சேனைக்கிழங்கு தேங்காய்க் குழம்பு
தேவையானவை:- சேனைக்கிழங்கு – கால் கிலோ, சின்ன வெங்காயம் – 8, வரமிளகாய் - 5, வரமல்லி – 2 டீஸ்பூன், சீரகம், மிளகு – தலா ஒரு டீஸ்பூன், தேங்காய்த் துருவல் – அரை மூடி, தேங்காய் எண்ணெய் – 3 டீஸ்பூன், உப்பு - டீஸ்பூன், கடுகு, வெந்தயம் – தலா அரை டீஸ்பூன், கருவேப்பிலை – 1 இணுக்கு.
செய்முறை:- சேனைக்கிழங்கைத் தோல் சீவிக் கால் இஞ்ச் அளவு சதுரத் துண்டுகளாக வெட்டவும். ஒரு டீஸ்பூன் எண்ணெயில் வதக்கி வேக விடவும். முக்கால் பதம் வெந்ததும் நீரை வடித்து வைக்கவும். ஒரு டீஸ்பூன் எண்ணெயில் வரமிளகாய், வரமல்லி, மிளகு, சீரகம், தேங்காயை வதக்கி அரைத்து சின்ன வெங்காயத்துடன் சேனைக்கிழங்கில் போட்டு அரை கப் நீரூற்றி வேக விடவும். வெந்ததும் உப்பு சேர்த்து எண்ணெயில் கடுகு, வெந்தயம், கருவேப்பிலை தாளித்துக் கொட்டவும்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக