எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

சனி, 31 ஆகஸ்ட், 2024

5.சீரகச்சம்பா மாம்பழப் பொங்கல்

5.சீரகச்சம்பா மாம்பழப் பொங்கல்



தேவையானவை:- சீரகச்சம்பா - 1 கப், வெல்லம் - 1 1/2 கப்,பாசிப்பருப்பு - 1/4 கப், மில்க் மெயிட் - 2 டேபிள்ஸ்பூன், மாம்பழக்கூழ் - 1 கப், மாம்பழ எசன்ஸ் - 1/8 டீஸ்பூன், பேரீச்சை - 2 மசித்தது, நெய் - 1 டேபிள் ஸ்பூன், முந்திரி – 10, திராக்ஷை – 10, ஏலப்பொடி - 1 சிட்டிகை

செய்முறை:- சீரகச்சம்பா, பாசிப்பருப்பை களைந்து குக்கரில் 3 கப் தண்ணீர் ஊற்றி வேகவிடவும். இறக்கி வெல்லம் சேர்த்து கொஞ்சம் வேக விடவும். பின் அதில் மில்க் மெயிட் சேர்க்கவும். மாம்பழக்கூழும் பேரீச்சையும் சேர்த்து நன்கு கிளறி இறக்கவும். ஏலப்பொடி தூவி நெய்யில் முந்திரி திராக்ஷையை வறுத்துப் போடவும். மாம்பழ எசன்ஸ் சேர்த்து கிளறி சூடாக பரிமாறவும்.

புதன், 28 ஆகஸ்ட், 2024

4.பாற்சோறு

4.பாற்சோறு



தேவையானவை :-, பச்சரிசி - 1 கப், வெல்லம்+கருப்பட்டி - 2 கப், தேங்காய் ஒரு மூடி - பல்லு பல்லாக நறுக்கவும்., தண்ணீர் - 4 கப், நெய் - 1 டேபிள்ஸ்பூன்.

செய்முறை:- அரிசியை களைந்து வைக்கவும். வெல்லம்+ கருப்பட்டியை தண்ணீரில் போட்டு சூடாக்கி நன்கு கரைத்து வடிகட்டவும். திரும்ப அதே அடிகனமான பாத்திரத்தில் வெல்லம் கருப்பட்டிப் பாகை ஊற்றி கொதிவந்ததும் அரிசியை போடவும். கிளறிக்கொண்டே இருக்கவும். முக்கால் பதம் வெந்ததும் தேங்காய் பல்லுகளை சேர்க்கவும். இறுகி வெந்து ஒட்டாமல் வந்தவுடன் நெய்யை சேர்த்து இறக்கவும்.

திங்கள், 26 ஆகஸ்ட், 2024

3.அக்கார அடிசில்

3.அக்கார அடிசில்




தேவையானவை:- பச்சரிசி - 1 கப், வெல்லம் - 1/2 கப், பாசிப்பருப்பு - 1/2 கப்
கடலைப் பருப்பு - 1 கைப்பிடி, பால் - 6 கப், நெய் - 2 டேபிள் ஸ்பூன், முந்திரி – 15, திராஷை – 10, பேரீச்சை - 2 ( விரும்பினால் சேர்க்கலாம்), கிராம்பு – 2, பச்சைக் கற்பூரம் - 1 சிட்டிகை, ஏலப்பொடி - 1 சிட்டிகை.

செய்முறை:- பச்சரிசி, பாசிப்பருப்பு, கடலைப்பருப்பை களைந்து குக்கரில் பால் விட்டு 2 சவுண்ட் வேக விடவும். அல்லது அடி கனமான பாத்திரத்தில் நிதானமான தீயில் வேகவிடவும். நன்கு குழைய வெந்ததும் வெல்லத்தை கரைத்து வடிகட்டி ஊற்றவும். அதில் நெய்யில் முந்திரி, திராக்ஷையை வறுத்துப் போட்டு, ஏலக்காய்ப்பொடி., பச்சைக்கர்ப்பூரப் பொடி, பொடித்த கிராம்பு சேர்க்கவும். பேரீச்சையை நன்கு மசித்து சேர்க்கவும். நன்கு கிளறி பரிமாறவும்.

திங்கள், 19 ஆகஸ்ட், 2024

2.வெண்பொங்கல்

2.வெண்பொங்கல்



 

செய்முறை:- பச்சரிசி - 1 கப், பாசிப்பருப்பு - 1/3 கப், நெய் - 1 டேபிள்ஸ்பூன், பச்சைமிளகாய் - 1 இரண்டாக வகிரவும். இஞ்சி - 1 இஞ்ச் துண்டு பொடியாக நறுக்கவும். மிளகு - 1 டீஸ்பூன், ஜீரகம் - 1 டீஸ்பூன், உளுந்து - 1 டீஸ்பூன், முந்திரிப் பருப்பு - 15 ( முழு), கருவேப்பிலை - 1 இணுக்கு, மிளகு ஜீரகப் பொடி - 1/2 டீஸ்பூன்., உப்பு - 1/2 டீஸ்பூன்.

