எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

திங்கள், 31 மார்ச், 2025

பரங்கிக்காய் பாயாசம்

பரங்கிக்காய் பாயாசம்



தேவையானவை :- நன்கு கனிந்து சிவந்த பரங்கிக்காய் – 1 துண்டுபால் – 4 கப்சர்க்கரை – முக்கால் கப்முந்திரி கிஸ்மிஸ் – தலா 10, ஏலப்பொடி – 1 சிட்டிகைநெய் – 1 டேபிள் ஸ்பூன்.

செய்முறை:- முந்திரி கிஸ்மிஸை நெய்யில் வறுக்கவும். அதே நெய்யில் பரங்கிக்காயைத் துருவிப் போட்டு வறுக்கவும். ஒரு கப் பால் ஊற்றிக் குக்கரில் வேகவைத்து நன்கு மசிக்கவும். மிச்சப் பாலையும் சர்க்கரையையும் சேர்த்துக் கொதிக்க விடவும். இதில் ஏலப்பொடி தூவி முந்திரி கிஸ்மிஸை சேர்க்கவும். 

சனி, 29 மார்ச், 2025

இன்ஸ்டண்ட் பாயாசம்

இன்ஸ்டண்ட் பாயாசம்



தேவையானவை:- பாசுமதி அரிசி சாதம் அல்லது பச்சரிசி சாதம் = ஒரு கைப்பிடிமில்க் மெய்ட் – அரை டின்பால் ஒரு கப்ஏலப்பொடி – 1 சிட்டிகைகுச்சியாக அரிந்த பாதாம் பிஸ்தா முந்திரி – ஒரு டேபிள் ஸ்பூன்.

செய்முறை;- சாதத்தை மிக்ஸியில் பால் விட்டு அரைத்து வழிக்கவும்அதை லேசாக சூடுபடுத்தி மில்க் மெயிடைச் சேர்க்கவும்திக்னெஸ் அதிகமாக இருந்தால் இன்னும் சிறிது பால் சேர்க்கவும்ஏலப்பொடி முந்திரி பாதாம் பிஸ்தாவைக் கலந்து சூடாகவோ குளிரவைத்தோ பரிமாறவும்.

திங்கள், 24 மார்ச், 2025

கேழ்வரகுப் பாயாசம்

கேழ்வரகுப் பாயாசம்


தேவையானவை :- கேழ்வரகு – அரை கப்பால் – ரெண்டு கப்சர்க்கரை – கால் கப்நெய் – ரெண்டு டீஸ்பூன்ஏலப்பொடி – 1 சிட்டிகைமுந்திரி கிஸ்மிஸ் – தலா 6.

செய்முறை:- கேழ்வரகைக் களைந்து காயவைத்து மிக்ஸியில் பொடித்துச் சலிக்கவும்இந்த மாவில் ஒரு கப் தண்ணீர் ஊற்றி கட்டியில்லாமல் கரைத்துக் குக்கரில் ஒரு விசில் வைக்கவும்இறக்கி அதில் பாலைச் சேர்த்துக் கரைத்து நன்கு கொதிக்க விடவும்கொதித்துக் கண்ணாடிபோல் ஒட்டாமல் இருக்கும்போது சர்க்கரை சேர்க்கவும்நெய்யில் முந்திரி கிஸ்மிஸைப் பொடித்துப் போட்டு ஏலப்பொடி தூவி இறக்கவும்.

 

சனி, 22 மார்ச், 2025

மிக்ஸட் தால் பாயாசம்

மிக்ஸட் தால் பாயாசம்


தேவையானவை :-  பாசிப்பருப்பு  – ஒரு கைப்பிடிகடலைப் பருப்பு – ஒரு கைப்பிடிபச்சரிசி – ஒரு கைப்பிடிமூன்றையும் வெறும் வாணலியில் வாசம் வரும்வரை வறுத்துக் கொரகொரப்பாகப் பொடிக்கவும்வெல்லம் – 2 அச்சுநெய்- 2 டீஸ்பூன்தேங்காய் –  கால் கப் ,கொரகொரப்பாக அரைக்கவும்முந்திரி கிஸ்மிஸ் – தலா 10, ஏலக்காய் – 2  பொடிக்கவும்.

