எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

ஞாயிறு, 12 நவம்பர், 2023

களியோடக்கா

களியோடக்கா


 

தேவையானவை :-  பச்சரிசி மாவு - 1 கப், தூள் வெல்லம் - அரைகப். பச்சரிசி மாவில் வெல்லத்தைப் பாகு காய்ச்சி ஊற்றிப் பிசைந்து ஒரு நாள் முழுதும் வைக்கவும். தேங்காய்த்துருவல் -  1 டேபிள் ஸ்பூன், ஏலக்காய் - 1, எண்ணெய் - பொரித்தெடுக்க.

 

செய்முறை:- வெல்லம் பச்சரிசி போட்ட மாவில் தேங்காய்த்துருவல், ஏலப்பொடி சேர்த்து லேசாக நீர் தெளித்து நன்கு பிசைந்து கொள்ளவும். எண்ணெயைக் காயவைத்துப் பெரிய சீடைகளாக உருட்டிப் பொன்னிறமாகப் பொரித்தெடுக்கவும். இதன் பெயர்தான் இனிப்புக் களியோடக்கா.

புதன், 8 நவம்பர், 2023

சிப்பி சோஹி

சிப்பி சோஹி


 

தேவையானவை:- பச்சரிசி மாவு – 2 கப், பொட்டுக்கடலை மாவு – அரை கப், தேங்காய்ப்பால் – ஒன்றரை கப், உப்பு – அரை டீஸ்பூன், சீப்புச் சீடைக் கட்டை – 1. எண்ணெய் – பொரிக்கத் தேவையான அளவு.

 

செய்முறை:- பச்சரிசி மாவுடன் பொட்டுக்கடலை மாவைக் கலந்து வைக்கவும். தேங்காய்ப்பாலை சூடுபடுத்தி உப்பு சேர்த்து இறக்கவும் மாவில் சிறிது சிறிதாக ஊற்றிப் பிசையவும். சீப்புச்சீடைக் கட்டையில் சிப்பிகளாகத் தட்டி வைக்கவும். எண்ணையைக் காயவைத்து அதில் போடும்போது சிப்பிகளை லேசாக மடக்கிப் போடவும். நன்கு பொறுபொறுவென வெந்ததும் இறக்கவும்.

திங்கள், 6 நவம்பர், 2023

ஸ்வீட் ஃபிங்கர் சிப்ஸ்

ஸ்வீட் ஃபிங்கர் சிப்ஸ்


 

தேவையானவை:- உருளைக்கிழங்கு – 2, சீனி – கால் கப், எண்ணெய் – பொறிக்கத் தேவையான அளவு, முந்திரி, கிஸ்மிஸ் – தலா 10.

 

செய்முறை:- உருளைக்கிழங்குகளைத் தோல்சீவி காய் சீவலில் குச்சி குச்சியாகச் சீவி எண்ணெயில் போட்டு நன்கு க்ரிஸ்பியாகப் பொரித்தெடுக்கவும். முந்திரி, கிஸ்மிஸையும் இத்துடன் பொரித்துப் போடவும். சீனியில் சிறிது நீர் விட்டு முத்துப் பாகு வைக்கவும். இதில் பொரித்த உருளை முந்திரி, கிஸ்மிஸைப் போட்டு நன்கு புரட்டிக் கலக்கி விடவும். உதிர் உதிராக இனிப்பு காராசேவுபோல் இருக்கும் இது. Read more: http://www.mylivesignature.com/mls_wizard2_1.php?sid=54488-89-72B745B7DCD91A6D51CF5145CF29EE5F#ixzz0gZnBC9oU

வெள்ளி, 3 நவம்பர், 2023

எள், கடலை சிக்கி

எள், கடலை சிக்கி


 

தேவையானவை :- வேர்க்கடலை -  1 கப், வெள்ளை எள் – அரை கப், நெய் – ஒரு டேபிள் ஸ்பூன், சர்க்கரை – ஒன்றரை கப், ஏலப் பொடி – கால் டீஸ்பூன்

 

செய்முறை:- வேர்க்கடலையை ஒன்றிரண்டாக உடைத்துக் கொள்ளவும். ஒரு தட்டில் நெய்யைத் தடவி வைக்கவும். ஒரு பானில் மிச்ச நெய்யைக் காயவைத்து சர்க்கரையைப் போட்டு உருகவிடவும். லேசாக உருகி வரும்போது வேர்க்கடலை, எள்ளைப் போட்டு ஏலப் பொடியையும் போட்டு நன்கு கிளறி லேசாக இளக்கமாக இருக்கும்போதே நெய் தடவிய தட்டில் கொட்டி சப்பாத்திக் கட்டையால் சமப்படுத்தவும். முழுதாய்ப் பெரிய வட்டமாகவோ அல்லது சதுரத் துண்டுகள் போட்டுக் கொடுக்கவும்.

புதன், 1 நவம்பர், 2023

மூங்தால் சாட்

மூங்தால் சாட்


 

தேவையானவை :- முளைவிட்ட பாசிப்பயறு - 1 கப் அவித்தது, பொடியாக அரிந்த வெங்காயம் - 2 டீஸ்பூன், பொடியாக அரிந்த தக்காளி - 2 டீஸ்பூன் , கொத்துமல்லித்தழை சிறிது,  சாட் மசாலா- சிறிது அல்லது உப்பு - சிறிது.

 

செய்முறை :- அனைத்தையும் கலந்து சாப்பிடவும். தேவைப்பட்டால் மாகி ஹாட் அண்ட் ஸ்வீட் டொமாட்டோ சில்லி சாஸ், ஓமப்பொடி ஒரு கைப்பிடி, பொரி ஒரு கைப்பிடி போட்டுச் சாப்பிடவும்.

Related Posts Plugin for WordPress, Blogger...