 

செய்முறை:- பச்சரிசி, பாசிப்பருப்பை சேர்ந்த்து 3 முறை நன்கு களைந்து தண்ணீரை வடித்து வைக்கவும். மிளகு, சீரகம்., இஞ்சி., பச்சைமிளகாயை சேர்க்கவும். 4 கப் தண்ணீர் ஊற்றி 3 விசில் வரும்வரை குக்கரில் வைக்கவும். 10 நிமிடம் கழித்து திறந்து உப்பு சேர்த்து நன்கு மசிக்கவும். ஒரு இரும்புக் கரண்டியில் எண்ணெயைக் காயவைத்து உளுந்து, சீரகம்., மிளகு, முந்திரிப் பருப்பு., கருவேப்பிலை போட்டுத் தாளிக்கவும். எல்லாம் பொறிந்தவுடன் பொங்கலில் கொட்டி மிளகு சீரகத் தூள் சேர்த்து நன்கு கிளறி சின்ன வெங்காய சாம்பார், தேங்காய்ச் சட்னியோடு பரிமாறவும்.

புதன், 14 ஆகஸ்ட், 2024

1.திணையரிசி சர்க்கரைப் பொங்கல்

1.திணையரிசி சர்க்கரைப் பொங்கல்


 

தேவையானவை:- திணையரிசி - 1 கப், பால் - 3 கப், பாசிப்பருப்பு - 1 /3 கப், வெல்லம் - 1 கப், நெய் - 1 டேபிள்ஸ்பூன்., ஏலக்காய் – 4, முந்திரி – 10, கிஸ்மிஸ் – 10, பச்சைக் கற்பூரம் - 1 சிட்டிகை ( விரும்பினால்)


செய்முறை:- திணையரிசியையும் பாசிப்பருப்பையும் நன்கு கழுவி குக்கரில் போட்டு 2 கப் தண்ணீர் + 3 கப் பால் ஊற்றி குக்கரில் 3 விசில் வரும்வரை வேகவிடவும். ஆறியபின் குக்கரைத் திறந்து மசித்து வெல்லம் சேர்த்து அடுப்பில் வைத்து நன்கு கிளறவும். வெல்லம் கரைந்தபின் சில நிமிடம் அடுப்பில் வைத்து இறக்கவும். பானில் நெய்யைக் காயவைத்து முந்திரி., கிஸ்மிஸ் பழத்தை பொன்னிறமாக பொறித்து போடவும். ஏலக்காயைப் பொடி செய்து தூவிப் பரிமாறவும்.

திங்கள், 12 ஆகஸ்ட், 2024

20.ப்ளம் கேலேட்

20.ப்ளம் கேலேட்



தேவையானவை:- பேரீச்சை – அரை கப், முந்திரி – கால் கப், பாதாம் – 2 டேபிள் ஸ்பூன், வால்நட் – கால் கப், பிஸ்தா – 2 டேபிள் ஸ்பூன், மஞ்சள் கிஸ்மிஸ் – 2 டேபிள் ஸ்பூன், காய்ந்த கருப்பு திராட்சை – 2 டேபிள் ஸ்பூன், செர்ரிப் பழம் – 10. இனிப்பு ஆரஞ்சுத் தோல் – 40 கிராம், ஆப்பிள் ஜூஸ் – 1 கப், கேரமல் செய்ய:- சீனி – அரைகப், தண்ணீர் – 2 டேபிள் ஸ்பூன். எண்ணெய் – 1/3 கப், எலுமிச்சை சாறு – 1 ½ டேபிள் ஸ்பூன், ஆப்பிள் சிடர் வினிகர் – ஒன்றரை டேபிள் ஸ்பூன், மைதா – 2 கப், பேக்கிங் சோடா – 1 டீஸ்பூன், பேக்கிங் பவுடர் – அரை டீஸ்பூன், பொடித்த பட்டை – கால் டீஸ்பூன், பொடித்த ஜாதிக்காய் – கால் டீஸ்பூன், பொடித்த கிராம்பு – 1/8 டீஸ்பூன், பொடித்த ஏலக்காய் – அரை டீஸ்பூன். ஆல் ஸ்பைஸ் பவுடர் – கால் டீஸ்பூன், இஞ்சி பவுடர் – கால் டீஸ்பூன்.