செய்முறை :- பச்சரிசி, பாசிப்பருப்பு, கடலைப்பருப்பு மாவை எடுத்து அளந்து 6 பங்கு தண்ணீர் சேர்த்துக் கரைத்துக் கொதிக்க விடவும் . வெந்ததும் வெல்லத்தைப் பொடித்துப் போட்டு வெந்நீரில் கரைத்து வடிகட்டிச் சேர்க்கவும்வெல்லமும் சேர்ந்து கொதித்ததும் அரைத்த தேங்காய் போட்டுக் கொதிக்க விடாமல் இறக்கவும்இதில் நெய்யில் வறுத்த முந்திரி கிஸ்மிஸ் போட்டு ஏலப்பொடி சேர்த்து இறக்கவும்

வியாழன், 20 மார்ச், 2025

நுங்குப் பாயாசம்

நுங்குப் பாயாசம்


தேவையானவை :- இளநுங்கு – 5, பால் – அரை லிட்டர்சர்க்கரை – ஒரு டேபிள் ஸ்பூன்அரிசி மாவு – 1 டீஸ்பூன்ஏலப்பொடி – 1 சிட்டிகை.

செய்முறை:- பாலைக்காய்ச்சி அதில் சிறிது எடுத்து அரிசி மாவு சேர்த்துக் கரைத்துத் திரும்பப் பாலில் ஊற்றிக் கொதிக்க விடவும்இரண்டு நிமிடங்களுக்குப் பிறகு அதில் சர்க்கரையைச் சேர்த்துக் கரைந்ததும் இறக்கி வைத்து ஆறவிடவும்நன்கு ஆறியதும் ஏலப்பொடி போடவும்இளநுங்கை நீருடன் கையால் மசித்தோ அல்லது மிக்ஸியில் விப்பர் செய்தோ பாலுடன் நன்கு கலக்கி உபயோகப்படுத்தவும்.

 

திங்கள், 17 மார்ச், 2025

மேக்கரோனி பாயாசம்

மேக்கரோனி பாயாசம்


தேவையானவை :- மேக்கரோனி - 1 கப்பால் - 2 லிட்டர்மில்க் மெய்ட்  - 1 டேபிள் ஸ்பூன்சீனி - 1/2 கப்குங்குமப்பூ - 1 சிட்டிகைஏலப்பொடி - 1 சிட்டிகைமுந்திரி – 10, நெய் - 10 கி

செய்முறை :- மேக்ரோனியைக் கழுவி 15 நிமிடம் தண்ணீரில் ஊறப்போடவும்பாலைக் காய்ச்சிக் கொதி வரும்போது மேக் ரோனியைச் சேர்த்து மென்மையாக வெந்ததும் சீனியைச் சேர்க்கவும்சீனி கரைத்து கொதித்ததும் இறக்கி மில்க் மெயிட் , ஏலப்பொடி , குங்குமப்பூநெய்யில் வறுத்த முந்திரி சேர்த்துப் பரிமாறவும்

சனி, 15 மார்ச், 2025

கவுனரிசிப் பாயாசம்

கவுனரிசிப் பாயாசம்


தேவையானவை :- கவுனரிசி – 1 கப்தேங்காய் – 1 மூடிசர்க்கரை – அரை கப்நெய் – 2 டீஸ்பூன்முந்திரி கிஸ்மிஸ் – தலா 10, ஏலப்பொடி – 1 சிட்டிகை.

செய்முறை:- கவுனரிசியைக் களைந்து இரண்டு மணி நேரம் ஊறவைக்கவும்இரண்டு கப் தண்ணீர் ஊற்றி குக்கரில் சோறு போல வேகவைத்து இறக்கி நன்கு மசித்து சர்க்கரை சேர்த்துக் கரைந்ததும் இறக்கவும்தேங்காயை சிறிது தண்ணீர் விட்டு அரைத்து கவுனரிசியில் சேர்க்கவும்ஏலப்பொடி தூவி நெய்யில் முந்திரி கிஸ்மிஸை வறுத்துப் போடவும்.

திங்கள், 10 மார்ச், 2025

சக்கைப் பிரதமன்


சக்கைப் பிரதமன்

தேவையானவை:- பலாச்சுளை – 20, பாசிப்பருப்பு – 50 கிதேங்காய் – 1, வெல்லம் – 4 அச்சுஏலக்காய் – 2, நெய் – 1 டேபிள் ஸ்பூன்முந்திரிப்பருப்பு – 15, பல்லு பல்லாக நறுக்கிய தேங்காய் – 2 டேபிள் ஸ்பூன்.

