காய்கறி சீடைக் கொழுக்கட்டை
தேவையானவை :- சிவப்பரிசி – 1 கப், துருவிய காய்கறிக் கலவை – 1 கப், (காரட் பீன்ஸ், பச்சைப் பட்டாணி,), வெங்காயம் – 1 பொடியாக நறுக்கவும். பச்சை மிளகாய் – 1 பொடியாக நறுக்கவும். கொத்துமல்லித்தழை – சிறிது. தேங்காய்த்துருவல் – கால் கப். உப்பு – அரை டீஸ்பூன். எண்ணெய் – அரை டீஸ்பூன்.
செய்முறை :- சிவப்பரிசியை மாவாக அரைத்துக் கால் டீஸ்பூன் உப்பு, தண்ணீர் சேர்த்துப் பிசைந்து சீடைக்காய்கள் போலவும் பட்டன் போலவும் தட்டி பேப்பரில் போடவும். தண்ணீரைக் கொதிக்கவைத்து நீர்க்கொழுக்கட்டைகள் போல வேகவைத்து வடிகட்டி எடுத்துக் கொள்ளவும். அரை டீஸ்பூன் எண்ணெயில் வெங்காயம், காய்கறிக் கலவையை வதக்கி உப்பு சேர்க்கவும். அதில் கொழுக்கட்டைகளையும் தேங்காய்த் துருவலையும் கொத்துமல்லித்தழையையும் போட்டுக் கலக்கவும்.