப்., பாசிப்பருப்பு 1 கப்., வெள்ளை உளுந்து 1 கப்பை வெறும் வாணலியில் வெதுப்பி பொடித்து சலிக்கவும்.) இதிலிருந்து ஒரு கப் மட்டும் எடுத்துக் கொள்ளவும். - 1கப் 200 கி்ராம்.

கருப்பட்டி + வெல்லம் = 1 1/2 கப் 200 கிராம்

நெய்+நல்லெண்ணெய் = 100+50 கிராம்.

தண்ணீர் - 4 கப்


செய்முறை:-

பானில் நல்லெண்ணெய் 50 கிராம்., நெய் 50 கிராம் ஊற்றி மாவை ஒரு நிமிடம் வாசனை வரும்வரை வறுக்கவும். இன்னொரு பாத்திரத்தில் தண்ணீர் 4 கப் ஊற்றி வெல்லம்., கருப்பட்டியை போட்டு அடுப்பில் வைக்கவும். கரைந்தவுடன் வடிகட்டி மாவில் ஊற்றி கட்டிகளில்லாமல் கரைக்கவும். பின் அடுப்பில் வைத்து கைவிடாமல் கிளறவும். கையில் ஒட்டாமல் கெட்டியாக கண்ணாடியைப் போல வரும்வரை கிளறி மிச்ச நெய்யைஊற்றி இறக்கவும். சுடச் சுட பரிமாறவும்.


இது செட்டிநாடு ஸ்பெஷல் ஐட்டம். திருமணம் அல்லது விஷேஷம் முடிந்தவுடன் மாலைப்பலகாரத்தில் பரிமாறுவார்கள். சொல்லிக்கிற பலகாரம் என்று இதற்குப் பேர்..:)

RENGOON PUTTU. ரெங்கோன் புட்டு.- குங்குமம் தோழியில்

RENGOON PUTTU :-

NEEDED:-

SOOJI( WHITE RAVA) - 1 CUP

MILK - 2 CUPS

SUGAR - 1 CUP

GRATED COCONUT - 1 TBLSPN.

GHEE - 1/2 CUP

SALT - 1PINCH

CARDAMOM- 2 NOS

CASHEWNUTS- 10 NOS.


METHOD :-

HEAT GHEE IN A KADAI FRY CASHEWS TILL GOLDEN BROWN. ADD SOOJI AND FRY FOR ONE MINUTE. ADD BOILED MILK AND COOK WELL. ADD A PINCH OF SALT AND SUGAR. WHEN SUGAR MELTS ADD GRATED COCONUT. WHEN IT THICKENS AND THE GHEE SEPERATES AT THE SIDES ADD POWDERED CARDAMOM AND SERVE HOT ALONG WITH EVENING TIFFIN AS A SWEET.


* IN CHETTINADU WE SERVES IT IN THE PREVIOUS DAY EVENING OF MARRIAGES ALONG WITH VEG PAKODA OR CASHEW PAKODA OR PANEER PAKODA AND UTHAPPAM.WITH COCONUT CHUTNEY AND SAMBAR.


ரங்கோன் புட்டு:-

தேவையானவை :-

வெள்ளை ரவை - 1 கப்

பால் - 2 கப்

ஜீனி - 1 கப்

நெய் - 1/2 கப்

துருவிய தேங்காய் - 1 டேபிள்ஸ்பூன்

உப்பு - 1 சிட்டிகை

ஏலக்காய் - 2

முந்திரிப் பருப்பு - 10


செய்முறை:-

ஒரு பானில் நெய்யை ஊற்றி சூடாக்கி முந்திரிப் பருப்பை பொன்னிறமாக வறுக்கவும். அதில் ரவையை போட்டு வெதுப்பி சூடான பாலை ஊற்றி சமைக்கவும். ரவை வெந்தவுடன் உப்பு ஒரு சிட்டிகையும்., ஜீனியும் சேர்க்கவும். ஜீனி கரைந்தவுடன் அதில் தேங்காயை சேர்க்கவும். நன்கு இறுகி பக்கங்களில் நெய் பிரியும் போது பொடித்த ஏலக்காயை சேர்த்து சூடாக மாலை டிஃபனோடு பரிமாறவும்.


இதை எங்கள் செட்டிநாட்டுத்திருமணங்களில் முதல் நாள் மாலை இனிப்பாக பரிமாறுவார்கள் இத்துடன் வெஜ்பக்கோடா.,அல்லது முந்திரி பக்கோடா அல்லது பனீர் பக்கோடாவுடன்., ஊத்தப்பம் தேங்காய் சட்னி., சாம்பாருடன் பரிமாறுவார்கள்.

KALKANDU VADAI கல்கண்டு வடை - குங்குமம் தோழி

KALKANDU VADAI :-
NEEDED:-
URAD DHAL - 1 CUP
KALKANDU ( SUGAR BAR.. CRUSHED ) OR SUGAR - 1 CUP
SALT - 1 PINCH.
OIL - FOR FRYING.

METHOD :-
WASH AND SOAK URAD DHAL FOR 2 HOURS.
DRAIN WATER AND GRIND WELL .. ADD KALKANDU OR SUGAR AND GRIND IT INTO A FINE SMOOTH FLUFFY DOUGH.
HEAT OIL IN A PAN MAKE VADAIS AND FRY WELL. IT WILL BE GOOD FOR 3 DAYS.
ITS A CHETTINAD SPECIAL SWEET ITEM AND PREPARED AND SERVED MARRIAGES AND IN DEEPAVALAI AND IN PILLAIYAR NONBU .