செய்முறை:- பாசிப்பருப்பை வேகப்போடவும்பலாச்சுளையை கொட்டை நீக்கி நறுக்கிக் குக்கரில் வேகவைத்து ஆறவைத்து மசிக்கவும்தேங்காயில் இரண்டு பால் எடுக்கவும்இரண்டாம் பாலைப் பருப்பில் ஊற்றி வெல்லத்தைக் கரைய வைக்கவும்அதில் அரைத்த பலாச்சுளையைப் போட்டுக் கொதித்ததும் இறக்கி நெய்யில் முந்திரி தேங்காய்ப்பல்லைப் பொறித்துப் போட்டு ஏலக்காய்ப் பொடி தூவிப் பரிமாறவும்.

ஞாயிறு, 9 மார்ச், 2025

நேந்திரம் பழப் பிரதமன்

நேந்திரம் பழப் பிரதமன்

தேவையானவை:- நேந்திரம் பழம் – 1, தேங்காய் முற்றியது – 1, வெல்லம் – 4 அச்சுஏலக்காய் – 2, நெய் – 2 டீஸ்பூன்முந்திரிப் பருப்பு – 15.

செய்முறை:- நேந்திரம்பழத்தைத் தோலுரித்து வேகவைத்து மசிக்கவும்தேங்காயைத் திருகி  கெட்டிப்பால் அரை கப்பும் தண்ணிப்பால் 1 ½ கப்பும் எடுக்கவும்வெல்லத்தைப் பொடித்துப் பாகு காய்ச்சி பழக்கூழையும் சேர்த்துக் காய்ச்சவும்நன்கு கிளறி இரண்டாம் பாலை ஊற்றி இறக்கி வைத்து முதல் பாலையும் சேர்க்கவும்நெய்யில் முந்திரியைப் பொறித்துப் போடவும்.


புதன், 5 மார்ச், 2025

பாலாடைப் பிரதமன்

பாலாடைப் பிரதமன்


தேவையானவை:- ரெடிமேட் அடை – ஒரு பாக்கெட்பால் – 1 லிமில்க் மெய்ட் – 200 கிசீனி – 1 டேபிள்ஸ்பூன்ஏலக்காய்த் தூள் – 1 சிட்டிகைகுங்குமப்பூ – 1 சிட்டிகைநெய் – 1 டேபிள் ஸ்பூன்முந்திரி – 15, காய்ந்த திராக்ஷை- 15.

செய்முறை:- அடையை முதலில் கொதிக்கும் நீரில் போட்டுக் கழுவிப் பின்பு வேகவைக்கவும்பாலைக் காய்ச்சி அதில் அடையைச் சேர்த்து வற்றவிடவும்சுண்டி வரும்போது மில்க மெயிடையும் சீனியையும் சேர்க்கவும்இறக்கி ஏலப்பொடிகுங்குமப்பூ ( சூடான பாலில் கரைத்து ஊற்றவும். ) போட்டு நெய்யில் முந்திரி திராக்ஷையை வறுத்துப் போடவும்.

திங்கள், 3 மார்ச், 2025

குறுவை அரிசிப் பாயாசம்

குறுவை அரிசிப்  பாயாசம்


தேவையானவை:-  குறுவை அரிசி - அரை ஆழாக்கு, பால் - 1 லிட்டர்ஜீனி - 1/2 ஆழாக்குஏலக்காய் – 2, முந்திரி  - 10, கிஸ்மிஸ் – 10, நெய் - 2 டீஸ்பூன்

செய்முறை:- குறுவை அரிசியை மிக்ஸியில் ஒன்றிரண்டாகப் பொடித்துக்  குக்கரில் அரை லிட்டர் பாலில் வேகவிடவும்வெந்ததும் இறக்கி மிச்ச பாலையும் சேர்த்து ஜீனி கரையும் வரை காய்ச்சி நெய்யில் முந்திரி கிஸ்மிஸ் பொறித்துப் போட்டு ஏலத்தைப் பொடி செய்து போட்டுப் பரிமாறவும்.

Related Posts Plugin for WordPress, Blogger...