செய்முறை:- எல்லா பருப்புகளையும் பழங்களையும் துடைத்துப் பொடியாக நறுக்கிக் கொள்ளவும். ஆரஞ்சு தோலையும் பொடியாக நறுக்கிப் போடவும். இதில் ஆப்பிள் ஜூஸை ஊற்றி ஃப்ரிட்ஜில் ஒரு நாள் முழுவதும் வைக்கவும். அரை கப் சீனியில் 2 டேபிள் ஸ்பூன் தண்ணீரைச் சேர்த்து கேரமல் தயாரிக்கவும். பாகு முற்றி ப்ரவுன் கலர ஆனதும் தண்ணீர் சேர்த்துக் கரைத்து வடிகட்டவும். நன்கு ஆறியதும் எண்ணெய் சேர்த்து நன்கு கலக்கவும். இதில் எலுமிச்சை சாறையும் வினிகரையும் சேர்த்துக் கலக்கவும். 8 இஞ்ச் பேக்கிங் பேனில் வெண்ணெய் தடவி வைத்து அவனை 180 டிகிரி முற்சூடு செய்யவும். மைதாவில் பேக்கிங் சோடா, பேக்கிங் பவுடர், பட்டை, ஜாதிக்காய், கிராம்பு, ஏலக்காய் பொடிகளைப் போட்டுக் கலந்து நன்கு சலிக்கவும். இதில் ஆல் ஸ்பைஸ் பவுடரையும் இஞ்சிப் பவுடரையும் சேர்க்கவும். ஃபிரிட்ஜில் வைத்த நட்ஸை அறை வெப்பத்தில் வைத்து இந்த மாவில் சேர்க்கவும். நன்கு புரட்டி கேரமல்லை சேர்க்கவும். பேக்கிங் ட்ரேயில் ஊற்றி 180 டிகிரியில் ஒன்றரை மணி நேரம் பேக் செய்யவும். ஆறியதும் துண்டுகள் செய்யவும்.

சனி, 10 ஆகஸ்ட், 2024

19.ஸெர்டி

19.ஸெர்டி



தேவையானவை:- அரிசி – அரை கப், தண்ணீர் – 6 கப், சீனி – ஒன்றரை கப், ஆரோரூட் மாவு – 2 டேபிள் ஸ்பூன், குங்குமப்பூ – 1 சிட்டிகை, மஞ்சள்தூள் – 1 டீஸ்பூன், ரோஸ் வாட்டர் – 4 டேபிள் ஸ்பூன், நாவல்பழம் – 2 டேபிள் ஸ்பூன் பைன் நட்ஸ் – 1 டேபிள் ஸ்பூன்.

செய்முறை:- ரோஸ் வாட்டரில் முன் தினமே குங்குமப்பூவை ஊறவைக்கவும். அரிசியைக் களைந்து சீனி சேர்த்துத் தண்ணீரில் வேகப் போடவும். முக்கால் பங்கு வெந்ததும் ஆரோரூட் மாவை அரை கப் தண்ணீரில் கரைத்து ஊற்றவும். கொதித்து கெட்டியானதும் ரோஸ் வாட்டரில் ஊறவைத்த குங்குமப்பூவை அப்படியே சேர்க்கவும். மஞ்சள்தூள் சேர்த்து ஐந்து நிமிடம் கொதித்ததும் இறக்கி நாவல் பழம் பைன் நட்ஸ் தூவி அலங்கரித்துப் பரிமாறவும்

வியாழன், 8 ஆகஸ்ட், 2024

18.பபெக்யுரா

18.பபெக்யுரா


தேவையானவை:-கறுப்பு திராக்ஷை – 1 கிலோ, தண்ணீர் – 5 கப், கார்ன் ஸ்டார்ச் – 3 டேபிள் ஸ்பூன், சீனி – அரை கப், கார்ன் மீல் – 3 டேபிள் ஸ்பூன். ஊறவைத்துத் தோலுரித்துச் சீய்த்த பாதாம் – 2 டேபிள் ஸ்பூன், பொடித்த முந்திரி – 2 டேபிள் ஸ்பூன்.

செய்முறை:- திராக்ஷைகளை சுத்தம் செய்து ஐந்து கப் தண்ணீர் சேர்த்து மென்மையாகும்வரை கொதிக்க விடவும். இதை மசித்து நன்கு வடிகட்டி கார்ன் மீல், கார்ன் ஸ்டார்ச், சீனி சேர்த்து ஒரு பானில் ஊற்றிக் கிளறவும். திக்கானதும் இறக்கி கப்புகளில் ஊற்றி பொடித்த முந்திரியை நடுவில் தூவில் சுற்றிலும் பொடித்த பாதாமைத் தூவி இறுகியதும் பரிமாறவும்.

திங்கள், 5 ஆகஸ்ட், 2024

17.ஹோஸ்மெரிம்

17.ஹோஸ்மெரிம்


தேவையானவை:- க்ரீம் – 200 கிராம், வெண்ணெய் – 1 டேபிள் ஸ்பூன், மைதா – 1 கப், பால் 1 கப்,  சீனி – அரை கப், தேன் – ஒரு டேபிள் ஸ்பூன், வால்நட் – 5   பிஸ்தா – 15.

செய்முறை:- ஒரு பானில் வெண்ணெயை உருக்கி க்ரீமை சேர்க்கவும். இரண்டும் உருகியதும் மைதாவைப் போட்டு நன்கு வறுக்கவும். கொதிக்க வைத்த பால், சீனியைச் சேர்த்து இறுகும் வரை நன்கு கிளறவும். நெய் தடவிய தட்டில் பரப்பி மேலே பொடித்த வால்நட், பிஸ்தா தூவி தேனை ஸ்ப்ரே செய்து பரிமாறவும்.

Related Posts Plugin for WordPress, Blogger...