எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

வியாழன், 31 மார்ச், 2022

பாசிப்பயறு கிச்சடி

பாசிப்பயறு கிச்சடி



தேவையானவை:-பச்சரிசி – 1 கப், உடைத்த பாசிப்பயறு ( மூங்க்தால் ) – ½ கப், தக்காளி – 1, மஞ்சள் தூள் – 1 சிட்டிகை, சாம்பார் பொடி – 1 டீஸ்பூன்., ஆம்சூர் – ½ டீஸ்பூன் ( மாங்காய் பொடி – தேவைப்பட்டால் ), உருளைக்கிழங்கு சின்னம் – 1 சிறுதுண்டுகளாக நறுக்கவும்., உப்பு – 1 டீஸ்பூன், தாளிக்க :- நெய் – 2 டீஸ்பூன், ஜீரகம் – 1 டீஸ்பூன்

செய்முறை:-பச்சரிசியைக் களைந்து உடைத்த பாசிப்பயறைச் சேர்த்து தக்காளிமஞ்சள்தூள்சாம்பார் பொடி, 3 கப் தண்ணீர் ஊற்றி இரண்டு விசில் குக்கரில் வைத்து எடுக்கவும்ஆறியதும் உப்பும் ஆம்சூர் பொடியும் சேர்த்து லேசாக மசித்து நெய்யில் ஜீரகம் தாளித்துப் போடவும்.

 

ஞாயிறு, 27 மார்ச், 2022

மொச்சை மண்டி

மொச்சை மண்டி



தேவையானவை:- மொச்சை - 1 கப்அரிசி களைந்த கெட்டிக் கழுநீர்/மண்டி -2 கப்வெண்டைக்காய் - 8, சின்ன வெங்காயம் - 10, பூண்டு - 8 பல் , பச்சை மிளகாய் - 10, தக்காளி - சின்னம் 1, புளி - எலுமிச்சை அளவுஉப்பு - 1 டீஸ்பூன்எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்கடுகுஉளுந்து தலா - 1 டீஸ்பூன்வெந்தயம் - அரை டீஸ்பூன்பெருங்காயம் - 1 துண்டுகருவேப்பிலை - 1 இணுக்கு.  மண்டிப் பொடி :- ஒரு டீஸ்பூன் பச்சரிசி கால் டீஸ்பூன் வெந்தயம்நகக்கண் அளவு பெருங்காயத்தை வறுத்து நுணுக்கி வைக்கவும்.

செய்முறை:-  மொச்சையை முதல்நாளே ஊறப்போடவும்மறுநாள் குக்கரில் மூன்று விசில் வரும்வரை வேகவைத்து நீரை வடித்து வைக்கவும்வெண்டைக்காய்வெங்காயம்பூண்டுதக்காளிபச்சை மிளகாயைக் கழுவித் துடைத்து துண்டுகளாக்கி வைக்கவும்கடாயில் எண்ணெயை ஊற்றிக் கடுகு உளுந்து பெருங்காயம் வெந்தம் தாளித்துப் பச்சை மிளகாய்கருவேப்பிலைவெங்காயம்தக்காளிபூண்டுவெண்டிக்காயைப் போட்டு வதக்கவும்அரிசி மண்டியில் உப்புப் புளியை ஊறப்போட்டுக் கரைத்து ஊற்றவும்இவை எல்லாம் கொதித்து வரும்போது மொச்சையைச் சேர்க்கவும்மண்டிப்பொடியைப் போட்டுக் கலக்கிவிட்டு இறக்கவும்.

