எனது பதிநான்கு நூல்கள்

எனது பதிநான்கு நூல்கள்
எனது பதிநான்கு நூல்கள்

வியாழன், 8 ஜனவரி, 2015

புத்தாண்டு ரெசிப்பீஸ். குமுதம் பக்தி ஸ்பெஷல். NEW YEAR RECIPES

1. தம் ஃபுருட் அல்வா :-

தேவையானவை :-
வெள்ளைப் பூசணி -  250 கி
சீனி -  250 கி
நெய் - 100 கி
குல்கந்து - 1 டேபிள் ஸ்பூன்
தேன் - 1 டேபிள் ஸ்பூன்
குங்குமப்பூ - 1 சிட்டிகை
பால் - 1 டேபிள் ஸ்பூன்
எல்லோ புட் கலர்  - 1 சிட்டிகை.
முந்திரி, பாதாம் - 10 ஊறவைத்து தோலுரித்து பொடியாக நறுக்கி நெய்யில் வறுத்து வைக்கவும்.
ஏலக்காய்த்தூள் - 1 சிட்டிகை.

செய்முறை :-
வெள்ளைப் பூசணியைத் தோல் சீவி சன்னமாகத் திருகி ஒரு மஸ்லின் துணியில் கட்டி நீரைப் பிழியவும்.

ஒரு அடிகனமான பானில் நெய் ஊற்றி பூசணித் துருவலைப் போட்டு நன்கு வதக்கவும். அதில் பால் சேர்த்து  வேகவிடவும். வெந்து வரும்போது சீனியைப் போடவும். சீனி இளகி இறுகும்போது தேனையும் குல்கந்தையும் சேர்க்கவும். பாலில் நனைத்த குங்குமப்பூவையும் போடவும் ,

எல்லாம் வெந்து இறுகி வரும்போது ஏலக்காய்த்  தூள் , முந்திரி பாதாம் சேர்த்து கிளறி இறக்கவும்.

2. பலாப்பழ அல்வா

தேவையானவை :-
கனிந்த பலாச்சுளைகள் - 20
வெல்லம் - 200 கி
தேங்காய் - 1 மூடி அரைத்து கெட்டிப் பால் எடுக்கவும்
நெய் - 50 கி
பச்சரிசி மாவு - 1 டீஸ்பூன்
முந்திரி - 10
ஏலக்காய்த்தூள் - 1 சிட்டிகை.

செய்முறை :-
பலாச்சுளைகளை கொட்டை நீக்கி துண்டுகளாக்கி வேகவைத்து  நன்கு மசிக்கவும். மிக்ஸியிலும் அரைக்கலாம்.

வெல்லத்தில் சிறிது நீர் விட்டு சூடுபடுத்தி கரைந்தவுடன் வடிகட்டி மசித்த பலாச்சுளையில் சேர்க்கவும். கொதிக்க ஆரம்பிக்கும்போது பச்சரிசி மாவை தேங்காய்ப் பாலில் கரைத்து ஊற்றவும். இடைவிடாமல் கிளறவும்.

எல்லாம் சேர்ந்து சுருண்டு  வரும்போது நெய்யில் வறுத்த முந்திரியைப் போட்டு ஏலப்பொடி தூவி இறக்கவும்.

3. வெஜ் அப்பம்.

தேவையானவை :-
பச்சரிசி - 1 கைப்பிடி
துவரம்பருப்பு - 1 கைப்பிடி
பாசிப்பருப்பு - 1 கைப்பிடி
கடலைப்பருப்பு - 1 கைப்பிடி
மைதா - 1 டேபிள் ஸ்பூன்
காய்கறிக்கலவை துருவியது - 1 கைப்பிடி. ( காரட், பீட் ரூட் , & விருப்பமான காய்கறிகள்.  )
பெரிய வெங்காயம் - சின்னம் 1 துருவவும்.
பச்சைமிளகாய் - 1 பொடியாக அறியவும்
கருவேப்பிலை, கொத்துமல்லி - பொடியாக அரிந்தது - 1 டீஸ்பூன்
உப்பு - 1/4 டீஸ்பூன்
எண்ணெய் .- பொறிக்கத் தேவையான அளவு.

செய்முறை :-
பச்சரிசி, துவரம் பருப்பு, கடலைப்பருப்பு, பாசிப்பருப்பை 2 மணி நேரம் ஊறவைத்து விழுதாக அரைக்கவும். அதில் மைதா, துருவிய காய்கறிகள், பெரிய வெங்காயம், பச்சை மிளகாய் , கருவேப்பிலை, கொத்துமல்லி,  உப்பு எல்லாவற்றையும் நன்கு  கலந்து பஜ்ஜி மாவு பதத்துக்குக் கரைக்கவும்.

எண்ணெயைக் காயவைத்து அப்பங்களாகப்  பொரித்தெடுக்கவும்.4. பரங்கிக்காய் அல்வா

தேவையானவை :-
பரங்கிக்காய் - 500 கி
பட்டை - 1 துண்டு
தண்ணீர் - 1 கப்
சீனி - 200 கி
நெய் - 50 கி
கிஸ்மிஸ் - 20
கொப்பரைத் துருவல் - 1 டேபிள்ஸ்பூன்
முந்திரி - 10

செய்முறை :-
பரங்கிக்காயைத் தோல் சீவி துண்டுகளாக்கி பட்டை சேர்த்து தண்ணீர் ஊற்றி மென்மையாகும்வரை வேகவிடவும்.