கல்கண்டு வடை :-
உளுந்து - 1 கப்
கல்கண்டு (பொடித்தது) அல்லது ஜீனி - 1 கப்
உப்பு - 1 சிட்டிகை
எண்ணெய் - பொறிக்க..

செய்முறை :-
உளுந்தை நன்கு கழுவி 2 மணி நேரம் ஊற வைக்கவும். கிரைண்டரில் தண்ணீரை வடித்துவிட்டு நன்கு ஆட்டவும். பாதி ஆட்டியபின் கல்கண்டு அல்லது ஜீனி சேர்க்கவும். நன்கு மைய மாவானபின் எடுத்து வடைகளாகத் தட்டி எண்ணெயில் பொறிக்கவும். இது செட்டிநாட்டின் ஸ்பெஷல் இனிப்பு. திருமணங்கள்., தீபாவளி., பிள்ளையார் நோன்பு சமயங்களில் செய்து பரிமாறுவார்கள்.

KANTHARAPPAM. கந்தரப்பம் - குங்குமம் தோழியில்.

KANTHARAPPAM:-
NEEDED:-

RAW RICE - 2 CUPS

PARABOILED RICE - 1/4 CUP

ORID DHAL - 1/4 CUP

CHANNA DHAL - 1/8 CUP

FENUGREEK - 1 TSP

JAGGERY - 2 CUPS

GRATED COCONUT - 1 CUP

CARDAMOM - 4 NOS.

OIL - FOR FRYING.


METHOD:-

WASH AND SOAK RAW RICE., BOILED RICE., ORID DHAL., CHANNA DHAL., FENUGREEK FOR 2 HOURS. GRIND INTO A SMOOTH BATTER THEN ADD JAGGERY , COCONUT AND CARDAMOM. RUN THE MIXIE FOR ANOTHER 5 MINUTES. HEAT OIL IN A PAN POUR A LADDLE OF THE BATTER . WHEN IT EMERGES TURN IT TO OTHER SIDE. DEEP FRY AND SERVE HOT. ITS CHETTINADU SEPCIAL SWEET.


கந்தரப்பம்.:-

தேவையானவை:-

பச்சரிசி - 2 கப்

புழுங்கல் அரிசி - 1/4 கப்

உளுந்து - 1/4 கப்

கடலைப்பருப்பு - 1/8 கப்

வெந்தயம் - 1 டீஸ்பூன்

வெல்லம் - 2 கப்

தேங்காய் துருவியது - 1 கப்

ஏலக்காய் - 4 .

எண்ணெய் - பொரிக்க தேவையான அளவு.


செய்முறை:-

பச்சரிசி.,புழுங்கல் அரிசி., உளுந்தம்பருப்பு., கடலைப்பருப்பு., வெந்தயம் எல்லாவற்றையும் கழுவி 2 மணிநேரம் நன்றாக ஊறவைக்கவும். நைசாக அரைத்து அதில் வெல்லம்., தேங்காய்துருவல்., ஏலக்காய் சேர்த்து இன்னும் 5 நிமிடம் அரைக்கவும். எண்ணெயைக் காயவைத்து ஒரு கரண்டி மாவை எடுத்து ஊற்றவும். அப்பம் உப்பி மேலே வரும்போது திருப்பி விட்டு வேகவைத்து எடுக்கவும். சூடாக பரிமாறவும். இது செட்டிநாட்டின் ஸ்பெஷல் இனிப்பு.

மாவை நன்கு அடித்து ஊற்றினால் நன்றாக வரும்..

KAUNARISI கவுனரிசி - குங்குமம் தோழியில்.

KAUNARISI :-
NEEDED :-
KAVUNARISI - 1 CUP
SUGAR - 1/2 CUP
CRATED COCONUT - 1/2 CUP
GHEE - 1 TBL SPN2
CARDAMOM - 2 (POWDERED)

PREPARATION :
WASH N CLEAN KAVUNARISI AND ADD 3 CUPS OF WATER .
SOAK IT FOR 1 HOUR.
COOK IN A PRESURE COOKER LIKE RICE.
TAKE OUT AFTER 10 MIN AND SMASH WELL.
ADD SUGAR., CRATED COCONUT., GHEE N CARDAMOM POWDER AND STIRR WELL.
ITS SERVED AS SWEET IN BREAKFAST .
THIS IS CHETTINAD SPECIAL. AND IN MARRIAGES WE SERVE.

கவுனரிசி:-
கவுனரிசி - 1 ஆழாக்கு
சீனி - 1/2 ஆழாக்கு
துருவிய தேங்காய் - 1/ 2 கப்
நெய் - 1 டேபிள் ஸ்பூன்
ஏலக்காய் - 2 (பொடித்தது)

செய்முறை:-
கவுனரிசியை சுத்தம் செய்து கழுவி 3 டம்ளர் தண்ணீர் ஊற்றி ஊறவைக்கவும்.
சாதம் வைப்பதுபோல பிரஷர் குக்கரின் வேகவைக்கவும்.
வெளியில் எடுத்து நன்கு மசிக்கவும்.
சீனி., துருவிய தேங்காய்., நெய்., ஏலக்காய் பொடி சேர்த்து நன்கு கலக்கவும்.
காலை பலகாரத்துடன் இனிப்பாக பரிமாறவும்.
இது செட்டிநாடு ஸ்பெஷல் இனிப்பு.. எங்கள் பக்க திருமணங்களில் நிச்சயம் காலை அல்லது மாலை அல்லது இரவு பலகாரத்துடன் இருக்கும்.
Related Posts Plugin for WordPress, Blogger...