ஐயப்பன்
உன்னியப்பம்
தேவையானவை:-
பச்சரிசி – 1 கப், வெல்லம் – 1 கப், பழுத்த வாழைப்பழம் – 2, பேக்கிங் பவுடர் – 1 சிட்டிகை,
தேங்காய் – கால் மூடி, நெய் – 2 டேபிள் ஸ்பூன், ஏலக்காய்ப் பொடி – 1 சிட்டிகை.
செய்முறை:-
பச்சரிசியைக் களைந்து 2 மணி நேரம் ஊறவைக்கவும். அதை கிரைண்டரில் அரைத்து வாழைப்பழமும்
வெல்லமும் போட்டு அரைக்கவும். தேங்காயைப் பல் பல்லாக நறுக்கி சிறிது நெய்யில் வதக்கி
மாவில் கொட்டி பேக்கிங் பவுடர், ஏலக்காய் சேர்த்து நன்கு கலக்கவும். தோசை மாவு பதத்தில்
கரைத்து சிறிது நேரம் வைத்திருக்கவும். உன்னியப்பம் செய்யும் கல்லில் நெய் ஊற்றிக்
காய்ந்ததும் ஸ்பூனால் மாவை ஊற்றி வேகவைத்து திருப்பிப் போட்டுப் பொன்னிறமானதும் எடுத்து
நிவேதிக்கவும்.
வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
பதிலளிநீக்குஎன்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!