தேவையானவை :- காளான் - 1 பாக்கெட், பெரிய வெங்காயம் – 1, தக்காளி – 1, இஞ்சி - 1 இன்ச் துண்டு, பூண்டு - 4 பல், மிளகாய்த்தூள் - 1 டீஸ்பூன், மல்லித்தூள் - 1 டீஸ்பூன், மஞ்சள் பொடி - 1 சிட்டிகை, கரம் மசாலா - 1/4 டீஸ்பூன், சீனி - 1/4 டீஸ்பூன், உப்பு - 1/2 டீஸ்பூன், எண்ணெய் - 2 டீஸ்பூன்
செய்முறை:- காளானை சுத்தம் செய்து நான்கு துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும். 3 நிமிடம் தண்ணீரில் போட்டு அல்லது மைக்ரோ வேவில் அரை வேக்காடாக வேகவைத்துத் தண்ணீரை வடிக்கவும். வெங்காயம்., தக்காளியைத் தனித்தனியாக அரைத்துக் கொள்ளவும். இஞ்சி., பூண்டையும் அரைத்துக்கொள்ளவும்.. பானில் எண்ணெயைக் காயவைத்து வெங்காய விழுதைப் போட்டு வதக்கவும்.. பொன்னிறமானதும் இஞ்சி பூண்டு விழுது போடவும்.. நன்கு வதக்கி., எண்ணெய் பிரிந்ததும் மிளகாய்ப் பொடி., மல்லிப்பொடி., மஞ்சள்பொடி., கரம் மசாலா., உப்பு., சீனி போட்டு வதக்கவும். தக்காளி விழுது., காளான் சேர்த்து கிளறி ஒரு டம்ளர் தண்ணீர் ஊற்றவும். மூடி போட்டு 5 நிமிடம் வேகவைத்து சூடாக நான்., சப்பாத்தி., ஃபுல்கா ரொட்டி.,குல்ச்சா அல்லது ஃப்ரைட் ரைஸுடன் பரிமாறவும்.


கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக