எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

வியாழன், 22 டிசம்பர், 2022

சுகியன்:-

சுகியன்:-


தேவையானவை:- இட்லி மாவு ரெண்டு கப், கடலைப்பருப்பு – ஒரு கப், வெல்லம் – முக்கால் கப், தேங்காய்த்துருவல் – 1 டேபிள் ஸ்பூன், முந்திரி – 10, ஏலப்பொடி – 1 சிட்டிகை, நெய் – 2 டீஸ்பூன், எண்ணெய் – பொரிக்கத்தேவையான அளவு.

செய்முறை:- கடலைப்பருப்பை வேகவைத்து வெல்லம் தேங்காய் சேர்த்துக் கிளறிப் பூரணம் செய்து முந்திரியை வறுத்துப் போடவும். இந்தப் பூரணத்தை எலுமிச்சை அளவு உருட்டி வைக்கவும். இந்த உருண்டைகளை இட்லிமாவில் தோய்த்து எண்ணெயில் பொரித்து எடுக்கவும்..

 

புதன், 21 டிசம்பர், 2022

அசோகா :-

அசோகா :-


தேவையானவை :- பாசிப்பருப்பு – 1 கப் , கோதுமை மாவு – 1 கப்,  எண்ணெய் - அரைகப், நெய் – கால் கப், டால்டா - கால் கப், சர்க்கரை – ஒன்றரைகப். முந்திரி பாதாம் கிஸ்மிஸ் – தலா 8, ஏலக்காய் – 2 தோலோடு பொடிக்கவும். ரெட் ஃபுட் கலர் - சிறிது.

செய்முறை :- பாசிப்பருப்பை வேகவிடவும். நன்கு வெந்ததும் தண்ணீர் ஊற்றி நன்கு கரைத்து வைக்கவும். கோதுமை மாவை எண்ணெயைக் காயவைத்து பொன்னிறமாகும் வரை வறுக்கவும். இதில் நீர்க்கக் கரைத்த பாசிப்பருப்பை ஊற்றவும். இரண்டும் சேர்ந்து சுருண்டு வரும்போது சர்க்கரை சேர்த்து நன்கு கிளறவும். கலர்ப்பொடி சேர்க்கவும், நெய்யை உருக்கி அதில் முந்திரி பாதாம் கிஸ்மிஸை வறுக்கவும். உருக்கிய மிச்ச நெய்யையும் டால்டாவையும்  அல்வாவில் அவ்வப்போது ஊற்றிக் கிளறி பாத்திரத்தில் ஒட்டாமல் சுருள வந்ததும் இறக்கி முந்திரி பாதம் கிஸ்மிஸை சேர்க்கவும். ஏலப்பொடி சேர்த்துக் கிளறிப் பரிமாறவும்.

 

 

செவ்வாய், 20 டிசம்பர், 2022

இருபருப்பு வடை.

இருபருப்பு வடை.


தேவையானவை:- கடலைப்பருப்பு – 1 கப், வெள்ளை உருண்டை உளுந்தம் பருப்பு -1 கப், பச்சைமிளகாய் – 2, வரமிளகாய்- 2, கருவேப்பிலை, கொத்துமல்லி – தலா ஒரு கைப்பிடி, உப்பு – அரை டீஸ்பூன். எண்ணெய்- பொரிக்கத் தேவையான அளவு.

செய்முறை:- கடலைப்பருப்பையும் உளுந்தம் பருப்பையும் தனித்தனியாக ஊறவைக்கவும். ஊறியதும் மிக்ஸியில் பச்சைமிளகாய், வரமிளகாயை உப்பு சேர்த்து அரைத்து உளுந்தையும் கடலைப்பருப்பையும் போட்டு ஒன்றிரண்டாக அரைத்து எடுக்கவும். அதில் கருவேப்பிலை கொத்துமல்லியைப் பொடியாக அரிந்து போட்டு இளக்கமாகத் தட்டி எண்ணெயைக் காயவைத்துப் பொரித்தெடுக்கவும்.

 

ஞாயிறு, 18 டிசம்பர், 2022

.உளுந்துக் களி:-

.உளுந்துக் களி:-


தேவையானவை :- வறுத்து அரைத்த உளுந்து மாவு – 1 கப், வெல்லம் துருவியது – கால் கப், கருப்பட்டி துருவியது – அரை கப், உப்பு – 1 சிட்டிகை, பால் – 1 கப், நெய் – ஒரு டேபிள் ஸ்பூன்.

செய்முறை:- வெதுவெதுப்பான பாலில் உளுந்து மாவைக் கரைத்து அடுப்பில் வைத்துக் கிளறவும். மாவு திரண்டு வரும்போது உப்பு, துருவிய வெல்லம், கருப்பட்டி சேர்க்கவும். நன்கு சேர்ந்து திரண்டதும் நெய்யை ஊற்றவும். தொட்டால் ஒட்டாத பதம் வந்ததும் எடுத்து உபயோகிக்கவும்.

