எனது பத்தொன்பது நூல்கள்

எனது பத்தொன்பது நூல்கள்
எனது பத்தொன்பது நூல்கள்

வியாழன், 27 அக்டோபர், 2016

எலுமிச்சை சாதம். LEMON RICE.

எலுமிச்சை சாதம்.


தேவையானவை:- பச்சரிசி சாதம் – 2 கப், எலுமிச்சை – 2 சாறு பிழியவும். மஞ்சள் தூள் – 1 சிட்டிகை, உப்பு –அரை டீஸ்பூன், தாளிக்க :- கடுகு – அரை டீஸ்பூன், உளுந்து – 1 டீஸ்பூன், கடலைப்பருப்பு – 2 டீஸ்பூன், வேர்க்கடலை – 3 டீஸ்பூன், வரமிளகாய் – 1, பச்சை மிளகாய் – 1, கருவேப்பிலை – 1 இணுக்கு. வெந்தயம் – கால் டீஸ்பூன். எண்ணெய் – 3 டீஸ்பூன்.

செய்முறை:- எலுமிச்சையை சாறு பிழிந்து வடிகட்டி உப்பும் மஞ்சள் தூளும் சேர்த்து வைக்கவும். வரமிளகாயை வெந்தயத்தோடு வெறும் வாணலியில் வறுத்துப் பொடிக்கவும். எண்ணெயைக் காயவைத்து கடுகு, உளுந்து கடலைப்பருப்பு, வேர்க்கடலை போட்டுத் தாளித்து பச்சை மிளகாய் கருவேப்பிலை சேர்க்கவும். பொறிந்ததும் எலுமிச்சைச் சாறை ஊற்றி வறுத்துப் பொடித்த பொடியைப் போட்டு அடுப்பை அணைக்கவும். சாதத்தை உதிர் உதிராக உதிர்த்துப் போட்டு நன்கு கலக்கி நிவேதிக்கவும்.

நவதானியப் பாயாசம். NAVADHANYA PAYASAM.

நவதானியப் பாயாசம்

தேவையானவை :- தினை, சாமை, வரகு, ராகி, கம்பு, பார்லி, தட்டைப் பயிறு, சோளம், சிவப்புக் கைக்குத்தல் அரிசி. – தலா கால் கப். பால் – ஒன்றரை லிட்டர், சர்க்கரை – முக்கால் கப், முந்திரி கிஸ்மிஸ் – தலா 10, ஏலப்பொடி -1 சிட்டிகை, நெய்- 2 டீஸ்பூன்.

செய்முறை:- தினை சாமை வரகு ராகி கம்பு பார்லி தட்டைப்பயிறு, சோளம், சிவப்புக்கைக்குத்தல் அரிசி ஆகியவற்றைச் சுத்தம் செய்து வெறும் வாணலியில் லேசாக வாசம் வருவரை வறுத்து மிஷினில் நன்கு நைஸாக அரைத்து வைக்கவும். இதில் ஒரு கப் மாவு எடுத்து இரண்டு டம்ளர் பாலில் கரைத்து இன்னொரு டம்ளர் பால் ஊற்றி வேக விடவும். நன்கு வெந்து மாவு ஒட்டாத பதம் வந்ததும் சர்க்கரை சேர்த்து மிச்ச பாலை ஊற்றி நன்கு கொதித்ததும் நெய்யில் முந்திரி கிஸ்மிஸை வறுத்துப் போடவும். ஏலப்பொடி தூவி நிவேதிக்கவும்.

புதன், 26 அக்டோபர், 2016

நவதானிய மிக்ஸர். NAVADHANYA MIXER.

நவதானிய மிக்ஸர்.

தேவையானவை:- முந்திரி, பாதாம் – தலா ஒரு கைப்பிடி, பிஸ்தா ஓட்டுடன் – 1 கைப்பிடி, பரங்கி விதை – ஓட்டுடன் ஒரு கைப்பிடி, வறுத்த உப்புக் கொண்டக்கடலை – ஒரு கைப்பிடி, ஊறவைத்து வறுத்த பச்சைப் பட்டாணி -1 கைப்பிடி, ஊறவைத்து வறுத்த காராமணி – 1 கைப்பிடி, ஊறவைத்து வறுத்த பச்சைப் பயறு -1 கைப்பிடி, வறுத்த வேர்க்கடலை -1 கைப்பிடி, உப்பு –அரை டீஸ்பூன், மிளகாய்த்தூள் – அரை டீஸ்பூன், கருவேப்பிலை – ஒரு கைப்பிடி. நெய் – 2 டீஸ்பூன், எண்ணெய் – 1 டீஸ்பூன்.

