எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

வியாழன், 15 மே, 2025

கம்பங்கூழ்

கம்பங்கூழ்


தேவையானவை :- கம்பு – 2 கப், தண்ணீர் – 6 கப்

செய்முறை :- கம்பில் நீர் தெளித்து மிக்ஸியில்  சிறிது சிறிதாக வைப் செய்யவும். அதைக் கழுவித் தவிடு நீக்கவும். 6 கப் தண்ணீரில் வேகப்போடவும் . கொதிவந்ததும் அடக்கி வைக்கவும். கிளறிவிட்டு மூடிபோட்டு சிறுதணலில் வேகவைத்து இறக்கவும்.  வெய்யிலுக்கு இதமா இதைப் பிசைந்து உப்பு தயிர்போட்டு சின்ன வெங்காயம், பச்சைமிளகாய் சேர்த்து உண்ணலாம். தொட்டு சாப்பிட மாங்காய் ஊறுகாய், மோர்மிளகாய் வற்றலும் நன்றாக இருக்கும்.

புதன், 14 மே, 2025

அவல் தேங்காய் உருண்டை

அவல் தேங்காய் உருண்டை


தேவையானவை :- ரோஸ் அவல் – 2 கப், தேங்காய்த்துருவல் – 2 டேபிள் ஸ்பூன், தூள் வெல்லம் – 100 கி, ஏலத்தூள் – 1 சிட்டிகை, உப்பு – 1 சிட்டிகை.

செய்முறை:- ரோஸ் அவலை மிக்ஸியில் பொடிக்கவும். இதில் உப்பை சேர்த்து கால் கப் தண்ணீர் தெளித்துப் பிசறி ஐந்து நிமிடம் வைக்கவும். அதிலேயே ஏலத்தூள், தேங்காய்த்துருவல், தூள் வெல்லம் போட்டு நன்கு பிசைந்து உருண்டைகளாகப் பிடித்து நிவேதிக்கவும்.

வியாழன், 8 மே, 2025

அரியரிசி & துள்ளுமா


2.அரியரிசி

தேவையானவை:- பச்சரிசி – 1 கப், தூள் வெல்லம் – 100 கி

செய்முறை:- பச்சரிசியைக் களைந்து ஊறவைக்கவும். நன்கு ஊறியபின்  அரிசியைக் கல் இல்லாமல் அரித்து எடுத்துத் தூள் வெல்லம் கலந்து நிவேதிக்கவும்.

 

3.துள்ளுமா

தேவையானவை:- பச்சரிசி – 1 கப், அச்சு வெல்லம் – 100 கி,

செய்முறை:- பச்சரிசியைக் களைந்து ஊறவைக்கவும். ஊறவைத்த அரிசியை நீரில்லாமல் வடித்து எடுத்துப் பெரபெரவென உரலில் இடித்தோ மிக்ஸியில் அரைத்தோ வைக்கவும். இதில் அச்சுவெல்லத்தைத் தூள் செய்து ஒரு சுற்றுச் சுற்றி நிவேதிக்கவும். (உரலில் போட்டு இடிக்கும்போது குருணையுடன் துள்ளி விழும் என்பதால் இதன் பெயர் துள்ளுமா.)

செவ்வாய், 6 மே, 2025

மாவிளக்கு

1.மாவிளக்கு


தேவையானவை:- பச்சரிசி – 1 கப், மண்டை வெல்லம் – 100 கி. நெய் – 1 டேபிள் ஸ்பூன், திரி.

செய்முறை:- பச்சரிசியைக் களைந்து ஊறவைக்கவும். இரண்டு மணி நேரம் கழித்து அரிசியை நீரில்லாமல் வடித்து மிக்ஸியில் அரைத்துச் சலிக்கவும். மண்டை வெல்லத்தைத் துருவி மாவுடன் மிக்ஸியில் போட்டுச் சுற்றி எடுத்து உருண்டையாகக் கைகளால் உருட்டி ஒரு தட்டில் வைக்கவும். நடுவில் குழி செய்து திரி போட்டு நெய் ஊற்றி மாவிளக்கை ஏற்றி நிவேதிக்கவும்.

Related Posts Plugin for WordPress, Blogger...