 

புதன், 23 மார்ச், 2022

ராஜ்மா மசால்

ராஜ்மா மசால்


தேவையானவை:- ராஜ்மா - 1 கப்பெரிய வெங்காயம் - 1 நறுக்கியதுதக்காளி - 1 நறுக்கியதுபூண்டு - 4 (விரும்பினால்), மிளகாய்ப் பொடி - 1 டீஸ்பூன்மல்லிப் பொடி - 1 டீஸ்பூன்கரம் மசாலா பொடி - 1/4 டீஸ்பூன்மஞ்சள் தூள் - 1 சிட்டிகைஉப்பு - 1/2 டீஸ்பூன்கடுகு - 1 டீஸ்பூன்உளுந்து - 1 டீஸ்பூன்சோம்பு - 1/4 டீஸ்பூன்பட்டை - 1 இன்ச் துண்டுஇலை - 1 துண்டுகல்பாசிப்பூ - 1 துண்டுஎண்ணெய் - 5 மிலி

செய்முறை :-  ராஜ்மாவைக் கழுவி 8 மணி நேரம் ஊறவைக்கவும்ப்ரஷர் குக்கரில் 4., 5 விசில் வரும் வரை வேகவைக்கவும்ஒரு பானில் எண்ணெய் ஊற்றி கடுகு போட்டு வெடித்ததும்., உளுந்து., சோம்பு போட்டு சிவந்ததும்., பட்டை., கல்பாசிப்பூ., இலை போடவும்பெரிய வெங்காயம்., தக்காளி., பூண்டு போட்டு., நன்கு வதக்கவும்மிளகாய்த்தூள்., மல்லித்தூள்., மஞ்சள்தூள்., கரம் மசாலா போட்டு உப்பு சேர்க்கவும்கடைசியாக வெந்த ராஜ்மாவைப் போட்டு நன்கு கிளறவும். 5 நிமிடம் மசாலா நன்கு சேரும் வரை வைக்கவும்சப்பாத்தியுடன் பரிமாறவும்..

 

ஞாயிறு, 20 மார்ச், 2022

காராமணி மாவத்தக் குழம்பு

காராமணி மாவத்தக் குழம்பு



தேவையானவை :- தட்டைப்பயறு ( காராமணி ) - 1 கப்மாங்காய் வற்றல் – 10, சின்ன வெங்காயம் – 10, பூண்டு – 2, தக்காளி – 1, மிளகாய்ப்பொடி - 2 டீஸ்பூன்மல்லிப்பொடி - 1 டேபிள்ஸ்பூன்மஞ்சள்பொடி - 1 சிட்டிகை., புளி - 1 நெல்லிக்காய் அளவுஉப்பு - 1 1/2 டீஸ்பூன்எண்ணெய் - 2 டீஸ்பூன்கடுகு - 1 டீஸ்பூன்சீரகம் - 1 டீஸ்பூன்கருவேப்பிலை - 1 இணுக்கு.

செய்முறை:- தட்டைப்பயறை வறுத்து பிரஷர் குக்கரில் 4 விசில் வரும்வரை வேகவிடவும்மாவற்றல்., தக்காளி., வெங்காயத்தை சின்ன தட்டில் குக்கரில் வைத்து வேகவிடவும்ஆவி வெளியேறியதும் இரண்டையும் நன்றாக கலந்து மிளகாய் பொடி., மல்லி பொடி., மஞ்சள் பொடி போடவும்புளியை 2 கப் தண்ணீரில் கரைத்து உப்புடன் குழம்பில் சேர்க்கவும்கொதிவந்தபின் சிம்மிம் 5 நிமிடம் வைத்து., எண்ணையில் கடுகு., ஜீரகம் தாளித்து கொட்டவும்பூண்டு தட்டிப் போட்டு இறக்கவும்இதை சாதம் அல்லது ஊத்தப்பம் அல்லது இட்லியுடன் பரிமாறவும்.


