செய்முறை:-
அரிசியை நன்கு கழுவி 2 மணி நேரம் ஊறவிடவும்.
நன்கு மைய மாவாக அரைக்கவும்.
பொட்டுக்கடலையை மிக்ஸியில் பவுடராக்கி சலிக்கவும்.
உப்பு., பொட்டுக் கடலை மாவு ., அரிசிமாவு ., தேங்காய்த்துருவல் எல்லாம் சேர்த்து கட்டிகள் இல்லாமல் மென்மையாக பிசையவும்.
சிறு சிறு உருண்டை அல்லது ஓவல் சைஸ் சீடைக்காய்களாக உருட்டவும். எண்ணயைக் காயவைத்து கைப்பிடி கைப்பிடியாக அள்ளிப் போட்டுப் பொறிக்கவும்.
இது மாலை நேரப் பலகாரம் .. செட்டிநாட்டில்.
குறிப்பு :- 1.சீரகம் அல்லது எள்ளை மாவு பிசையும் போது சேர்க்கவும்.
2.கட்டிகள் இல்லாமல் மென்மையாக பிசைந்து உருட்டவும் .. இல்லாவிட்டால் வெடிக்கக் கூடும்..
3. அளவான தீயில் பொறிக்கவும்.

செவ்வாய், 31 ஆகஸ்ட், 2010
SEEDAIKKAAI.. சீடைக்காய்..
திங்கள், 30 ஆகஸ்ட், 2010
VELLAIP PANIYAARAM.. .. வெள்ளைப் பணியாரம்...
NEEDED :-
RAW RICE - 2 CUPS (HEEPED)
URAD DHAL - AT THE TOP OF RICE AND TO FUL FILL THE 2 CUPS ( APPROXIMATELY 1/4 CUP)..
SALT - 1 TSP.
OIL - TO FRY .
METHOD :-
MIX RICE AND DHAL WASH AND SOAK FOR 2 HOURS.
GRIND WELL AS A SMOOTH BATTER ADD SALT AND BLEND WELL.
HEAT OIL IN A KADAI .
POUR A LADDLE OF BATTER IN OIL AND WHEN IT BLOW UP TRUN THE OTHER SIDE AND TAKE OUT OF OIL .
SERVE HOT WITH MILAKAAYTH THUVAIYAL OR KATHAMBA CHUTNEY.. OR VENKAAYAM THAKKAALI KETTI CHUTNEY .
OPTIONAL :- WE CAN ADD HALF TSP SUGAR AND MILK TO THE BATTER TO GET SMOOTH PANIYAARAMS..
P. N. :- IF THE PANIYAARAM COMES TOO FLAT ADD SOME IDDLIE MAVU OR DOSAI MAVU. AND IF THE PANIYAARAM COMES TOO MUCH BULGES AT THE CENTRE ADD IDIYAAPPA MAAVU OR RICE FLOUR.
THIS IS CHETTINAD SPECIAL.. AND WE SERVE IT IN EACH N EVERY FUNCTIONS N FESTIVALS..
வெள்ளைப் பணியாரம்..:-
தேவையான பொருட்கள்.. :-
பணியாரப் பச்சை ( பச்சரிசி ) - 2 ஆழாக்கு தலை தட்டி.
வெள்ளை உளுந்து - அரிசியின் மேல் கோபுரமாக ( தோராயமாக 1/4 ஆழாக்கு)
உப்பு - 1 டீஸ்பூன்
எண்ணெய் - பொறிக்க..
செய்முறை:-
அரிசி்யையும் உளுந்தையும் சேர்த்துக் கழுவி 2 மணி நேரம் ஊறவைக்கவும்.
நன்கு மையாக அரைத்து உப்பு சேர்த்து நன்கு கலக்கவும்.
எண்ணெயைக் கடாயில் காயவைத்து மாவை ஒவ்வொரு கரண்டியாக ஊற்றி மேலெழும்பியதும் திருப்பி விட்டு சூடாக எடுத்து மிளகாய்த்துவையல்., (அ) கதம்பச் சட்னி., (அ) வெங்காயம் தக்காளி கெட்டிச் சட்னியுடன் பரிமாறவும்..
