எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

செவ்வாய், 4 ஜனவரி, 2011

AAPPAM.. COCONUT MILK.. ஆப்பம் .. தேங்காய்ப்பால்..



AAPPAM..:-
RAW RICE - 1 CUP
BOILED RICE (IDDLIE RICE ) - 1 CUP
ORID DHAL - 1/2 CUP
FENUGREEK - 2 TSP
SALT - 1/2 TSP

METHOD :-
WASH AND SOAK ALL TOGETHER FOR 2 HOURS. GRIND WELL. ADD SALT AND KEEP IT ASIDE FOR 10 HOURS TO FERMENTS. RUB THE AAPPAM PAN WITH A OILED CLOTH AND POUR ONE LADDLE OF BATTER . TAKE THE PAN FROM FIRE AND REVOLVE IT OR ROTATE TO SPEAD THE BATTER . THEN KEEP IT IN STOVE COVER IT WITH A LID . AFTER ONE MINUTE REMOVE THE LID AND TAKEOUT THE AAPPAM FROM PAN AND SERVE IT WITH COCONUT MILK OR COCONUT CHUTNEY.

FOR THE PREPARATION OF COCONUT MILK SCRAP ONE FULL COCONUT ., GRIND IT WELL IN A MIXIE . POUR 2 CUPS OF WATER AND FILTER THAT. ADD 2 TBLSPNS OF SUGAR AND ELACHI POWDER.

ஆப்பம்:-
பச்சரிசி - 1 கப்
புழுங்கல் அரிசி ( இட்லி அரிசி) - 1 கப்
உளுந்து - 1/2 கப்
வெந்தயம் - 2 டீஸ்பூன்
உப்பு - 1/2 டீஸ்பூன்

செய்முறை :-
அரிசிகள்., உளுந்து., வெந்தயத்தை நன்கு கழுவி 2 மணி நேரம் ஊறவைக்கவும். நன்கு அரைத்து உப்பு போட்டு கரைத்து வைக்கவும். 10 மணி நேரம் புளிக்க விடவும். ஆப்பக்கல்லை எண்ணைத் துணியால் துடைத்து ஒரு கரண்டி மாவை ஊற்றி கல்லை அடுப்பிலிருந்து எடுத்து அப்படியே ஸ்லாத்தவும். அல்லது சுற்றவும். மாவு எல்லாப் பக்கங்களிலும் சரியாக பரவும்.. அடுப்பில் வைத்து மூடி போட்டு ஒரு நிமிடம் வேக விடவும். மூடியை திறந்து ஆப்பத்தை எடுத்து தேங்காய்ப் பால்., அல்லது சட்னியுடன் பரிமாறவும்.

ஒரு முழுத்தேங்காயைத் திருகி மிக்சியில் அரைத்து 2 கப் தண்ணீர் ஊற்றிப் பாலெடுத்து வடிகட்டி ., 2 டேபிள்ஸ்பூன் சீனியும் ., பொடித்த ஏலக்காயும் போடவும்.

5 கருத்துகள்:

  1. எனக்கு மிகவும் பிடித்த காம்பினேஷன்...சூப்பர்ப்...அது என்ன இரண்டாவது படத்தில் இருப்பது....தேங்காய்பாலா...நீங்க தாளிப்பிங்களா..

    பதிலளிநீக்கு
  2. சட்னி மாதிரி தெரியுதேன்னு நானும் கேட்கணும்ன்னு நெனச்சேன் ....படங்கள் பிரமாதம் ..அப்படியே ஸ்டூ ரெசிபியும் போட்டிருக்கலாமே

    பதிலளிநீக்கு
  3. நன்றி சித்து., கீதா அது இஞ்சி போட்ட தேங்காய் சட்னி.,அடுத்ததில் இருப்பதுதான் பால்., நன்றி பூங்குழலி.. நாங்கள் சப்பாத்திக்குதான் ஸ்டூ செய்வோம்டா..:))

    பதிலளிநீக்கு
  4. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும்நம்முள் வலிமை பெருகட்டும்.!

    பதிலளிநீக்கு

Related Posts Plugin for WordPress, Blogger...