எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

செவ்வாய், 22 மார்ச், 2011

PUMPKIN TAMARIND GRAVY. பரங்கிக்காய் புளிக்குழம்பு.

PUMPKIN TAMARIND GRAVY:-
NEEDED :-
PUMPKIN - 1 SLICE
SMALL ONION - 10 NOS
GARLIC - 5 PODS
TOMATO - 1 NO
TAMARIND - 1 LEMON SIZE BALL
SALT - 2 TSP
RED CHILLY POWDER - 2 TSP
CORRIANDER POWDER - 1 TBL SPN
TURMERIC POWDER - 1 PINCH
OIL - 1 TBLSPN
MUSTARD - 1 TSP
JEERA - 1 TSP
ORID DHAL - 1 TSP
CHANNA DHAL / THUVAR DHAL - 1 TSP
ASAFOETIDA- 1/8 INCH PIECE
CURRY LEAVES - 1 ARK

METHOD :-
WASH AND CUT THE PUMPKIN INTO SMALL PIECES. PEEL THE ONION AND GARLIC. DICE THE TOMATO. SOAK TAMARIND AND SALT IN 3 CUPS OF WATER AND EXTRACT THE PULP. HEAT OIL IN A PAN ADD MUSTARD . WHEN IT SPLUTTERS ADD ORID DHAL., CHANNA OR THUVAR DHAL . WHEN THEY BECOMES BROWN ADD JEERA AND ASAFOETIDA. THEN ADD CURRY LEAVES., HALVED ONION., GARLIC., TOMATO AND PUMPKIN PIECES.SAUTE FOR 2 MINUTES. ADD TURMERIC POWDER., CHILLI POWDER., CORRIANDER POWDER . ADD TAMARIND PULP AND BRING TO BOIL. THEN SIMMER FOR 20 MINUTES .COOK TILL PUMPKIN TENDERS. SERVE HOT WITH PLAIN RICE AND PAPADS WITH PARUPPU THUVAIYAL.


PN:- IF U WANT TO ADD TASTE ADD 1 TSP OF JAGGERY WHILE COOKING.



பரங்கிக்காய் புளிக்குழம்பு:-
தேவையானவை :-
பரங்கிக்காய் - 1 துண்டு
சின்ன வெங்காயம் - 10
வெள்ளைப் பூண்டு - 5 பல்
தக்காளி - 1
புளி - 1 எலுமிச்சை அளவு
உப்பு - 2 டீஸ்பூன்
மிளகாய்த்தூள் - 2 டீஸ்பூன்
மல்லித்தூள் - 1 டேபிள் ஸ்பூன்
மஞ்சள் தூள் - 1 சிட்டிகை
எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
கடுகு - 1 டீஸ்பூன்
உளுந்து _ 1 டீஸ்பூன்
ஜீரகம் - 1 டீஸ்பூன்
பெருங்காயம் - 1/8 இஞ்ச் துண்டு
கடலைப்பருப்பு/ துவரம் பருப்பு - 1 டீஸ்பூன்
கருவேப்பிலை - 1 இணுக்கு.



செய்முறை:-
பரங்கிக்காயைக் கழுவி சிறுதுண்டுகள் செய்யவும். சின்ன வெங்காயம்., வெள்ளைப்பூண்டு தோலுரித்து இரண்டு துண்டாக நறுக்கவும். தக்காளியைக் கழுவி துண்டுகளாக்கவும். புளியையும் உப்பையும் 3 கப் தண்ணீரில் ஊறவைத்துச் சாறெடுக்கவும். பானில் எண்ணெயைக் காயவைத்து கடுகு போட்டு வெடித்ததும் உளுந்து ., கடலைப் பருப்பு அல்லது துவரம் பருப்பு போட்டு சிவந்ததும்., சீரகம் ., பெருங்காயம் போடவும். பின் வெங்காயம் ., பூண்டு., தக்காளி., பரங்கிக்காய் போட்டு நன்கு வதக்கவும். மிளகாய்த்தூள்., மல்லித்தூள்., மஞ்சள் தூள் போட்டு புளிச்சாறை ஊற்றவும். நன்கு கொதி வந்ததும் சிம்மில் 20 நிமிடம் வைக்கவும். பரங்கிக்காய்கள் மென்மையாய் வெந்தபின் சாதம்., அப்பளம்., பருப்புத்துவையலோடு பரிமாறவும்.

குறிப்பு:- சுவையை அதிகரிக்க கொதிக்கும்போது 1 டீஸ்பூன் வெல்லம் சேர்க்கவும்.

5 கருத்துகள்:

  1. அக்கா.. பார்க்கவே.. சூப்பர்-ஆ இருக்கு :-))
    ஹம்ம்ம்ம்... எனக்கு கொஞ்சம் வேணும் ;)

    பதிலளிநீக்கு
  2. பூசிணிக்காய் வேற பரங்கிக்காய் வேறயா...

    இப்படி எல்லாம் குழம்பினை காட்டி ஆசையினை கிளப்பகூடாது...ஒகே...இல்லனா..உங்க வீட்டிக்கு வந்துவிட்டுவேன்..

    கண்டிப்பாக செய்து பார்க்கிறேன்...

    பதிலளிநீக்கு
  3. சூப்பர் ரெசிப்பி தேனு. பார்க்கவே ரொம்ப நல்லா இருக்கு.

    பதிலளிநீக்கு
  4. நன்றி மேனகா.. அனுப்புறேன்..:)

    பரங்கிக்காய் சிவப்பா இருக்கும்டா கீதா.. :)

    நன்றி விஜி..:)

    பதிலளிநீக்கு
  5. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

    பதிலளிநீக்கு

Related Posts Plugin for WordPress, Blogger...