விருப்பம்:- அரை தேக்கரண்டி சீனியும் பாலும் விட்டு நன்கு மாவை அடித்து ஊற்றினால் பணியாரம் மென்மையாக வரும் .
பி. கு. :- பணியாரம் ரொம்ப தட்டையாக வந்தால் இட்லி அல்லது தோசை மாவை சிறிது சேர்த்துக் கொள்ளவும். நடுவில் ரொம்ப உப்பலாக., கனமாக வந்தால் இடியாப்ப மாவு அல்லது அரிசி மாவை சேர்க்கவும்.
இது செட்டிநாட்டின் ஸ்பெஷல் பலகாரம்.. ஒவ்வொரு பண்டிகை தினத்தன்றும்., திருமணங்களிலும் இது இடம் பெறும்.
திங்கள், 23 ஆகஸ்ட், 2010
MILAKAAYTH THUVAIYAL.. மிளகாய்த்துவையல்..
NEEDED :-
RED CHILLIES - 6 NOS.
BIG ONION - 1
SMALL ONIONS - 10 NOS.
TOMATO - 1
SALT - 1/2 TSP
TAMARIND - 1 INCH PIECE.
ASAFOETIDA - 1/8 INCH PIECE
GARLIC - 2 PODS.
OIL - 2 TSP.
MUSTARD - 1/2 TSP
URAD DAL -1/2 TSP
CURRY LEAVES - 1 ARK.
METHOD :-
PEEL ONIONS AND GARLICS . WASH ONIONS N TOMATO N CUT INTO PIECES.
WITH RED CHILLIES ADD ONIONS., TOMATOS., TAMARIND., SALT ., ASAFOETIDA., GARLIC AND GRIND WELL
HEAT OIL IN A PAN ADD MUSTARD ., URAD DHAL N CURRY LEAVES.
FRY WELL ADD THE THUVAIYAL IN IT.
REMOVE FROM FIRE AND SERVE IT WITH KUZIPPANIYAARAM., ATTA DOSA N VELLAIP PANIYAARAM.. N EGG DOSAI ..
VELLAIPPANIYAARAM IS A SPECIAL ITEM OF CHETTINAD .. NEXT WEEK I'LL POST IT ..
மிளகாய்த் துவையல்:-
தேவையானவை :-
சிகப்பு மிளகாய் - 6
பெரிய வெங்காயம் - 1
சின்ன வெங்காயம் - 10
தக்காளி - 1
உப்பு - 1/2 டீஸ்பூன்
புளி - 1 சிறு துண்டு
பெருங்காயம் 1/8 இஞ்ச் துண்டு
பூண்டு - 2 பல்
எண்ணெய் - 2 டீஸ்பூன்
கடுகு - 1/2 டீஸ்பூன்
உளுந்து - 1/2 டீஸ்பூன்
கறிவேப்பிலை - 1 இணுக்கு.
செய்முறை :-
வெங்காயம் பூண்டு தோலுரித்து தக்காளி மூன்றையும் கழுவி துண்டுகளாக்கவும்.
சிகப்பு மிளகாய் ., வெங்காயங்கள்., தக்காளி., பூண்டு., பெருங்காயம்., உப்பு., புளி.,
இவற்றை மிக்ஸியில் மைய அரைக்கவும்.
கடாயில் எண்ணெயைக் காயவைத்து கடுகு போட்டு வெடித்ததும், உளுந்து போட்டு சிவந்ததும்., கறிவேப்பிலை போட்டு தாளித்து மிளகாய்த்துவையலை சேர்க்கவும்
உடன் அடுப்பை ஆஃப் செய்யவும்.
இந்த துவையலை குழிப்பணியாரம் ., கோதுமை தோசை., முட்டைத்தோசை. வெள்ளைப்பணியாரங்களுடன் பரிமாறவும்..
வெள்ளைப் பணியாரம் செட்டிநாடு ஸ்பெஷல்.. அந்த ரெசிபி அடுத்த வாரம்..
ஞாயிறு, 22 ஆகஸ்ட், 2010
ATTA DOSA.. கோதுமை தோசை.
NEEDED :-
ATTA - 1 CUP
SALT - 1/2 TSP
JEERA - 1/2 TSP
ASAFOETIDA PWDR - 1 PINCH
COPPED ONION N CURRY LEAVES OPTINAL.
