எனது பதிநான்கு நூல்கள்

எனது பதிநான்கு நூல்கள்
எனது பதிநான்கு நூல்கள்

சனி, 18 செப்டம்பர், 2010

VENKAYAK KOSE .. வெங்காயக் கோஸ்...


VENKAYAK KOSE..:-
NEEDED:-
BIG ONION - 2 NOS
TOMATO - 1 NO
SMALL POTATO - 1 NO

FOR GRINDING :-
RED CHILLIES - 6 NOS.
CRATED COCONUT - 1 CUP
SOMPH - 1 TSP
JEERA - 1 TSP
PEPPER - 5 NOS.
FRIED GRAM - 1 TBLSPN
GARLIC - 2 PODS
SMALL ONION - 2 NOS.

OIL - 1/2 TBLSPN.
MUSTARD - 1 TSP
URAD DHAL - 1 TSP
CLOVE - 1 NO
CURRY LEAVES - 1 ARK
SALT - 1 TSP.

METHOD :-
WASH AND PEEL AND CUT ONION ., TOMATO AND POTATO INTO THIN STICKS..
GRIND ALL THE INGREDIENTS.
HEAT OIL IN A KADAI ADD MUSTARD WHEN IT SPLUTTERS ADD URAD DHAL. WHEN IT BECOMES BROWN ADD CLOVE AND CURRY LEAVES..
ADD ONIONS., TOMATO., AND POTATO AND SAUTE WELL.
ADD THE MASALA AND STIRR WELL..
WHEN OIL SEPARATES AT THE SIDE ADD 3 TUMBLERS OF WATER AND SALT.
BRING TO BOIL AND COOK FOR 7 MIN .
REMOVE FROM FIRE SERVE OT WITH IDDLIES OR DOSAS.
ITS A CHETTINADU SPL SIDE DISH FOR TIFFINS.

வெங்காயக் கோஸ்:-
தேவையானவை :-
பெரிய வெங்காயம் - 2
தக்காளி - 1
சிறிய உருளைக்கிழங்கு - 1

அரைக்க:-
வரமிளகாய் - 6.
துருவிய தேங்காய் - 1 கப்
சோம்பு - 1 டீஸ்பூன்
சீரகம் - 1 டீஸ்பூன்
மிளகு - 5
பொட்டுக்கடலை - 1 டேபிள்ஸ்பூன்
பூண்டு - 2 பல்
சின்ன வெங்காயம் - 2

எண்ணெய் - 1/2 டேபிள்ஸ்பூன்
கடுகு - 1 டீஸ்பூன்
உளுந்து - 1 டீஸ்பூன்
கிராம்பு - 2
கருவேப்பிலை - 1 இணுக்கு
உப்பு - 1 டீஸ்பூன்

செய்முறை :-
பெரிய வெங்காயம் ., தக்காளி., உருளை மூன்றையும் தோல் சீவி குச்சி குச்சியாக நறுக்கவும்.
அரைக்கக் கொடுத்துள்ளவற்றை அரைக்கவும்.
கடாயில் எண்ணெயைக் காய வைத்து கடுகு போட்டு வெடித்ததும்., உளுந்து போட்டு சிவந்ததும் கிராம்பு போட்டு கருவேப்பிலை போடவும்.
வெங்காயம் ., தக்காளி., உருளை போட்டு நன்கு வதக்கவும்.
அரைத்த மசாலாவை சேர்த்து நன்கு வதக்கவும்.
பக்கங்களில் எண்ணெய் பிரிந்து வரும்போது 3 டம்ளர் தண்ணீர் சேர்க்கவும்.
7 முதல் 10 நிமிடங்கள் வரை கொதிக்கவிட்டு வேகவிடவும்.
சூடாக இட்லி தோசையுடன் பரிமாறவும்.
இது செட்டிநாட்டின் ஸ்பெஷல்.
பலகாரத்துக்கு தொட்டுக் கொள்வது..

5 கருத்துகள்:

 1. நல்லா இருக்குங்க ரெசிப்பி . செய்து பார்க்கிறேன்

  பதிலளிநீக்கு
 2. சூப்பராக இருக்கு..இதில் கோஸ் மாதிரி காய்களை வெட்டுவதால் இதற்கு இந்த பேர அக்கா...

  செய்து பார்த்துவிட்டு சொல்கிறேன்...நன்றி...

  பதிலளிநீக்கு
 3. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
  என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!!

  பதிலளிநீக்கு

Related Posts Plugin for WordPress, Blogger...