புஸ்தகாவில் என் முதல் மின்னூல் . ”பெண்மொழி”

புஸ்தகாவில் என் முதல் மின்னூல் . ”பெண்மொழி”
புஸ்தகாவில் என் முதல் மின்னூல் . ”பெண்மொழி”

வியாழன், 2 பிப்ரவரி, 2017

ஓட்ஸ் காரட் குழிப்பணியாரம் - OATS CARROT KUZHIPPANIYARAM.

ஓட்ஸ் காரட் குழிப்பணியாரம், :-


செய்முறை:- பச்சரிசி, புழுங்கல் அரிசி, ஓட்ஸ் – தலா ஒரு கப், உளுந்து – அரை கப், வெந்தயம் – 2 டீஸ்பூன், காரட் துருவல் – 2 டேபிள் ஸ்பூன், பச்சைமிளகாய் – 3, இஞ்சி – ஒரு இஞ்ச் துண்டு, கருவேப்பிலை, கொத்துமல்லித்தழை – 1 கைப்பிடி அளவு. தேங்காய்த்துருவல் – 1 டேபிள் ஸ்பூன், கடுகு – அரை டீஸ்பூன், உப்பு – அரை டீஸ்பூன். எண்ணெய்- 100 மிலி.

செய்முறை:- பச்சரிசி புழுங்கல் அரிசி, உளுந்து வெந்தயத்தைத் தனித்தனியாக ஊறவைத்து வெந்தயம் அரிசி உளுந்து என்ற வரிசைப்படி அரைக்கவும். உப்பு சேர்த்துக் கரைத்து 6 மணி நேரம் புளிக்க விடவும். ஓட்ஸைப் பொடிசெய்யவும். எண்ணெயில் கடுகு, காரட் துருவல், பொடியாக அரிந்த பச்சை மிளகாய், கருவேப்பிலை, கொத்துமல்லித்தழை, உப்பு, தேங்காய்த்துருவல் சேர்த்து வதக்கி மாவில் கொட்டவும். நன்கு கலக்கி அப்படியே வைத்திருந்து சிறிது நேரம் கழித்து குழிப்பணியாரக் கல்லில் குழிப்பணியாரங்களாக ஊற்றவும்.

3 கருத்துகள்:

Related Posts Plugin for WordPress, Blogger...