OIL - 20 ML
PREPARATION:-
ADD SALT ., JEERA., ASAFOETIDA PWDR IN ATTA AND MAKE A BATTER WITH LUKEWARM WATER. (WITHOUT LUMPS)..
IF DESIRES ADD CHOPPED ONION N CURRY LEAVES.
MAKE DOSAS OUT OF IT AND SERVE HOT WITH TOMATO THUVAIYAL OR MILAKAYTH THUVAIYAL.
கோதுமை தோசை:-
தேவையானவை:-
கோதுமை மாவு - 1கப்
உப்பு - 1/2 டீஸ்பூன்
ஜீரகம் - 1 டீஸ்பூன்
பெருங்காயம் - 1 சிட்டிகை
விரும்பினால் பொடியாக நறுக்கிய வெங்காயம் கருவேப்பிலை சேர்க்கலாம்.
எண்ணெய் - 20 மிலி
செய்முறை :-
கோதுமை மாவில் உப்பு., ஜீரகம்., பெருங்காயத்தூள் சேர்க்கவும்.
வெதுவெதுப்பான தண்ணீர் ஊற்றி மாவாக கட்டியில்லாமல் கரைக்கவும்.
விரும்பினால் பொடியாக அரிந்த வெங்காயம் ., கருவேப்பிலை சேர்க்கலாம்.
தோசைகளாக ஊற்றி திருப்பி வைத்து வேகவிட்டு சூடாக., தக்காளித்துவையல் அல்லது மிளகாய்த் துவையலுடன் பரிமாறலாம்..
COCONUT THUVAIYAL.. பொறிச்சுக் கொட்டித் தேங்காய்த்துவையல்..
NEEDED :-
CRATED COCONUT - 1 CUP
GREEN CHILLIES - 3 NOS.(HALVED)
BIG ONION CHOPPED - 1
MUSTARD - 1 TSP
URAD DAL - 1 TSP
ASAFOETIDA - 1/8 INCH PIECE.
TARMARIND - 1 INCH SIZE
SALT - 1/2 TSP
CURRY LEAVES - I ARK
OIL - 2 TSP.
PREPARATION :-
HEAT OIL IN A KADAI ADD MUSTARD.,URAD DAL .,ASAFOETIDA.
WHEN MUSTARD SPLUTTERS AND URAD DAL BECOMES BROWN ADD HALVED GREEN CHILLIES ., CHOPPED ONION..N CURRY LEAVES.
SAUTE FOR 2 MIN ADD SALT N TARMARIND.
THEN ADD CRAPED COCONUT AND TURN OFF THE STOVE .
AFTER COOL GRIND IT AND HAVE IT WITH KUZIPPANIYAARAMS OR WITH IDDLIES OR DOSAIS.
பொறிச்சுக் கொட்டித் தேங்காய்த்துவையல்.
தேவையானவை :-
தேங்காய் துருவியது - 1 கப்
பச்சை மிளகாய் - 3 ( வகிர்ந்தது)
பெரிய வெங்காயம் பொடியாக அரிந்தது - 1
கடுகு - 1 டீஸ்பூன்
உளுந்து - 1 டீஸ்பூன்
பெருங்காயம் - 1/8 இஞ்ச் துண்டு
புளி - 1 இஞ்ச் துண்டு
உப்பு - 1/2 டீஸ்பூன்
கருவேப்பிலை - 1 ஆர்க்
எண்ணெய் - 2 டீஸ்பூன்.
செய்முறை:-
கடாயில் எண்ணெயை சூடாக்கி கடுகு போடவும்.
அது வெடித்தவுடன்உளுந்து பெருங்காயம் போடவும். பெருங்காயம் பொறிந்து உளுந்து சிவந்தவுடன் பச்சைமிளகாய்., வெங்காயம் ., கருவேப்பிலை சேர்க்கவும்.
2 நிமிடம் வதக்கி உப்பு புளி சேர்க்கவும்.
தேங்காயை சேர்த்து அடுப்பை அணைக்கவும்.
ஆறிய பின் மிக்ஸியில் அரைத்து சூடான குழிப்பணியாரங்கள் அல்லது இட்லி அல்லது தோசையுடன் பரிமாறவும்.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)