வெந்ததும் இறக்கி பட்டையை எடுத்துப் போட்டுவிட்டு தண்ணீரை வடித்து மசிக்கவும்.  பாதி நெய்யை ஊற்றி மசித்த பரங்கிக்காயைப்போட்டு வதக்கவும். நீர் சுண்டி வருகையில் சீனி சேர்த்துக் கிளறவும்.

அல்வா சுருண்டு கண்ணாடி போல் மினுமினுப்பாக வந்ததும் மிச்ச நெய்யில் கொப்பரை, முந்திரி, கிஸ்மிஸை வறுத்துப் போட்டு இறக்கவும்.

5. பைனாப்பிள் கேசரி

தேவையானவை :-
வெள்ளை ரவை - 1 கப்
பைனாப்பிள் - 1 கப் சுத்தம் செய்து நறுக்கியது.
சீனி - 2 கப்
தண்ணீர் - 2 கப்
நெய் - 50 கி
எல்லோ புட் கலர் - 1 சிட்டிகை
ஏலப்பொடி - 1 சிட்டிகை
முந்திரி - 10
பாதாம் - 5
கிஸ்மிஸ் - 10

செய்முறை :-
நெய்யில் முந்திரி பாதம், கிஸ்மிஸை வறுக்கவும். அதில் ரவையைப்  பொன்னிறமாக வறுத்து வைக்கவும்.

இரண்டு கப் தண்ணீரில் பைனாப்பிளை சதுரத் துண்டுகள் செய்து வேகவிடவும்.  நன்கு மென்மையாக வெந்ததும் எல்லோ புட்  கலர் போட்டு அதில் வறுத்த  ரவையைப் போட்டு  வேகவிடவும். ரவை உதிர் உதிராக வெந்ததும் ஒரு சிட்டிகை உப்புடன் சீனியை சேர்க்கவும். சீனி கரைந்து பாத்திரத்தில் ஒட்டாமல் இறுகி வரும்போது நெய்யில் வறுத்த முந்திரி பாதாம் கிஸ்மிஸ் போட்டு  ஏலப்பொடி போட்டு  கிளறி இறக்கவும்.

6. ஐந்தரிசிப் பணியாரம்

தேவையானவை :-
பச்சரிசி - 1/ கப்
துவரம் பருப்பு - 1/2 கப்
பாசிப்பருப்பு - 1/2
வெள்ளை ரவை - 1/4
ஜவ்வரிசி - 1/4 கப்
வெல்லம் - 300 கி
தேங்காய்த்  துருவல் - 1/2 கப்
ஏலக்காய் - 3
எண்ணெய் - பொரிக்கத் தேவையான அளவு.

செய்முறை :-
பச்சரிசி, துவரம்பருப்பு, பாசிப்பருப்பு, ஜவ்வரிசி ஆகியவற்றைக் கழுவித் தனித்தனியாக ஊறவைக்கவும். 2 மணி நேரம் கழித்து கிரைண்டரில் போட்டு ஆட்டவும். அதில் ரவை, வெல்லம், ஏலக்காய், தேங்காய்த் துருவல் போட்டு விழுதாக ஆட்டி எண்ணெயைக் காயவைத்துப் பணியாரங்களாகச் சுட்டு எடுக்கவும்.

7. கசகசா அல்வா

தேவையானவை :-
கசகசா - 100 கி
சீனி - 100 கி
பால் - 2 கப்
நெய் - 50 கி
ஏலப்பொடி - 1 சிட்டிகை
பாதாம் - 6 - ஊறவைத்துத் தோலுரித்து சீய்த்து வைக்கவும்.

செய்முறை :-


கசகசாவைக் கழுவி 4 மணி நேரம் ஊற வைக்கவும். தண்ணீரை வடித்துவிட்டு பால் சேர்த்து விழுதாக கெட்டியாக அரைக்கவும்.

பாதி நெய்யைக் காயவைத்து அரைத்த கசகசா விழுதை நன்கு வதக்கவும். நல்ல வாசனையோடு நிறம் மாறத் துவங்கியதும் இறக்கவும்.

பாலும் சீனியும் சேர்த்து ஒரு பானில் ஊற்றிக் கொதிக்க விடவும். சீனி முழுதும் கரைந்ததும் கசகசா விழுதைச் சேர்த்து இறுகும் வரை நன்கு கிளறவும். ஏலப்பொடி , மிச்ச நெய் , ஊற்றி இறக்கவும். மேலே  சீய்த்த பாதாம் துருவலைப் போட்டு அலங்கரிக்கவும்.

8. மேக்கரோனி பாயாசம்.

தேவையானவை :-
மேக்கரோனி - 1 கப்
பால் - 2 லிட்டர்
மில்க் மெய்ட்  - 1 டேபிள் ஸ்பூன்
சீனி - 1/2 கப்
குங்குமப்பூ - 1 சிட்டிகை
ஏலப்பொடி - 1 சிட்டிகை
முந்திரி - 10
நெய் - 10 கி

செய்முறை :-
மேக்ரோனியைக் கழுவி 15 நிமிடம் தண்ணீரில் ஊறப்போடவும்.

பாலைக் காய்ச்சிக் கொதி வரும்போது மேக் ரோனியைச் சேர்த்து வேக விடவும். கொதித்ததும் சிம்மிலேயே வேகவிடவும்.

மேக்கரோனிகள் மென்மையாக வெந்ததும் சீனியைச் சேர்க்கவும்.

சீனி கரைத்து கொதித்ததும் இறக்கி மில்க் மெயிட் , ஏலப்பொடி , குங்குமப்பூ, நெய்யில் வறுத்த முந்திரி சேர்த்துப் பரிமாறவும்.

1 கருத்து:

  1. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

    பதிலளிநீக்கு

Related Posts Plugin for WordPress, Blogger...