கறுப்பு முழுஉளுந்து
சுண்டல். :-
தேவையானவை:-
கறுப்பு முழு உளுந்து – 1 கப், பச்சை மிளகாய் – 2, தேங்காய்த்துருவல் – 1 டேபிள் ஸ்பூன்,
கருவேப்பிலை – 1 இணுக்கு, இஞ்சி – 1 இன்ச் துண்டு, எண்ணெய் – 1 டீஸ்பூன், கடுகு, சீரகம்
– தலா 1 டீஸ்பூன் , வரமிளகாய் – 1. உப்பு – கால் டீஸ்பூன்.
செய்முறை:-
கறுப்பு முழு உளுந்தை 8 மணி நேரம் ஊறவைத்து குக்கரில் வேகவைத்து எடுக்கவும். எண்ணெயைக் காயவைத்து கடுகு சீரகம் தாளித்து கருவேப்பிலை,
பொடியாக அரிந்த இஞ்சி பச்சை மிளகாய் சேர்க்கவும். இதில் வேகவைத்த கறுப்பு உளுந்தைப்
போட்டு உப்பு சேர்க்கவும். இரு நிமிடங்கள் நன்கு கிளறியபின் தேங்காய்த்துருவல் சேர்த்து
இறக்கி நிவேதிக்கவும்.
நன்றி சகோதரி...
பதிலளிநீக்குநன்றி டிடி சகோ
பதிலளிநீக்குவலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!