செய்முறை:- முந்திரி பாதாமை நெய்யில் வறுத்து ஒரு பௌலில் போடவும். பிஸ்தாவையும் பரங்கி விதையையும் வெறும் வாணலியில் உப்புத் தண்ணீர் தெளித்து வறுத்து எடுத்து அதில் போடவும். உப்புக் கொண்டைக்கடலையைத் தோல் நீக்கிச் சேர்க்கவும். வறுத்த காராமணி, பச்சைப்பயிறு, பட்டாணி, வேர்க்கடலை சேர்த்துக் கலந்து  வைக்கவும். ஒரு பானில் எண்ணெயைக் காயவைத்து கருவேப்பிலையைப் பொறித்து அதில் மிளகாய்த்தூள் உப்பு சேர்த்து இந்த மிக்ஸரைக் கொட்டி அடுப்பை அணைத்து நன்கு கிளறி நிவேதிக்கவும்.

கொள்ளு சுண்டல் :- HORSEGRAM SUNDAL

கொள்ளு சுண்டல் :-


தேவையானவை:- கொள்ளு – 1 கப், வரமிளகாய்- 1, தேங்காய்த்துருவல் – 1 டேபிள் ஸ்பூன், உப்பு – கால் டீஸ்பூன், எண்ணெய் கடுகு உளுந்து தலா அரை டீஸ்பூன். பெருங்காயப் பொடி – சிறிது.

செய்முறை:- கொள்ளை வறுத்து நீர் சேர்த்துக் களைந்து கல் அரித்து சிறிது நேரம் ஊறவிடவும். அதன் பின் அரை கப் தண்ணீர் ஊற்றி குக்கரில் 4 விசில் வரும்வரை வேகப்போடவும். வரமிளகாயையும் தேங்காய்த்துருவலையும் மிக்ஸியில் ஒரு சுற்று சுற்றி வைக்கவும். எண்ணெயைக் காயவைத்து கடுகு உளுந்து பெருங்காயப்பொடி தாளித்து தேங்காய்ப் பொடியைப் போட்டுக் கொள்ளைச் சேர்க்கவும். உப்பு சேர்த்துக் கிளறி இறக்கி நிவேதிக்கவும்.

செவ்வாய், 25 அக்டோபர், 2016

ப்ரவுன் மொச்சை சுண்டல்:- BROWN MOCHAI SUNDAL.

ப்ரவுன் மொச்சை சுண்டல்:-

தேவையானவை:- ப்ரவுன் மொச்சை – 1 கப், எண்ணெய்- 1 டீஸ்பூன், கடுகு, உளுந்து தலா ஒரு டீஸ்பூன், உப்பு – கால் டீஸ்பூன், வரமிளகாய்- 1, கருவேப்பிலை – 1 இணுக்கு, தேங்காய்த்துருவல் – ஒரு டேபிள் ஸ்பூன். பெருங்காயப்பொடி – சிறிது

செய்முறை:- ப்ரவுன் மொச்சையை 12 மணி நேரம் ஊறப்போடவும். நீரைக் கழுவி புதிதாய் அரை கப் தண்ணீர் ஊற்றிக் குக்கரில் 4 விசில் வரும்வரை வேகவிடவும். எண்ணெயைக் காயவைத்துக் கடுகு உளுந்து தாளித்து பெருங்காயப் பொடி போட்டு வரமிளகாயைக் கிள்ளிப் போட்டு கருவேப்பிலை சேர்க்கவும். கருவேப்பிலை பொறிந்ததும் வெந்த மொச்சையைப் போட்டு உப்பு சேர்த்து தேங்காய்த்துருவல் கலந்து இறக்கவும்.

திங்கள், 24 அக்டோபர், 2016

தீபாவளி ரெசிப்பீஸ். DIWALI RECIPES.

தீபாவளி ஸ்பெஷல் ரெசிப்பீஸ். 

தீபாவளி ஸ்பெஷல் ரெசிப்பீஸ்.

