மிளகுக் குழம்பு
தேவையானவை:- மிளகு – அரை டேபிள் ஸ்பூன், சீரகம் – 1 டீஸ்பூன், பச்சரிசி – கால் டேபிள் ஸ்பூன், பொட்டுக்கடலை – கால் டேபிள் ஸ்பூன், சின்னவெங்காயம் – 15. உரித்துப் பொடியாக அரியவும். பூண்டு – 10 இதழ் உரித்துப் பொடியாக அரியவும். தக்காளி – 1 பொடியாக அரியவும். புளி – நெல்லிக்காய் அளவு, உப்பு – 1 டீஸ்பூன், எண்ணெய் – 1 டேபிள் ஸ்பூன், கடுகு – அரை டீஸ்பூன்.
செய்முறை:- மிளகு சீரகம், பொட்டுக்கடலை பச்சரிசியைத் தனித்தனியாக கடாயில் போட்டு வெதுப்பிக் கொள்ளவும். இதை மிக்ஸியில் நன்கு பவுடராகப் பொடித்து வைக்கவும். உப்புப் புளியை 3 கப் தண்ணீரில் கரைத்து இந்தப் பொடியைப் போட்டு வைக்கவும். பானில் எண்ணெயைக் காயவைத்து கடுகு போட்டு வெடித்ததும் வெங்காயம் பூண்டு தக்காளியை சிறுதீயில் மென்மையாகும் வரை வதக்கவும். அதில் உப்புப்புளியில் கரைத்த மிளகு விழுதைக் கொட்டி எண்ணெய் பிரியும்வரை வேக வைத்து இறக்கவும்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக