எனது பதிநான்கு நூல்கள்

எனது பதிநான்கு நூல்கள்
எனது பதிநான்கு நூல்கள்

புதன், 4 மே, 2016

ஹோல் வீட் ப்ரெட் பனீர் பேபிகார்ன் சாண்ட்விச். கோகுலம். GOKULAM KIDS RECIPES.ஹோல் வீட் ப்ரெட் பனீர் பேபிகார்ன் சாண்ட்விச். கோகுலம். GOKULAM KIDS RECIPES.

ஹோல் வீட் ப்ரெட் பனீர் பேபிகார்ன் சாண்ட்விச்:-
தேவையானவை :- வீட் ப்ரெட் 12 ஸ்லைஸ், ப்ரெஷ் பனீர் - ஒரு பாக்கெட், பேபிகார்ன் - 10, அமுல் பட்டர் - ஒரு டேபிள் ஸ்பூன், அமுல் சீஸ் ஸ்ப்ரெட் - ஒரு டேபிள் ஸ்பூன் , துருவிய கோஸ் - 1 டேபிள் ஸ்பூன் ,தக்காளி கெச்சப் - 2 டேபிள் ஸ்பூன் , மல்லித் தழை - ஒரு கைப்பிடி, மிளகுத் தூள் - கால் டீஸ்பூன். நெய் - 2 டீஸ்பூன்
செய்முறை:-
பனீரை பொடித் துண்டுகள் செய்து நெய்யில் லேசாக வறுத்து வைக்கவும். பேபிகார்னை வட்டத் துண்டுகள் செய்து குக்கரில் வேகவைத்து எடுக்கவும். வீட் ப்ரெட்டை டோஸ்டரில் போட்டு பொன்னிறமாக டோஸ்ட் செய்து வைக்கவும். ப்ரெட்டில் ஒரு பக்கம் பட்டரை தடவி முட்டைக்கோசையும் கொத்துமல்லித் தழையையும் மிளகுத்தூளையும் தூவவும். அதன் மேல் இன்னொரு ப்ரெட் வைத்து சீஸ் ஸ்ப்ரெட் தடவி பனீரையும் பேபிகார்னையும் பதிக்கவும். அதன் மேல் இன்னொரு ப்ரெட் வைத்து மூடி தக்காளி கெட்சப்பால் இரு கண்கள் குட்டி வாய் கொண்ட ஸ்மைலி வரைந்து குழந்தைகளுக்கு மாலை உணவாகப் பரிமாறவும்.
முழு கோதுமையில் செய்யப்படும் வீட் ப்ரெடில் கோதுமையின் முழுப் பயன்களும் அடங்கி உள்ளது. ஜீரணத்துக்குத் தேவையான நார்ச்சத்து அதிகம் உள்ளது. குழந்தைகளின் உடல் வளர்ச்சிக்கு தேவையான புரதமும், மூளைக்கு தேவையான கார்போ ஹைட்ரேட்டும் அடங்கி உள்ளது. முழு கோதுமை ப்ரெட் தவிட்டோடு இருப்பதால் செரிமானம் எளிதாகிறது. ஒரு ஸ்லைஸ் ஹோல் வீட் ப்ரெடில் 2.8 கிராம் நார்சத்து அடங்கியுள்ளது. இதயநோய் தாக்கும் அபாயம் குறைகிறது. வெயிட் அதிகம் போடாது. மூளை வளர்ச்சிக்குத் தேவையான விட்டமின் பி, விட்டமின் ஈ, மக்னீசியம், பாஸ்பரஸ், இரும்பு, துத்தநாகம் ஆகியன அடங்கி உள்ளது.
பனீரில் பல் மற்றும் எலும்பு வளர்ச்சிக்குத் தேவையான கால்சியமும் பாஸ்பரஸும் விட்டமின், மினரல், மற்றும் புரதங்களும் அடங்கியுள்ளன. ஒமேகா 3 பாட்டி ஆசிட் அடங்கி உள்ளது. வளரும் குழந்தைகளுக்கு தேவையான சத்துகள் அடங்கியது. நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்குது. உடல் எடையைக் கட்டுக்குள் வைக்கின்றது.
பேபிகார்னில் மிக அதிக அளவு போலேட் இருக்கின்றது. போலிக் ஆசிட், தையமின், ரிபோ ஃபிளேவின், நியாசின் ஆகியன அடங்கி உள்ளன. நார்ச்சத்து அதிகம் இருப்பதால் செரிமானம் எளிதாகிறது. அமினோ ஆசிடை உருவாக்குவதன் மூலம் வளர்சிதை மாற்றத்துக்கும் ரத்தத்தில் சிவப்பணு உற்பத்திக்கும் வழிகோலுகிறது.
அமுல் பட்டரும் சீஸ் ஸ்ப்ரெடும் நெய்யும் உடலுக்குத் தேவையான கொழுப்பு சத்தையும் எனர்ஜியையும் வழங்குகின்றன . கொத்துமல்லித் தழை செரிமானத்துக்கும் மிளகுத் தூள் பசியைத் தூண்டவும் பயன்படுகின்றன. தக்காளி கெட்சப் உணவின் ருசிக்காகவும் ரத்த விருத்திக்கும் பயன்படுகிறது.
ஹோல் வீட் பனீர் பேபிகார்ன் சாண்ட்விச் ஒரு முழுமையான உணவாகும்.

டிஸ்கி :- 2016 மார்ச் மாத கோகுலத்தில் வெளியானது.

1 கருத்து:

  1. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

    பதிலளிநீக்கு

Related Posts Plugin for WordPress, Blogger...