எனது பதிநான்கு நூல்கள்

எனது பதிநான்கு நூல்கள்
எனது பதிநான்கு நூல்கள்

செவ்வாய், 1 ஜனவரி, 2019

பூண்டுப் பொடி.

பூண்டுப்பொடி. :-

தேவையானவை :- துவரம்பருப்பு, கடலைப்பருப்பு - தலா 1 டேபிள் ஸ்பூன், வரமிளகாய் - 4, பூண்டு - 4 பல், புளி - 1 சுளை, உப்பு - கால்டீஸ்பூன், கருவேப்பிலை சிறிது. எண்ணெய் - 1 டீஸ்பூன்.

செய்முறை:- வெறும் வாணலியில் துவரம்பருப்பையும் கடலைப்பருப்பையும் சிவப்பாக வறுத்து இறக்கவும். எண்ணெய் விட்டு வரமிளகாயை வறுத்து புளியைப் போட்டு அடுப்பை அணைக்கவும். சூடாக இருக்கும்போது பூண்டையும் கருவேப்பிலையையும் போட்டுப் புரட்டவும்.

மிக்ஸியில் மிளகாய், உப்பு, புளியைப் போட்டு நன்கு சுற்றி அதன் பின் பருப்புகளைப் போட்டு நைஸாக அரைக்கவும். கடைசியில் பூண்டைப் போட்டுச் சுற்றி இறக்கவும். கருவேப்பிலையைக் கிள்ளிப் போட்டுக் கலக்கவும். இதை சூடான சாதத்தில் நல்லெண்ணெய் அல்லது நெய்யுடன் போட்டுப் பிசைந்து உண்ணலாம்.
  

3 கருத்துகள்:

 1. பூண்டுப்பொடி என்று சொல்வதைவிட பூண்டுப்பருப்புப்பொடி என்று சொல்லலாம். சாதம் பிசைந்து சாப்பிட இது மாதிரி செய்ததில்லை. பூண்டு இல்லாமல் செய்ததுண்டு.

  நாங்கள் பச்சையாக பூண்டு, உப்பு, வரமிளகாய், பெருங்காயம் போட்டு மிக்சியில் அரைத்து வைத்துக்கொண்டு இட்லி, தோசை, மோர் சாதங்களுக்குத் தொட்டுக்க கொள்ளுவோம்.

  பதிலளிநீக்கு
 2. கரெக்ட்தான் ) நீங்க சொன்ன பொடியை ட்ரை பண்ணிப் பார்க்கிறேன். நைஸாக அரைக்குமா.

  பதிலளிநீக்கு
 3. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
  என்றும் நம்முள் வலிமை பெருகட்டும் !!

  பதிலளிநீக்கு

Related Posts Plugin for WordPress, Blogger...