1.அஞ்சீர் ஹல்வா ( அத்திப்பழம் )
2.டயமண்ட் கட்
3.உண்டம்பொரி
4.பின்னி
5.சுக்டி ( வெல்ல பாப்டி)
6.மலாய் சந்தேஷ்
7.ட்ரைஃப்ரூட் பர்ஃபி
8.ஃப்ரூட்டி ஃபிர்னி
9.கம்பு அதிரசம். ( பாஜ்ரா -  சாஜ போரேலு)
10.ஜோவர் லட்டு. ( சோள லட்டு )
11.சுர்மா லாடு
12.மில்கி நெஸ்ட்
13.ஃப்ரூட் & நட்ஸ் கச்சோரி
14.பிங்க் கத்லி
15.சாக்லெட் அக்ரூட் பர்ஃபி
16.மல் பூரி
17.ஆக்ரா ஸ்வீட் – அங்கூரி பேடா.
18.சேப் பாதாம் அல்வா
19.ஃபார்சி பூரி (பில்லாலு).


20.சீஸ் வெஜ் பால்ஸ்
21.மாத்ரி
22.டிக்கா கதியா
23.மிக்ஸ்ட் வெஜ் முதியா
25.ஆலு புஜியா
25.கட்டா மீட்டா நம்கின்
26.ரிங் முறுக்கு
27.தினை தேன்குழல்.
28.சிப்பி சோஹி
29.சேவ் சோளாஃபலி
30.குழலப்பம்


தீபாவளி ஸ்பெஷல் ரெசிப்பீஸ்.

புதன், 19 அக்டோபர், 2016

ஐப்பசி ரெசிப்பீஸ். RECIPES FOR RAINY SEASON.

1.இனிப்பு சேவு:-

தேவையானவை:- பச்சரிசி மாவு – 1 கப், கடலை மாவு – 1 கப், சர்க்கரை – 3 கப், தண்ணீர் – 1 கப், எண்ணெய் – பொரிக்கத் தேவையான அளவு.

செய்முறை:- பச்சரிசி மாவையும் கடலைமாவையும் கலந்து நன்கு பிசைந்து எண்ணெயில் காராச் சேவு அச்சில் போட்டுப் பிழித்து தாம்பாளத்தில் பரத்தி வைக்கவும். சர்க்கரையில் தண்ணீர் ஊற்றி அடுப்பில் வைத்து முற்றியபாகு வைக்கவும். பாகு தண்ணீரில் போட்டால் உருண்டையாக எடுக்க வரவேண்டும். இந்தப்பாகை சேவில் போட்டு எல்லாப் பக்கமும் படும்படி நன்கு குலுக்கிக் கலக்கிவிட்டு ஆறியவுடன் உபயோகப்படுத்தவும்.


2.மிளகு சேவு :-

தேவையானவை:- பச்சரிசிமாவு – 1 கப், கடலை மாவு – 1/2கப், பாசிப்பருப்பு மாவு – ½ கப், வெண்ணெய் – 1 டேபிள் ஸ்பூன், மிளகு – 1 டேபிள் ஸ்பூன், கருவேப்பிலை – 1 கைப்பிடி, உப்பு – அரை டீஸ்பூன், எண்ணெய் – பொரிக்கத் தேவையான அளவு.

செய்முறை:- பச்சரிசி மாவு, கடலை மாவு, பாசிப்பருப்பு மாவுடன் உப்பு வெண்ணெய், ஒன்றிரண்டாக உடைத்த மிளகு, பொடியாக அரிந்த கருவேப்பிலை போட்டு நன்கு கலக்கவும். காய்ந்த எண்ணெய் இரண்டு ஸ்பூன் ஊற்றி நன்கு கெட்டியாகப் பிசையவும். எண்ணெயைக் காயவைத்து காராசேவு அச்சில் போட்டுப் பிழிந்து மொறுமொறுப்பானதும் எடுக்கவும்.

பச்சைப் பட்டாணி தேங்காய் மாங்காய் சுண்டல்.GREEN PEAS SUNDAL.

6.பச்சைப் பட்டாணி தேங்காய் மாங்காய் சுண்டல்.


