NEEDED :-
DRUMSTICK LEAVES - 1 BUNCH
PLANTAIN FLOWER - HALF ( PREFERRABLY INNER TENDER PART)
PARA BOILED THUVAR DHAL - 1/2 CUP
BIG ONION - 1NO. PEELED & CHOPPED.
RED CHILLIES - 2 NOS. HALVED.
OIL - 2 TSP
MUSTARD - 1 TSP
ORID DHAL - 1 TSP
SALT- 1/2 TSP
METHOD:-
WASH AND SHED THE DRUMSTICK LEAVES. PEEL AND FINELY CHOP THE PLANTAIN FLOWER. HEAT OIL IN A PAN ADD MUSTARD. WHEN IT SPLUTTERS ADD ORID DHAL., HALVED RED CHILLIES., AND CHOPPED ONION. SAUTE FOR 2 MINUTES ADD DRUMSTICK LEAVES. SAUTE FOR 2 MINUTES AND COVERED IT WITH A LID. ADD CHOPPED PLAINTAIN FLOWER AND SAUTE WELL. SPRAY SOME WATER . KEEP COVERED. COOK FOR 5 MINUTES . THEN ADD SALT AND PARA BOILED THUVAR DHAL. STIRR WELL AND COOK FOR 2 MINUTES . SERVE HOT WITH SAMBAR RICE OR VATHAK KUZAMBU RICE OR PULKKUZAMBU RICE.
முருங்கைக்கீரை., வாழைப்பூ துவட்டல்:-
தேவையானவை:-
முருங்கைக்கீரை - 1 கட்டு
வாழைப்பூ - பாதி ( வடை செய்தபின் மீதமிருக்கும் மென்மையான பகுதி)
பதமாக வேகவைக்கப்பட்ட துவரம்பருப்பு - 1/2 கப்
பெரிய வெங்காயம் - 1 தோலூரித்து பொடியாக அரியவும்.
வர மிளகாய் - 2 ( இரண்டாகக் கிள்ளி வைக்கவும்)
எண்ணெய் - 2 டீஸ்பூன்
கடுகு - 1 டீஸ்பூன்
உளுந்து - 1 டீஸ்பூன்
உப்பு - 1/2 டீஸ்பூன்.
செய்முறை:-
முருங்கைக் கீரையைக் கழுவி சுத்தம் செய்து உதிர்க்கவும். வாழைப்பூவை உரித்துப் பொடியாக நறுக்கவும். ( நரம்பு இருக்காது உள் பகுதிகளில்) . பானில் எண்ணெயைக் காயவைத்து கடுகு போடவும். வெடித்ததும் உளுந்து போட்டு சிவந்ததும்., வரமிளகாய்., வெங்காயம் போட்டு தாளிக்கவும். கீரையைப் போட்டு 2 நிமிடம் வதக்கி மூடி போட்டு வேகவிடவும். பின் வாழைப்பூவை சேர்த்து வதக்கவும். தண்ணீர் தெளித்து மூடி 5 நிமிடம் வேக விடவும். பின் துவரம்பருப்பு, உப்பு சேர்த்து 2 நிமிடம் நன்கு கிளறி இறக்கவும். சூடாக சாம்பார் சாதம்., வத்தக்குழம்பு சாதம்., புளிக்குழம்பு சாதத்தோடு பரிமாறவும்.
Next time, definitely lunch is at your place. :-)
பதிலளிநீக்குகட்டாய சித்து..:)
பதிலளிநீக்குநன்றி மனோ..:)
வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்!
பதிலளிநீக்குஎன்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!