எனது பதிநான்கு நூல்கள்

எனது பதிநான்கு நூல்கள்
எனது பதிநான்கு நூல்கள்

புதன், 12 ஜனவரி, 2011

KOZHUKKATTAI.. ஆட்டிக்கிண்டும் கொழுக்கட்டை..

KOZHUKKATTAI..:_
NEEDED:-
IDLY RICE - 2 CUP
CRATED COCONUT - 1 CUP
CHOPPED ONION - 1/2 CUP
RED CHILLIES - 4 MAKE INTO TITBITS WITHOUT SEEDS.
CURRY LEAVES - 1 ARK
SALT - 1 TSP
ORID DHAL - 1 TSP
JEERA - 1/2 TSP
OIL - 3 TSP.

METHOD :-
WASH AND SOAK IDLY RICE FOR 2 HOURS. GRIND COARSLY. HEAT OIL IN A PAN ADD ORID DHAL., JEERA., RED CHILLIES., CURRY LEAVES. THEN ADD ONION AND SAUTE WELL. ADD THE BATTER WITH SALT . STIRR WELL FOR 5 MINUTES. WHEN IT BECOMES THICK AND NON STICKY ADD CRATED COCONUT . OFF THE GAS AND MIX WELL . MAKE KOZHUKKATTAIS IN LEMON SIZE AND HOLD THEM TIGHTLY IN HAND TO MAKE OVAL KOZHUKKATTAIS. STEAM THEM IN IDLY COOKER FOR 20 MINUTES. SERVE HOT WITH VENGKAAYA CHUTNEY OR MILAKAAY CHUTNEY OR PORICHUKOTITH THUVAIYAL.

ஆட்டிக் கிண்டும் கொழுக்கட்டை:-
*****************************************
இட்லி அரிசி - 2 கப்
துருவிய தேங்காய் - 1 கப்
பொடியாக அரிந்த வெங்காயம் - 1/2 கப்
வரமிளகாய் - 4 விதை நீக்கி சின்னதாக வெட்டவும்.
கருவேப்பிலை - 1 இணுக்கு
உப்பு - 1 டீஸ்பூன்
உளுந்து - 1 டீஸ்பூன்
ஜீரகம் - 1/2 டீஸ்பூன்.
எண்ணெய் - 3 டீஸ்பூன்.

செய்முறை :-
இட்லி அரிசியை கழுவி 2 மணி நேரம் ஊறவைக்கவும். கொரகொரப்பாக அரைக்கவும். பானில் எண்ணெயைக் காயவைத்து உளுந்து., சீரகம்., வரமிளகாய்., கருவேப்பிலை போடவும். வெங்காயம் போட்டு நன்கு வதக்கி மாவை ஊற்றவும். உப்பு சேர்க்கவும். 5 நிமிடம் நன்கு கிளறி கையில் ஒட்டாமல் வரும்போது தேங்காய்த்துருவல் சேர்க்கவும். அடுப்பை அணைத்து மாவை கையால் நன்கு பிசைந்து எலுமிச்சை உருண்டைகளாகவும் பிடி கொழுக்கட்டைகளாகவும் பிடித்து ஆவியில் 20 நிமிடம் வேகவிடவும். சூடாக வெங்காயச் சட்னி., மிளகாய் சட்னி., பொரிச்சுக்கொட்டித் துவையலோடு பரிமாறவும்.

8 கருத்துகள்:

 1. இதெல்லாம் படத்துல பார்த்து தெரிஞ்சிக்க வேண்டியதுதான்

  பதிலளிநீக்கு
 2. அருமையான கொழுக்கட்டை.. பூண்டு,வேர்க்கடலைச்சட்னியும் இதுக்கு நல்லாருக்கும்ன்னு நினைக்கிறேன் :-)

  பதிலளிநீக்கு
 3. அருமையான ரெசிபி ..

  ஆட்டிக்கிண்டும் கொழுக்கட்டை..
  இந்த பெயர் காரணம் என்னவோ ?

  பதிலளிநீக்கு
 4. மிக அருமை,
  நாங்களும் செய்வோம் வறுத்த மாவு கிடைக்காத போது பாதி ஆட்டி பாதி மாவு கலந்து ,


  அரைக்கும் பதம் எபப்டி இருக்கனும்,
  ஆட்டி கிண்டும் என்றால் கட்டியாக அரைக்கனுமா>?

  பதிலளிநீக்கு
 5. நன்றி மேனகா., தொப்பி., ஆமாம் சாரல்., சிவோஹம்..

  பூங்குழலி கிரைண்டரில் ஆட்டி எண்ணையில் கிண்டி கொழுக்கட்டை பிடிப்பதால் இந்தப் பெயர்..

  ஜலீலா கொரகொரப்பாக கொஞ்சம் தண்ணி சேர்த்து அரைக்கலாம்..

  பதிலளிநீக்கு
 6. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
  என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

  பதிலளிநீக்கு

Related Posts Plugin for WordPress, Blogger...