 

வியாழன், 17 மார்ச், 2022

கோஸ் முளைகட்டிய பயறு துவட்டல்

கோஸ் முளைகட்டிய பயறு  துவட்டல்

தேவையானவை:- முளைவிட்ட பச்சைப்பயறு - 200 கிராம்முட்டைக்கோஸ் - 200 கிராம்பெரிய வெங்காயம் – 1, எண்ணெய் - 2 டீஸ்பூன்கடுகு - 1 டீஸ்பூன்,உளுந்து - 1 டீஸ்பூன்வரமிளகாய் – 1, கருவேப்பிலை_ 1 இணுக்கு

 

செய்முறை :- முளை விட்ட பச்சைப் பயறை அரை வேக்காடு வேகவைத்துக் கொள்ளவும்முட்டைக்கோஸை கழுவி நறுக்கவும்வெங்காயத்தை தோலுரித்து பொடியாக நறுக்கவும்பானில் எண்ணெயைக் காயவைத்து கடுகு போட்டு வெடித்ததும் உளுந்து போட்டு சிவந்ததும்., இரண்டாகக் கிள்ளிய வரமிளகாய்., கருவேப்பிலை போடவும்வெங்காயத்தைப் போட்டு நன்கு வதக்கி முட்டைக்கோஸை சேர்த்து சிறிது வதக்கவும்வேகவைத்த பயறையும் உப்பையும் சேர்த்து சிறிது 
தண்ணீர்
 தெளித்து மூடி போட்டு சிம்மில் 5 நிமிடம் வேகவிடவும்சூடாக சுண்டலாகவோ., சாம்பார்., குழம்பு சாதத்துக்கு தொட்டுக் கொள்ளவோ பரிமாறவும்.

 

ஞாயிறு, 13 மார்ச், 2022

மூங்தால் ( பாசிப்பயறு) சப்ஜி

மூங்தால் ( பாசிப்பயறுசப்ஜி


தேவையானவை:- பாசிப்பயறு - 1 கப்பெரிய வெங்காயம் – 1, தக்காளி – 1, இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டீஸ்பூன்வரமிளகாய்த் தூள் - 1/2 டீஸ்பூன்,தனியா தூள் - 1/2 டீஸ்பூன்மஞ்சள் பொடி - 1 சிட்டிகைகரம் மசாலா பொடி - 1/3 டீஸ்பூன்,உப்பு - 1/2 டீஸ்பூன்எண்ணெய் - 2 டீஸ்பூன்

செய்முறை:- பாசிப்பயறை வறுத்து கழுவி தேவையான தண்ணீர் ஊற்றி குக்கரில் வேகவிடவும்வெங்காயம்தக்காளியை தனித்தனியாக அரைக்கவும்ஒரு பானில் எண்ணெய் ஊற்றி வெங்காய பேஸ்டைப் போட்டு வதக்கவும்அதில் இஞ்சி பூண்டு பேஸ்டைப் போட்டு 2 நிமிடம் வதக்கி எல்லாப் பொடிகளையும் போட்டு உப்புதக்காளி பேஸ்ட் சேர்க்கவும்ஒரு நிமிடம் வதக்கி வேகவைத்த பாசிப்பயறைத் தண்ணீருடன் சேர்க்கவும். 5 நிமிடம் நன்கு சமைத்து கோபி பரோட்டா அல்லது ஆலு பரோட்டாக்களுடன் பரிமாறவும்.

 

வியாழன், 10 மார்ச், 2022

சோயா ரொட்டி

சோயா ரொட்டி


தேவையானவை:- கோதுமை -1 கிலோ, வெள்ளை சோயா – 1 கப், உப்பு, எண்ணெய், தண்ணீர் – தேவையான அளவு.

செய்முறை:- கோதுமையையும் சோயாவையும் கழுவிக் காயவைத்து மிஷினில் அரைத்து வைக்கவும். இந்த மாவில் ஒரு கப் எடுத்து கால் டீஸ்பூன் உப்பு, அரை கப் தண்ணீர் சேர்த்துப் பிசையவும். எண்ணெய் விட்டு மடித்து மடித்துப் பிசைந்து சப்பாத்திகளாகத் திரட்டி சுட்டு எடுக்கவும். புரோட்டீன் நிறைந்தது சோயா என்பதால் குறைவாகச் சேர்த்தால் போதும்.

