எனது பதிநான்கு நூல்கள்

எனது பதிநான்கு நூல்கள்
எனது பதிநான்கு நூல்கள்

செவ்வாய், 29 மார்ச், 2011

BAROTTA .. பரோட்டா (முட்டைக்குருமா).


BAROTTA :-
NEEDED:-

WHITE FLOUR /MAIDA - 1/2 KG

SALT - 1 TSP.

SUGAR - 1 TSP

BAKING POWDER - 1 PINCH ( OPTIONAL)

EGG - 1 NO ( OPTIONAL)

BUTTER - 1 TBL ( OPTIONAL)

OIL - 200 ML.


METHOD:-

TAKE THE FLOUR IN A BOWL ADD SUGR AND SALT. BOTH ARE ENOUGH. BUT IF YOU DESIRE ADD THE BAKING POWDER., BUTTER AND EGG. ADD ENOUGH WATER AND KNEAD WELL AND MAKE INTO A SOFT DOUGH. KEEP ASIDE FOR ONE HOUR . THEN MAKE THEM INTO 16 EQUAL SIZE BALLS. ROLL THEM AND IMMERSE THEM IN OIL. KEEP COVERED. AFTER 6 HOURS REMOVE ALL THE OIL AND ROLL THEM INTO FLAT CHAPPATHIS AND HOLD THEM IN HAND TO SLIGHTLY HIT AND PULL THEM TO ENLARGE THE SIZE OF THEM . ROLL THEM AGAIN WITH FOLDINGS AND MADE BAROTTAS . HEAT TAWA AND FRY THE BAROTTAS . SERVE HOT WITH EGG KURMA OR CHICKEN KURMA OR VEG KURMA..


பரோட்டா..:-

தேவையானவை:-

மைதா - 1/2 கிலோ

உப்பு - 1 டீஸ்பூன்

சீனி - 1 டீஸ்பூன்

பேக்கிங் பவுடர் - 1 சிட்டிகை ( விரும்பினால்)

முட்டை - 1 ( விரும்பினால்)

வெண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்(விரும்பினால்)

எண்ணெய் - 200 மிலி.


செய்முறை:-

மைதாமாவில் உப்பும் சீனியும் சேர்க்கவும். முட்டை., வெண்ணெய்., பேக்கிங் பவுடர் விரும்பினால் சேர்க்கலாம் .. ஆனால் நன்கு பிசைந்து ஊற வைத்தால் அவசியமில்லை.. தண்ணீர் ஊற்றி நன்கு பிசைந்து ஒரு மணி நேரம் ஊற வைக்கவும். பின் எடுத்து உருண்டைகளாக உருட்டி எண்ணெயில் நன்கு ஊறப்போடவும். 6 மணி நேரம் கழித்து எண்ணெயை வடித்துவிட்டு சப்பாத்திகளைப் போல தேய்த்து பின் கையால் நன்கு பிடித்து சுத்தம் செய்த மேடையில் அல்லது பலகையில் நன்கு வீசவும். நன்கு பனியன் போல மெல்லிசாக வந்ததும் சுருக்கி. எண்ணெய் தடவி உருட்டி தட்டி தோசைக்கல்லில் சுடவும். சூடாக முட்டை குருமா., வெஜிடபிள் குருமா அல்லது சிக்கன் குருமாவோடு பரிமாறவும்.

7 கருத்துகள்:

 1. அக்கா..பயங்கரமாக specialist மாதிரி செய்து இருக்கின்றிங்க..கலக்குறிங்க..

  பதிலளிநீக்கு
 2. அந்த தட்டோட இங்க பார்சல் அனுப்புங்க...

  பதிலளிநீக்கு
 3. அக்கா, கவிதைகளில் மட்டும் அல்ல, பரோட்டாவிலும் பின்னி எடுக்கிறீங்க.... உங்கள் சமையல் சாப்பிடணும்!

  பதிலளிநீக்கு
 4. சூப்பரா செய்து இருக்கிங்க. நேரா கிளம்பி வர்ரேன். நல்ல சைட் டிஷ்ஷோட அப்படியே ரெஸ்ட்ராண்டில் சாப்பிடுவது போல் இருக்கு.
  முட்டை குருமா ரெசிப்பி இல்லையா?

  பதிலளிநீக்கு
 5. உங்க ஊர்ல எண்ணை என்னா விலை? எண்ணை கொஞ்சம் கூடுதலா தடவி வைத்தாலே போதாதா?
  எங்க குக்ராமத்தில இன்னைக்கு தான் குமுதம் வந்தது. கவிதைகள் அனைத்தும் சூப்பரோ சூப்பர்.
  மழலைகளின் வாழ்த்துக்கள்!!

  பதிலளிநீக்கு
 6. நன்றி கீதா.,

  உனக்கு இல்லாமலா மேனகா.,

  நிச்சயமா சித்து..:0

  முட்டைக்குருமா ரெசிப்பி போடுறேன் விஜி..:0

  என்ன கேட்டீங்க ரூஃபினா., என்ன விலையா.. ஹாஹாஹா:)) நன்றி..

  பதிலளிநீக்கு
 7. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
  என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

  பதிலளிநீக்கு

Related Posts Plugin for WordPress, Blogger...