தேவையானவை:- பச்சைப் பட்டாணி – 2 கப், தேங்காய் கீற்று – நைஸாக அரிந்தது ஒரு கைப்பிடி, மாங்காய் கீற்று- நைஸாக அரிந்தது ஒரு கைப்பிடி, பச்சை மிளகாய் – 1 பொடியாக அரிந்தது, கருவேப்பிலை கொத்துமல்லித்தழை – சிறிது, தாளிக்க எண்ணெய் கடுகு, உளுந்து தலா அரை டீஸ்பூன்.

செய்முறை:- எண்ணெயைக் காயவைத்துக் கடுகு உளுந்து தாளித்து பச்சை மிளகாய் போட்டு பச்சைப் பட்டாணியை வதக்கி சிறிது நீர் தெளித்து மூடி போட்டு வேகவிடவும். வெந்ததும் உப்பு சேர்த்து இறக்கி பொடியாக அரிந்த கருவேப்பிலை கொத்துமல்லி மாங்காய் தேங்காய்க் கீற்றுகளைப் போட்டுக் கலந்து நிவேதிக்கவும். 

வெள்ளி, 7 அக்டோபர், 2016

பச்சை வேர்க்கடலை சுண்டல்:- GROUNDNUT/PEANUT SUNDAL.

பச்சை வேர்க்கடலை சுண்டல்:-

தேவையானவை:- பச்சை வேர்க்கடலை – 2 கப், தேங்காய்த்துருவல்- 1 டேபிள் ஸ்பூன், வரமிளகாய்- 1, கருவேப்பிலை – 1 இணுக்கு, உப்பு – அரை டீஸ்பூன், எண்ணெய்- 1 டீஸ்பூன், கடுகு, உளுந்து தலா ஒரு டீஸ்பூன். பெருங்காயப் பொடி – ஒரு சிட்டிகை.

செய்முறை:- பச்சை வேர்க்கடலையை உப்பு சேர்த்து சிறிது நீர் தெளித்துக் குக்கரில் ஒரு விசில் வேகவைக்கவும். எண்ணெயைக் காயவைத்துக் கடுகு உளுந்து தாளித்து பெருங்காயப்பொடி சேர்த்து வரமிளகாயைக் கிள்ளிப் போட்டு கருவேப்பிலை சேர்க்கவும். தேங்காயையும் போட்டு வெந்த வேர்க்கடலையைப் போட்டுப் புரட்டி எடுத்து நிவேதிக்கவும். 

டிஸ்கி:- இந்த ரெசிப்பீஸ் 6.10.2016 குமுதம் பக்தி ஸ்பெஷலில் வெளியானது.

சோள வடை:- CORN VADA.

சோள வடை:- 

தேவையானவை:- சோளமாவு – 1 கப், அரிசி மாவு – அரை கப், பெரிய வெங்காயம் – 1, பச்சை மிளகாய் – 1, மிளகாய்த்தூள் – கால் டீஸ்பூன், மல்லித்தழை- சிறிது, உப்பு – கால் டீஸ்பூன், எண்ணெய்- பொரிக்கத் தேவையான அளவு.

செய்முறை:- சோளமாவில் அரிசிமாவைப் போட்டு மிளகாய்த்தூள், உப்பு சேர்த்துப் பொடியாக அரிந்த பெரிய வெங்காயம், பச்சை மிளகாய், மல்லித்தழை சேர்த்து நன்கு கலக்கவும். சிறிது எண்ணெயைக் காயவைத்து ஊற்றி தண்ணீர் தெளித்து கெட்டி மாவாகப் பிசைந்து அரைமணி நேரம் ஊறவிடவும். வட்டமான மெல்லிய வடைகளாகத் தட்டி எண்ணெயில் பொன்னிறமாகப் பொரித்தெடுக்கவும்.

வியாழன், 6 அக்டோபர், 2016

ஸ்வீட் கார்ன் சாட். SWEET CORN CHAT.

3.ஸ்வீட் கார்ன் சாட்:-


தேவையானவை:- ஸ்வீட் கார்ன் முத்துக்கள் – ஒரு கப், வெள்ளரி – சின்னம் 1, ஆப்பிள் தக்காளி- சின்னம் 1, ஓமப்பொடி – ஒரு கைப்பிடி, மாதுளை முத்து – ஒரு கைப்பிடி, கொத்துமல்லித்தழை – 1 கைப்பிடி. எலுமிச்சை சாறு – சில துளிகள், சாட் மசாலா- அரை டீஸ்பூன்.

