எனது பதிநான்கு நூல்கள்

எனது பதிநான்கு நூல்கள்
எனது பதிநான்கு நூல்கள்

வெள்ளி, 4 பிப்ரவரி, 2011

RIDGED GOURD SKIN THUVAIYAL... பீர்க்கங்காய்த் தோல் துவையல்.


RIDGED GOURD SKIN CHUTNEY:-
NEEDED :-
SKIN OF RIDGED GOURD - 1 CUP
RED CHILLIES - 4 NOS
BIG ONION - 1 NO
TOMATO - 1 NO
TAMARIND - 1 POD
SALT - 1/2 TSP
OIL - 3 TSP
MUSTARD - 1 TSP
ORID DHAL - 2 TSP
ASAFOETIDA - 1 PINCH
CURRY LEAVES - 1 ARK.

METHOD :-
WASH AND REMOVE THE RIDGES OF RIDGE GOURD. CUT INTO SMALL PIECES. PEEL WASH AND DICE ONION AND TOMATO. HEAT OIL IN A PAN ADD MUSTARD. AFTER SPLUTTERING ADD ORID DHAL AND ASAFOETIDA. ADD CURRY LEAVES AND RIDGEGOURD PIECES. SAUTE WELL FOR 3 MINUTES. THEN ADD TOMATO AND ONION . SAUTE WELL . ADD TAMARIND AND SALT. REMOVE FROM FIRE . AFTER COOL GRIND IT COARSLY AND SERVE IT WITH DOSA., IDDLIE OR PLAIN RICE.

ITS RICH IN IRON., AND IMPROVES HEAMOGLOBIN IN BLOOD .

பீர்க்கங்காய்த் தோல் துவையல்:-
தேவையானவை :-
பீர்க்கங்காய்த் தோல் - 1 கப்
சிகப்பு மிளகாய் - 4
பெரிய வெங்காயம் - 1
தக்காளி - 1
புளி - 1 சுளை
உப்பு - 1/2 டீஸ்பூன்
எண்ணெய் - 3 டீஸ்பூன்
கடுகு - 1 டீஸ்பூன்
உளுந்து - 2 டீஸ்பூன்
பெருங்காயம் - 1 சிட்டிகை
கருவேப்பிலை - 1 இணுக்கு.

செய்முறை :-
பீர்க்கங்காய் தோலை நரம்புகள் நீக்கி சின்ன துண்டுகள் செய்யவும். வெங்காயம் தக்காளியை கழுவி துண்டுகள் செய்யவும். பானில் எண்ணெயைக் காய வைத்து கடுகு போட்டு வெடித்ததும் உளுந்து போட்டு சிவந்ததும்., பெருங்காயம் ., கருவேப்பிலை போடவும். பின் பீர்க்கங்காய்த் தோலைப் போட்டு நன்கு வதக்கவும். 3 நிமிடங்கள் வதக்கிய பின் வெங்காயம், தக்காளி., போடவும். உப்பு., புளி போட்டு நன்கு வதங்கியதும் ஆற வைக்கவும். கொரகொரப்பாக அரைத்து இட்லி., தோசை., சாதத்தோடு பரிமாறவும்.

இது இரும்புச் சத்து நிறைந்தது. எனவே ரத்தத்தில் ஹீமோக்ளோபினை அதிகரிக்கும்.

6 கருத்துகள்:

 1. அக்கா, இதை பற்றி கேள்விப்பட்டு இருக்கேன்..... செய்து பார்த்ததே இல்லை... எங்க ஊரில் அந்த காய் கிடைப்பதில்லை. பெரிய நகரங்களில் தான், இந்திய கடைகளில் கிடைக்கும். :-(

  பதிலளிநீக்கு
 2. இட்லி,தோசையுடன் சாப்பிட ரொம்ப பிடிக்கும்...

  பதிலளிநீக்கு
 3. செய்து பாரு சித்து டேஸ்டியா ஹெல்தியா இருக்கும்.:))

  பதிலளிநீக்கு
 4. நன்றி மேனகா..

  ஜலீலா செய்து பார்த்து சொல்லுங்கள்.

  பதிலளிநீக்கு
 5. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
  என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

  பதிலளிநீக்கு

Related Posts Plugin for WordPress, Blogger...