 

வெள்ளி, 16 டிசம்பர், 2022

பாசிப்பருப்பு போளி.:-

பாசிப்பருப்பு போளி.:-


தேவையானவை:- மைதா – 2 கப், பாசிப்பருப்பு – முக்கால் கப், சன்ன தேங்காய்த்துருவல் – 2 டேபிள் ஸ்பூன், சர்க்கரை – அரை கப், ஏலத்தூள் – 1 சிட்டிகை, எண்ணெய் – ஒரு கப், நெய் – அரை கப். உப்பு – 1 சிட்டிகை. மஞ்சள் தூள் – 1 சிட்டிகை. பச்சரிசி மாவு – 2 டீஸ்பூன்.

செய்முறை: மைதாவில் மஞ்சள்தூள், உப்பு போட்டு தண்ணீர் தெளித்துப் பிசைந்து எண்ணெயில் இரண்டு மணி நேரம் ஊறப்போடவும்.பாசிப்பருப்பை நறுக்குப் பதத்தில் வேகவைத்து தேங்காய்த்துருவலும் சர்க்கரையும் சேர்த்து அரைக்கவும். இதில் ஏலத்தூள், பச்சரிசி மாவு சேர்த்து நெல்லிக்காய் அளவு உருண்டைகளாக உருட்டவும். மைதாவில் எலுமிச்சை அளவு உருண்டைகள் எடுத்துத் தட்டி அதில் பாசிப்பருப்புப் பூரணத்தை வைத்து எண்ணெய் தொட்டு போளியாகத் தட்டி தோசைக்கல்லில் போட்டு சுற்றிலும் நெய் விட்டு வேகவைத்து எடுக்கவும்.

 

புதன், 14 டிசம்பர், 2022

பெசரட்:-

பெசரட்:-


தேவையானவை :- பச்சரிசி – 1 கப், பாசிப்பயறு – 2 கப், பச்சை மிளகாய் – 2 பொடியாக அரியவும்., தேங்காய்த் துருவல் – 1 டேபிள் ஸ்பூன், இஞ்சி – 1 இன்ச் துருவவும்., பெரிய வெங்காயம் – 1 பொடியாக அரியவும்., சீரகம் – ½ டீஸ்பூன், உப்பு – ½ டீஸ்பூன், எண்ணெய் – 30 மிலி

செய்முறை :- பச்சரிசியையும் பாசிப்பருப்பையும் கழுவி ஊறவைக்கவும். இரண்டு மணி நேரத்துக்குப் பிறகு கொரகொரப்பாக அரைக்கவும். அதில் பொடியாக அரிந்த பச்சை மிளகாய், தேங்காய்த் துருவல், இஞ்சி, பெரிய வெங்காயம், சீரகம், உப்பு சேர்த்து நன்கு கலந்து 10 நிமிடம் மூடி வைக்கவும். தோசைக்கல்லைக் காயவைத்து சிறிது கனமான தோசைகளாக சுட்டு திருப்பிப் போட்டு மொறுமொறுப்பாக வேகவைத்து தக்காளித் துவையல் அல்லது மாங்காய்த் தொக்கு அல்லது கோங்குரா சட்னியுடன் பரிமாறவும்.

 

திங்கள், 12 டிசம்பர், 2022

துவரம்பருப்பு தோசை:-

துவரம்பருப்பு தோசை:-


தேவையானவை :- துவரம் பருப்பு – அரை கப், பச்சரிசி +புழுங்கல் அரிசி – ஒரு கப், உளுந்து – ஒரு டேபிள் ஸ்பூன், வெந்தயம் – 1 டீஸ்பூன்,. உப்பு – அரை டீஸ்பூன், எண்ணெய் – 20 மிலி, பொடியாக அரிந்த வெங்காயம் – 1 டேபிள் ஸ்பூன்.

செய்முறை:- துவரம்பருப்பைக் களைந்து தனியாக ஊறவைக்கவும். பச்சரிசி, புழுங்கல் அரிசி , உளுந்தை வெந்தயத்தோடு களைந்து ஊறவைக்கவும். இரண்டு மணி நேரம் ஊறியதும் அரிசி உளுந்தை அரைத்து அதன்பின் துவரம் பருப்பைச் சேர்த்து அரைத்து உப்பு சேர்த்துக் கரைக்கவும். 4 மணி நேரம் கழித்து வெங்காயம் சேர்த்துக் கரைத்து தோசைக்கல்லில் தோசைகளாக ஊற்றி காரச் சட்னியோடு பரிமாறவும்.

 

ஞாயிறு, 4 டிசம்பர், 2022

பாசிப்பருப்பு அப்பம்:-

பாசிப்பருப்பு அப்பம்:-


தேவையானவை :- பச்சரிசி – ஒரு கப், பாசிப்பருப்பு – அரை கப், வெல்லம் + கருப்பட்டி – அரை கப். எண்ணெய் – பொரிக்கத்தேவையான அளவு.

செய்முறை:- பச்சரிசியைக் களைந்து ஊறவைத்து மிக்ஸியில் பொடித்துச் சலிக்கவும். இதில் வெல்லம் கருப்பட்டியைப் பாகு காய்ச்சி ஊற்றி இரண்டு மணி நேரம் ஊறவைக்கவும். பாசிப்பருப்பை நன்கு மலரும்படி வேகவைத்து இந்த மாவில் போட்டுக் கலக்கி எண்ணெயைக் காயவைத்து அப்பங்களாகப் பொரித்து எடுத்துப் பரிமாறவும்.

 
Related Posts Plugin for WordPress, Blogger...