செய்முறை:- ஸ்வீட் கார்ன் முத்துக்களை ஆவியில் வேகவைத்து எடுக்கவும். வெள்ளரி, தக்காளியைப் பொடியாக நறுக்கவும். கொத்துமல்லித்தழையையும் பொடியாக அரியவும். ஒரு பௌலில் ஸ்வீட் கார்ன் முத்துக்களைப் போட்டு அதன் மேல் வெள்ளரி, தக்காளித் துண்டுகளைத் தூவி மாதுளை, கொத்துமல்லித் தழையையும் போடவும். அதன் மேல் ஓமப்பொடி தூவி எலுமிச்சை சாறு தெளித்து சாட் மசாலா தூவிக் கொடுக்கவும். சாட் மசாலாவில் உப்பு இருக்கும் என்பதால் தனியாக உப்பு தூவ தேவையில்லை.

புதன், 5 அக்டோபர், 2016

சோளே சுண்டல். CHOLE SUNDAL

2.சோளே சுண்டல் :-

தேவையானவை:- பச்சைக் கொண்டைக்கடலை – 1 கப், வரமிளகாய் – 1, பச்சை மிளகாய் – 1, சீரகம் – 1 தேக்கரண்டி, தேங்காய்த்துருவல் – 1 டேபிள் ஸ்பூன், கொத்துமல்லித்தழை – ஒரு கைப்பிடி, உப்பு- அரை டீஸ்பூன்.எண்ணெய் – ஒரு டீஸ்பூன், கடுகு- அரை டீஸ்பூன், உளுந்து – அரை டீஸ்பூன். 

செய்முறை:- பச்சைக் கொண்டைக்கடலையை குக்கரில் போட்டு கால் தண்ணீர் தெளித்து ஒரு விசில் வரும்வரை வேகவைத்து இறக்கவும். மிக்ஸியில் வரமிளகாய், பச்சை மிளகாய், சீரகம் தேங்காய்த்துருவல்,உப்புப் போட்டு சுற்றவும். கொத்துமல்லித்தழையைப் பொடியாக அரியவும். எண்ணெயைக் காயவைத்து கடுகு உளுந்து தாளித்து அரைத்த கலவையைப் போட்டுக்கிளறி வேகவைத்த சோளேயைச் சேர்க்கவும். கொத்துமல்லி தூவி இறக்கி நிவேதிக்கவும். 

டிஸ்கி:-இந்த ரெசிப்பி 6.10.2016 குமுதம் பக்தி ஸ்பெஷலில் வெளியானது. 

நவராத்திரி ஸ்பெஷல் ப்ரசாதங்கள். காராமணி இனிப்பு சுண்டல். COWPEAS SWEET SUNDAL.

காராமணி இனிப்பு சுண்டல்


தேவையானவை:- காராமணி – 1 கப், வெல்லம் – முக்கால் கப், தேங்காய்த்துருவல் – அரை கப், ஏலக்காய்த்தூள் – ஒரு சிட்டிகை, நெய் – 2 டீஸ்பூன்.

செவ்வாய், 4 அக்டோபர், 2016

பர்ப்பிள் கேபேஜ் சாலட் :- PURPLE CABBAGE SALAD.

ர்ப்பிள் கேபேஜ் சாலட் :-

தேவையானவை :-

வயலட் கேபேஜ் – 250 கிராம், நீளமாக நறுக்கவும். பச்சை அவரை – ஒரு கப், சிவப்புக் குடைமிளகாய் – சின்னம் ஒன்று நீளமாக விதையில்லாமல் நறுக்கவும். பைனாப்பிள் – கால் பாகம் சதுரத் துண்டுகள் செய்யவும், கிஸ்மிஸ் – கால் கப், வறுத்த பாதாம் – கால் கப், புதினா இலை – ஒரு கைப்பிடி, எலுமிச்சை சாறு – ஒரு டேபிள் ஸ்பூன், தேன் – 2 டேபிள் ஸ்பூன், சில்லி கார்லிக் சாஸ் – கால் டீஸ்பூன், தக்காளி – கெச்சப் – 1 டேபிள் ஸ்பூன்.
Related Posts Plugin for WordPress, Blogger...