எனது பதிநான்கு நூல்கள்

எனது பதிநான்கு நூல்கள்
எனது பதிநான்கு நூல்கள்

புதன், 10 டிசம்பர், 2014

புதன் முதல் சனி வரை நிவேதனங்கள் WEDNESDAY, THURSDAY, FRIDAY, SATURDAY RECIPES

4. கிருஷ்ணப் ப்ரசாதம். – புதன் பெருமாள்

இது இஸ்கான் கோயிலில் கிடைக்கிறது. கிட்டத்தட்ட சுருள் பூரி டைப் இனிப்பு. ஆனால் நீள அப்பளப்பூவை மடித்து ஒன்றின் மேல் ஒன்று ஒட்டியது போலச் செய்வது.தேவையானவை:-

மைதா – 2 கப்
நெய் – 2 டேபிள் ஸ்பூன்
பேக்கிங் சோடா – 1 சிட்டிகை ( விரும்பினால் )
சர்க்கரை – 1 கப்
உப்பு -  1 சிட்டிகை.
ஆரஞ்ச் புட் கலர் – 1 சிட்டிகை.
எண்ணெய் –தேவையான அளவு

செய்முறை:-

மைதாவை ஒரு பவுலில் போட்டு உப்பு, புட்கலர், பேக்கிங் சோடாவுடன் நன்கு கலந்து நெய்யை உருக்கி ஊற்றி லேசாக தண்ணீர் தெளித்துப் பிசைந்து எண்ணெயில் ஊறவிடவும். சர்க்கரையைப் பொடித்து வைக்கவும்.

இரண்டு மணி நேரம் ஊறியதும். சின்னச் சின்ன அப்பள உருண்டைகள் ( நெல்லிக்காய் அளவு எடுத்து ) போல எடுத்து நீளவாக்கில் மட்டும் தேய்க்கவும். நாலு ஐந்தை அதுபோல தேய்த்து ஒன்றின் மேல் ஒன்றை லேசாக நெய் தடவி மாவு தூவி அடுக்கி இன்னும் ஒரு முறை லேசாகத் தேய்த்து ( 4 , 5 நீள அப்பளப்பூவை ஒட்டினாற்போல ) எண்ணெயில் நன்கு பொறித்து எடுக்கவும்.

சூடாக இருக்கும் போதே பொடித்த சர்க்கரையில் புரட்டி அடுக்கவும். நிவேதனம் செய்யவும். எண்ணெய்க்குப் பதில் நெய் அல்லது டால்டாவிலும் பொறிக்கலாம்.


5.கடலைப் பருப்பு பாயாசம். –வியாழன் மகான் ராகவேந்திரர் .

தேவையானவை :-

கடலைப்பருப்பு – 1 கப்
தேங்காய் – 1 மூடி
வெல்லம் – 2 அச்சு
நெய் – 1 டீஸ்பூன்
முந்திரி – 5
கிஸ்மிஸ் – 10
ஏலக்காய்த்தூள் – 1 சிட்டிகை.செய்முறை:-

கடலைப் பருப்பைக்கழுவி குக்கரில் வேகப் போடவும். இரண்டு விசில் வந்ததும் இறக்கி லேசாக மசிக்கவும். அதில் வெல்லத்தைப் பொடித்துப் போட்டு அடுப்பில் வைக்கவும். வெல்லம் கரைந்து கொதித்ததும் இறக்கவும். தேங்காயைத் துருவி 1 கப் பால் எடுக்கவும். பாயாசம் வெதுவெதுப்பாக இருக்கும்போது தேங்காய்ப் பால் சேர்த்து ஏலப்பொடி போட்டு நெய்யில் முந்திரி கிஸ்மிஸ் பொறித்துப் போடவும். ராகவேந்திரருக்கு நிவேதனம் செய்யவும். இந்தப் பாயாசத்தை 2 மணி நேரத்தில் உபயோகித்து விடவும். தேங்காய்ப்பால் சேர்க்காமல் தண்ணீரும் பாலும் சேர்த்தால் இரவு வரை உபயோகிக்கலாம்.  


6.மூங்க்தால் கிச்சடி – வெள்ளி அம்மன்

இது டெல்லியின் ஜண்டேவாலிமா மந்திர் என்ற கோயிலில் பிரதி வெள்ளிதோறும் ஆரத்திக்குப் பின் கொடுக்கப்படும் ப்ரசாதமாகும்.

தேவையானவை:-

பச்சரிசி – 1 கப்
உடைத்த பாசிப்பயறு ( மூங்க்தால் ) – ½ கப்
தக்காளி – 1
மஞ்சள் தூள் – 1 சிட்டிகை
சாம்பார் பொடி – 1 டீஸ்பூன்.
ஆம்சூர் – ½ டீஸ்பூன் ( மாங்காய் பொடி – தேவைப்பட்டால் )
உருளைக்கிழங்கு சின்னம் – 1 சிறுதுண்டுகளாக நறுக்கவும்.
உப்பு – 1 டீஸ்பூன்

தாளிக்க :-
நெய் – 2 டீஸ்பூன்
ஜீரகம் – 1 டீஸ்பூன்

செய்முறை:-
பச்சரிசியைக் களைந்து உடைத்த பாசிப்பயறைச் சேர்த்து தக்காளி, மஞ்சள்தூள், சாம்பார் பொடி, 3 கப் தண்ணீர் ஊற்றி இரண்டு விசில் குக்கரில் வைத்து எடுக்கவும்.

ஆறியதும் உப்பும் ஆம்சூர் பொடியும் சேர்த்து லேசாக மசித்து நெய்யில் ஜீரகம் தாளித்துப் போட்டு நிவேதனம் செய்யவும்.

7.பழ அப்பம் – சனி விநாயகர்.

தேவையானவை :-
கோதுமை மாவு – 1 டேபிள் ஸ்பூன்
மைதா மாவு – 1 டேபிள் ஸ்பூன்
வெள்ளை ரவை – 1 டேபிள் ஸ்பூன்
கனிந்த வாழைப்பழம் – 1
(விரும்பினால் ஒரு துண்டு மாம்பழம், ஒரு சுளை பலாப்பழம் ஒரு பேரீச்சை மூன்றையும் அரை வாழைப்பழத்தோடு நன்கு அரைத்துச் சேர்க்கலாம். )
ஜீனி – 1 டேபிள் ஸ்பூன்
உப்பு – 1 சிட்டிகை
ஏலப்பொடி – 1 சிட்டிகை.
எண்ணெய் – பொறிக்கத்தேவையான அளவு.

செய்முறை:-

ஒரு பேசினில் ரவை மைதா கோதுமையைக் கலந்து அதில் உப்பு, ஜீனி, ஏலப்பொடி போடவும். வாழைப்பழத்தை நன்கு சேர்த்துப் பிசைந்து பஜ்ஜி மாவு பதத்திற்கு லேசாகத் தண்ணீர் சேர்த்துக் கரைத்து வைக்கவும். 5 நிமிடம் கழித்து கடாயில் எண்ணெயை சுடவைத்து மாவைக் கரண்டியால் நன்கு கலக்கி அடித்து ஊற்றி திருப்பி விட்டு எடுக்கவும். சரியான பக்குவம் இருந்தால் ஓரங்கள் நெளி நெளியாக அழகாக உப்பி வரும். இதில் பத்து அப்பங்கள் வரும். நிவேதனம் செய்யவும்.

1 கருத்து:

  1. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

    பதிலளிநீக்கு

Related Posts Plugin for WordPress, Blogger...