 

ஞாயிறு, 6 மார்ச், 2022

குமுதம் சிநேகிதியில் பயறு வகைகளில் பல்சுவை சமையல்.

குமுதம் சிநேகிதியில் பயறு வகைகளில் பல்சுவை சமையல். 


7.10.2021 குமுதம் சிநேகிதி இதழுடன் வெளியான இணைப்பில் ”பயறு வகைகளில் பல்சுவை சமையல்”  என்னும் தலைப்பில் எனது 20 சமையல் குறிப்புகள் வெளியாகி உள்ளன.


பயறு வகைகளில் பல்சுவை சமையல்



20 ரெசிப்பீஸ்

1.ஃபலாஃபல்

2.மூங்தால் ( பாசிப்பயறு) சப்ஜி

3.கோஸ் முளைகட்டிய பயறு  துவட்டல்

4.பீட்ரூட் பயறு தோசை

5.காராமணி மாவத்தக் குழம்பு

6.பேபிகார்ன் சூப்

7.ராஜ்மா மசால்

8.மொச்சை மண்டி

9.சோயா ரொட்டி

10.காலிதால் மாக்னி

11.சோளே க்ரேவி

12.கறுப்பு உளுந்து தோசை

13.கொள்ளு பார்லி சூப்

14.கொள்ளுப் பொரியல்

15.மல்லாட்டைச் சட்னி

16.பச்சை அவரை குருமா

17.சிகப்பு சோயா பிரட்டல்

18.பாசிப்பயறு கிச்சடி

19.பச்சைப் பட்டாணி பனீர் துவட்டல்

20.சன்னா கட்லெட்


நன்றி குமுதம் சிநேகிதி.

 

வியாழன், 3 மார்ச், 2022

வெஜ் கட்லெட்

வெஜிடபிள் கட்லெட்:-


தேவையானவை:- காரட் - 1, பீன்ஸ் - 4, பச்சைப் பட்டாணி -அரை கப், அவித்த உருளைக்கிழங்கு - 2 , பெரிய வெங்காயம் - 1 , இஞ்சி - சிறு துண்டு, கொத்துமல்லித்தழை - ஒரு கைப்பிடி, மிளகாய்த்தூள் - கால் டீஸ்பூன், சோம்புத்தூள் - ஒரு சிட்டிகை, கரம் மசாலா - 1 சிட்டிகை, வெண்ணெய் - 2 டீஸ்பூன், பச்சைமிளகாய் -2, உப்பு - அரை டீஸ்பூன், நெய் + எண்ணெய் - 50 கிராம். மைதாமாவு - கால் கப், ரஸ்க் தூள் - அரை கப்.

செய்முறை:- காரட் பீன்ஸைக் கழுவிப் பொடியாக நறுக்கவும். பச்சைமிளகாய்,  பெரிய வெங்காயத்தைப் பொடியாக அரியவும். ஒரு பானில் சிறிது எண்ணெய் ஊற்றி வெங்காயம், பச்சை மிளகாய், காரட், பீன்ஸ், பச்சைப் பட்டாணி,  இஞ்சி போட்டு நன்கு வதக்கவும். இதில் மஞ்சள் தூள், உப்பு, மிளகாய், சோம்புத்தூள்,  போட்டு அவித்த உருளைக்கிழங்கு, வெண்ணெயைக் கலந்து நன்கு பிசையவும்.  நீள்சதுர வடிவில் கட்லெட்டுகளாகத்  தட்டி வைக்கவும்.  மைதாவில் சிறிது உப்பு மிளகாய்த்தூள் தண்ணீர் சேர்த்துக் கட்லெட்டுகளை மாவில் தோய்த்து ரஸ்கில் புரட்டி,  தட்டையான பேனில் மூன்று நான்காகப் போட்டு இருபுறமும் நன்கு வேகவைத்து மயோனிஸோடு பரிமாறவும். 
 
Related Posts Plugin for WordPress, Blogger...