குருணை மிளகு
உப்புமா.
தேவையானவை:-
பச்சரிசிக் குருணை – 2 கப், மிளகு – 1 டீஸ்பூன், எண்ணெய் – 1 டேபிள் ஸ்பூன், கடுகு,
உளுந்து – தலா 1 டீஸ்பூன், கருவேப்பிலை – 1 இணுக்கு. உப்பு – கால் டீஸ்பூன்.
செய்முறை:-
ஒரு பாத்திரத்தில் 2 கப் தண்ணீரைக் கொதிக்கவைக்கவும். மிளகை ஒன்றிரண்டாகப் பொடிக்கவும்.
ஒரு கடாயில் எண்ணெயைக் காயவைத்து கடுகு , உளுந்து, கருவேப்பிலை,பொடித்த மிளகைத் தாளித்து
பச்சரிசிக் குருணையைப் போட்டு வறுக்கவும். இதில் கொதித்த தண்ணீரை விட்டுக் கிளறி உப்பு
சேர்த்து மூடிபோட்டு ஐந்து நிமிடம் சிம்மில் வேகவிடவும். அதன் பின் திறந்து நன்கு கிளறி
உதிராக ஆனதும் இறக்கி நிவேதிக்கவும்.
வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
பதிலளிநீக்குஎன்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!