எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

திங்கள், 17 ஜனவரி, 2011

CABBAGE KUUTTU.. முட்டைக்கோஸ் கூட்டு..

CABBAGE KUUTTU:-
NEEDED:-
CABBAGE - 20 GMS
GREEN GRAM DHAL - 1 CUP
ONION - 1 CHOPPED
GREEN CHILLY - 1 HALVED
JEERA - 1 TSP
ORID DHAL - 1 TSP
CURRY LEAVES - 1 ARK
SALT - 1/2 TSP
OIL - 1 TSP

METHOD :-
WASH DHAL AND PLACE IT IN COOKER. WASH AND CHOP CABBAGE . ADD CABBAGE ., ONION ., 1/2 TSP JEERA, GREEN CHILLY WITH DHAL. ADD HALF CUP WATER. COOK FOR 2 WHISTLES AND OFF THE GAS. AFTER 10 MINUTES OPEN THE LID . HEAT OIL IN A PAN TOSS URAD DHAL., JEERA AND CURRY LEAVES AND POUR IT IN THE KUUTTU . ADD SALT AND MIX WELL WITH A LADDLE.. SERVE IT WITH RICE AND GHEE ., OR AS A SIDE DISH FOR VATHAKKUZAMBU RICE. , OR WITH CHAPPATHIS.

முட்டைக்கோஸ் கூட்டு :-
தேவையானவை :-
முட்டைக்கோஸ் - 250 கிராம்
பாசிப்பருப்பு - 1 கப்
பெரிய வெங்காயம் - 1 பொடியாக அரிந்தது
பச்சை மிளகாய் - 1 ரெண்டாக வகிர்ந்தது
ஜீரகம் - 1 டீஸ்பூன்
உளுந்து _ 1 டீஸ்பூன்
கருவேப்பிலை - 1 இணுக்கு
உப்பு - 1/2 டீஸ்பூன்
எண்ணெய் - 1 டீஸ்பூன்

செய்முறை :-
பாசிப்பருப்பை கழுவி குக்கரில் போடவும். முட்டைக்கோஸைக் கழுவி நைஸாக அரிந்து வெங்காயம்., பச்சைமிளகாய்., 1/2 டீஸ்பூன் ஜீரகம்., 1/2 கப் தண்ணீர் விட்டு 2 விசில் வரும்வரை வேகவிடவும். அடுப்பை அணைத்து 10 நிமிடம் கழித்து குக்கரைத் திறந்து உப்பு போடவும். பானில் எண்ணெயைக் காயவைத்து உளுந்து., சீரகம் ., கருவேப்பிலை தாளித்து கூட்டில் கொட்டி நன்கு கலக்கவும். சூடாக சாதம் நெய்யுடன் அல்லது வத்தக் குழம்பு சாதத்துக்கு தொட்டுக் கொள்ளலாம்.. சப்பாத்தியுடனும் பரிமாறலாம்.

6 கருத்துகள்:

  1. எனக்கு மிகவும் பிடித்த கூட்டு...நானும் இதனை சீரகம் போட்டு தான் தாளிப்பேன்...ரொம்ப பிடிக்கும்...

    பதிலளிநீக்கு
  2. சப்பாத்தியுடன் சாப்பிட ரொம்ப பிடிக்கும்...

    பதிலளிநீக்கு
  3. முட்டைகோஸ் போரியல் சாப்பிட்டு இருக்கிறேன்
    முதல் முறை முட்டைகோஸ் கூட்டு கேள்விப்படுகிறேன், நன்றிகள்

    பதிலளிநீக்கு
  4. வீட்டில் இருக்கும் பொருட்கள்தான்
    பிரிண்ட் அவுட் அடிச்சர்றேன்

    பதிலளிநீக்கு
  5. நன்றி கீதா., மேனகா., ராம்ஜி., சித்து., தொப்பி

    பதிலளிநீக்கு
  6. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

    பதிலளிநீக்கு

Related Posts Plugin for WordPress, Blogger...