எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

புதன், 6 டிசம்பர், 2023

ரஸ்க் ரெஸிப்பீஸ்

இந்த ரெஸிப்பீஸ் குமுதம் சிநேகிதியில் வெளியானவை.


ரஸ்க் ரெஸிப்பீஸ்



1.ரஸ்க் ஆலு டிக்கி

2.ரஸ்க் மஷ்ரூம் கட்லெட்

3.ரஸ்க் மீல்மேக்கர் சாசேஜ்

4.பேகட் ரஸ்க் சாக்லேட் & நட்ஸ்

5.மெல்பா டோஸ்ட்

6.க்ரூட்டன்

7.மில்க் டோஸ்ட்

8.க்ரஞ்சி  கார்ன் சாலட்

9.க்ரிஸ்ப்  வெஜ் ரோல்ஸ்

10.மலாய் ரஸ்க்

11.ரஸ்க் ஜாமூன்

12.கேவ்ரா ரஸ்க்

13.அங்க்லாமேட்

14.ஹேகல்ஸ்லாக்

15.மியூஸ்ஜெஸ்

16.ரஸ்க் புதினா பகோடா

17.ரஸ்க் ஃப்ரூட் புட்டிங்

18.ரஸ்க் கஸ்டர்ட்

19.ரஸ்க் குல்ஃபி

20.ரஸ்க் பனீர் கோலா

செவ்வாய், 5 டிசம்பர், 2023

காய் கனி இனிப்பு ரெஸிப்பீஸ்

இந்த சமையல் குறிப்புகள் குமுதம் சிநேகிதியில் வெளியானவை. 

 காய் கனி இனிப்பு


 

ஞாயிறு, 3 டிசம்பர், 2023

லெமன் பாஸ்தா

லெமன் பாஸ்தா



 

தேவையானவை :- மிக்ஸ்ட் பாஸ்தா – 2 கப், பெரிய வெங்காயம் – 1, கேரட் – 1, கொத்துமல்லித்தழை – கால் கப், பட்டர் – 1 டேபிள் ஸ்பூன், சீஸ் – 1 டேபிள் ஸ்பூன், உப்பு – அரை டீஸ்பூன், சீனி – கால் டீஸ்பூன், மிளகுப் பொடி – கால் டீஸ்பூன், ஆலிவ் ஆயில் – 1 டீஸ்பூன்.

 

செய்முறை :- ஆறு கப் நீரைக் கொதிக்கவைத்து பாஸ்தாக்களை சேர்க்கவும். கொதித்ததும் தீயை நிதானமாக்கவும். பத்து நிமிடங்களில் பாஸ்தா மென்மையாக வெந்ததும் இறக்கி நீரை வடிகட்டி ஆலிவ் ஆயில் சேர்த்துக் குலுக்கி  ஆறவிடவும். பானில் பட்டர் & சீஸைப் போடவும். இரண்டும் உருகும்போது சீனி & உப்பைச் சேர்க்கவும். அதில் நீளமாக அரிந்த வெங்காயம், துருவிய கேரட் போட்டு நன்கு வதக்கி வெந்த பாஸ்தாக்களை சேர்த்து நன்கு கலக்கி விடவும். பொடியாக அரிந்த கொத்துமல்லி, மிளகுப் பொடி தூவிப் பரிமாறவும்.

சனி, 2 டிசம்பர், 2023

சன்னா வடை

சன்னா வடை



தேவையானவை :- வெள்ளைக் கொண்டைக்கடலை ( காபூலி சன்னா) – 2 கப், மைதா – 2 டேபிள் ஸ்பூன், பெரிய வெங்காயம் – 1 பொடியாக அரியவும். கொத்துமல்லித்தழை – கால் கப், வெள்ளை எள் – 1 டேபிள் ஸ்பூன் , சீரகம், 1 டீஸ்பூன், மிளகு – அரை டீஸ்பூன், மிளகாய்த்தூள் – கால் டீஸ்பூன், பூண்டு – 5 பல், ஏலப்பொடி – 1 சிட்டிகை, உப்பு – அரை டீஸ்பூன், எண்ணெய் – பொரிக்கத் தேவையான அளவு.

செய்முறை:- வெள்ளைக் கொண்டைக் கடலையைக் கழுவி 12 மணி நேரம் ஊறவைக்கவும். நீரை வடித்து மிக்ஸியில் கொண்டைக் கடலை, மைதா, பெரிய வெங்காயம், கொத்துமல்லித் தழை, சீரகம், மிளகு, பூண்டு, மிளகாய்த்தூள், ஏலப்பொடி, உப்பு சேர்த்துக் கொரகொரப்பாக அரைக்கவும். வடைகளாகத் தட்டி வெள்ளை எள்ளில் புரட்டி வைத்து எண்ணெயைக் காயவைத்துப் பொன்னிறமாகப் பொரிக்கவும். மயோனிஸுடன் பரிமாறவும்.

வெள்ளி, 1 டிசம்பர், 2023

தட்டுவடை செட்

தட்டுவடை செட்



 

தேவையானவை:- சிறிய தட்டை – 12, பெரிய வெங்காயம் – 1, கேரட் – 1, பீட்ரூட் – 1, மாங்காய் – பாதி, கொத்துமல்லி – 1 டேபிள் ஸ்பூன், சாட் மசாலா – 2 டீஸ்பூன், புதினா சட்னி – கால் கப், கார சட்னி – கால் கப், எலுமிச்சை சாறு – 1 டீஸ்பூன், உப்பு – அரை டீஸ்பூன்.

 

செய்முறை:- பெரியவெங்காயத்தைப் பொடியாக நறுக்கவும். கேரட், பீட்ரூட், மாங்காயைத் தோல்சீவித் துருவி உப்புப் போட்டுக் கலந்து வைக்கவும். கொத்துமல்லியையும் பொடியாக அரியவும். ஒரு பெரிய ப்ளேட்டில் ஆறு தட்டைகளைப் பரப்பவும். முதலில் கால் ஸ்பூன் கார சட்னியைத் தடவி அதன் மேல் பீட்ரூட், கேரட், மாங்காய் கலவை ஒரு ஸ்பூன் வைக்கவும். அரை ஸ்பூன் வெங்காயம் வைத்து, கொத்துமல்லியையும் சாட் மசாலாவையும் தூவவும். எலுமிச்சை சாறை ஸ்ப்ரே செய்து புதினா சட்னி கால் ஸ்பூன் அதன் மேல் வைத்து இன்னொரு தட்டையால் மூடவும். இதை அப்படியே பரிமாறவும். 

Related Posts Plugin for WordPress, Blogger...